Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


நவனீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுக்களுக்கு லண்டனில் வைத்து பதிலளிக்கப்படும் – ஜீ.எல்.பீரிஸ்

Posted: 01 Sep 2013 09:04 PM PDT

GL-Peiris-colombo-telegraph1

GL-Peiris-colombo-telegraph1ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு லண்டனில் வைத்து பதிலளிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை எதேச்சாதிகாரத்தை நோக்கி நகர்வதாக நவனீதம்பிள்ளை அண்மையில் தெரிவித்திருந்தார். இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் முன்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க உள்ளதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பீரிஸ் லண்டனுக்கு விஜயம் செய்துள்ளார். லண்டனில் நடைபெறவுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்வு ஒன்றில் பிரதம விரிவுரையை அமைச்சர் ஆற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. லண்டனில் அமைந்துள்ள அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நவனீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்காவிற்கு தகுதியில்லை -கோதபாய ராஜபக்ஷ

Posted: 01 Sep 2013 08:44 PM PDT

Ghotabaya 1.jpg

Ghotabaya 1.jpgஇலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்காவிற்கு தகுதியில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகின் பல பகுதியில் அமெரிக்கப் படையினர் உலகின் பல பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக இரண்டு தடவைகள் அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறான குற்றச்சாட்டுக்களை நவனீதம்பிள்ளை சுமத்தினாலும், நாட்டின் மெய்யான நிலைமைகளை அறிந்து கொள்வதற்கு இந்த விஜயம் ஏதுவாக அமைந்தது என ஆவர் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.
சில தரப்பினர் நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கு தொடர்ந்து போராடி வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் நவனீதம்பிள்ளை அரசியல் பேசியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத தரப்பினரின் சார்பில் நவனீதம்பிள்ளை செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.பிரபாகரனை பயங்கரவாதி எனக் குறிப்பிட தயங்கும் தரப்பினர் ஜனாதிபதியை சர்வாதிகாரி எனக் குறிப்பிடுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஸ்யக் கைதிநாடு கடத்தப்படவுள்ளார்

Posted: 01 Sep 2013 08:33 PM PDT

courts

courtsஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஸ்யக் கைதியொருவர் நாடு கடத்தப்படவுள்ளார்

மிரிஹான வெளிநாட்டுப் பிரஜைகளை தடுத்து வைக்கும் முகாமில் குறித்த ரஸ்யர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். சக கைதிகளை தாக்கி கலகம் விளைவித்ததாக குறித்த ரஸ்யர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கலகம் விளைவித்த ரஸ்யரை உடனடியாக நாடு கடத்துமாறு நுகோகொடை நீதவான் அஜித் எம். மாசிங்க தெரிவித்துள்ளார். கடுமையான எச்சரிக்கை விடுத்து குறித்த ரஸ்யரை நாட்டு விட்டு வெளியேற்றுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

700 கோடி செலவில் ஒலுவில் துறைமுக வேலைகள் ஆரம்பம்

Posted: 01 Sep 2013 08:04 PM PDT

bridge

bridgeஇலங்கையில், கிழக்கு மாகாணத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மட்டக்களப்பு மாவட்டத்தில் திருகோணமலை – மட்டக்களப்பு நெடுங்சாலையில் பனிச்சங்கேனி பாலத்தையும் அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் துறைமுகத்தையும் திறந்து வைத்துள்ளார்.

சுனாமியினாலும் போரினாலும் சேதமடைந்த பாலங்களை புனரமைப்பதற்காக ஜப்பான் அளித்த உதவித் திட்டத்தின் கீழ் 1060 மில்லியன் ருபா நிதியில் பனிச்சங்கேணி பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த நெடுங்சாலையில் ஐந்து பாலங்கள் ஜப்பான் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கபட்டுள்ளது.

பனிச்சங்கேனி பாலத்தை திறந்து வைத்து உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ, யுத்தத்தினாலும் சுனாமியினாலும் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளில் உயிழப்புகளை தவிர்ந்த ஏனைய சேதங்களை புனரமைத்துக் கொடுப்பதே தனது நோக்கம் என்று கூறினார்.

முன்னதாக, சுனாமியினால் சேதமடைந்து தற்போது புனரமைக்கப்பட்டுள்ள வாகரை சென் பீட்டர்ஸ் தேவாலய திறப்பு விழா ஆராதனையிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுகத்தை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, தனது உரையில் ஒலுவில் துறைமுகத்தின் முன்னோடியாக கருதப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச். எம் அஸ்ரப்பை நினைவு கூர்ந்தார்.

ஒலுவில் துறைமுகத்தின் மூலம் அந்தப்பகுதி மக்கள் நாட்டின் தேசிய அபிவிருத்தியில் இணைந்து கொள்ளும் வாய்ப்புகளை பெறுகின்றார்கள் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியில் துறைமுக அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தபோது முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஸ்ரப் ஒலுவில் துறைமுக வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.

மீன்பிடி துறைமுகத்தையும் வணிக துறைமுகத்தையும் கொண்ட ஒலுவில் துறைமுகத்தை அமைப்பதற்கான செலவினை டென்மார்க் அரசாங்கம் கடனாக வழங்கியுள்ளது.

ஒலுவில் துறைமுகம் மூலம் அந்த பகுதி மக்களின் பொருளாதாரம் முன்னேற்றமடையும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டாலும் அது கேள்விக்குறிய விடயமாகவே இருப்பதாக அந்த பகுதி மக்கள் பலரும் கருதுகின்றனர்.

ஆனாலும் கடந்த காலங்களில் ஆண்டில் எட்டு மாதங்கள் மட்டுமே தொழிலில் ஈடுபட்டு வந்த ஆழ்கடல் மீனவர்கள், இனிமேல் ஆண்டு முழுவதும் மீன்பிடியில் ஈடுபடும் போது தங்களின் வாழ்வாதரம் முன்னேற்றம் அடையும் என அம்பாறை மாவட்ட ஆழகடல் மீனவர்கள் சங்கத்தின் செயலாளர் எம். எஸ்.எம். நஸீர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

'மீன்பிடித் துறைமுகம் மீனவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தாலும் வர்த்தக துறைமுகத்தை பொறுத்தவரை ஏற்றுமதி இறக்குமதி பணிகள் நடைபெற்றால்தான் வருமானத்தை ஈட்ட முடியும். தற்போதைய சூழ்நிலையில் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இல்லை' என்றார் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் பொருளியல்துறை மூத்த விரிவுரையாளர் ஏ. ஏ. எம். நுபைல்.

குறித்த துறைமுகம் நாட்டு மக்களுக்கு மற்றுமோர் சுமையாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிரியா அதிபர் படையினர் விஷவாயு குண்டுகளை பயன்படுத்தியதற்கான ஆதரங்கள் அமெரிக்காவிடம் ……

Posted: 01 Sep 2013 07:56 PM PDT

john

johnசிரியாவில் கடந்த மாதம் 21-ம் தேதி அதிபர் ஆசாத் படைக்கும் போராளிகளுக்கும் இடையே சண்டை நடந்தது. போராளிகள் பகுதியில் நடந்த சண்டையின் போது அதிபர் படையினர் விஷக்குண்டுகளை பயன்படுத்தினர் என்பதை ஐ.நா. ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். இதில் 1400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து சிரியா மீது தாக்குதல் நடத்த அமேரிக்கா தயாராகி வருகிறது. இருந்தும் சபையின் ஒப்புதலுக்காக அது காத்திருக்கிறது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் சிரியா இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியது குறித்த ஆதாரம் இருந்தால் அதை ஐ.நா. ஆய்வாளர்களிடமும், ஐ.நா. பாதுகாப்பு சபையிடமும் சமர்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இந்நிலையில் நேற்று அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியதாவது:- சிரியாவில் கடந்த மாதம் நடைபெற்ற சண்டையின் போது நரம்புகளை பாதிக்கும் சரின் விஷவாயு குண்டுகளை அதிபர் படையினர் பயன்படுத்தியதற்கான ஆதரங்கள் அமெரிக்காவிடம் உள்ளன. இறந்தவர்களின் இரத்தம் மற்றும் முடியை சோதித்ததில் நரம்புகளை பாதிக்கும் சரின் விஷவாயு பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இது எங்களுக்கு கிடைத்த தனிப்பட்ட ஆதாரங்கள் தான். ஐ.நா. ஆய்வாளர்களிடமிருந்து இதை பெறவில்லை. இதையே அடிப்படையாக வைத்து புகார் தொடரப்படும். எனவே, சிரியாவின் மீது தாக்குதல் தொடுக்க அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் எந்தவித தாக்குதலையும் சமாளிக்க தயாராக உள்ளதாக சிரியா அதிபர் ஆசாத் கூறியுள்ளார். சிரியாப்போராளிகள் குழுவின் தலைவர் அகமது-அல்-ஜார்பா நாசக்கார ஆயுதங்களை பயன்படுத்தி மக்களை அழிக்கும் சிரியா அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நவனீதம்பிள்ளையின் கருத்துக்கள் தொடர்பில் ஐ.நா கவனம் செலுத்த வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

Posted: 01 Sep 2013 07:50 PM PDT

19-amnestyinternational-300

19-amnestyinternational-300ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் கருத்துக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்த வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் தருணத்தில் நவனீதம்பிள்ளை சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

விஜயத்தின் நிறைவில் நவனீதம்பிள்ளை வெளியிட்ட கருத்துக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பும், பொதுநலவாய நாடுகள் அமைப்பும் கவனம் செலுத்த வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.

மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் தரப்பினர் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தம்மை சந்தித்த சிலருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் நவனீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.

பாதிக்கப்பட்டவர்களை நவனீதம்பிள்ளை சந்தித்தமை மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டு;ள்ளது.

நவனீதம்பிள்ளையை சந்தித்தவர்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச் சாட்டுக்களுக்கு உரிய பதிலளிக்க வேண்டுமென்ற முனைப்பு அரசாங்கத்திற்கு கிடையாது என சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வட மாகாணத்தில் 5,000 தமிழ் பொலிஸாருக்கான விண்ணப்பங்கள்

Posted: 01 Sep 2013 07:40 PM PDT

Douglas-Devananda

Douglas-Devanandaவட மாகாணத்தில் 10,000 தமிழ் பொலிஸாரை புதிதாக இணைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 5,000 தமிழ் பொலிஸாருக்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளன.

வட மாகாணத்தில் 10,000 தமிழ் பொலிஸாரை புதிதாக இணைத்துக் கொள்வதற்கான கோரிக்கையை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் விடுத்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி அவர்கள் முதற்கட்டமாக பொலிஸ் சேவைக்கு 5,000 தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளார். விரைவில் வட மாகாணத்தில் முதற்கட்டமாக 5,000 தமிழ் பொலிஸாருக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. ஆர்வமுள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ள முடியும். எனவே அதனை வேலைவாய்ப்பாக மட்டும் கருதாமல் தமிழ் மொழி மூலமாக எமது மக்கள் தமது முறைப்பாடுகளை செய்வதற்கும், உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்கின்ற அசெளகரியங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கு இந்த வாய்ப்பை எமது இளைஞர், யுவதிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கடித குண்டுவெடிப்பில் இருந்து கிரீஸ் நாட்டு வழக்கறிஞர் உயிர் தப்பினார்

Posted: 01 Sep 2013 07:36 PM PDT

letter

letterகிரீஸ் நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்பு வக்கீலாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் டிமிட்ரிஸ் மோகாஸ் ஆவார். இவர் அங்குள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றி வருகின்றார். இவர் குடும்பத்தினருடன் விடுமுறைக்குச் சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பினார். அப்போது அவருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளதாகக் கூறி பக்கத்து வீட்டுக்காரர் ஒரு உறையை அவரிடம் கொடுத்துள்ளார். கடிதத்தில் இருந்த திருப்பி அனுப்பும் முகவரியாக சர்வதேச அரசு சாரா அமைப்பின் முகவரி ஒன்று அந்தக் கடிதத்தின் மேற்புறம் எழுதப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மோகாஸ் அந்தக் கடிதத்தைப் பிரிக்காமல் அதனைத் தரையில் வீசி எறிந்துள்ளார்.அந்தக் கடிதம் தீப்பற்றி வெடித்துள்ளது. ஆயினும், யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. பின்னர், காவல்துறை விசாரணையில் அந்தக் கடித உறையில் வெடிமருந்துப் பொருள் நிரப்பிய குண்டு ஒன்று அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கடந்த ஜூலை மாதமும் இதே போன்றதொரு கடித குண்டு நீதிபதிகள் அமைப்பிற்கு வந்துள்ளது. சந்தேகமடைந்த எழுத்தர் ஒருவர் அந்தக் கடிதத்தை காவல்துறையினரிடம் அளிக்க அவர்கள் அதனை வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அழித்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வெளிநாட்டு முத்திரையுடன் கூடிய 18 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

Posted: 01 Sep 2013 07:30 PM PDT

gold-bars-2

gold-bars-2இலங்கையில் இருந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் வழியாக கடத்தல் தங்கம் கொண்டுவரப்படுவது அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று வேதாரண்யம் வழியாக மோட்டார் சைக்கிளில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் வேதாரண்யம் அருகே உள்ள திருக்குவளை வட்டம் தென்கரை ஈசனூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் சென்றது. இந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வெளிநாட்டு முத்திரையுடன் கூடிய 18 கிலோ தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தங்கம் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டதா? அல்லது தமிழகத்தின் வேறு பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வேதாரண்யம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி அங்கிருந்து 2 பேரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 18 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நாகை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்க நீச்சல் வீராங்கனையான டயான நையத், புளோரிடா நீரிணைப்பை நீந்திக்கடக்க முயற்சி

Posted: 01 Sep 2013 07:24 PM PDT

dai

daiஅமெரிக்காவின் வலிமையான நீச்சல் வீராங்கனையான டயான நையத் (64) கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா வரை கடலில் நீத்திக்கடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். 166 கிலோமீட்டர் நீளமுடைய இந்த புளோரிடா நீரிணைப்பை முதலாவது நபராக நீந்திக்கடக்கும் முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு இவரது இதே முயற்சியானது 41 மணி நேரம் கடலில் நீந்தியபிறகு கடல் சீற்றத்தாலும், ஜெல்லி மீன்கள் கடித்ததாலும் தடைப்பட்டது. இது அவரது 5-வது முயற்சியாகும். 64 வயதான இந்த உறுதியான வீராங்கனையின் கடைசி முயற்சி இதுவாகும். கடலில் நீத்துகிறபோது சுறா மற்றும் ஜெல்லி மீன்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முகத்தில் சிலிகான் முகமூடியை அணிந்துள்ளார்.   இந்த சாதனையை முடிக்க அவருடன் 35 உதவியாளர்களும் செல்கின்றனர். டயானாவின் நோக்கம் நிறைவேற ரசிகர்கள் வேண்டிவருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™