Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு மேலும் 2 நாள் சிகிச்சை

Posted: 01 Sep 2013 10:35 PM PDT

ஆந்திராவை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத் சஞ்சல்குடா சிறையில் உண்ணாவிரதம் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஐதராபாத் நிம்ஸ் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவுபடி அவரது மனைவி பாரதி அருகில் இருந்து கவனித்து வருகிறார்.

ஆசாராம் பாபு போதுமான ஆண்மை சக்தியுடன் உள்ளார்: மருத்துவ அறிக்கை இன்று தாக்கல்

Posted: 01 Sep 2013 10:20 PM PDT

உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி, குஜராத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு (75) தன்னை பலவந்தமாக கற்பழித்து விட்டதாக பரபரப்பு புகார் கூறினார். அவரது புகாரின்பேரில், சாமியார் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். கற்பழிக்கப்பட்டதாக புகார் கூறிய பெண்ணுக்கு துஷ்ட ஆவிகளின் பாதிப்பு இருப்பதால், அவரை ஜோத்பூரில் இருந்து 35 கி.மீட்டர் தூரத்தில் உள்ள

இன்று மேல்-சபையில் விவாதம்: உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறுமா?

Posted: 01 Sep 2013 10:05 PM PDT

ஏழைகளுக்கு அரிசி, கோதுமை மிக எளிதாக கிடைக்க வகை செய்யும் உணவு பாதுகாப்பு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டப்படி மூன்று ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ கோதுமை மற்றும் ஒரு ரூபாய்க்கு உணவு தானியங்கள் வழங்கப்படும். காங்கிரஸ் கட்சியின் கனவு திட்டமான இந்த உணவு பாதுகாப்பு திட்டத்துக்கான மசோதா கடந்த திங்கட்கிழமை பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த

இந்த வார இறுதியில் டீசல் விலை ரூ.3 உயர்கிறது: பிரதமருக்கு வீரப்பமொய்லி கடிதம்

Posted: 01 Sep 2013 09:16 PM PDT

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரத் தொடங்கியுள்ளது. பெட்ரோலியம் பொருட்கள் விலையையும் மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி வீரப்ப மொய்லி, பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வு காரணமாகவும், பண மதிப்பு வீழ்ச்சி காரணமாகவும் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு இழப்பு அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் ரூ. 12.12 இழப்பு உண்டாகிறது. அந்த வகையில் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு இதுவரை ரூ. 1,80,000 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. டீசல் விலையை உயர்த்தினால்தான் இழப்பை சரிகட்ட முடியும். டீசல் விலையை ரூ. 3 முதல் ரூ. 5 வரை உயர்த்த வேண்டும். மேலும் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவையும் உயர்த்த வேண்டும். ஈரான் மீது சர்வதேச நாடுகள் தடை

காலத்திற்கு ஏற்றவாறு சட்டங்களை மாற்றாவிட்டால் அனைவருக்கும் சமநீதி கிடைப்பது சாத்தியமாகாது: கபில்சிபல்

Posted: 01 Sep 2013 09:01 PM PDT

பெங்களூரில் உள்ள தேசிய சட்டக்கல்லூரியின் 21-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். இதில் மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி கபில் சிபல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:- விரைவாக பெயர் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் தங்கள் தொழிலை மறந்து சட்ட துறையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு சட்டத்துக்கும் உயிர் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான வக்கீல்கள் இதை தீவிரமாக

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

Posted: 01 Sep 2013 08:26 PM PDT

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது அடிப்படை சம்பளத்தில் 80 சதவீதமாக உள்ளது. இதை 10 சதவீதம் உயர்த்தி, 90 சதவீதம் ஆக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:- மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அளவுக்கு அகவிலைப்படி உயர்வு செய்து இந்த மாதம் அறிவிப்பு வெளியாகிறது. இது ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும். தொழிற்சாலை ஊழியர்களுக்கான இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் (ஜூன் மாத நிலவரம்) திருத்திய

ஆந்திராவில் நடைபெறும் தொடர் போராட்டங்களுக்கு காங்கிரசே பொறுப்பு: சந்திரபாபுநாயுடு குற்றச்சாட்டு

Posted: 01 Sep 2013 08:09 PM PDT

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள என்.டி.ஆர். நினைவிடத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் ஆத்ம கவுரவ யாத்திரை நேற்று தொடங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் சந்திரபாபுநாயுடு நிருபர்களிடம் கூறுகையில், ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா அமைப்பது குறித்து அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், சீமாந்திரா பகுதியில் தற்போது நடைபெறும் போராட்டங்களுக்கு, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தான் காரணம் என்றும் தெரிவித்தார்.

பெங்களூர் சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

Posted: 01 Sep 2013 05:07 PM PDT

தமிழ்நாட்டில், சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே பனங்காட்டூரை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் ஜெய்சங்கர் என்ற சங்கர் (வயது 36). இவனுக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். ஜெய்சங்கர் லாரி டிரைவராக வேலை செய்தான்.

மேற்கு வங்காளத்தில் கல்லூரி விழாவுக்கு வந்த மந்திரிக்கு அடி–உதை

Posted: 01 Sep 2013 01:41 PM PDT

மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் ராம்புரத் அருகே உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் நேற்று நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மாநில மந்திரி நூர் ஆலம் சவுத்ரி வந்தார்.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு பரிசீலனை

Posted: 01 Sep 2013 12:33 PM PDT

இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மிகவும் குறைவு என்பதால், வளைகுடா நாடுகளில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக மத்திய அரசு அதிக அளவில் அன்னிய செலாவணியை பயன்படுத்துகிறது.

சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக இன்று அமெரிக்கா பயணம்

Posted: 01 Sep 2013 12:08 PM PDT

சோனியா காந்தி கொண்டுவர விரும்பிய உணவு மசோதா பாராளுமன்றத்தில் ஒப்புதலை பெற இறுதிகட்டத்தை எட்டியநிலையில் அவர் நோய்வாய்ப்பட்டார். இதனால், கடந்த மாதம் 26-ம் தேதி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 5 மணி நேர சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து அவர் வெளியேறினார்.

கேதர்நாத் கோவிலில் 11-ந்தேதி முதல் மீண்டும் வழிபாடு: விஜய் பகுகுணா தகவல்

Posted: 01 Sep 2013 08:54 AM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் பெய்த கனமழை ஏற்படுத்திய பாதிப்பு இந்தியாவையே உலுக்கியது. பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி கேதர்நாத் கோவிலுக்கு சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நிலச்சரிவில் அங்கிருந்த கட்டிடங்கள் தரைமட்டமாகியது. இதனையடுத்து கேதர்நாத் கோவிலில் வழிபாடு நிறுத்தப்பட்டது. மழை, வெள்ள சேதத்தை

45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ராணுவ வீரரின் உடல் இமயமலையில் கண்டெடுப்பு

Posted: 01 Sep 2013 08:11 AM PDT

கடந்த 45 வருடங்களுக்கு முன்னர் இமயமலையில் ஏற்பட்ட ராணுவ விமான விபத்து ஒன்றில் இறந்த ராணுவவீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. இறந்தவருக்கு ராணுவத்தின் இறுதி மரியாதையும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், மோசமான வானிலை காரணமாக அவரது சடலத்தைக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ராணுவத்தின்

ஆசாராம் பாபுவை 1 நாள் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி

Posted: 01 Sep 2013 06:25 AM PDT

உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது மாணவி, குஜராத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு தன்னை பலவந்தமாக கற்பழித்து விட்டதாக பரபரப்பு புகார் கூறினார். இது தொடர்பான அவரது புகாரின்பேரில், சாமியார் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு 30ந் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சாமியாரிடம்

ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல்: ராணுவ அதிகாரிகளிடம் சி.பி.ஐ. விரைவில் விசாரணை

Posted: 01 Sep 2013 05:52 AM PDT

இந்தியாவில் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக வாங்கப்பட்ட ஹெலிகாப்டர்களின் நிறுவனத்திடம் பேரம் பேசப்பட்டதாக புகார் கூறப்பட்டது. மேலும், ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டு நிறுவன தயாரிப்புகளை வாங்குவதற்காக ராணுவ உயரதிகாரி ஒருவர் 50 லட்சம் அமெரிக்க டாலர் தரும்படி அந்நிறுவனத்துக்கு

மாதா அமிர்தானந்தமயி 60–வது பிறந்தநாள்: கொச்சியில் 26–ந்தேதி கோலாகல கொண்டாட்டம்

Posted: 01 Sep 2013 12:52 AM PDT

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பெண் சாமியார் மாதா அமிர்தானந்தமயி. இவர் கொல்லத்தில் அமிர்த புரி என்ற இடத்தில் தனது ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இவரது பெயரில் அமிர்த மருத்துவக்கல்லூரியும் அங்கு செயல்பட்டு வருகிறது

மனைவியை தாக்கியதாக புகார்: நடிகர் ஓம்புரி கைது

Posted: 01 Sep 2013 12:02 AM PDT

பிரபல இந்தி நடிகர் ஓம்புரி. ஏராளமான இந்திப் படங்களில் நடித்துள்ள அவர் அர்த் சத்தியா, ஆக்ரோஷ், ஆரோகன் படங்களில் சிறப்பாக நடித்ததற்காக 3 முறை தேசிய விருது பெற்றார். இவர் முதல் மனைவி சீமா கபூரைப் பிரிந்து 2–வது மனைவி நந்திதாவுடன் மும்பையில் வசித்து வந்தார். அதன்பிறகு மீண்டும் முதல் மனைவியும் ஓம்புரியும் இணைந்து கொண்டனர். இதனால் 2–வது மனைவி வீட்டுக்கு செல்வதை தவித்தார். செலவுக்கு பணம் கொடுப்பதையும் நிறுத்திக் கொண்டார். இதையடுத்து

ஆந்திராவில் அரசு ஊழியர்கள் 95 சதவீதம் பேர் ஸ்டிரைக்: ஆகஸ்டு மாத சம்பளம் வழங்கப்படவில்லை

Posted: 31 Aug 2013 11:56 PM PDT

ஆந்திராவை பிரிந்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 32–வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. கடைகள் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. பஸ்கள் ஓடவில்லை. மக்களின் உணர்வுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த 12–ந்தேதி முதல் சீமாந்திரா பகுதி அரசு ஊழியர்கள் சங்கமும் வேலை நிறுத்தத்தில் குதித்தது. இதனால் இப்பகுதிகளில் உள்ள 13 மாவட்டங்களில் அரசு துறைகள் இன்று வரை

மத்திய மந்திரி சபையில் தெலுங்கானா மசோதா 12–ந் தேதி தாக்கல்

Posted: 31 Aug 2013 11:13 PM PDT

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க காங்கிரஸ் காரிய கமிட்டி முடிவு செய்து அறிவித்தது. இதன்படி ஐதராபாத்துடன் கூடிய 10 மாவட்டங்கள் தெலுங்கானா மாநிலத்தில் இணைகிறது. இதற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ''மாநில பிரிவினையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™