Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மருத்துவ மாணவி பாலியல் வழக்கில் 4 வாலிபர்களும் குற்றவாளிகள் : வழக்கு துவங்கி 9 மாதங்களில் டில்லி கோர்ட் தீர்ப்பு

Posted:

"டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, நான்கு பேர் மீதான குற்றங்களும், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் குற்றவாளிகள்' என, டில்லி விரைவு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய, மக்கள் மத்தியில் ஆவேசத்தை உருவாக்கிய இந்த வழக்கில், ஒன்பது மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை, பலரும் வரவேற்றுள்ளனர். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது. அனேகமாக, மரண தண்டனை வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்தாண்டு டிசம்பர், ...

அதிகாரிகள் பிடியிலிருந்து எங்களை விடுவிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., வேண்டுகோள்

Posted:

புதுடில்லி:"அதிகாரிகளின் பிடியிலிருந்து, எங்களை விடுவித்து, சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்' என, சி.பி.ஐ., சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.சி.பி.ஐ., அமைப்புக்கு அதிக அதிகாரம் அளிப்பது தொடர்பான வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதி, ஆர்.எம்.லோத்தா தலைமையிலான, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், அம்ரேந்திரா சரண் கூறியதாவது: ஒவ்வொரு வழக்கின் விசாரணையின் போதும், ஒவ்வொரு கட்டத்திலும், எங்களுக்கு பல்வேறு தடைகளும், இடையூறுகளும் ஏற்படுகின்றன. இவை அனைத்தும், ...

கலவரத்தில் ஈடுபடுவோருக்கு உ.பி., முதல்வர் அகிலேஷ் எச்சரிக்கை

Posted:

லக்னோ:""உ.பி.,யில், இனி, வன்முறைக்கு இடமில்லை. கலவரத்தில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அம்மாநில முதல்வர், அகிலேஷ் யாதவ் எச்சரித்துள்ளார். கலவர பகுதிகளில் பதற்றம் நீடிப்பதால், ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. பலி எண்ணிக்கை, 38 ஆக உயர்ந்து உள்ளது.திடீர் மோதல்:உ.பி.,யில், முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. கடந்த மாத இறுதியில், அங்குள்ள முசாபர் நகர் மாவட்டத்தில், இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது, கலவரமாக மாறியது.கத்திக்குத்து, தீ வைப்பு, கொலை, கொள்ளை போன்ற ...

ஊழல் இல்லாத இந்தியா உருவாக காங்., அரசு போக வேண்டும்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆவேசம்

Posted:

ஜெய்ப்பூர்:""காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, அகர வரிசைப்படி, ஊழல் செய்து வருகிறது. ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டுமானால், முதலில், காங்கிரஸ் கட்சியை, ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்,'' என, பா.ஜ., பிரசார குழு தலைவர், நரேந்திர மோடி, ஆவேசமாக பேசினார்.அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., பிரசார குழு தலைவராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ஒவ்வொரு மாநிலமாக சென்று, பிரசார கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், நரேந்திர மோடி ...

ஏழைகளுக்கு உணவு தருவது வீண் செலவல்ல: காங்., துணை தலைவர் ராகுல் விளக்கம்

Posted:

புதுடில்லி:""ஏழை மக்களுக்கு உணவு அளிப்பதற்காகச் செலவிடப் படும் பணத்தை, வீண் செலவாகக் கருத முடியாது,'' என, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் கூறினார்.டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது:தகவல் பெறும் உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் போன்றவை, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனை நடவடிக்கைகள். அந்த வரிசையில், தற்போது, உணவுப் பாதுகாப்பு மசோதாவும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மக்களுக்கு உணவு பெறும் உரிமையை அளித்து, நாட்டில் பசிக்கொடுமையை ஒழிப்பதற் காக, இந்தச் சட்ட மசோதா ...

இலவச மொபைல்போன், கம்ப்யூட்டர்கள்: தொலை தொடர்பு ஆணையம் அனுமதி

Posted:

புதுடில்லி:கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு, இலவச மொபைல் போன்கள், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச டேப்லெட் கம்ப்யூட்டர்களை வழங்குவதற்கு, தொலைதொடர்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள், 2.5 கோடி பேருக்கு, மொபைல் போன்கள் வழங்கவும், அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ்-2 மாணவர்கள், 90 லட்சம் பேருக்கு, டேப்லெட் கம்ப்யூட்டர்கள் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இத் திட்டம், அடுத்தாண்டு ...

உலகளவில், "டாப்' பல்கலை பட்டியல் வெளியீடு: 200க்குள் இந்திய பல்கலைக்கு இடம் இல்லை

Posted:

உலகளவில், தரம் வாய்ந்த பல்கலைகளின் பட்டியலை, அமெரிக்க நிறுவனம், நேற்று வெளியிட்டது. இதில், முதல், 200 இடங்களில், இந்திய பல்கலைகள் எதுவும் இடம்பெறவில்லை. டில்லி ஐ.ஐ.டி.,க்கு, 222வது, "ரேங்க்' கிடைத்துள்ளது.லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், "குவாகுரேலி சைமண்ட்ஸ்' என்ற நிறுவனம், கடந்த, 2004ல் இருந்து, உலகளாவிய அளவில் உள்ள பல்கலைகளை ஆய்வு செய்து, ஆண்டுதோறும், தர வரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 10வது ஆண்டாக, நேற்று, பல்கலைகளின் தர வரிசை பட்டியலை வெளியிட்டது.இதில், அமெரிக்காவின், மாசாசூட்ஸ் தொழில்நுட்ப பல்கலை, இரண்டாவது ஆண்டாக, முதலிடத்தை தக்க ...

கூடங்குளத்தில் இருந்து தமிழகத்திற்கு 562 மெகா வாட் மின்சாரம் : விரைவில் கிடைத்தால் துயர் குறையும்

Posted:

கூடங்குளம் அணு மின் நிலையத்தின், முதல் அலகில், மின் உற்பத்தி துவங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ளதால், கூடங்குளம் மின்சாரத்தை பெற, மின்சார வாரியம் ஆர்வமுடன் காத்திருக்கிறது.திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில், தலா, 1,000 மெகா வாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட, இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.முதல் அணு உலையில் மின் தயாரிப்பு பணிகள் தீவிரமாக உள்ளன. கூடங்குளம் அணு மின் நிலையத்தின், முதல் அலகில் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தில், தமிழகத்திற்கு, 462.50; கர்நாடகா, 221; கேரளா, 133; புதுச்சேரி, 33.50 மெகா வாட் ...

அனுமதியின்றி இயங்கும் ஆம்னி பஸ்கள் பறிமுதல்: போக்குவரத்து துறை எச்சரிக்கை

Posted:

"பண்டிகை நாட்களில், அனுமதியின்றி இயங்கும் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்படும்' என, போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.கடந்த, 7ம் தேதி, சென்னையில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட ஆம்னி பஸ்சில், அதிக கட்டணமாக, 1,500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. திருச்சி அருகே, பஸ் டயர் பஞ்சர் ஆனது; ஓட்டுனர் மாயமானார். இந்த சம்பவம், பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதிக லாபம்:பண்டிகை நாட்களில், வெளி மாவட்டங்களில் இயங்கும் பஸ்களை, சென்னையில் இருந்து இயக்கும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள், அதிக லாபம் பார்ப்பதுடன், பயணிகளை தவிக்க விடுகின்றனர். மேலும், சில டிராவல்ஸ் ...

திருப்பதிக்கு பக்தர்கள் வரவேண்டாம்: மீண்டும் 48 மணி நேர முழு அடைப்பு

Posted:

திருப்பதி: திருமலையில், மீண்டும், 48 மணி நேர முழு அடைப்பு போராட்டத்தை, தெலுங்கானா எதிர்ப்புக் குழுவினர் அறிவித்து உள்ளனர். இதனால், "திருப்பதிக்கு வரவேண்டாம்' என, பக்தர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். ஆந்திராவில், தனித் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக, "வரும், 13ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி முதல், 15ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி வரை, திருப்பதியில் இருந்து, திருமலைக்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது' என, போராட்டம் நடத்தும் கூட்டமைப்புக் குழுவினர் அறிவித்து உள்ளனர். இதனால், திருமலைக்கு இரு சக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™