ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சர்வதேச ஓசோன் பாதுகாப்பு நாள் இன்று!
- ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
- கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்!
- ஹிந்து நாளிதழ்
- இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!
- ரேவதி
- உன்னால வாடி நின்றேன் .....
- நேருக்கு நேர்
- நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
- ‘தங்கமீன்கள்’ ஜொலிக்கும் உணர்வுப்பூர்வமான ‘வைரமீன்கள்’!!
- அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !
- தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி!
- வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் !
- தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள்
- முத்தச் சந்தம்
- 'நன்றி' மறந்த தமிழர்கள்!
- சிம்பியான் டூ ஆண்ட்ராய்டு
- மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)
- குறி சொல்வது எப்படி?
- குறுங்கவிதைகள் ....அந்தாதி
- இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'!
- கடவுள் எங்கே இருக்கிறார்?
- இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல்
- தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி!
- ரமணியின் கவிதைகள்
- 50 ஆண்டுகளில் காணாமல்போன 220 இந்திய மொழிகள்!
- ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி?
- எதை மறந்தாய் ?
- தலையணை மந்திரம்!!
- சுகிர்தன் - பெயரின் பொருள் கூறுங்கள்!
- ஓணம் வாழ்த்துக்கள்
| சர்வதேச ஓசோன் பாதுகாப்பு நாள் இன்று! Posted: 16 Sep 2013 12:11 PM PDT சர்வதேச ஓசோன் பாதுகாப்பு நாள் இன்று..! உலகில் வாழும் உயிரினங்களை சூரியனின் புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்து பாதுகாத்து வரும் ஓசோன் படலத்தின் பாதுகாப்பின் அவசியத்தை உலகமக்கள் அனைவரும் உணர்த்தும் பொருட்டு, ஆண்டுதோறும் செப்டம்பர் திங்கள் 16ம் நாள் ஓசோன் படலம் பாதுகாப்பு தினமாக பன்னாட்டு அமைப்புகள் அனுசரித்து வருகின்றன. | |
| ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Posted: 16 Sep 2013 11:39 AM PDT ஜப்பான் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி அணுமின் உலை, பராமரிப்பு ஆய்விற்காக இன்றுடன் மூடப்பட உள்ளது. அணுசக்திக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பினால் இது மீண்டும் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படவில்லை. ஜப்பான் நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியால் பியூகுஷிமா அணுமின் உற்பத்தி நிலையத்தில் கடல் நீர் உள்ளே புகுந்து அணுகதிர் வீச்சு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜப்பான் நாட்டு மக்கள் அணுஉலையை மூட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். ... | |
| கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Posted: 16 Sep 2013 11:34 AM PDT கடன் பிரச்னையால் பெற்ற மகளை கொன்று விட்டு அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவல்லிக்கேணி எல் டாம்ஸ் ரோட்டில் சின்ன தம்பி தெருவில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (46). அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவரது மகள் ஷர்மிளா. இவர் ராயப்பேட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில், சுப்பிரமணி மனைவி சுஜாதா, தனது 10 வயது மகனுடன் வானகரத்தில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு நேற்று சென்றுவிட்டார். ... | |
| Posted: 16 Sep 2013 10:06 AM PDT இது சற்று பழய பதிவு தான், ஆனால் இன்று பேசப்படும் செய்திகளுக்கு சரியான ஒன்று தமிழகத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவாக எழுந்துள்ள உணர்வுகளை ஹிந்து ஆசிரியர் என்.ராமால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் ஏற்பட்டுள்ள கடுமையான அஜீரண கோளாறு காரணமாக கருத்துச் சுதந்திரம் குறித்து எல்லாம் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார். கருத்துச் சுதந்திரம் குறித்து யார் பேசுவது என்ற விவஸ்தை இல்லையா ? செய்திகளை கூட இருட்டடிப்பு செய்து வெளியிடும் ஹிந்து நாளிதழ் எல்லாம் கருத்துச்சுதந்திரம் குறித்து பேசுவது தான் உச்சகட்ட ... | |
| இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! Posted: 16 Sep 2013 09:55 AM PDT இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! தமிழ்ப் பெயர் 'தி இந்து' . இதன் கொள்கை வாக்கியமாக 'தமிழால் இணைவோம்' என வெளியிட்டுள்ளார்கள். பத்திரிக்கை சிறப்பாக வெளிவர வாழ்த்துகள்! சென்னை: இந்தியாவின் முன்னணி மற்றும் பாரம்பரிய நாளிதழ்களில் ஒன்றான தி ஹிந்து, செப்டம்பர் 16ம் தேதி முதல் தனது தமிழ்ப் பதிப்பை களத்தில் இறக்குகிறது. மிகத் தீவிரமான மார்க்கெட்டிங் உத்திகள், தரமான பத்திரிக்கையாளர் தேர்வு என பக்காவாக களம் இறங்கப்போகிறது ஹிந்துவின் தமிழ்ப் பதிப்பு. ஹிந்துவின் தமிழ் ... | |
| Posted: 16 Sep 2013 09:55 AM PDT ரேவதி எத்தனையோ கவிதைகளுக்கு தலைப்பை நீ சொல்ல நான் எழுதியதுண்டு ! உனக்குள் இத்தனை திறமையா? என நீ பாராட்டும் போதெல்லாம் ஏங்கும் என் மனம் இந்த தோழி நாம் வாழ்வின் எல்லைவரை கூடவே பயணித்தால் நலமென்று ! ஏனடி பெண்ணே பயணத்தை இடையிலேயே நிறுத்தினாய் ? நட்பாய் பழகி காதலானதாலா, உன் வீட்டை எதிர்த்து என்னுடன் வாழ்வதற்கு மன தைரியம் இல்லாது போனதாலா? இப்படி எத்தனையோ கேள்விகள் கேட்கவேண்டும் உன்னை நேரில் காணும் அந்த இனிய நாளில் - என நான் எண்ணியதுண்டு !! ஆனாலும் ரேவதி உன்னை ... | |
| Posted: 16 Sep 2013 09:50 AM PDT ஒற்றை வரி தொடுக்க ஒரு நாள் காத்திருக்க ஒருவரியும் கிட்டாத ஒவ்வொரு சொல்லும் எட்டாமல் ஓடி சென்று ஒளிந்து கொள்ள ... ஒருவார்த்தை உன்னை எண்ண ஒரு நொடியில் ஒரு கோடி ஓடோடி வந்து நிற்க ஒற்றெல்லாம் ஒண்ணா சேர்ந்து ஒரு ராகம்பாட ஒற்றை சொல்லும் ஒய்யார கானம் பாட ... ஒருமை எல்லாம் ஒண்ணா சேர்ந்து தனிமை மறந்து ஒரு கானம்பாட ஒரு பக்கத்தில் ஒற்றை வரி நான் பாட ஒற்றை வரியோ உன்னை தேட .. ஓடிவந்த வார்த்தை எல்லாம் ஒநெனப்பால் வாட எந்நேரமும் ஒன்சோகமே ... | |
| Posted: 16 Sep 2013 09:40 AM PDT நேருக்கு நேர் எத்தனையோ பார்வைகளை நான் கடந்து வந்திருக்கிறேன் எதுவும் என்னை தாக்கவில்லை நெஞ்சில் மின்னலை பாய்ச்சவில்லை !! எத்தனையோ குரல்களை கேட்டு வந்திருக்கிறேன் எதுவும் என் மனதில் நின்றதில்லை அது ஏனென்றும் அறியவில்லை !! எத்தனையோ பெண்களை தினம் தினம் பார்க்கிறேன் - யாரும் இதயத்தை தொடவில்லை !! நான் நேருக்கு நேர் தினம் தினம் பார்க்கும், சுவற்றில் சிரித்துக்கொண்டு ரோசாப்பூ மாலையை இறந்த பின்னும் போட்டோவில் சூடிக் கொண்டிருக்கும் என் அன்னையை தவிர !! | |
| நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா Posted: 16 Sep 2013 09:34 AM PDT விழிகளைத் தான் வீசியெறிந்தாய் இதயத்தில் ஏன் நீர்க்குமிழி | |
| ‘தங்கமீன்கள்’ ஜொலிக்கும் உணர்வுப்பூர்வமான ‘வைரமீன்கள்’!! Posted: 16 Sep 2013 09:30 AM PDT ''கற்றதுதமிழ்'' திரைப்படத்தின் இயக்குநர் ராம், கதையின் நாயகராக நடித்து, இயக்கியும் இருக்கும் திரைப்படம் தான் 'தங்கமீன்கள்'. காசு கொடுத்தால் தான் கல்வி எனும் இன்றைய நிலையை எள்ளி நகையாடியிருக்கும் இப்படத்தில், தனியார் பள்ளி கல்வி டீச்சர்களுக்கும், மிஸ்களுக்கும், மேடம்களுக்கும் மட்டுமல்ல, தங்களது குழந்தைகளின் தரம், திறம் தெரியாமலே படி, படி என படுத்தி எடுக்கும் பெற்றோர்களுக்கும் சரியான திரைப்ப(பா)டமாக அமைந்திருக்கிறது 'தங்கமீன்கள்' என்றால் மிகையல்ல! கதைப்படி ரோகிணி -'பூ' ராமு தம்பதிகளின் வாரிசு ... | |
| அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Posted: 16 Sep 2013 08:52 AM PDT தலைவாவுக்குதான் பிரச்சனை. தலைவி நமிதாவுக்கு எந்த குறையுமில்லை. அரசியலில் ஈடுபடுவேன் என்று ஓபனகவே கூறி வருகிறார். உடம்பு பெருத்த பிறகு நமிதாவுக்கு வாய்ப்புகளில்லை. ஐம்பது வயதானால் நடிகர்களுக்கு வரும் அரசியல் வியாதி நடிகைகள் அறுபது கிலோவை தாண்டும்போது வரும். நமிதாவுக்கும் வந்திருக்கிறது. சமீபமாக கண் தானம், ரத்த தானம் என்று...எந்த தானமாக இருந்தாலும் அழைத்த உடன் கலந்து கொள்கிறார். அப்படியே சில சமூக சேவைகள் செய்வதாகவும் கேள்வி. சும்மாவே, அரசியலுக்கு வருவீங்களா என்று கேட்போம். சமூக சேவை செய்கையில் ... | |
| தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி! Posted: 16 Sep 2013 08:47 AM PDT இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இதே ஆண்டில்தான் தமிழ் சினிமாவின் முதல் ஹீரோயின் டி.பி.ராஜலட்சுமிக்கும் நூற்றாண்டு விழா, வருகிற 19ந் தேதி தமிழக அரசு சார்பில் டி.பி.ராஜலட்சுமியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. அதையட்டி அவரைப் பற்றிய ஒரு ஸ்பெஷல் ஸ்டோரி... 7 வயதில் திருமணம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள இசைக்கு பெயர் பெற்ற திருவையாறு தான் டி.பி.ராஜலட்சுமியின் சொந்த ஊர். ஏழை பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை பஞ்சாபகேச அய்யர், தாயார் மீனாட்சி. அக்கால வழக்கப்படி டி.பி.ராஜலட்சுமிக்கு ... | |
| வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Posted: 16 Sep 2013 08:38 AM PDT மகாளயம் என்றால் கூட்டமாக வருதல். நம் வீட்டில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சி, குலதெய்வ வழிபாடு நடக்கும் சமயங்களில் உறவினர்கள் அனைவரும் ஒன்றுபடுவது வழக்கம். எந்த ஊரில் இருந்தாலும், அவர்கள் ஓரிடத்தில் கூடுவார்கள். அதுபோல, மறைந்த நம் முன்னோர் பூலோகத்தில் நம்மைக் காண ஒன்றாக கூடும் நேரமே மகாளய பட்சம். பட்சம் என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர், இந்த 15 நாட்களும் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கி இருப்பதாக ஐதீகம். புரட்டாசி பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை மகாளயபட்ச ... | |
| தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Posted: 16 Sep 2013 07:15 AM PDT தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் சித்தர்களின் தலைவர் அகத்தியர் வாழும் பாபநாசம் மலையடிவாரத்திலிருந்து தாமிரபரணி நதிக்கரையோரம் 97 கி.மீட்டர்கள் தூரத்துக்குள் இந்த நவக்கிரகஸ்தலங்கள் அமைந்துள்ளன. இவை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களால் பெரும்பாலும் வழிபாடு செய்யப்பட்டுவருகின்றன.ஏனெனில்,இந்த கோயில்கள் பற்றி சிலருக்கே தெரிந்திருக்கின்றன. அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் முக்தியை வேண்ட, ஸ்ரீ அகத்திய மாமுனிவரின் கூற்றுப்படி, ஜீவ நதியான தாமிர பரணியில், ஒன்பது தாமரை மலர்களை விட்டு, ... | |
| Posted: 16 Sep 2013 07:10 AM PDT வானம் இதழ் குவித்து மழைத் துளியால் மண் காதலியை முத்தமிடும் சந்தத்தில்... உயிர்ப்பது... மரங்களின் சந்ததிகள் மட்டுமல்ல மக்களின் சந்ததிகளும் | |
| Posted: 16 Sep 2013 06:37 AM PDT கண்களில் உப்புக் கண்ணீரும் நெஞ்சத்தில் இரத்தக் கண்ணீரும் வழிய இக்கட்டுரையை எழுதுகிறேன். செம்மொழியாம் தமிழ் மகளின் துயர்கண்டு கண்கள் ஆறாய்ப் பெருகுகின்றன. ஆரியப் படையெடுப்பு, உருது, அரபு, போர்ச்சுகீசு, ஆங்கில மொழியாளர்களின் படையெடுப்பு ஆகியவற்றாலும் மணிப்பிரவாள நடையாலும் சமஸ்கிருதக் கலப்பாலும் இந்தித் திணிப்பாலும் தமிழ்மொழியின் நலம் மாற்றாரால் சிதைந்தது. ஆனால் அதைவிடக் கொடுமை தமிழர்களால் நாளும் தமிழுக்குத் தமிழில் நேரும் குறைகள் மிகுதியாகி வருகின்றன. தமிழ் படிப்படியே மெல்ல மெல்ல தன் வளமும் வாழ்வும் ... | |
| Posted: 16 Sep 2013 06:37 AM PDT நண்பர்களே எனது மொபைல் சாம்சங் "gtb7722"எனது மொபைல் ஓஎஸ் ஆண்ட்ராய்டு ஆக மாற்ற முடியுமா எனது தற்போதைய "OS" சிம்பியான் | |
| மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red) Posted: 16 Sep 2013 06:32 AM PDT வானம் வறண்டிருச்சு, வம்சம் சரிஞ்சுடுச்சு, வடக்கு நோக்கி போனவனே வராம எங்க போன..?? விடியக் காத்திருந்து விதியோட போராடி வயித்துல சுமந்த உன்ன வரப்புல புதைக்கனுமா...??? முழு நிலவும் போயாச்சு முகம் பார்த்து நாளாச்சு, முட்டாப் பய மவனே முகம் காட்டாம போனாயே...?? வெவரம் கெட்ட பய உன்ன வெளிநாடு அனுப்பி வச்சா வெவகாரம் ஆகும்முன்னு வெளங்காம போச்சுதடா..?? கஷ்டகாலம் தீர கடல் கடந்து போனவனே, கஷ்டம் இன்னும் தீரலையே கடலுல கரைஞ்சு போனாயே..??? எவன் கண்ணு வச்சானோ எமன் கண்ணுல நீ விழுந்த, எதிர்பாரா ... | |
| Posted: 16 Sep 2013 06:17 AM PDT பண்டைய தமிழக வாழ்வியலில் "குறி" கேட்டல், "குறி" சொல்லுதல் தொடர்பான சரித்திர குறிப்புகள் பல நமக்கு கிடைத்திருக்கின்றன. இன்றைக்கும் இந்த குறி கேட்டல், மற்றும் குறி சொல்லுதல் நமது சமூகத்தில் பிரபலமான ஒன்று. இன்றைக்கு இத்தனை தூரம் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையிலும் நம்முடைய சமூகத்தில் இத்தகைய குறி சொல்வோர் நிறையவே செல்வாக்குடன் காணப்படுகின்றனர். உண்மையில் இவர்களின் பின்னால் இருக்கும் சூட்சுமத்தை யாரும் ஆராய்வதில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் நேரமில்லை. குறி சொல்வதில் பல வழிமுறைகளை ... | |
| Posted: 16 Sep 2013 05:57 AM PDT தடுக்கி விழுந்தாலும் மிடுக்காக ஓடுகிறது நடை வண்டி ..... உயரத்தில் இருந்து உருண்டாலும் தெருவெல்லாம் உருளுது நுங்கு வண்டி ....
| |
| இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Posted: 16 Sep 2013 05:45 AM PDT நாடு மிக மோசமானதொரு பொருளாதார சரிவில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் டாலர் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. அதற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே இருக்கிறது. 'இதன் காரணமாக, இந்தியாவின் நிலை எத்தியோப்பியா போலாகிவிடுமோ?' என்கிற கவலைக்குரல்கள் ஒலித்தபடி இருக்கின்றன. இந்த நிலையில், 'திருப்பதி போன்ற கோயில்களில் இருக்கும் தங்க நகைகளை வாங்கி, அரசாங்கம் பயன்படுத்தும்', 'கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தாலே... இதிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம் என்பதால், இரவு நேரங்களில் இந்தியா ... | |
| Posted: 16 Sep 2013 05:37 AM PDT நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார். "நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?" "நிச்சயமாக ஐயா.." "கடவுள் நல்லவரா?" "ஆம் ஐயா." "கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?" "ஆம்." "என்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். தன்னைக் காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். ... | |
| இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல் Posted: 16 Sep 2013 05:21 AM PDT இந்திய சினிமா தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமாவுக்கு சிறப்பான பங்கு உண்டு. இந்தியாவில் தயாராகும் சினிமாவில் தென்னிந்திய சினிமாக்களே அதிகம். எண்ணங்களில் நீங்காத இடம்பெற்ற பல படங்களை தந்தது தென்னிந்திய சினிமாதான். இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே, கடந்த 1913 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி அன்று 'ராஜா அரிச்சந்திரா' என்ற படத்தை வெளியிட்டார். அதுதான் இந்தியாவில் வெளியான முதல் திரைப்படமாகும். அதைத் தொடர்ந்து மும்பை மற்றும் ... | |
| தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Posted: 16 Sep 2013 04:55 AM PDT உலகில் தினமும் 87 கோடி மக்கள் சாப்பாடு கிடைக்காமல் பட்டினியால் அவதிப்படுவதாக ஐ.நா.வின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் சர்வதேச அளவில் உணவு சம்பந்தமான ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ''ஆண்டொன்றுக்கு 130 கோடி டன் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுகிறது. இதனால், நாள் ஒன்றுக்கு 87 கோடி பேர் உணவு இன்றி பட்டினி கிடக்கின்றனர். உணவு பொருட்கள் வீணடிக்கப்படுவதன் மூலம் ரூ.55 ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவு பொருட்கள் வீணாகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. ... | |
| Posted: 16 Sep 2013 04:29 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... | |
| 50 ஆண்டுகளில் காணாமல்போன 220 இந்திய மொழிகள்! Posted: 16 Sep 2013 04:24 AM PDT இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்துள்ளதாக குஜராத் மாநிலம் வதோதராவை மையமாக கொண்டு இயங்கிவரும் பாஷா ஆராய்ச்சி மற்றும் பதிப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்திய மொழிகள் குறித்து இந்த மையம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில்தான் இந்த தகவல் தெரியவந்துள்ளது. "2011-ம் ஆண்டிலிருந்து இந்திய மொழிகள் ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் மொழிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுவந்தோம். அதன்படி 1961 ஆம் ஆண்டில் 1100 மொழிகள் இந்தியாவில் இருந்தன. தற்போது 220 மொழிகள் வழக்கொழிந்து விட்டன" என்கிறார் எழுத்தாளர் ... | |
| ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி? Posted: 16 Sep 2013 04:18 AM PDT ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி? மேலும் பார்ட்டிசன் செய்வது எப்படி? | |
| Posted: 16 Sep 2013 02:27 AM PDT எதை மறந்தாய் ? பள்ளியில் படிக்கும்போது என்று நினைக்கிறேன் உன் விழி மோதி காயமானது - முதன் முதலாய் என் இதயம் !! இந்த முதல் காயம்தான் காதல் என அறியும் முன், பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாய் !! எப்படிச் சொல்ல என் காதலை அனுதினமும் யோசிக்கிறேன் ! உன்னை வர்ணித்து கவிதை பாட எனக்கும் ஆசைதான், கற்பனை வளம் பொங்கி கிடக்கும் கவிஞன் அல்லவே நான் !! வித விதமாய் பரிசு உனக்காய் வங்கி வர ஆசைதான், செல்வ வளம் கொட்டி கிடக்கும் செல்வந்தன் இல்லையே நான் ! கவிதையும், ... | |
| Posted: 16 Sep 2013 02:20 AM PDT எல்லாமே இயந்திரமயமாகிப் போன இன்றைய உலகில், தூக்கத்தின் அளவு, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், மனதின் அமைதி கெட்டு, தூக்கமின்றி தவிக்க நேரிடுகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை, மக்களிடையே, கடுமையான உழைப்பும், எதையும் ஆழ்ந்து ரசிக்கும் மனதும் இருந்தது. இதனால், மனதில் அமைதியும், சந்தோஷமும் ஏற்பட்டன. அதனால், அவனுக்கு, படுத்தவுடன் தூக்கம் கண்களை தழுவியது. ஆனால், இன்றைய காலக் கட்டத்தில், தொழில், வேலை, வசதி, பொறாமை பெருகி விட்டதால், மன அமைதி கெட்டுப் போனது. இதனால், தூக்கம் குறைந்து ... | |
| சுகிர்தன் - பெயரின் பொருள் கூறுங்கள்! Posted: 16 Sep 2013 01:48 AM PDT நான் என் மகனுக்கு முருகனின் பெயரான சுகிர்தன் எனும்பெயரை சூட்டவிருக்கிறேன், அப்பெயரின் பொருள் தெரிந்தால் யாரேனும் கூரமுடியுமா | |
| Posted: 16 Sep 2013 01:05 AM PDT கடவுளின் சொந்த தேசத்து நண்பர்களே !! இயற்கை அன்னை குத்தகைக்கு குடியிருக்கும் கேரள நாட்டின் உறவுகளே !! உங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் என்றும் நல்லதையே ஆண்டவன் தந்திட வாழ்த்துகிறேன் இந்த ஓணம் திருநாளில் !! |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |