மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஐக்கிய ஆந்திராவுக்காக உண்ணாவிரதம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது அழுகிய முட்டை–தக்காளி வீச்சு
- டீசல் விலை ரூ.3 உயர்கிறது: நாளை அறிவிப்பு வெளியாகிறது
- பஸ்சில் பயணிகள் எரித்துக் கொலை: டிரைவர்–கண்டக்டர் கிளீனருக்கு தூக்கு - பஸ் அதிபருக்கு ஆயுள் தண்டனை
- திருப்பதியில் இன்று முதல் ஏழுமலையானுக்கு மீண்டும் புஷ்கரணி ஆரத்தி பூஜை
- ராணுவத் தளவாடங்கள் வாங்குவது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:பாதுகாப்புத்துறை தகவல்
- திருவனந்தபுரம் அருகே பஸ் மீது கார் மோதல்: பெண்கள் உள்பட 3 பேர் பலி
- ஒடிசாவில் அக்னி-5 ஏவுகணை சோதனை: நாளை நடக்கிறது
- அத்வானியை சந்தித்து ஆசி பெற்றார் நரேந்திர மோடி
- கண் மருத்துவத்திற்கான பறக்கும் மருத்துவமனை கொல்கத்தாவில் முகாமிட்டுள்ளது
- 2ஜி விவகாரம்: பாராளுமன்ற கூட்டுக்குழு 23-ந்தேதி கூடுகிறது
- கற்பழித்து கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு நஷ்டஈடு: நீதிபதி பரிந்துரை
- ஒபாமாவுடன் பிரதமர் மன்மோகன் சிங் 27-ந்தேதி சந்திப்பு
- ஆர்.எஸ்.எஸ். மூன்று நாள் கூட்டம் இன்று கர்நாடகாவில் தொடங்கியது
- மணிப்பூரில் குண்டு வெடிப்பு: 8 தொழிலாளர்கள் பலி
- பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.63 உயர்வு
- சீக்கியரின் டர்பனை அகற்றுமாறு கூறியதற்காக மன்னிப்பு கேட்ட அமெரிக்க நீதிபதி
- லோக்பால் மசோதாவுக்காக குளிர்கால கூட்டத்தொடரின்போது உண்ணாவிரதம் தொடங்குகிறார் ஹசாரே
- மோடியை பிரதமர் வேட்பாளராக நியமித்ததில் கடும் அதிருப்தி: ராஜ்நாத் சிங்கிற்கு அத்வானி கடிதம்
- அனைவரது எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவேன்: மோடி
- பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி நியமனம்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு
| ஐக்கிய ஆந்திராவுக்காக உண்ணாவிரதம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது அழுகிய முட்டை–தக்காளி வீச்சு Posted: 13 Sep 2013 10:45 PM PDT ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சீமாந்திரா பகுதியில் அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 45–வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. மின்துறை ஊழியர்கள் 72 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பல மின்சார |
| டீசல் விலை ரூ.3 உயர்கிறது: நாளை அறிவிப்பு வெளியாகிறது Posted: 13 Sep 2013 10:25 PM PDT சர்வதேச சந்தையில் கடந்த சில தினங்களாக கச்சா எண்ணை விலை உயர்ந்தபடி உள்ளது. இதனால் ஒரு பேரல் பெட்ரோல் நேற்று அமெரிக்க டாலரில் 114.44–ல் இருந்து 117.40 டாலராக உயர்ந்தது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு ரூ.2 அதிகரித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் இழப்பை சரிகட்ட பெட்ரோல் விலை உயர்வு நள்ளிரவே அமலுக்கு வந்தது. என்றாலும் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு இன்னமும் குறையவில்லை. கச்சா எண்ணை விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவுக்கு சென்று விட்டது. இதனால் டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணை ஆகியவற்றின் விலையை கண்டிப்பாக உயர்த்தியே தீரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. |
| பஸ்சில் பயணிகள் எரித்துக் கொலை: டிரைவர்–கண்டக்டர் கிளீனருக்கு தூக்கு - பஸ் அதிபருக்கு ஆயுள் தண்டனை Posted: 13 Sep 2013 10:12 PM PDT மத்திய பிரதேச மாநிலம் செத்வா மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக சாய் கிருபா டிராவல்ஸ் பஸ் டிரைவருக்கும் மற்றொரு பஸ் டிரைவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் காரசாரமாக பேசிக் கொண்டனர். கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் சாய் கிருபா பஸ் டிரைவர் அதிக பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றார். உடனே மற்றொரு பஸ் டிரைவரான |
| திருப்பதியில் இன்று முதல் ஏழுமலையானுக்கு மீண்டும் புஷ்கரணி ஆரத்தி பூஜை Posted: 13 Sep 2013 10:03 PM PDT திருப்பதி கோவிலில் முன்பு ஏழுமலையானுக்கு புஷ்கரணி ஆரத்தி நடப்பது உண்டு. அதாவது மலையப்ப சாமியை தீர்த்தக்குளத்தில் எழுந்தருளச் செய்து பூஜைகள் செய்வார்கள். இடையில் இந்த பூஜை நிறுத்தப்பட்டது. அடுத்த மாதம் தொடங்கும் பிரமோற்சவத்தை முன்னிட்டு தீர்த்தக்குளம் சுத்தப்படுத்தும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது. குளத்தில் உள்ள பழைய தண்ணீர் வெளியேற்றப்பட்டு குளம் சுத்தப்படுத்தப்பட்டது. இப்பணி முடிவடைந்து நேற்று குளத்தில் புதிய தண்ணீர் நிரப்பப்பட்டது. |
| ராணுவத் தளவாடங்கள் வாங்குவது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:பாதுகாப்புத்துறை தகவல் Posted: 13 Sep 2013 09:50 PM PDT ராணுவத் தளவாடங்கள் வாங்குவது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:பாதுகாப்புத்துறை தகவல் |
| திருவனந்தபுரம் அருகே பஸ் மீது கார் மோதல்: பெண்கள் உள்பட 3 பேர் பலி Posted: 13 Sep 2013 09:20 PM PDT திருவனந்தபுரம், ஆற்றிங்கல், அலங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபி, (வயது 56). இவரது உறவினர் ஒருவர் இறந்து போனார். அவரது இறுதிச்சடங்குகள் முடிந்த பின்னர் அவரது அஸ்தியை அருகில் உள்ள ஆற்றில் கரைப்பதற்காக கோபியும், அவரது சகோதரி கமலம், சகோதரரின் மனைவி உஷா உள்பட 11 பேர் ஒரு காரில் புறப்பட்டனர். அஸ்தியை ஆற்றில் கரைத்து விட்டு அவர்கள் மீண்டும் காரில் ஊருக்கு திரும்பினர். மாவேலிக்கரா திருப்பத்தில் வந்தபோது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது. அப்போது எதிரே வந்த தனியார் பஸ் மீது கார் வேகமாக மோதியது. இதில் காரில் இருந்த கோபி, உஷா, கமலம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். |
| ஒடிசாவில் அக்னி-5 ஏவுகணை சோதனை: நாளை நடக்கிறது Posted: 13 Sep 2013 08:21 PM PDT 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கக்கூடிய அக்னி-5 ஏவுகணையின் முதற்கட்ட சோதனை கடந்த ஆண்டு ஏப்ரல் 19-ந்தேதி வெற்றிகரமாக நடந்தது. இதைத்தொடர்ந்து இதன் 2-வது கட்ட சோதனையை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். வானிலை ஒத்துழைத்தால் ஒடிசா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் இருந்து நாளை இந்த சோதனை நடைபெறும் என்று ராணுவ ஆராய்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 17 மீட்டர் உயரமுள்ள இந்த |
| அத்வானியை சந்தித்து ஆசி பெற்றார் நரேந்திர மோடி Posted: 13 Sep 2013 05:12 PM PDT பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக முடிசூட்டப்பட்ட நரேந்திரமோடி, ஆட்சி மன்ற குழு கூட்டம் முடிந்ததும், மூத்த தலைவர் அத்வானி வீட்டிற்கு சென்று, அவரிடம் ஆசி பெற்றார். நரேந்திர மோடியும், அவருடன் சென்ற பா.ஜனதா மூத்த தலைவர்களும் 30 நிமிடங்கள் அத்வானி வீட்டில் இருந்தனர். பின்னர் நரேந்திரமோடி, வாஜ்பாயை சந்திக்க புறப்பட்டு சென்றார். |
| கண் மருத்துவத்திற்கான பறக்கும் மருத்துவமனை கொல்கத்தாவில் முகாமிட்டுள்ளது Posted: 13 Sep 2013 05:01 PM PDT கடந்த 1982 ஆம் ஆண்டு ஆர்பிஸ் என்ற சர்வதேச கண்மருத்துவ அமைப்பு ஒன்று அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் தொடங்கப்பட்டது. லாப நோக்கில்லாமல் அரசு சாரா அமைப்பாகச் செயல்படும் இந்த அமைப்பு வளரும் நாடுகளில் கண்பார்வையை நீக்கும் நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றது. இந்த மருத்துவ அமைப்பின் சிறப்பு அம்சமாக டிசி 10 ஜெட் விமானம் ஒன்றில் உயர்ரக தொழில்நுட்ப கருவிகள் கொண்ட ஒரு |
| 2ஜி விவகாரம்: பாராளுமன்ற கூட்டுக்குழு 23-ந்தேதி கூடுகிறது Posted: 13 Sep 2013 04:03 PM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் பற்றி விசாரிக்கும் பாராளுமன்ற கூட்டுக்குழுவில் 30 உறுப்பினர்கள் உள்ளனர். சமீபத்தில், 2 மேல்-சபை எம்.பி.க்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதால், ஆளும் தரப்புக்கும், எதிர்தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கை, கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுக்கு விடப்பட்டது. |
| கற்பழித்து கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு நஷ்டஈடு: நீதிபதி பரிந்துரை Posted: 13 Sep 2013 02:54 PM PDT டெல்லியில் மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பு கூறிய விரைவு கோர்ட்டு நீதிபதி யோகேஷ் கன்னா, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 357ஏ பிரிவின்படி, அந்த மாணவியின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார். |
| ஒபாமாவுடன் பிரதமர் மன்மோகன் சிங் 27-ந்தேதி சந்திப்பு Posted: 13 Sep 2013 12:55 PM PDT அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை வருகிற 27-ந்தேதி பிரதமர் மன்மோகன்சிங் வெள்ளை மாளிகைளில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது அணுசக்தி வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. |
| ஆர்.எஸ்.எஸ். மூன்று நாள் கூட்டம் இன்று கர்நாடகாவில் தொடங்கியது Posted: 13 Sep 2013 10:29 AM PDT குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி வரும் பாராளுமன்ற தேர்தலின் பிரதமர் வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்ட |
| மணிப்பூரில் குண்டு வெடிப்பு: 8 தொழிலாளர்கள் பலி Posted: 13 Sep 2013 09:16 AM PDT மணிப்பூர் தலைநகர் இம்பால் மேற்கு மாவட்டம், நாகமாபால் பகுதியில் மணிப்பூரிகள் அல்லாத பிற தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். அந்தப் பகுதியில் இன்று மாலை சக்திவாய்ந்த ஒரு குண்டு வெடித்தது. இதில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக காவல்துறை |
| பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.63 உயர்வு Posted: 13 Sep 2013 09:00 AM PDT சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் 63 காசுகள் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. வாட் வரியின் அடிப்படையில் |
| சீக்கியரின் டர்பனை அகற்றுமாறு கூறியதற்காக மன்னிப்பு கேட்ட அமெரிக்க நீதிபதி Posted: 13 Sep 2013 07:53 AM PDT அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள பேட்டில்கிரீக் என்ற பகுதியில் ஹர்தீப் சிங் என்ற சீக்கியர் வாழ்ந்து வருகின்றார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதி அன்று கலாமாசூ பகுதியில் இருந்த குடியுரிமை நீதிமன்றத்திற்கு தனது நண்பனுக்குத் துணையாகச் சென்றிருந்தார். நீதிமன்றத்தின் உள்ளே சென்றபோது அங்கிருந்த நீதிபதி ஹர்தீப் அணிந்திருந்த டர்பனைத் தொப்பி என்று நினைத்து அதனைக் கழட்டுமாறு கூறினார். |
| லோக்பால் மசோதாவுக்காக குளிர்கால கூட்டத்தொடரின்போது உண்ணாவிரதம் தொடங்குகிறார் ஹசாரே Posted: 13 Sep 2013 07:39 AM PDT ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்த மசோதாவை மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்தார். ஆனால், அவர் உறுதி அளித்தபடி மத்திய அரசு அந்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்யவில்லை. |
| மோடியை பிரதமர் வேட்பாளராக நியமித்ததில் கடும் அதிருப்தி: ராஜ்நாத் சிங்கிற்கு அத்வானி கடிதம் Posted: 13 Sep 2013 07:29 AM PDT பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக மோடியை நியமித்ததில் இருந்தே மூத்த தலைவர் அத்வானி கடும் அதிருப்தியில் இருந்தார். அதன்பின்னர் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதற்கும் அவர் ஆதரவு அளிக்காமல் ஒதுங்கியே இருந்தார். வெளிப்படையாக அவர் தனது எதிர்ப்பை காட்டாமல் இருந்த அத்வானி, பிரச்சினை |
| அனைவரது எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவேன்: மோடி Posted: 13 Sep 2013 06:46 AM PDT அத்வானி மற்றும் அவரது ஆதரவாளர்களின் எதிர்ப்பையும் மீறி, நீண்ட இழுபறிக்குப் பிறகு பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இன்று அறிவிக்கப்பட்டார். தன்னை தேர்வு செய்த அனைவருக்கும் மோடி நன்றி தெரிவித்தார். பின்னர் மோடி நிருபர்களிடம் கூறியதாவது:- பா.ஜனதா கட்சியில் பல்வேறு நிலைகளில் சாதாரண ஊழியனாக நான் பணியாற்றி |
| பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி நியமனம்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு Posted: 13 Sep 2013 06:33 AM PDT பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடப்பட்டது. ஆனால் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, இந்த விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்ததால் இழுபறி ஏற்பட்டது. நவம்பர் மாதம் 5 மாநில தேர்தல் முடிந்தபிறகு மோடியை முன் நிறுத்தலாம் என்று அத்வானி கூறி வந்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களோ |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |