Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இளம்பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

Posted: 10 Sep 2013 01:31 PM PDT

திருமணமான இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்த வலியுறுத்தி, அப்பெண்ணின் உறவினர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருக்கோளூர் கோவில் ஆவணித் தேரோட்டம்

Posted: 10 Sep 2013 01:31 PM PDT

நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான திருக்கோளூர் வைத்தமாநிதி  பெருமாள் கோவில் ஆவணித் திருவிழாவையொட்டி,

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி

Posted: 10 Sep 2013 01:31 PM PDT

: திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் அத்துமீறி புகுந்து தகராறில் ஈடுபட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் 25 பேரின் ஜாமீன் மனு திருப்பூர் நடுவர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்து அன்னையர் முன்னணியினர் தீர்த்தக் கலச ஊர்வலம்

Posted: 10 Sep 2013 01:31 PM PDT

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, திருப்பூரில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் 108 தீர்த்தக் கலச ஊர்வலம் நடைபெற்றது.

போலி வங்கி வரைவோலை தயாரித்து மோசடி: வடமாநில இளைஞர் கைது

Posted: 10 Sep 2013 01:30 PM PDT

தேசியமயமாக்கப்பட்ட வங்கி பெயரில் போலி வங்கி வரைவோலை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக வடமாநில இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

நூற்றாண்டு பழமைவாய்ந்த கற்பூர மரம்இடி விழுந்ததில் இரண்டாகப்  பிளந்தது

Posted: 10 Sep 2013 01:30 PM PDT

குன்னூர் அருகில் உள்ள எடப்பள்ளி பகுதியில் செவ்வாய்க் கிழமை திடீரென்று பலத்த இடிவிழுந்ததில் நூற்றாண்டு பழமைவாய்ந்த கற்பூர மரம் இரண்டாகப் பிளவு பட்டது.

அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் முறையிலான ரத்த அழுத்த பரிசோதனைக் கருவி அறிமுகம்

Posted: 10 Sep 2013 01:30 PM PDT

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஜிட்டல் முறையிலான ரத்த அழுத்த பரிசோதனைக் கருவி  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவிந்தராஜ பெருமாளுக்கு ரூ. 2 லட்சத்தில் வெள்ளி பூஜை பொருள்கள் நன்கொடை

Posted: 10 Sep 2013 01:29 PM PDT

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜப் பெருமாளுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பூஜைப் பொருள்கள் நன்கொடையாக

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 10 Sep 2013 01:28 PM PDT

உடுமலை அரசு கலைக் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .

ஆசிரியருக்குப் பாராட்டு விழா

Posted: 10 Sep 2013 01:28 PM PDT

பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அண்ணா பிறந்த தினம்: முதல்வர் ஜெயலலிதா மரியாதை

Posted: 10 Sep 2013 01:28 PM PDT

முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா

தாராபுரத்தில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம்: பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

Posted: 10 Sep 2013 01:28 PM PDT

தாராபுரம் நகர இந்து முன்னணியின் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் புதன்கிழமை நடைபெறுகிறது. தாராபுரம் நகரம் மற்றும் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பிரதிஷ்டை

போலீஸ் எனக் கூறி இளைஞரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

Posted: 10 Sep 2013 01:27 PM PDT

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை தடுத்து நிறுத்தி செல்போன், பணம் பறித்த 2 போலி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கைப்பந்து: சூர்யா கல்லூரி சாம்பியன்

Posted: 10 Sep 2013 01:27 PM PDT

காங்கயம் அருகே, மண்டல அளவில் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

5 அரசுப் பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்

Posted: 10 Sep 2013 01:26 PM PDT

செங்கம் ரோட்டரி சங்கம் சார்பில் செ.நாச்சிப்பட்டு, புதுப்பட்டு, கொட்டாவூர் அண்ணாநகர், அரட்டவாடி, தாழையூத்து ஆகிய கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது .

கேயார் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன்

Posted: 10 Sep 2013 01:26 PM PDT

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த

நடனம், மாறுவேடப் போட்டிகள்: காந்தி நகர் பள்ளி சிறப்பிடம்

Posted: 10 Sep 2013 01:26 PM PDT

திருவண்ணாமலையில் எல்ஐசி நிறுவனம் சார்பில் நடைபெற்ற நடனம், மாறு வேடப் போட்டிகளில் காந்தி நகர் மெட்ரிக் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.

செங்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட விளையாட்டுப் போட்டிக்கு தகுதி

Posted: 10 Sep 2013 01:25 PM PDT

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட விளையாட்டுப் போட்டிக்கு தகுதிபெற்ற தையொட்டி பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி செப்

டாஸ்மாக் பாரை சேதப்படுத்தியதாக 5 பேர் கைது மதுக்கடையை முற்றுகையிட்ட பெண்கள்

Posted: 10 Sep 2013 01:25 PM PDT

வந்தவாசியை அடுத்த தென்எலப்பாக்கம் கிராமத்தில் டாஸ்மாக் பாரை சேதப்படுத்தியதாக 5 பேர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கைதானவர்களை விடுவிக்கக் கோரி டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு திறக்க விடாமல் பெண்கள் போராட்டம் நடத்தினர். மேலும் கடை முன் உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தினர்.

அருணை கல்லூரியில் கருத்தரங்கம்

Posted: 10 Sep 2013 01:25 PM PDT

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில்,  வேலை செய்யும் இடங்களில் ஆங்கில மொழியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த சிறப்புக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வி.ராமநாதன் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் எம்.ஆறுமுகம், துறைத் தலை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Sep 2013 01:24 PM PDT

காவல் துறையை கண்டித்து ஆரணி அண்ணா சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பயிற்சி

Posted: 10 Sep 2013 01:24 PM PDT

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதித் திட்டம் மற்றும் நிர்மல் பாரத் அபியான் திட்ட பயிற்சி கூட்டம் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

10ம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் அவதி

Posted: 10 Sep 2013 01:24 PM PDT

செய்யாறில் 10ம் வகுப்பு, பிளஸ் 2  தனித் தேர்வர்கள் விண்ணப்பம் அளிக்க முடியாமல் செவ்வாய்க்கிழமை பெரும் அவதிப்பட்டனர்.

எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் அமைப்பியல் துறை சங்கம் தொடக்கம்

Posted: 10 Sep 2013 01:24 PM PDT

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் அமைப்பியல் துறை சார்பில் மாணவர் சங்கம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொமுச பேரவை கவுன்சில் கலந்துரையாடல்

Posted: 10 Sep 2013 01:23 PM PDT

திருவண்ணாமலை தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பேரவை கவுன்சில் கலந்துரையாடல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மின் நுகர்வோர் கவனத்துக்கு...

Posted: 10 Sep 2013 01:23 PM PDT

தவறான மின் கட்டண கணக்கெடுப்பு, குறைந்த அழுத்த மின்சார விநியோகம் போன்ற புகார்களை மின் பகிர்மான வட்டத்தில் உள்ள மின் நுகர்வோர் குறைதீர் மன்றத்துக்கு அனுப்பலாம் என்று மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வெ.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

கிராம உதவியாளர்கள் உண்ணாவிரதம்

Posted: 10 Sep 2013 01:23 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

மக்கள் கணினி மையம் திறப்பு

Posted: 10 Sep 2013 01:23 PM PDT

கீழ்பென்னாத்தூர் அடுத்த கழிக்குளம் கூட்டுச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் கணினி மைய திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாணவர்களுக்கு கிராமப்புற வேளாண் பயிற்சி

Posted: 10 Sep 2013 01:22 PM PDT

செய்யாறை அடுத்த வேளியநல்லூரில் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு கிராமப்புற வேளாண் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மனைவியுடன் நீதிமன்றத்தில் ஆஜர்

Posted: 10 Sep 2013 01:22 PM PDT

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்காக, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தனது மனைவியுடன் திருவண்ணாமலை

ஈரோடு

Posted: 10 Sep 2013 01:21 PM PDT

பச்சமலை-முத்துப்பேட்டையில் சுற்றுலா மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு

Posted: 10 Sep 2013 01:21 PM PDT

பச்சமலை மற்றும் முத்துப்பேட்டை பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா

யாசின் பட்கல், அசதுல்லா அக்தரின் போலீஸ் காவல் மேலும் நீட்டிப்பு

Posted: 10 Sep 2013 01:19 PM PDT

அண்மையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.) காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட பயங்கரவாத

குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை: தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

Posted: 10 Sep 2013 01:14 PM PDT

தில்லியில் "டிசம்பர் 16' துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட

கம்பத்தில் 62 விநாயகர் சிலைகள் ஊர்வலம்:போலீஸ் பாதுகாப்புடன் முல்லைப் பெரியாற்றில் கரைப்பு

Posted: 10 Sep 2013 01:06 PM PDT

கம்பத்தில் 62 விநாயகர் சிலைகளின் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று, முல்லைப் பெரியாற்றில் செவ்வாய்க்கிழமை கரைக்கப்பட்டது.

கூலித் தொழிலாளி கொலை: 2 பேர் கைது

Posted: 10 Sep 2013 01:06 PM PDT

உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியில் திங்கள்கிழமை இரவு கூலித் தொழிலாளியைக் கொலை செய்ததாக இருவரை, சின்னமனூர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

கோஷ்டி மோதல்: இருவர் கைது

Posted: 10 Sep 2013 01:06 PM PDT

ஆண்டிபட்டி அருகே  ஆசாரிபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). இவர், இந்த ஊரின் வடக்குப் பகுதியில் உள்ள 1 ஏக்கர் 50 சென்ட் நிலத்தை பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறாராம். இதே நிலத்துக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் (75) என்பவர் பட்டா வைத்திருக்கிறாராம். இது சம்பந்தமாக

விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீச்சு:வட்டாட்சியர் காயம், பஸ் கண்ணாடிகள் உடைப்பு

Posted: 10 Sep 2013 01:05 PM PDT

வத்தலகுண்டு பகுதியில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது,  நிகழ்த்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் 2 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டன. ஊர்வல பாதுகாப்புப் பணிகளை பார்வையிடச் சென்ற நிலக்கோட்டை வட்டாட்சியர் காயமடைந்தார்.

கொடைக்கானல் கோடை சர்வதேசப் பள்ளி தர வரிசையில் முதலிடம்

Posted: 10 Sep 2013 01:05 PM PDT

கொடைக்கானலிலுள்ள கோடை சர்வதேசப் பள்ளி தர வரிசையில் முதலிடம் பெற்றுள்ளது.

கட்டையால் தாக்கியதில் ஒருவர் சாவு; உறவினர் கைது

Posted: 10 Sep 2013 01:05 PM PDT

பழனி அருகே   பாலசமுத்திரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ராமகிருஷ்ணன் (40).  இவருக்கும், செல்வி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 6 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்கின்றனர்.

அணையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டது காணாமல்போன மாணவியா?

Posted: 10 Sep 2013 01:04 PM PDT

வேடசந்தூர் அருகே அணைப் பகுதியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டது,  2 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன மாணவியா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

20 ஆண்டுகளாக அடிப்படை வசதியில்லாமல் இயங்கி வரும் மாவட்ட ஊராட்சி அலுவலகம்

Posted: 10 Sep 2013 01:04 PM PDT

விருதுநகர் மாவட்ட ஊராட்சி அலுவலகம் கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாத இடத்தில் இயங்கி வருகிறது. புதிய அலுவலகம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரத்த தான முகாம்ரத்த தான முகாம்

Posted: 10 Sep 2013 01:04 PM PDT

விருதுநகர் வன்னியப்பெருமாள் கல்லூரியில் அரிமா சங்கமும்-ஊஞ்சா தனசாமி-பரிமளாதேவி டிரஸ்ட்டும் இணைந்து செவ்வாய்க்கிழமை ரத்ததான முகாம் நடத்தின.  இந்த முகாமிற்கு கல்லூரிச் செயலாளர்

பட்டாசு பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா போட்டிகள்

Posted: 10 Sep 2013 01:03 PM PDT

   பட்டாசு பாதுகாப்பு வாரவிழாவினையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

Posted: 10 Sep 2013 01:03 PM PDT

விருதுநகர் மாவட்டம் முக்குளம் அருகே உள்ள எழுவணி கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:

சிறு தானிய சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி

Posted: 10 Sep 2013 01:03 PM PDT

அட்மா திட்டத்தின் சார்பில் சிறு, குறு தானியங்கள் சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றிய விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

ராஜபாளையத்தில் இணைப்புச் சாலை அமைக்க வேண்டும்

Posted: 10 Sep 2013 01:03 PM PDT

ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கொல்லம் சாலைக்கு இணைப்புச் சாலை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

சிறந்த அரசுப் பணியாளருக்கு விருது

Posted: 10 Sep 2013 01:02 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் சிறந்த அரசுப் பணியாளராக தேர்வு செய்யப்பட்ட சேத்தூர் பேரூராட்சி இளநிலை உதவியாளர் காமராஜுக்கு செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி விருது வழங்கினார். பேரூராட்சி பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவராக பதவி

இலங்கைக்கு போர்க் கப்பல்: தமிழகத்தின் எதிர்ப்பை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன் - நாராயணசாமி

Posted: 10 Sep 2013 01:02 PM PDT

இலங்கைக்கு இந்தியா 2 போர்க் கப்பல்களை வழங்கிய விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் உணர்வுகளை

வத்தலகுண்டு பகுதியில்124 விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Posted: 10 Sep 2013 01:02 PM PDT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வத்தலகுண்டு மற்றும் நிலக்கோட்டை பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு

Posted: 10 Sep 2013 01:01 PM PDT

பழனியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதில் உயிரிழந்தார்.

மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி: 132 மாணவர்கள் பங்கேற்பு

Posted: 10 Sep 2013 01:01 PM PDT

மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் 11 பள்ளிகளைச் சேர்ந்த 132 மாணவர்கள் கலந்துகொண்டனர்.   பேரறிஞர் அண்ணாவின் 104 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் பிரிவு சார்பில், மாவட்ட விளையாட்டு அரங்கில் சைக்கிள் போட்டி

ஒட்டன்சத்திரம் அருகே விபத்து: ஆட்டோ டிரைவர் சாவு; 4 பேர் படுகாயம்

Posted: 10 Sep 2013 01:00 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குரும்பூரைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி (34). இவர், கோவையில் மளிகைக் கடை நடத்தி வந்ததுடன், ஆட்டோவும் ஓட்டி வந்துள்ளார்.

அரசு நிலம் சட்ட விரோத மாற்றம்: தனியார் நிறுவனம் மீது குற்றச்சாட்டு

Posted: 10 Sep 2013 01:00 PM PDT

சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதியை சட்ட விரோதமாக உப நிறுவனங்களுக்கு மாற்றம் செய்த தனியார் நிறுவனங்களுக்கு எதிராக

ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

Posted: 10 Sep 2013 01:00 PM PDT

ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து எழுச்சி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பழனிசெட்டிபட்டியில் இட வசதியில்லாத பஸ் நிறுத்தம்

Posted: 10 Sep 2013 12:59 PM PDT

தேனி அருகே பழனிசெட்டிபட்டி பஸ் நிறுத்தத்தில், பஸ்களை நிறுத்திச் செல்வதற்கு போதிய இட வசதியில்லாததால், திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ்ஸக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது.

உழவர் பாதுகாப்புத் திட்ட உறுப்பினர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம்

Posted: 10 Sep 2013 12:59 PM PDT

தேனி மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், உறுப்பினர்களாகப் பதிவு செய்து, நோய் பாதிப்பால் தாற்காலிகமாக இயலாமை நிலையில் உள்ளவர்களுக்கு மாதாந்

தேனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

Posted: 10 Sep 2013 12:59 PM PDT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாவட்ட இந்து முன்னணி சார்பில், தேனியில் செவ்வாய்க்கிழமை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

கேரளத்துக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது

Posted: 10 Sep 2013 12:58 PM PDT

கேரளத்துக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தியதாக ஒருவரை, உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

"மேக்கேதாட்டு நீர் மின் நிலையம்: விரைவில் அமைச்சரவை ஒப்புதல்'

Posted: 10 Sep 2013 12:58 PM PDT

கர்நாடக மாநிலம், மேக்கேதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே நீர் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக விரைவில்

செப்டம்பர் 11 மின் தடை

Posted: 10 Sep 2013 12:58 PM PDT

கம்பம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.   எனவே, காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை, கம்பம், அண்ணாபுரம், ஊத்துக்காடு, இந்திர

விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு

Posted: 10 Sep 2013 12:58 PM PDT

மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குப் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

திருமண மண்டபத்தில் நகை திருட்டு

Posted: 10 Sep 2013 12:57 PM PDT

தேனியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க நகை மற்றும் செல்போன் திருடு போனதாக, திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பணியின்போது உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி: ஜெயலலிதா உத்தரவு

Posted: 10 Sep 2013 12:57 PM PDT

பணியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து வாகனங்களும் ஆன்லைனில் சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்படும்

Posted: 10 Sep 2013 12:57 PM PDT

தியாகி இமானுவேல்சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்டத்திலிருந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஆன்லைனில் சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்படும் என எஸ்.பி. அறிவித்துள்ளார்.

பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளிச் சிறுமி சாவு

Posted: 10 Sep 2013 12:57 PM PDT

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை பஸ் சக்கரத்தில் நசுங்கி பள்ளி மாணவி உயிரிழந்தார்.

பொறியியல் கல்லூரியில் பயிலரங்கம்

Posted: 10 Sep 2013 12:56 PM PDT

சிவகாசி மெப்கோ ஸ்லங் பொறியியல் கல்லூரியில் கணிப்பான் பயன்பாட்டியியல் துறை சார்பில் மிடில்வேர் டெக்னிக்கல்ஸ்   என்ற தலைப்பில் பயிலரங்கம்  நடைபெற்றது.

ராஜபாளையத்தில் உள்நாட்டுஆப்பிள் வரத்து அதிகரிப்பு

Posted: 10 Sep 2013 12:56 PM PDT

இந்த ஆண்டு வட மாநிலங்களில் ஆப்பிள் விளைச்சல் அதிகரித்துள்ளதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் அதே சமயத்தில் விலை குறையவில்லை.   சிம்லா, காஷ்மீர், குலுமணாலி போன்ற பகுதிகளில் இந்த ஆண்டு ஆப்பிள் சீசன் ஆகஸ்ட் முதல்

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ.2.20 லட்சம் மோசடி

Posted: 10 Sep 2013 12:56 PM PDT

அருப்புக்கோட்டையில் வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.2.20 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

தாது மணல் கொள்ளையைத் தடுக்க மாநில முதல்வர்களுக்கு கடிதம்

Posted: 10 Sep 2013 12:55 PM PDT

தாது மணல் கொள்ளையைத் தடுக்க அனைத்து மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுத இருப்பதாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை

கண்தான இயக்க தலைவருக்கு விருது

Posted: 10 Sep 2013 12:55 PM PDT

விருதுநகர் மாவட்ட கண்தான இயக்கத் தலைவரும், சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்க பட்டயத்தலைவருமான ஜெ.கணேஷூக்கு, கண்ணப்பநாயனார் விருது கிடைத்துள்ளது. கணேஷ், இது

பட்டாசு ஆலைகளில் காற்று திசை காட்டி வைக்க வேண்டும்:அதிகாரி

Posted: 10 Sep 2013 12:55 PM PDT

பட்டாசு ஆலைகளில் காற்றுதிசைகாட்டி வைக்க வேண்டும் என தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் இஸ்மாயில் கூறினார்.

பள்ளியில் ஆசிரியர் தினவிழா

Posted: 10 Sep 2013 12:55 PM PDT

  சிவகாசி முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாளாளர் செய்து அசன் தலைமை வகித்தார். உதவித்தலைமை ஆசிரியர் செய்யது இமாம் வரவேற்றார்.

சாலைகளைச் சீரமைக்காவிட்டால் மறியல்: ஹெலன் டேவிட்சன் எம்.பி.

Posted: 10 Sep 2013 12:54 PM PDT

:கன்னியாகுமரி மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணியை 15 நாள்களுக்குள் தொடங்காவிட்டால் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, ஹெலன் டேவிட்சன் எம்.பி. கூறினார்.

களியக்காவிளை அருகே பிஎஸ்என்எல் அதிகாரி வீட்டில் திருட்டு

Posted: 10 Sep 2013 12:54 PM PDT

களியக்காவிளை அருகே பளுகல் காவல் சரகத்தில் பிஎஸ்என்எல் அதிகாரி வீட்டில் புகுந்து ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

விஸ்வ ஹிந்து பரிஷத் தெருமுனைக் கூட்டம்

Posted: 10 Sep 2013 12:53 PM PDT

தோவாளை ஒன்றிய விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் இறச்சகுளத்தில் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

படந்தாலுமூடு அருகே பைக் மீது வேன் மோதல்: ராணுவ வீரர் சாவு

Posted: 10 Sep 2013 12:53 PM PDT

படந்தாலுமூடு அருகே செவ்வாய்க்கிழமை, பைக் மீது வேன் மோதியதில் ராணுவ வீரர் இறந்தார்.

நாகர்கோவிலில் கண்தான விழிப்புணர்வுப் பேரணி

Posted: 10 Sep 2013 12:53 PM PDT

:நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்தான விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தலைமைத்துவ பயிற்சி முகாம்

Posted: 10 Sep 2013 12:53 PM PDT

கிறிஸ்தவ நீதிப் பேரவை சார்பில் மாநில அளவிலான தலைமைத்துவப் பயிற்சி முகாம் நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆற்றூர் கல்லூரியில் இன்று கருத்தரங்கு

Posted: 10 Sep 2013 12:52 PM PDT

ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை (செப். 11) மாணவர்களுக்கு "சமநோக்கு சிந்தனை' குறித்த கருத்தரங்கு நடைபெறுகிறது.

சென்னை உள்பட வடதமிழகத்தில் இன்று கன மழை வாய்ப்பு

Posted: 10 Sep 2013 12:52 PM PDT

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை உள்பட வட தமிழகத்தின் பெரும்பாலான

மடிச்சல் கிளை திமுக கூட்டம்

Posted: 10 Sep 2013 12:52 PM PDT

மடிச்சல் கிளை திமுக நிர்வாகிகள் கூட்டம், அதன் தலைவர் எம். ஜான்சன் முன்னிலையில் நடைபெற்றது. கிளைச் செயலர் பொன். மனாஸ் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெ. சுப்பையன், துணைச் செயலர் டி.

திருவட்டாறு அருகே கார் மோதல்: பெண் காயம்

Posted: 10 Sep 2013 12:52 PM PDT

திருவட்டாறு அருகே செவ்வாய்க்கிழமை, கார் மோதியதில் பெண் காயமடைந்தார்.

பாஜக தொண்டரை போலீஸார் தாக்கியதாக புகார்

Posted: 10 Sep 2013 12:52 PM PDT

பேச்சிப்பாறையைச் சேர்ந்த பாஜக தொண்டரைத் தாக்கியதாகக் கூறப்படும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேச்சிப்பாறை காவல் நிலையம் முன் பாஜகவினர் செவ்வாய்க்கிழமை திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவிலில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Sep 2013 12:51 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

Posted: 10 Sep 2013 12:51 PM PDT

பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் முடிவுகள் வியாழக்கிழமை (செப்.12) வெளியிடப்படுகிறது. அன்றைய

போக்குவரத்துக்கு இடையூறாக பிளக்ஸ் போர்டுகள்

Posted: 10 Sep 2013 12:51 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக பிளக்ஸ் போர்டுகள் வைப்பதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகஸ்தீஸ்வரம் விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா

Posted: 10 Sep 2013 12:51 PM PDT

அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வாகன பவனி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை, கணபதி ஹோமம், சந்தனக்காப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. மாலையில் அபிஷேகம், பஜனை, இரவில் இன்னிசைக் கச்சேரி, மூஷிக வாகனத்தில்

தூண்டிலா தூண்டுகோலா?

Posted: 10 Sep 2013 12:51 PM PDT

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எல்லா சம்பவங்களையும் அரசியல் கண்ணாடி அணிந்து பார்ப்பது வழக்கமாகிவிட்டது. கடந்த மார்ச் 2012 முதல் இதுவரை 27 வகுப்புக் கலவரங்கள் உத்தரப் பிரதேசத்தில் நடந்தேறி இருக்கின்றன. மாயாவதி ஆட்சியின்போது காணாமல் போயிருந்த வகுப்புக் கலவரங்கள் இப்போது தலைதூக்குவதன் காரணம்

தாதுமணல் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted: 10 Sep 2013 12:50 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் தாது மணல் கொள்ளையைத் தடைசெய்ய வலியுறுத்தி, நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரான் சிறையிலுள்ள குமரி மீனவர்கள் விரைவில் விடுதலை

Posted: 10 Sep 2013 12:46 PM PDT

ஈரான் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 16 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தகவல் கிடைத்துள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களின் குடும்பத்தினர் ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தனர்.

குமாரகோவில் கோவிலில் 13-ல் புஷ்பாபிஷேகம்

Posted: 10 Sep 2013 12:46 PM PDT

வேளிமலை குமாரகோவில் அருள்மிகு குமாரசுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை (செப். 13) புஷ்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தென்தாமரைக்குளத்தில் நூலகக் கட்டடத்துக்கு அடிக்கல்

Posted: 10 Sep 2013 12:45 PM PDT

தென்தாமரைக்குளத்தில் ரூ. 4 லட்சம் செலவில் நூலகக் கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கு

Posted: 10 Sep 2013 12:42 PM PDT

கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கு  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் பகுதியில் வேளாண் தொழில்நுட்ப வாகன பிரசாரம்

Posted: 10 Sep 2013 12:42 PM PDT

விளாத்திகுளம் வட்டத்தில் வேளாண்மைத் துறை சார்பில், நீர்வள, நிலவளத் திட்டத்தின் கீழ் வாகன பிரசாரம் மூலமாக விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது.

காயல்பட்டினம் நகைப் பட்டறை அதிபரை கொல்ல முயன்ற வழக்கு: மூவருக்கு 7 ஆண்டு சிறை

Posted: 10 Sep 2013 12:42 PM PDT

காயல்பட்டினத்தைச் சேர்ந்த நகைப்பட்டறை அதிபரை கொல்ல முயன்ற வழக்கில், 3 பேருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.

காய்கனிகள் படைத்தல் விழா

Posted: 10 Sep 2013 12:41 PM PDT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உடன்குடி தேரியூர் ஆத்மஞானகணபதி ஆலயத்தில் காய்கனிகள் படைத்தல் விழா பாரதமாதா சேவா சங்கம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

உடன்குடியில் விநாயகர் ஊர்வலம்

Posted: 10 Sep 2013 12:41 PM PDT

உடன்குடியில் ஒன்றிய இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தட்டார்மடம் ஆரோக்கிய அன்னை திருவிழா நிறைவு

Posted: 10 Sep 2013 12:41 PM PDT

தட்டார்மடம் அருள்தரும் ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இவ்வாலய திருவிழா ஆக. 30 ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. குறுக்குசாலை மறை வட்ட

தொழில்நெறி வழிகாட்டி பயிற்சி முகாம்

Posted: 10 Sep 2013 12:41 PM PDT

ஓட்டப்பிடாரம் அருகே நாகம்பட்டி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டி பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™