Tamil News | Online Tamil News |
- பள்ளி கல்லூரிகளுக்கு பல மாவட்டங்களில் விடுமுறை : தமிழகம் முழுவதும் கன மழைக்கு இன்றும் வாய்ப்பு
- விடிய விடிய பெய்த கனமழைக்கு இரண்டு பேர் பலி: 20 மரங்கள் சாய்ந்தன; சாலைகளில் வெள்ள பெருக்கு
- இலங்கைக்கு போர் கப்பல் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
- பா.ஜ., தலைவருக்கு கருணாநிதி பாராட்டு
- தமிழகத்தில் சர்வாதிகாரம்: சொல்கிறார் விஜயகாந்த்
- டீசல் வாங்க முடியாமல் தவிக்கும் திருநெல்வேலி கழகம்:அரசின் உதவி கிட்டுமா?
- இந்திரா மீதான வெறுப்பால் தாக்குதல் நடத்த திட்டமிட்ட அமெரிக்கா
- நான்கு பேருக்கும் நாளை தூக்கு? தீர்ப்பை ஒத்தி வைத்தது டில்லி விரைவு கோர்ட்
- பா.ஜ., பிரதமர் வேட்பாளர் ஆக, மோடிக்கு ஆதரவு கிடைக்குமா? அத்வானியை சமாதானப்படுத்த முயற்சி
- இந்தியா - பாக்., அமைச்சர்கள் நாளை முக்கிய ஆலோசனை?
| பள்ளி கல்லூரிகளுக்கு பல மாவட்டங்களில் விடுமுறை : தமிழகம் முழுவதும் கன மழைக்கு இன்றும் வாய்ப்பு Posted: தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இரண்டு நாட்களுக்கு, பலத்த மழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், இன்றும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல மாவட்டங்களில், இன்று, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று, சென்னையில் மழைக்கு, இரண்டு பேர் பலியாகினர்.மத்திய மேற்கு வங்கக் கடலில், கடலோர ஆந்திராவில் உருவான, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மூன்றாவது நாளாக, அதே இடத்தில் நீடிக்கிறது. மேலும், வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்ட, காற்று ... |
| விடிய விடிய பெய்த கனமழைக்கு இரண்டு பேர் பலி: 20 மரங்கள் சாய்ந்தன; சாலைகளில் வெள்ள பெருக்கு Posted: சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த கனமழையால், நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. 20 மரங்கள் சாய்ந்தன. பிரதான சாலைகளில் மழைநீர் வெள்ளத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையோரத்தில் வசித்து வந்த இரண்டு பேர் பலியாகினர். மழைநீர் வெள்ளத்தை 107 நடமாடும் பம்பு செட்டுகள் மூலம் வெளியேற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.சென்னையில் நேற்று முன்தினம் காலை முதலே, வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. எனினும் அன்று நண்பகலில் இருந்து சிறிது வெயில் அடித்தது. இந்த நிலையில் அன்று இரவு 7:00 மணிக்கு மேல், சிறு தூரலாக துவங்கிய மழை, ... |
| Posted: சென்னை:"இலங்கைக்கு போர் கப்பல்கள் வழங்க, ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தால், அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என, பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:இந்தியா உடனான நட்புறவுக்கு, பாதிப்பு ஏற்படும் வகையில், இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து, நான் பல முறை, உங்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன். இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தபோது, சமுதாய படுகொலை, போர் குற்றங்கள் நடந்தன. போர் முடிவுக்கு வந்த பிறகும், சிறுபான்மை சமூகமாக உள்ள, தமிழர்கள் மீது, தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது.சொந்த ... |
| பா.ஜ., தலைவருக்கு கருணாநிதி பாராட்டு Posted: சென்னை:"தமிழ் மொழியை, நாட்டின், இரண்டாவது ஆட்சி மொழியாக, அங்கீகாரம் செய்ய வேண்டும்' என, பா.ஜ., செய்தி தொடர்பாளர் தருண்விஜய் பேசியதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பாராட்டியுள்ளார்.அவரது அறிக்கை:பா.ஜ., செய்தி தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான தருண்விஜய், "தமிழ் மொழியை நாட்டின், இரண்டாவது ஆட்சி மொழியாக, அங்கீகாரம் செய்ய வேண்டும்' என, கூறியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. வட மாநிலங்களின் நண்பர்கள், தங்களுக்கு உரித்தான உயர் மனப்பான்மை காரணமாக, பழமை வாய்ந்த, புகழ் பெற்ற தமிழ்மொழியின் ஆழத்தை இன்னும் உணரவில்லை. வட மாநிலங்களிலுள்ள அனைத்து பள்ளிகளிலும், ... |
| தமிழகத்தில் சர்வாதிகாரம்: சொல்கிறார் விஜயகாந்த் Posted: சென்னை:""நாட்டில், எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என்ற சர்வாதிகார எண்ணம், தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:ஒரு கட்சியை துவங்குவது சுலபம்; ஆனால், அதை தொடர்ந்து நடத்துவது கடினம். கடந்த காலங்களில், தே.மு.தி.க., பல சோதனைகளை சந்தித்துள்ளது. இதையெல்லாம் சமாளித்து, இந்த இயக்கத்தை கட்டி காத்து வருகிறோம். ஜனநாயகத்தில், எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை, கிடைக்க வேண்டும்.ஆனால், நாட்டில் எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என்ற சர்வாதிகார எண்ணம், தமிழகத்தில் தலை விரித்தாடுகிறது. ... |
| டீசல் வாங்க முடியாமல் தவிக்கும் திருநெல்வேலி கழகம்:அரசின் உதவி கிட்டுமா? Posted: போக்குவரத்து கழகங்களில், நிர்வாக செலவுக்கு இணையாக, டீசல் செலவு அதிகரித்து வரும் நிலையில், டீசல் வாங்க முடியாமல் திருநெல்வேலி கழகம் தவிக்கிறது.கடந்த ஜனவரி மாதத்தில், பொதுத்துறை நிறுவனங்களுக்கு மொத்தமாக கொள்முதல் செய்து வரும் டீசல் விலை, லிட்டருக்கு, 11.50 ரூபாய் என அதிகரித்தது. இதை சமாளிக்க, தனியார் பங்க்குகளில் சில்லரை விலையில் டீசலை பிடித்து, போக்குவரத்து கழகங்கள் நிலைமையை சமாளிக்கின்றன.பெட்ரோல், டீசல் விலை நிர்ணய உரிமையை, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து, அடிக்கடி உயர்த்தப்படும் டீசல் விலை உயர்வால், போக்குவரத்து ... |
| இந்திரா மீதான வெறுப்பால் தாக்குதல் நடத்த திட்டமிட்ட அமெரிக்கா Posted: வாஷிங்டன்:"வங்க தேசத்தவர்கள் மீது, பாகிஸ்தான் நடத்திய இனப் படுகொலைக்கு, அமெரிக்க அதிபராக இருந்த, நிக்சன் ஆதரவுக்கரம் நீட்டினார்; அப்போதைய இந்திய பிரதமர், இந்திராவின் அதிரடி நடவடிக்கைகளால், மிரண்டு போன அமெரிக்கா, இந்தியா மீது, மும்முனை தாக்குதல் நடத்த திட்டமிட்டது' என, பிரபல வரலாற்று அறிஞர், கேரி பாஸ் எழுதியுள்ள புத்தகத்தில், குறிப்பிடப்பட்டு உள்ளது. வரலாற்று ஆசிரியர் கேரி பாஸ் எழுதியுள்ள புத்தகத்தில் எழுதியுள்ளதாவது:பாகிஸ்தான், 40 ஆண்டுகளுக்கு முன், கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசத்தின் மீது நடத்திய தாக்குதலுக்கு, அப்போதைய, அமெரிக்க அதிபர், ... |
| நான்கு பேருக்கும் நாளை தூக்கு? தீர்ப்பை ஒத்தி வைத்தது டில்லி விரைவு கோர்ட் Posted: புதுடில்லி : "டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் நான்கு பேருக்கும், தூக்கு தண்டனை வழங்க வேண்டும்' என, அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் போலீஸ் தரப்பில், கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு விவரம், நாளை அறிவிக்கப்படுகிறது.டில்லியில், கடந்த ஆண்டு டிசம்பர், 16ம் தேதி, ஓடும் பேருந்தில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி, அவர் இறந்தார். ... |
| பா.ஜ., பிரதமர் வேட்பாளர் ஆக, மோடிக்கு ஆதரவு கிடைக்குமா? அத்வானியை சமாதானப்படுத்த முயற்சி Posted: "குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை, லோக்சபா தேர்தல், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என, கட்சியின் இளம் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும், மூத்த தலைவர் அத்வானியை சமாதானப்படுத்த, முன்னாள் தலைவர், கட்காரி மற்றும் கட்சியின் தேசிய தலைவர், ராஜ்நாத் சிங் ஆகியோர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.நடப்பு, 15வது லோக்சபாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு, மே மாதம் நிறைவடைகிறது. ஆனால், உணவு மசோதா, நிலம் கையகப்படுத்துதல் மசோதா போன்ற முக்கிய மசோதாக்களை, மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேகத்தைப் பார்க்கும் போது, இந்த ஆண்டு ... |
| இந்தியா - பாக்., அமைச்சர்கள் நாளை முக்கிய ஆலோசனை? Posted: புதுடில்லி: இந்தியா - பாக்., வெளியுறவு அமைச்சர்கள், நாளை, கிர்ஜிஸ்தானில் சந்தித்து, முக்கிய பேச்சு நடத்தவுள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், சமீபத்தில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களால், பதற்றம் நிலவுகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம், நியூயார்க்கில், இரு நாட்டு பிரதமர்களும் சந்தித்து, பேச்சு நடத்தவுள்ளதாக, சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. பிரதமர் மன்மோகன் சிங், சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், "நியூயார்க்கில், பாக்., பிரதமருடன் பேச்சு நடத்துவது குறித்து, இன்னும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 12,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |