Tamil News | Online Tamil News |
- டீசல், காஸ் விலையை கடுமையாக உயர்த்த மத்திய அரசு யோசனை: பெட்ரோல் விலையை குறைத்து அதிருப்தியை சமாளிக்க திட்டம்
- பா.ஜ., பிரதமர் வேட்பாளராக மோடி இன்று அறிவிப்பு
- கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர் நகர் மாவட்டத்தில் அமைதி
- "மாஜி' அமைச்சர் ராஜாவுக்கு சிக்கல்: தி.மு.க., முடிவு என்ன?
- சி.எஸ்.ஐ., பிஷப் - "மாஜி' நிர்வாகி மோதல்: பின்னணியில் அம்பலமான ஜாதி பாகுபாடு
- தெற்கு ரயில்வேக்கு அதிக நிதி ஒதுக்கீடு: எம்.பி.,க்கள் வலியுறுத்தல்
- குரு பூஜை, அரசியல், ஜாதி தலைவர்களின் வருகைக்கு தடை: ஐகோர்ட் அறிவுரை
- ஈ.சி.ஆர்., சாலையை சுழல் காற்று தாக்கியதா: சென்னைவாசி எடுத்த "வீடியோ'வால் பரபரப்பு
- பெருங்கோடீஸ்வர பெண்கள்: இந்தியா முதலிடம்: இதர "பிரிக்ஸ்' நாடுகளை விஞ்சியது
- உலக வங்கி கடன் பத்திரங்களில் முதலீடு : மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
| Posted: புதுடில்லி: டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டருக்கு அளிக்கப்படும் மானியத்தால், ஏற்பட்டுள்ள சுமையைக் குறைக்க, அவற்றின் விலையை கடுமையாக உயர்த்த, மத்திய அரசு யோசித்து வருகிறது. அதேநேரத்தில், இந்த விலை உயர்வால் ஏற்படும் அதிருப்தியை சமாளிக்க, பெட்ரோல் விலையை லிட்டருக்கு, 1 ரூபாய் குறைக்க திட்டமிட்டுள்ளது.சர்வதேச கச்சா எண் ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல் விலையை மாற்றி அமைத்துக் கொள்ள, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, சில மாதங்களுக்கு முன், அனுமதி வழங்கப்பட்டு விட்டதால், அதற்கேற்ற வகையில், பெட்ரோல் விலையை, அவ்வப்போது, அந்த ... |
| பா.ஜ., பிரதமர் வேட்பாளராக மோடி இன்று அறிவிப்பு Posted: பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிப்பது, கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுதொடர்பான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த இரு லோக்சபா தேர்தல்களில் தோல்வி அடைந்த, பாரதிய ஜனதா கட்சி, இன்னும் ஏழு மாதங்களில் நடைபெறவுள்ள, அடுத்த லோக்சபா தேர்தலில், எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குஜராத்தில், மூன்று முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, "ஹாட்ரிக்' சாதனை படைத்த, அம்மாநில முதல்வர், நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் என்ற ... |
| கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர் நகர் மாவட்டத்தில் அமைதி Posted: லக்னோ: உ.பி.,யில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர் நகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் அமைதி நிலவுகிறது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதை அடுத்து, உத்தர பிரதேசத்தின் முசாபர் நகர் மாவட்டத்தில், 38 பேர் இறந்தனர்; 67 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்; 408 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறைக்கு காரணம் எனக் கருதப்படும், இருதரப்பினரைச் சேர்ந்த இருவர், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பாக்பத் என்ற கிராமத்தில், வீடு வீடாக ... |
| "மாஜி' அமைச்சர் ராஜாவுக்கு சிக்கல்: தி.மு.க., முடிவு என்ன? Posted: "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழலில், முழுக்க முழுக்க, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை மட்டுமே, குற்றவாளியாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள, இறுதி அறிக்கையை நிறைவேற்ற, பார்லிமென்ட் கூட்டுக் குழு தயாராகி விட்டது. அதனால், வரும், 23ம் தேதி நடைபெறவுள்ள, குழுவின் ஆலோசனை கூட்டம், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசியல்வாதிகள்: "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் குறித்து, காங்கிரஸ் எம்.பி., சாக்கோ தலைமையிலான, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரித்து வருகிறது. இந்தக் குழு ஏற்கனவே பல முறை கூடி, உயர் அதிகாரிகள் உட்பட, பலரையும் அழைத்து, விசாரணை நடத்தியது. ஆனாலும், ... |
| சி.எஸ்.ஐ., பிஷப் - "மாஜி' நிர்வாகி மோதல்: பின்னணியில் அம்பலமான ஜாதி பாகுபாடு Posted: திருச்சி: மிகப்பெரிய கிறிஸ்தவ மிஷனரியான, சி.எஸ்.ஐ.,யின் திருச்சி - தஞ்சை மண்டல பிஷப்புக்கும், உடுமலைப்பேட்டை ஆலய நிர்வாகியாக இருந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பின்னணியில், ஜாதி ரீதியான பாகுபாடு இருப்பது அம்பலமாகி உள்ளது.தலைமையகம்: சி.எஸ்.ஐ., (சர்ச் ஆப் சவுத் இந்தியா) என்றழைக்கப்படும், தென்னிந்திய திருச்சபை, சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, இலங்கையின் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான ஆலயம், கல்வி கூடங்களை நிறுவி செயல்படுகிறது. 11 மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி - தஞ்சை ... |
| தெற்கு ரயில்வேக்கு அதிக நிதி ஒதுக்கீடு: எம்.பி.,க்கள் வலியுறுத்தல் Posted: மதுரை: "தெற்கு ரயில்வேயில் நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில், அதிக நிதி ஒதுக்க, ரயில்வே வாரியத்திடம் முறையிட வேண்டும்' என, மதுரையில் நடந்த கலந்தாய்வில், எம்.பி., க்கள் வலியுறுத்தினர்.மதுரை, திருச்சி கோட்டங்களில் ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்து, கலந்தாய்வு கூட்டம், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தலைமையில் நடந்தது. இதில், ஏழு எம்.பி.,க்கள் பங்கேற்றனர்.அவர்கள் பேசியது:மாணிக்கம்தாகூர், காங்., விருதுநகர்: மதுரை-போடி அகலப் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மதுரை- ... |
| குரு பூஜை, அரசியல், ஜாதி தலைவர்களின் வருகைக்கு தடை: ஐகோர்ட் அறிவுரை Posted: சென்னை: "குரு பூஜை கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது பற்றி, அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.திருநெல்வேலி மாவட்டம், நெற்கட்டான் செவ்வாயல் கிராமத்தில், ஒண்டி வீரன் நினைவகத்துக்கு, தமிழ் புலிகள் இயக்கத்தினர், வாகனங்களில் செல்வதை தடுக்கக் கூடாது என, போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சிவகுமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். சிவகிரி தாலுகாவில், நெற்கட்டும்சேவல் கிராமத்தில், மாமன்னார் பூலித்தேவன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு அனுமதி கோரியும், போலீஸ் பாதுகாப்பு கோரியும், ... |
| ஈ.சி.ஆர்., சாலையை சுழல் காற்று தாக்கியதா: சென்னைவாசி எடுத்த "வீடியோ'வால் பரபரப்பு Posted: சென்னை: சென்னை, ஈ.சி.ஆர்., சாலையை சுழல் காற்று தாக்கியதா என்ற விவாதம் அதிகரித்து வருகிறது. இது குறித்து, வானிலை ஆராய்ச்சி மையம், தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.சென்னை, ஈ.சி.ஆர்., சாலையில், இம்மாதம், 5ம் தேதி சுழல் காற்று வீசியதாக, உத்தண்டியில் வசிக்கும் ராபர்ட் காகரின், 58, என்பவர் "வீடியோ' எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகளை தொடர்ந்தே, சுழல் காற்று வீசியது வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது.இது குறித்து, ராபர்ட் காகரின் கூறியதாவது: கடற்கரையில் இருந்து, 700 மீட்டர் தூரத்தில் வசிக்கிறேன். இம்மாதம், 5ம் தேதி, மாலை, 4:30 மணிக்கு, என் ... |
| பெருங்கோடீஸ்வர பெண்கள்: இந்தியா முதலிடம்: இதர "பிரிக்ஸ்' நாடுகளை விஞ்சியது Posted: புதுடில்லி: இந்தியாவில், பெருங் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 7,850 ஆகவும், அவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, 93,500 கோடி டாலராகவும் (56.10 லட்சம் கோடி ரூபாய்) உள்ளது.சொத்து மதிப்பு: இதில், பெரும் பணக்கார பெண்களின் எண்ணிக்கை, 1,250 ஆகவும், அவர்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு, 9,500 கோடி டாலர் (5.70 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவிற்கும் உள்ளது. இது, இந்தியா நீங்கலாக, இதர "பிரிக்ஸ்' நாடுகளில் (பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா) உள்ள பெரும் பணக்கார பெண்களின் எண்ணிக்கையை விட, அதிகமாகும். இது, கடந்த ஓராண்டில், 3 கோடி டாலருக்கும் (180 கோடி ரூபாய்) அதிகமாக, ... |
| உலக வங்கி கடன் பத்திரங்களில் முதலீடு : மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு Posted: புதுடில்லி: உலக வங்கியின் கடன் பத்திரங்களில், 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இக்கூட்டம் முடிந்ததும், நிருபர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறியதாவது: உலக வங்கியிடமிருந்து, 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, கடன் பத்திரங்களை வாங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நடப்பு நிதியாண்டில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வினியோகிப்பதற்காக, 5 டன் உணவு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 13,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |