Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


மக்களவையில் அமளியில் ஈடுபட்ட 9 உறுப்பினர்கள் இடைநீக்கம் : சபாநாயகர் உத்தரவு

Posted: 01 Sep 2013 11:12 PM PDT


தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் அமளியில் ஈடுபட்ட 9 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர் மீராகுமார் உத்தரவு பிறப்பித்தார். காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 பேரும், தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் 4 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

தனித் தெலுங்கானா அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு பின் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கானா எதிர்ப்பு எம்,பி.,க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். பல நாட்களாக அவை நடவடிக்கைகள் தெலுங்கானா எதிர்ப்பு எம்.பி.,க்கள் அமளியால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் அமளியில் ஈடுபட்ட 9 உறுப்பினர்களை 5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து சபாநாயகர் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

மாநிலங்களவையிலும் 2 உறுப்பினர்கள் இடைநீக்கம் : மாநிலங்களவையிலும் அமளியில் ஈடுபட்ட தெலுங்கு தேச கட்சி உறுப்பினர்கள் இரண்டு பேரையும் இன்று ஒரு நாள் மட்டும் இடைநீக்கம் செய்து அவைத்தலைவர் உத்தரவிட்டார்.

 

2 மணி வரை ஒத்திவைப்பு: இதற்கிடையில் மக்களவை இன்று கூடியதுமே,பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பாரதிய ஜனதா, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கேள்வி எழுப்பினர்.

பெட்ரோல் பங்குகளை இரவில் மூடுவது என்ற, பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்பமொய்லியின் யோசனையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

இதையடுத்து, கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டதால் மக்களவையை பிற்பகல் 2 மணி ஒத்தி வைக்கப்பட்டது.

உடல் எடையை குறைப்பவர்களுக்கு தங்கம் பரிசு: துபை அறிவிப்பு

Posted: 01 Sep 2013 11:08 PM PDT


வாழ்க்கை முறை மாற்றத்தால் உடல் பருமன் பிரச்னை பல நாடுகளில் மக்களை பாதித்து வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்னை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உடல் எடையை குறைப்பவர்களுக்கு தங்கம் பரிசாக தருவதாக துபை அரசு அறிவித்தது. இதற்காக 5 வார காலம் அவகாசம் தரப்பட்டது.

5 வார கால அவகாசம் முடிந்த நிலையில் எடையை குறைத்தவர்களுக்கு தங்கம் பரிசாக தரப்பட்டது. அதிகபட்சமாக 22 கிலோ எடை குறைத்த மோனா ஒசாமா என்பவருக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போட்டியில் குறைந்தது 2 கிலோ எடை குறைத்தவர்களுக்கு தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.

எங்கும் நிரம்பும் சுண்ணாம்புத்துகள்:10-க்கும் மேற்பட்ட கிராமம் பாதிப்பு

Posted: 01 Sep 2013 11:07 PM PDT


கரூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்திற்கு சொந்தமான சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் சுண்ணாம்புத்துகளால், 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மாசுபாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்புகின்றனர் இப்பகுதி மக்கள்.

கரூரை அடுத்த வேலாயுதம்பாளையம் அருகே தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்திற்கு சொந்தமான சிமெண்ட் ஆலை உள்ளது. இந்த ஆலையைச் சுற்றி மூர்த்திபாளையம், பெரியபுதூர், ஆவாரங்காட்டுப்புதூர், அம்மாபாளையம், கீழ ஓரத்தை உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.

இந்த ஆலையில் உருவாகும் சுண்ணாம்புத்துகள் காற்றில் பறந்து சென்று விவசாய நிலங்களில் படிவதால், விவசாய நிலங்களில் விளைச்சல் பெருமளவு பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர் விவசாயிகள். உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, கால்நடைகளுக்கான தீவனமும் கெடுவதாக கவலை தெரிவிக்கின்றனர் இவர்கள்.

நோய்கள் ஏற்படும் அபாயம்

ஆலையில் இருந்து வெளியேறும் துகள்கள் உணவுப் பொருட்களிலும் படிவதால், வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிய நிலையிலேயே எப்போதும் வைக்க வேண்டியிருப்பதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காற்றில் சுண்ணாம்புத்துகள் மாசுபாடு காரணமாக நுரையீரல் நோய்கள் ஏற்படும் அபாயமும் நிலவுவதாகக் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.

சிமெண்ட் ஆலையில் இருந்து சுண்ணாம்புத்துகள் வெளியேறுவதைத் தடுக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மாவட்ட நிர்வாகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர் இவ்வூர் மக்கள்.

தக்காளி விலை தொடர்ந்து சரிவு

Posted: 01 Sep 2013 11:01 PM PDT


வெங்காயம் விலை தொடர்ந்து அதிக அளவில் நீடித்தாலும், தக்காளியின் விலை தொடர் சரிவு கண்டு வருகிறது.

மழை காரணமாக தக்காளி வரத்து அதிகரித்து வருவதால், அதன் விலை வீழ்ச்சி கண்டு வருகிறது. அதிக வரத்து மட்டுமின்றி தரம் குறைவான தக்காளியும் அதிக அளவில் சந்தைகளுக்கு வருவதாக மொத்த வணிகர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தரமான தக்காளி விலையை விட இரண்டாம் மற்றும் மூன்றாம் ரக தக்காளியின் விலை ஏறக்குறைய பாதியளவு குறைவாக விற்கப்படுகிறது. சில்லறை விலையில் முதல் ரக தக்காளி 15 ரூபாயாக உள்ள நிலையில், 2வது மற்றும் 3வது ரக தக்காளி கிலோ 5 ரூபாயில் இருந்து கிடைப்பதாக கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

Posted: 01 Sep 2013 11:00 PM PDT


பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

 

மக்களவை இன்று கூடியதும், பாரதிய ஜனதா, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கேள்வி எழுப்பினர். பெட்ரோல் பங்குகளை இரவில் மூடுவது என்ற, பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்பமொய்லியின் யோசனையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதையடுத்து, கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டதால் மக்களவையை பிற்பகல் 2 மணி ஒத்தி வைக்கப்பட்டது.

 

இதே பிரச்னை மாநிலங்களவையிலும் எதிரொலித்ததால், அவையை 15 நிமிடங்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஒத்தி வைத்தார்.

ஸ்மார்ட்ஃபோன்களால் கணினி விற்பனை மேலும் சரியும்: ஆய்வு

Posted: 01 Sep 2013 10:54 PM PDT


ஸ்மார்ட்ஃபோன்கள், டேப்லெட் ஆகியவற்றின் தேவை அதிகரிப்பால் கணினி விற்பனை மேலும் சரியும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் நிறுவனங்கள் மட்டுமின்றி தனிநபர்களிடம் இருந்தும் கணினிக்கான ஆர்டர்கள் குறைந்து வருவதால் மடிக்கணினி மற்றும் சாதாரண கணினியின் விற்பனை குறைவாக இருக்கும் என ஐடிசி என்ற தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த கணினி சந்தையில் தமிழகம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் மட்டும் 33 சதவீத பங்கு வகிக்கின்றன. தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் தேவையைக் குறைக்க மத்திய அரசு முடிவு

Posted: 01 Sep 2013 10:45 PM PDT


தங்கத்தின் மீதான நேரடி கட்டுப்பாடுகளுடன் மறைமுகமாகவும் அதன் தேவையைக் குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி, தங்கம் வாங்கவோ, அதில் முதலீடு செய்யவோ மாட்டேன் என்று உறுதி அளிப்பவர்களுக்கு மட்டுமே தனிநபர் கடன் தர வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கத்தின் தேவையைக் குறைக்க, இந்த புதிய விதிமுறையை கடைப்பிடிக்குமாறு வங்கிகள், வங்கிசாராத நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாக மும்பையில் முன்னணி வங்கியின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அத்தியாவசியம் இல்லாத பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டம்

Posted: 01 Sep 2013 10:40 PM PDT


தங்கம், பெட்ரோலைத் தொடர்ந்து அத்தியாவசியம் இல்லாத பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதனால், வெளிநாட்டு ஆப்பிள்கள், ஏர்கண்டிஷன் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் விலை உயரும் எனக் கூறப்படுகிறது. இறக்குமதியாகும் ஆப்பிள்கள் மீது ஏற்கனவே 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது.  அது மேலும் 10 சதவீதம் வரை உயரலாம். ஏர்கண்டிஷன்கள், முந்திரி மற்றும் கேமராக்கள் இறக்குமதி மீது 8 முதல் 30 சதவீதம் வரை விதிக்கப்படும், வரியும் அதிகரிக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சரிவர தூர்வாரப்படாத கால்வாய்: தண்ணீரின்றி மக்கள் தவிப்பு

Posted: 01 Sep 2013 10:21 PM PDT


வைகை அணையிலிருந்து மேலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனாலும், கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாததால், கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

வைகை அணையில் இருந்து பெரியார் கால்வாய் மூலம் மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 15-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் கால்வாய் சரிவர தூர்வாரப்படாததாலும் முறையான பராமரிப்பு இல்லாததாலும், தண்ணீர் வந்து சேரவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கால்வாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டிருப்பதால் தண்ணீர் வீணாவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டதமாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் புகார் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுபோன்ற பிரச்சனைகளில் அரசு மட்டுமே முழுப் பணிகளையும் செய்ய முடியாது என்று தெரிவித்தனர். கால்வாயில் சில இடங்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரிசெய்ய பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

உணவு மசோதா மீது மாநிலங்களவையில் இன்று விவாதம்

Posted: 01 Sep 2013 10:11 PM PDT


உணவுப் பாதுகாப்பு மசோதா, மாநிலங்களவையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவையில் கடந்த 26ம் தேதி நிறைவேற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மசோதாவை நடப்பு கூட்டத்தொடரிலேயே மாநிலங்களவையிலும் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது.

 

ஆகவே, மாநிலங்களவையில் அம்மசோதா, இன்று பிற்பகலில் தாக்கலாகும் என்று தெரிகிறது. மாநிலங்களவையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத போதிலும், பிற கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவதில் காங்கிரஸ் மும்முரமாக இறஙகியுள்ளது.

 

இதேபோல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கும் அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம், மக்களவையில் இன்று எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™