Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பெரியார் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 17-இல் மரியாதை

Posted: 11 Sep 2013 01:13 PM PDT

தந்தை பெரியாரின் 135-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர் தூவி முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்துகிறார்.

செவ்வாய்க் கிரகத்துக்கு அடுத்த மாதம் விண்கலம் அனுப்ப "இஸ்ரோ' திட்டம்

Posted: 11 Sep 2013 01:12 PM PDT

செவ்வாய்க் கிரகத்தை ஆராய்வதற்காக அடுத்த மாதம் விண்கலம் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று, "இஸ்ரோ'வின் செவ்வாய் வட்டச் சுற்றி திட்ட (மார்ஸ் ஆர்பிடர் மிஷன்) இயக்குநர் எஸ்.அருணன் தெரிவித்தார்.

உத்தரகண்ட் மறு சீரமைப்புக்கு ரூ.50 கோடி: 101 கிராமங்களைத் தத்தெடுக்கிறது மாதா அமிர்தானந்தமயி மடம்

Posted: 11 Sep 2013 01:11 PM PDT

நாடு முழுவதும் 101 கிராமங்களைத் தத்தெடுக்கப் போவதாக மாதா அமிர்தானந்தமயி மடம் அறிவித்துள்ளது.

எட்டயபுரத்தில் பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு

Posted: 11 Sep 2013 01:11 PM PDT

மகாகவி பாரதியாரின் 92-வது நினைவு தினத்தை முன்னிட்டு, பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் எட்டயபுரத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

காடுகளைக் காப்போம்

Posted: 11 Sep 2013 01:06 PM PDT

அத்துவானக் காட்டுக்குள்ளே ஒரு சிங்கம் இருந்ததாம். அந்தச் சிங்கம் அந்தக் காட்டில் கம்பீரமாக நடந்து வருமாம்.

குளத்து வேலைக்கு குப்பை வேலை மாற்று

Posted: 11 Sep 2013 01:05 PM PDT

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை காப்புறுதித் திட்டம் என்ற பெயரில் ஆண்டுதோறும் ரூ.50,000 கோடி முதல் ரூ.1,00,000 கோடி வரை செலவழிக்கப்பட்டு வருகிறது.

தேவையில்லை!

Posted: 11 Sep 2013 01:04 PM PDT

ஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் இனிமேல் வெளிநாடு சென்று சிகிச்சை பெறலாம்.

மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கத் தலைவர்கள் நெருக்குதல்

Posted: 11 Sep 2013 01:02 PM PDT

2014-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பல மட்டங்களில் இருந்து கட்சி மேலிடத்துக்கு நெருக்குதல் வந்தவண்ணம் உள்ளது.

கருணாநிதி மீது அவதூறு வழக்கு

Posted: 11 Sep 2013 01:00 PM PDT

திமுக தலைவர் கருணாநிதி மீது தமிழக அரசு சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேலும் ஒரு அவதூறு வழக்கு புதன்கிழமை (செப். 11) தாக்கல் செய்யப்பட்டது.

சமையல் எரிவாயுவுக்கு நேரடி மானியம்: அக்டோபர் 1 முதல் தமிழகத்தில் அறிமுகம்

Posted: 11 Sep 2013 12:59 PM PDT

சமையல் எரிவாயுவுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ஆம் தேதி முதல் அரியலூர் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மனு

Posted: 11 Sep 2013 12:51 PM PDT

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தீர்ப்பு: பசுமைத் தீர்ப்பாயத்தின் அதிகார வரம்பு என்ன?

Posted: 11 Sep 2013 12:50 PM PDT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தீர்ப்பு அளித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு எதிராக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) பொதுச் செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

"கடலோர பாதுகாப்புக்கு 20 அதிநவீன ரோந்துப் படகுகள்'

Posted: 11 Sep 2013 12:50 PM PDT

தமிழகக் கடலோர பாதுகாப்புக்கு, ரூ.160 கோடி செலவில் 20 அதிநவீன ரோந்துப் படகுகள் விரைவில் வாங்கப்படவுள்ளன என, கடலோரக் காவல்படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

அவதூறு வழக்கு: விஜயகாந்துக்கு பிடிவாரன்ட்

Posted: 11 Sep 2013 12:49 PM PDT

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கில், புதன்கிழமை ஆஜராகாத அவருக்கு பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைய பூம்புகாரில் மீன்பிடித் துறைமுகம்

Posted: 11 Sep 2013 12:48 PM PDT

நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகாரில் ரூ.78.50 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை அடிக்கல் நாட்டினார். தலைமைச் செயலகத்தில் விடியோ கான்பரன்சிங் முறை மூலம் அவர் அடிக்கல் நாட்டினார்.

சௌதாலா ஜாமீன் நீட்டிப்பு மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

Posted: 11 Sep 2013 12:29 PM PDT

ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா ஜாமீன் நீட்டிப்பு கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சமாஜவாதி கட்சி கூட்டத்தை புறக்கணித்தார் அஸம் கான்

Posted: 11 Sep 2013 12:28 PM PDT

சமாஜவாதி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான அஸம் கான் புறக்கணித்தார்.

தில்லி மாணவி பாலியல் வழக்கு: தண்டனை நாளை அறிவிப்பு

Posted: 11 Sep 2013 12:28 PM PDT

தில்லியில் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த துணை மருத்துவ மாணவி வழக்கில் குற்றவாளிகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) தண்டனை அறிவிக்கப்படும் என்று விரைவு நீதிமன்றம் தெரிவித்தது.

ஜாமீன் கோரி ஜெகன்மோகன் மனு

Posted: 11 Sep 2013 12:25 PM PDT

சொத்தக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, தன்னை ஜாமீனில் வெளிவிட வேண்டும் எனக் கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தில்லி திரும்பினார் சோனியா

Posted: 11 Sep 2013 12:25 PM PDT

அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை அதிகாலையில் தில்லி திரும்பினார்.

"திருநள்ளாறு கோவிலுக்கு ரூ. 50 லட்சத்தில் ஸ்கேனர் கருவி'

Posted: 11 Sep 2013 12:21 PM PDT

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வருவோரின் பைகளை சோதனை செய்ய ரூ.50 லட்சத்தில் ஸ்கேனர் கருவி வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

"இராஜராஜசோழனின் போர்வாள்' திரைப்பட பூஜையில் பொதுமக்கள் முன்னிலையில் மெட்டமைத்தார் இளையராஜா!

Posted: 11 Sep 2013 12:21 PM PDT

திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக, "இராஜராஜ சோழனின் போர்வாள்' என்ற திரைப்படத்துக்கான பாடலுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மெட்டமைத்தார் இசையமைப்பாளர் இளையராஜா.

வெள்ள பாதிப்பு: தகவல் அளிக்க இலவச போன்

Posted: 11 Sep 2013 12:18 PM PDT

வெள்ள பாதிப்புகள் குறித்து தகவல் அளிக்க இலவச தொலைபேசி எண்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த தொலைபேசி எண்ணில் அழைத்து வெள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

வட மாவட்டங்களில் தொடரும் கனமழை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு

Posted: 11 Sep 2013 12:18 PM PDT

வட மாவட்டங்களில் தொடரும் கனமழையால் பொது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்: பலன் எதிர்பாராமல் கர்மம் செய்வது எவ்வாறு?

Posted: 11 Sep 2013 12:15 PM PDT

கர்மானுஷ்டானமும் பக்தி யோகமும் என்பதில், பாமரர்களாகிய நமக்கு இருக்கும் ஐயங்களை காஞ்சி ஸ்ரீமகாபெரியவர் தனக்கே உரிய விதத்தில் தீர்த்த அனுபவ பதில் இது...

சிரியா விவகாரம்: அமைதித் தீர்வுக்கும் ஒரு வாய்ப்பு: ஒபாமா

Posted: 11 Sep 2013 12:00 PM PDT

சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லாமல், அமைதி வழியில் தீர்வு கிடைக்குமென்றால் அதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இருந்தாலும், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் உடனடித் தாக்குதல் நடத்தத் தயாராக இருக்கும்படி ராணுவத்தைக் கேட்டுக்கொண்டார்.

லிபியாவில் குண்டு வெடிப்பு: அரசு அலுவலகம் சேதம்

Posted: 11 Sep 2013 11:58 AM PDT

லிபியாவின் கிழக்குப்பகுதியான பென்காஸி நகரில், புதன்கிழமை சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில், வெளியுறவுத்துறை அலுவலகம் கடும் சேதம் அடைந்தது.

ஐ.நா. கூட்டத்தை புறக்கணிக்க ஷேக் ஹசீனா முடிவு

Posted: 11 Sep 2013 11:57 AM PDT

நியூயார்க்கில் இம்மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ள 68ஆவது ஐ.நா. சபைக் கூட்டத்தை புறக்கணிக்க வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா முடிவு செய்துள்ளார்.

மெக்சிகோவில் நிலச்சரிவு: 3 குழந்தைகள் உள்பட 8 பேர் சாவு

Posted: 11 Sep 2013 11:56 AM PDT

மெக்சிகோவில் நிலச்சரிவு ஏற்பட்டதில் மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்க மருத்துவமனையில் சோனியாவிடம் சம்மன் அளிப்பு

Posted: 11 Sep 2013 11:51 AM PDT

அமெரிக்க மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, சீக்கிய உரிமைக்குழு தொடர்ந்த வழக்கில், சம்மன் அளிக்கப்பட்டது.

அடர் நடவு முறை "மா' சாகுபடியில் அதிக மகசூல்!

Posted: 11 Sep 2013 11:50 AM PDT

உலக மாம்பழ உற்பத்தியில் இந்தியா 65 சதவீத பங்களிப்பு கொண்டிருந்தாலும், உற்பத்தித் திறனில் ஹெக்டேருக்கு 5.5 மெட்ரிக் டன் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், அதிக மகசூல் பெறவும் அடர்நடவு முறையில் மா சாகுபடி செய்வதே சாலச் சிறந்தது.

வாழையில் நோய் மேலாண்மை

Posted: 11 Sep 2013 11:49 AM PDT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் வாழை பயிரிடப்படுகிறது. இதில் ஏலக்கி, பூவன், கிரான்ட் நைன் உள்ளிட்ட வகைகளில் வாழை பயிரிடப்படுகிறது.

ஃபெராரி அணியுடன் 2014இல் இணைகிறார் ராய்க்கோனன்

Posted: 11 Sep 2013 11:44 AM PDT

ஃபின்லாந்தைச் சேர்ந்த கார் பந்தய வீரர் கிமி ராய்க்கோனன், 2014-ம் ஆண்டில் ஃபெராரி அணியுடன் இணைய உள்ளார். 2 ஆண்டுகள் ஃபெராரி அணிக்காக கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்பார் என்று ஃபெராரி அணி நிர்வாகம் புதன்கிழமை அறிவித்தது.

முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 294; பாகிஸ்தான் 163/3

Posted: 11 Sep 2013 10:59 AM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 294 ரன்கள் எடுத்தது.

சுர்ஜீத் ஹாக்கி: பாகிஸ்தான் பங்கேற்பு?

Posted: 11 Sep 2013 10:58 AM PDT

பஞ்சாபில் நடைபெறவுள்ள 30-வது சுர்ஜீத் ஹாக்கி தொடரில் பாகிஸ்தானைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எசக்ஸ் அணியுடன் இணைந்தார் கம்பீர்

Posted: 11 Sep 2013 10:58 AM PDT

இங்கிலாந்தில் கவுன்ட்டி அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. எச்க்ஸ் அணிக்காக கம்பீர் தேர்வு செய்யப்பட்டார். சொந்தப் பிரச்னை காரணமாக இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய கம்பீர், தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

ஏடிபி டென்னிஸ்: சோம்தேவ் ஏமாற்றம்

Posted: 11 Sep 2013 10:57 AM PDT

துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் மிகுந்த ஏமாற்றம் அளித்தார்.

தெற்காசிய கால்பந்து: ஆப்கனிடம் இந்தியா தோல்வி

Posted: 11 Sep 2013 10:55 AM PDT

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 2-0 என்ற கோல் கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி தோற்கடித்து முதன்முதலாக பட்டத்தை கைப்பற்றியது.

இந்தியா ஏ - நியூஸிலாந்து ஏ: இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்

Posted: 11 Sep 2013 10:53 AM PDT

நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய ஏ அணி வியாழக்கிழமை மோதுகிறது.

துராந்த் கோப்பை கால்பந்து: ஓஎன்ஜிசி, கடற்படை அணிகள் வெற்றி

Posted: 11 Sep 2013 10:52 AM PDT

துராந்த் கால்பந்து கோப்பை போட்டியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி), இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன.

எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: இன்று தொடக்கம்

Posted: 11 Sep 2013 10:52 AM PDT

88-வது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பைக்கான ஹாக்கி போட்டி சென்னையில் வியாழக்கிழமை தொடங்குகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

2014 உலகக் கோப்பை கால்பந்து: அமெரிக்கா, ஆர்ஜெண்டினா தகுதி

Posted: 11 Sep 2013 10:51 AM PDT

2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதாவது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு ஆர்ஜெண்டினா, அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன.

தெலங்கானாவுக்கு எதிர்ப்பு: கிருஷ்ணா மாவட்டத்தில் பந்த்

Posted: 11 Sep 2013 10:35 AM PDT

ஆந்திர மாநிலத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் பந்த் நடத்தியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கொலை: ஒரே குடும்பத்தில் 7 பேருக்கு ஆயுள்

Posted: 11 Sep 2013 10:35 AM PDT

பிகார் மாநிலத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை கொலை செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு புதன்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் நீதி குழுவின் வருகை தள்ளிவைப்பு

Posted: 11 Sep 2013 10:34 AM PDT

பாகிஸ்தான் நீதி குழுவின் இந்திய வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.

மத்தியில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்

Posted: 11 Sep 2013 10:33 AM PDT

""மத்தியில் ஆட்சிபுரிவோர் மாற வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அந்த மாற்றத்தை மாநில கட்சிகளால் மட்டுமே தர முடியும். எனவே, அடுத்து அமையப் போகும் மத்திய அரசில் சமாஜவாதி கட்சி முக்கிய பங்காற்றும்'' என அக் கட்சித் தலைவர் முலாயம் சிங் கூறினார்.

கேதார்நாத்: 86 நாள்களுக்கு பிறகு பூஜைகள் தொடக்கம்

Posted: 11 Sep 2013 10:31 AM PDT

கேதார்நாத் கோயிலில் இயற்கை பேரழிவால் தடைபட்ட பூஜைகள், 86 நாள்களுக்கு பிறகு புதன்கிழமை மீண்டும் தொடங்கின.

துன்டாவின் போலீஸ் காவல் மேலும் 7 நாள்களுக்கு நீட்டிப்பு

Posted: 11 Sep 2013 10:29 AM PDT

நாடு முழுவதும் பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டாவின் போலீஸ் காவலை தில்லி தலைமை மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மேலும் 7 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.

ஆசாராமிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த கோரிக்கை

Posted: 11 Sep 2013 10:27 AM PDT

சாமியார் ஆசாராமிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவேண்டும் என்று அவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 16 வயதுப் பெண்ணின் தந்தை, கோரியுள்ளார்.

பிரதமர் வேட்பாளராக யாரை வேண்டுமானாலும் பாஜக அறிவிக்கட்டும்

Posted: 11 Sep 2013 10:22 AM PDT

யாரை வேண்டுமானாலும் பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி அறிவிக்கட்டும், ஆனால் காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை துணை தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் தான் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறினார்.

மத்திய அரசின் ஆட்சி மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும்: கருணாநிதி

Posted: 11 Sep 2013 08:31 AM PDT

இந்தியாவின் இரண்டாம் ஆட்சி மொழியாகத் தமிழை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் கூறியுள்ளார்.இது மகிழ்ச்சியை அளிக்கும் செய்தியாகும்.தருண்

இந்த நாளில் அன்று: 13 செப். 73: * சிலியில் ராணுவப் புரட்சி வெற்றி: ஜனாதிபதி தற்கொலை; கம்யூ. நாடுகளுடன் உறவு முறிப்பு

Posted: 11 Sep 2013 08:26 AM PDT

இந்த நாளில் அன்று: 13 செப். 73: * சிலியில் ராணுவப் புரட்சி வெற்றி: ஜனாதிபதி தற்கொலை; கம்யூ. நாடுகளுடன் உறவு முறிப்பு

மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 11 Sep 2013 08:25 AM PDT

சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எல்.டி.ஏ.பீட்டர் ராயன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே மீன்பிடிக்கும் தமிழக

இந்த நாளில் அன்று: 12 செப். 73: * பாக்.போர்க் கைதிகளை அனுப்ப ரயில்கள் தயார்; மற்றவர்களுக்கு சிட்டகாங், கராச்சியில் கப்பல் ஏற்பாடுகள்

Posted: 11 Sep 2013 08:19 AM PDT

இந்த நாளில் அன்று: 12 செப். 73: * பாக்.போர்க் கைதிகளை அனுப்ப ரயில்கள் தயார்; மற்றவர்களுக்கு சிட்டகாங், கராச்சியில் கப்பல் ஏற்பாடுகள்

எதிர்ப்புச் சூழல்கள் இருந்தாலும் மக்கள் பணி தொடரும்: விஜயகாந்த்

Posted: 11 Sep 2013 08:15 AM PDT

தேமுதிக 9-ஆம் ஆண்டில் செப்டம்பர் 14-ஆம் அடியெடுத்து வைக்கிறது. ஒரு கட்சியை ஆரம்பிப்பது சுலபம். ஆனால் தொடர்ந்து நடத்துவது மிகவும் கடினம்.தேமுதிக வளர்ந்து வருவதற்கு மக்கள் ஆதரவும்,

காயல்பட்டினம் ஐநூற்று நங்கை அம்மன் கோயிலில் குடமுழுக்கு கோலாகலம்

Posted: 11 Sep 2013 08:13 AM PDT

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீஐநூற்றுநங்கை அம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை

தெற்காசிய கால்பந்து போட்டி: ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன்

Posted: 11 Sep 2013 08:07 AM PDT

தெற்காசிய கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்றில் இன்று நடப்புச் சாம்பியனான இந்திய அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதியது. இதில் ஆப்கன் அணி 2-9 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று

ரூ. 144 கோடி மதிப்பிலான மது கோடாவின் சொத்துக்கள் முடக்கம்

Posted: 11 Sep 2013 07:22 AM PDT

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடாவுக்கு சொந்தமான மும்பை, பூணேவில் உள்ள ரூ. 144 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி வைக்க தில்லியில் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேட்டை அருகே மணல் கடத்தல்: 3 பேர் கைது-டிராக்டர், லாரிகள் பறிமுதல்

Posted: 11 Sep 2013 07:20 AM PDT

திருநெல்வேலி மாவட்டம், பேட்டை அருகே மணல் கடத்த பயன்படுத்தப்பட்டதாக ஒரு டிராக்டர், 2 டிப்பர் லாரிகளை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரித்து

ரேஷன் அரிசி கடத்தியதாக கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

Posted: 11 Sep 2013 07:01 AM PDT

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் இருந்து கள்ளச் சந்தையில் ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடக மாநிலத்துக்கு சிலர் கடத்தி வருவதாக உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

நீர்மூழ்கி கப்பலில் இறந்த 2 வீரர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

Posted: 11 Sep 2013 06:52 AM PDT

மும்பை கடற்படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐஎன்எஸ் சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பல் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெடித்து நீரில் மூழ்கியது. இதிலிருந்த 18 வீரர்களும் உயிரிழந்தனர்.இந்நிலையில்

மாற்று மருத்துவத்தில் ஈடுபட்ட இருவர் கைது

Posted: 11 Sep 2013 06:41 AM PDT

சிதம்பரம் எடத்தெருவைச் சேர்ந்த ராமானுஜம் மகன் நாராயணன் (40). இவர் ஆர்.எம்.பி மருத்துவம் படித்துள்ளார். ஆனால் இவர் அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்ததாகவும், காரைக்காட்டு சொக்கலிங்கம்

காடுவெட்டி குரு அக்டோபர் 25-ல் ஆஜராக உத்தரவு

Posted: 11 Sep 2013 06:39 AM PDT

காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் கடந்த 2013 மார்ச் 28-ஆம் தேதி வன்னியர் சங்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய காடுவெட்டி குரு, தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை

ஒலிகளை பற்கள் மூலம் கேட்கலாம் என நிருபித்துள்ள சிதம்பரம் இளம் விஞ்ஞானிக்கு எம்எல்ஏ பாராட்டு

Posted: 11 Sep 2013 06:35 AM PDT

கடலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற இளம் விஞ்ஞானி போட்டியில் ஒலிகளை பற்கள் மூலம் கேட்கலாம் என நிருபித்து வெற்றி பெற்ற இளம் அறிவியல் விஞ்ஞானி விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட சிதம்பரம்

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 3 பேருக்கு மூன்று ஆண்டு சிறை

Posted: 11 Sep 2013 06:18 AM PDT

சென்னையில் உள்ள போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2.7.2008-ஆம் தேதி ரோந்து சென்றனர். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் டேராடூன் விரைவு ரயிலில் கஞ்சா

தலைமறைவாக இருந்த ரௌடிகள் கைது

Posted: 11 Sep 2013 06:15 AM PDT

மேற்கு மாம்பலம் மூர்த்தித் தெருவைச் சேர்ந்தவர் மா. சேகர் என்ற ஆட்டோ சேகர் (45). மேற்கு மாம்பலம் புஷ்பவதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சு. சிவா (39. இவர்கள் இருவர் மீதும் அடிதடி, கொலை

இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு

Posted: 11 Sep 2013 06:02 AM PDT

இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில்,

ராகுல் காந்தியின் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம்: ஷிண்டே

Posted: 11 Sep 2013 05:54 AM PDT

2014 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்தர் மோடியை நிறுத்த அக்கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.இதற்காக பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நாளை

ரேஷன் கடைகளில் உருளைக்கிழங்கு விற்பனை: கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் தகவல்

Posted: 11 Sep 2013 05:44 AM PDT

ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் உருளைக்கிழங்கு, வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் வாங்கி பயனடையுமாறு சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை

தொழிலாளி அடித்துக் கொலை: மைத்துனர் கைது

Posted: 11 Sep 2013 05:40 AM PDT

தூத்துக்குடி அம்பேத்கர்நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி. இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுப்புலட்சுமியின் தம்பி மாரிமுத்து (38)

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் 32 சிலைகள் கரைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு

Posted: 11 Sep 2013 05:28 AM PDT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிதம்பரம் தாலுக்காவில் மொத்தம் 91 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.சிதம்பரம் நகரில் 5 அடி உயரத்திலான மொத்தம் 11

பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Posted: 11 Sep 2013 05:18 AM PDT

சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறுவதாக இருந்த காலாண்டுத் தேர்வு கடைசித் தேர்வுக்கு பின் நடைபெறும் எனவும்

மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

Posted: 11 Sep 2013 05:11 AM PDT

திருவல்லிக்கேணி ஹனுமந்த்புரம் வி.ஆர். பிள்ளைத் தெருவைச் சேர்ந்தவர் மணிமாறன் (30). இவர் திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்

இமானுவேல் சேகரன் நினைவு நாள்: பந்தோபஸ்து பணி போலீஸார் தங்க பள்ளிகளுக்கு விடுமுறை

Posted: 11 Sep 2013 05:09 AM PDT

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய தாலுகாக்களில் பந்தோபஸ்து பணிக்காக காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்(கன்னியாகுமரி மாவட்டம்) தலைமையி்ல கூடுதல்

ஆடம்பர சுற்றுலாவுக்கு ஏற்ற பேலஸ் ஆன் வீல்ஸ்

Posted: 11 Sep 2013 05:07 AM PDT

இந்த ரயில் மூலமாக தில்லியில் இருந்து கிளம்பி 7 நாட்கள் வட இந்தியாவின் மிக முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, தில்லியில் வந்து இறங்கும் வகையில் சுற்றுலா பயண திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் பெண் பாலியல் பலாத்காரம்

Posted: 11 Sep 2013 05:00 AM PDT

உத்தரபிரதேச மாநிலம் டியோரியா மாவட்டம் ராம்புர் கர்கானா பகுதியில் மூன்று பேரால் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.சுகாதாரத்துறையில் பணியாற்றும் அந்தப் பெண்

தோல்வியை கண்டு துவளாதீர்....

Posted: 11 Sep 2013 04:58 AM PDT

வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் மாறி மாறி வருவது சகஜம். வாழ்வில் எல்லோரும் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு. உயர்வு வரும் இடத்தில் சில தோல்விகளும் கூடவே வரும்.

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதல்: 2 பேர் பலி

Posted: 11 Sep 2013 04:58 AM PDT

கூடலூர் நியூஹோப் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் டியூக்ரவி மகன் டேனியல் ஜோஸ்வர(26), தற்போது கோவை, போத்தனூர் டிச்சர் காலனியில் குடியிருந்து வருகிறார். இவரது நன்பர் கோவை,

நிர்வி கல்ப சமாதியில் சுவாமிஜி!

Posted: 11 Sep 2013 04:55 AM PDT

ஒருநாள் காலை உணவிற்கு முன்பாக சுவாமிஜி தமது அறையிலிருந்து வெளியே வந்தார். அவரது கையில் கீதை ஒன்று இருந்தது.

ஸோபியானில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

Posted: 11 Sep 2013 04:40 AM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸோபியானில் இன்று போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.

கடலூர் டிஎஸ்பி இடமாற்றம்

Posted: 11 Sep 2013 04:32 AM PDT

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டாண்டுகளாக பணியாற்றி முடித்தவர்கள் மற்றும் புகார் காரணமாக 20 டிஎஸ்பி-க்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதில் கடலூர் உட்கோட்ட டிஎஸ்பியாக பணியாற்றி

ஐநா சபை கூட்டம்: வங்கதேச பிரதமர் ஹசினா புறக்கணிப்பு

Posted: 11 Sep 2013 04:30 AM PDT

நியூயார்க்கில் நடைபெறும் ஐநா சபை கூட்டத்தை புறக்கணிக்க  வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா  முடிவு செய்துள்ளார்.வங்கதேசத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் நெருக்கடி மற்றும் அமெரிக்க அதிபர்

தடை செய்யப்பட்ட மசாலா பாக்குகள் பறிமுதல்

Posted: 11 Sep 2013 04:20 AM PDT

விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு அமலாக்க அலுவலர் கவிக்குமார் மற்றும் பணியாளர்கள் ராஜபாளையம் காந்திசிலை அருகேயுள்ள சந்தைகடைகளில் திடிர் சோதனை மேற்கொண்டனர்.சில

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை:அணை, ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

Posted: 11 Sep 2013 04:18 AM PDT

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக

ஆசாராமிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த கோரிக்கை

Posted: 11 Sep 2013 04:14 AM PDT

ஆசாராம் பாபுவை பலர் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். அவர் மீது குற்றம் இல்லை என்றால் அவர் ஏன் உண்மை கண்டறியும் சோதனையை சந்திக்கக் கூடாது? இந்த வகையான சோதனைகள்தான், உண்மையை

2014 கால்பந்து உலகக் கோப்பை: அமெரிக்கா, ஆர்ஜெண்டீனா தகுதி

Posted: 11 Sep 2013 04:04 AM PDT

உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் 2014-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி முத் ஜூலை 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகக் கோப்பையில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும். 32 அணிகள் எவை

சுதேசி இயக்கத்தை மீண்டும் தொடங்க வேண்டும்: எடியூரப்பா

Posted: 11 Sep 2013 04:01 AM PDT

1926-ம் ஆண்டு தனது முதல் கிளையை கரூரில் தொடங்கிய லட்சுமி விலாஸ் வங்கி, தற்போது அதன் 300-வது கிளையை பெங்களூரு பசவனகுடியில் தொடங்கியுள்ளது பாராட்டுதலுக்குரியது. தேசிய வங்கிகள்,

உறவினரை கத்தியால் குத்தியவர் தற்கொலைக்கு முயற்சி

Posted: 11 Sep 2013 03:59 AM PDT

உத்தமபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக உறவினரை கத்தியால் குத்தியவர், அரளி விதை தின்று தற்கொலைக்கு முயன்றதாக செவ்வாய்கிழமை ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

துண்டாவிற்கு மேலும் 7 நாட்கள் காவல் நீடிப்பு

Posted: 11 Sep 2013 03:55 AM PDT

மும்பை, ஹைதராபாத், தில்லி உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல்

சீரான நிலையில் பங்கு வர்த்தகம் நிறைவு

Posted: 11 Sep 2013 03:49 AM PDT

புதன்கிழமை மாலை சென்செக்ஸ் சீரான நிலையில் நிறைவு பெற்றது.

பாகிஸ்தானில் விஷச்சாராயம் அருந்தியதால் 13 பேர் சாவு

Posted: 11 Sep 2013 03:47 AM PDT

கடந்த செவ்வாயன்று ஒரு வீட்டில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட, 17 பேர் விஷச்சாராயம் அருந்தினர். அவர்களது நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில்

உதவிப்பொறியாளருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு!

Posted: 11 Sep 2013 03:45 AM PDT

சிதம்பரம் எம்.கே.தோட்டம் பிச்சமுத்து நகரில் வசிக்கும் விஜயலட்சுமி. இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிப்பொறியாளராக உள்ளார். இவருக்கு செல்போனில் பல்வேறு நம்பர்களில் இருந்து வீரமணி,

செவ்வாய் கிரகத்துக்கு அடுத்த மாதம் விண்கலம் அனுப்பப்படும்: திட்ட இயக்குநர் எஸ்.அருணன்

Posted: 11 Sep 2013 03:33 AM PDT

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அடுத்த மாதம் விண்கலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று செவ்வாய் வட்ட சுற்றி திட்ட(மார்ஸ் ஆர்பிடர் மிஷன்) இயக்குநர் எஸ்.

ஜாமீனை நீட்டிக்கக் கோரி சவுதாலா தாக்கல் செய்த மனு தள்ளுபடி

Posted: 11 Sep 2013 03:31 AM PDT

ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீனை நீட்டிக்கக் கோரி ஹரியானா முன்னாள் முதல்வர் ஓ.பி. சவுதாலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

விருதுநகரில் பாரதியார் நினைவு தினம்

Posted: 11 Sep 2013 03:29 AM PDT

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் சத்தியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.மாரியப்பன் முன்னிலை வகித்து பாரதியாரின்திருவுருவப் படத்திற்கு

மெக்சிகோவில் நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 8 பேர் சாவு

Posted: 11 Sep 2013 03:26 AM PDT

மெக்சிகோவில் நிலச்சரிவு ஏற்பட்டதில் மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.மெக்சிகோவின் கிழக்கு மெக்சிகன் மாகாணத்தில் மன்ஜானாடிட்லா நகரில் திங்கள்கிழமை அதிகாலை இந்த நிலச்சரிவு

உச்ச நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீட்டு மனு தாக்கல்

Posted: 11 Sep 2013 03:23 AM PDT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து அந்த தீர்ப்பாயத்தின் அதிகார வரம்பு குறித்து கேள்வி எழுப்பி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற

அமெரிக்க மருத்துவமனையில் சோனியாவுக்கு சம்மன் அளிப்பு

Posted: 11 Sep 2013 03:12 AM PDT

புது தில்லியில் 1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்தது. இது தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவர்களை சோனியா காந்தி காப்பாற்ற முயன்றதாக, அவர் மீது

கால்நடை ஆய்வாளருக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்

Posted: 11 Sep 2013 03:09 AM PDT

2011-2012ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டு கால்நடை ஆய்வாளர் பயிற்சி முடித்த 289 பேர்களுக்கு கால்நடை ஆய்வாளர் நிலை-2க்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

மரக்கிளை ஒடிந்து சிறுவன் பலி

Posted: 11 Sep 2013 03:06 AM PDT

ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளைத்தெருவைச்சேர்ந்த ரகுபதி மகன் முத்துமணி(11)இவர் வீட்டில் இருந்த முருங்கைமரத்தில் ஏறி முருங்கைக்காய் பறித்துள்ளார்.அப்போது மரக்கிளை ஒடிந்து சிறுவன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™