Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மீட்டர் இல்லாமல் ஓடிய ஆட்டோக்கள் பறிமுதல்: போலீஸ், போக்குவரத்து துறை சுறுசுறுப்பு

Posted:

சென்னை: சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, தமிழக அரசு மாற்றி அமைத்த, புதிய ஆட்டோ கட்டணம், நேற்று முதல், கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீட்டரை இயக்காத, 3,000க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை மடக்கி போக்குவரத்து துறையினரும், போலீசாரும் இணைந்து சுறுசுறுப்பாக சோதனை மேற்கொண்டனர். இவற்றில், 110 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தமிழகத்தில், 2.14 லட்சம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், சென்னையில் மட்டும் 71 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. மீட்டர் படி கட்டணம் வசூலிக்காமல், தன்னிச்சையாக கட்டணத்தை நிர்ணயம் செய்து, ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்தனர். சுப்ரீம் கோர்ட் ...

"பிரதமராக வர வேண்டும்': மோடிக்கு அத்வானி வெளிப்படையாக ஆதரவு

Posted:

ராய்ப்பூர்: ""நாட்டின் நலனை கருத்தில் கொண்டே, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, மோடி நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு, பிரதமர் பதவி கிடைக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்,'' என, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி கூறியுள்ளார்.முதலில் புறக்கணிப்பு: பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டார். அதற்கு, அக்கட்சியின் மூத்த தலைவர், அத்வானி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. மோடியை அந்த பொறுப்பிற்கு அறிவிப்பதற்காக கூடிய, பா.ஜ., பார்லிமென்ட் குழு கூட்டத்தில், அத்வானி பங்கேற்கவில்லை. ...

லோக்சபா பிரசாரத்தை தீவிரப்படுத்த ஜெ., அதிரடி: அதி.மு.க., தேர்தல் பணி குழு அமைப்பு

Posted:

சென்னை: பிரதமர் பதவியை குறி வைத்து, லோக்சபா தேர்தலை சந்திக்கும் அ.தி.மு.க., தேர்தல் பணிக்குழுவை அமைத்து, வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளது.தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால், மத்திய அரசில் தவிர்க்க முடியாத சக்தியாக, அ.தி.மு.க., உருவாக வேண்டும். இதற்கு முன், மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க., தமிழக பிரச்னைகளை தீர்க்காமல், மெத்தனமாக இருந்து விட்டது. எனவே, 2014ல், நடக்கும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., அசைக்க முடியாத இடத்தை மத்திய அரசில் பெற வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா கூறி வருகிறார். இதற்காக, லோக்சபா தொகுதி வாரியான கூட்டத்தை நடத்தி, ...

செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி முறைகேடு: கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி மீது விசாரணை

Posted:

சென்னை: கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில், 200 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், அன்பழகன், கனிமொழி மீதான புகாரில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., விசாரணையை துவக்கி உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.உயர்நீதிமன்ற உத்தரவு: இதையடுத்து, விசாரணையை துரிதப்படுத்தவும், புகாரில் முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யவும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், பி.ரமேஷ் பாபு, தாக்கல் செய்த மனு: கோவையில், 2010, ஜூன், 23ம் தேதி, செம்மொழி மாநாடு ...

எனக்கு ரூ.42 லட்சம்; என் குடும்பத்துக்கு ரூ.42 கோடி: சொத்து மதிப்பை அறிவித்தார் சந்திரபாபு நாயுடு

Posted:

ஐதராபாத்: தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தனக்கு, 42 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதாகவும், ஆனால், தன் குடும்பத்தினருக்கு, 42 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். "தைரியம் இருந்தால், மற்ற அரசியல் கட்சி தலைவர்களும், தங்களின் சொத்து மதிப்புகளை வெளியிடலாம்' என, அவர் சவால் விடுத்துள்ளார்.ஆந்திராவில், அடுத்தாண்டு சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்கள் நடக்க உள்ளன. இதையடுத்து, அங்கு அரசியல் நடவடிக்கைகள் பரபரப்படைந்துள்ளன. தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான, சந்திரபாபு நாயுடு, நேற்று ...

சமையல் காஸ் திட்டத்திற்கு தரப்படும் பணம்: ஜனவரி 1ம் தேதி முதல் அமலாவதில் சிக்கல்

Posted:

புதுடில்லி: சமையல் காஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தை, வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் திட்டம், வெற்றி பெற்றுவிட்டதாக அரசு கூறுகிறது.வங்கிக் கணக்கு: ஆனால், வாடிக்கையாளர்களுக்கு தரப்படும் மானியத் தொகையை, எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு தரவில்லை. அதனால், இத்திட்டத்தின்படி, வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதில், சிக்கல் ஏற்படும் என்று, அந்த நிறுவனங்கள் அரசுக்கு தெரிவித்திருக்கின்றன. சமையல் காஸ் சிலிண்டர்கள், மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை, சந்தை விலைக்கு விற்க, மத்திய அரசு படிப்படியாக ...

தேர்தல் வியூகம் விரைவில் அறிவிக்கப்படும்: கருணாநிதி கூறுகிறார்

Posted:

சென்னை: ""லோக்சபா தேர்தல் குறித்த, தி.மு.க.,வின் வியூகம் விரைவில் அறிவிக்கப்படும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.அவரது பேட்டி: சேது சமுத்திர திட்டத்தை, அதே வழியில் நிறைவேற்றுவது என, மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது வரவேற்கத்தக்கது; மகிழ்ச்சிக்குரியது. விரைவில் சுப்ரீம் கோர்ட்டில், நல்ல தீர்ப்பு வரும் என, எதிர்பார்க்கிறேன். லோக்சபா தேர்தல் குறித்த, தி.மு.க.,வின் வியூகம், விரைவில் அறிவிக்கப்படும். மோடியை எதிர்த்து, அத்வானி போர்க்கொடி தூக்கினார்; பின், மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருப்பது நாடகமா என்பது, ...

கறுப்பு பணம்: ஆய்வு முடியவில்லை: மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

Posted:

புதுடில்லி: "நாட்டிற்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும், இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள, கறுப்பு பணத்தை கண்டறிய துவக்கப்பட்ட ஆய்வு, இன்னும் முடியவில்லை' என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்கள் பதுங்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை, இந்தியாவிற்கு திருப்பி கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. ஊழலுக்கு எதிராக போராடும், சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே இது குறித்து அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கறுப்பு ...

"10 ஆயிரம் கி.மீ., இலக்கை தாக்கும் ஏவுகணை தயாரிக்க இந்தியா தயார்'

Posted:

புதுடில்லி: "அதி நவீன அக்னி - 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டதை தொடர்ந்து, 10 ஆயிரம் கி.மீ., தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாரிக்க, இந்தியா தயாராக உள்ளது' என, ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழக தலைவர், அவினாஷ் சந்தர் தெரிவித்தார்.டில்லியில் இன்று, ராணுவ ஆராய்ச்சி வளர்ச்சி கழகம் சார்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இதையொட்டி, நேற்று நிருபர்களுக்கு, கழகத்தின் தலைவர் அவினாஷ் சந்தர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் தயாரிப்பில் நம் நாடு, முன்னணி நாடுகளில் ஒன்றாக ...

சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா., நிபுணர்கள் தகவல்

Posted:

நியூயார்க்: சிரியாவில், ரசாயன ஆயுதங்கள், பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக, ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது.சிரியா நாட்டில், அதிபர், பஷர் -அல்- ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும்படி, எதிர்க்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஆசாத்தைப் பதவி விலகும்படி வலியுறுத்தின. ஆனால், ஆசாத் மறுத்து விட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, இந்த நாடுகள் ஆயுத வினியோகம் செய்து ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™