ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு
- தெற்காசிய கால்பந்து போட்டி: இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி
- கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..?
- போரை தவிர்க்க சிரியாவுக்கு அமெரிக்கா புது நிபந்தனை
- 7 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை
- சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
- கனவு
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே
- கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.
- அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- மயிலைத் தமிழ்ச்சங்க விருது வழங்கும் விழாவில் - ஆதிரா
- போடியில் இருந்து ஏழுமலையானுக்கு தங்க பாதக்கவசம்! :) அவசியம் பாருங்கோ !
- குறுங்கவிதைகள் ....அந்தாதி
- BBC-BETTER SPEAKING SPOKEN ENGLISH GUIDE (12 PAGES -1MB ONLY)
- நான் யார்?
- ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!
- இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red)
- மறுமணம் செய்துவைப்போம்
- Eegarai Android apps store
- கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
- மனைவி பெயரில் சொத்துக்களை வாங்கி குவிக்கும் மத்திய அமைச்சர்கள்!!
- 17000 ஆயிரம் பதிவுகள் கடந்த ஈகரை சமையல் ராணி கிருஷ்ணாம்மா
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -46)
- பிள்ளையார் போற்றி நானூறு
- இவர்களும் நம் மக்கள்
- காதல் சோலை - 2
- தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு
| ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு Posted: 09 Sep 2013 02:59 PM PDT ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக் குடியில் 11ம் தேதி இமானுவேல்சேகரன் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி அஞ்சலி செலுத்துவதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள் வர போலீசார் தடை விதித்துள் ளனர். இதுகுறித்து நெல்லை மாவட்ட எஸ்.பி.,விஜயேந்திர பிதரி விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள் ளதாவது: நெல்லை மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளான கங்கைகொண்டான், வேலாயுதபுரம், சிவகிரி, இளையரசனேந்தல், கரட்டுமலை ஆகிய இடங்களில் 10ம் தேதி ... | |
| தெற்காசிய கால்பந்து போட்டி: இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி Posted: 09 Sep 2013 02:55 PM PDT தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி, அரை இறுதியில் மாலத்தீவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தெற்காசிய கால்பந்து போட்டி நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் இந்திய அணி, மாலத்தீவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இரண்டு ஆட்டங்களில் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதால் கேப்டன் சுனில் சேத்ரி விளையாடவில்லை. அவருக்கு பதிலாக குர்மன்ஜிசிங் கேப்டனாக இருந்தார். இரு ... | |
| கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Posted: 09 Sep 2013 02:51 PM PDT புலி வருது புலி வருது கதையாக கோச்சடையான் ட்ரெய்லரும் கடைசியில் வந்துவிட்டது. ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்கும் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவான இந்த பிரமாண்டப் படம் எப்படி இருக்கிறது...? 125 கோடி பட்ஜெட், நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப வல்லுனர்கள், அவதாருக்கு இணையான மேக்கிங் என்று சொல்லப்பட்ட கோச்சடையானின் ட்ரெய்லர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது. புத்திசாலித்தனமாக கட் செய்திருக்கும் ட்ரெய்லர், கார்ட்டூன் பார்க்கும் அனுபவத்தையே தருகிறது. இதற்கா இத்தனை கோடிகள், ... | |
| போரை தவிர்க்க சிரியாவுக்கு அமெரிக்கா புது நிபந்தனை Posted: 09 Sep 2013 02:40 PM PDT வாஷிங்டன்:"ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை, என்பதற்கான ஆதாரங்களை காட்டினால், சிரியா நாட்டின் மீதான தாக்குதலை தவிர்க்கலாம்' என, அமெரிக்கா தெரிவித்து உள்ளது.சிரியா நாட்டில், அதிபர் பஷர் - அல் - ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும்படி, எதிர்க்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஆசாத்தை பதவி விலகும்படி வலியுறுத்தின. ... | |
| 7 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை Posted: 09 Sep 2013 02:39 PM PDT லக்னோ: உ.பி.,யில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, ஏழு மாநிலங்களில், கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசு எச்சரித்துள்ளது. அதனால், போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, அந்த மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது. உ.பி.,யின், முசாபர் நகர் மாவட்டத்தில், கடந்த மாத இறுதியில், இளம் பெண் ஒருவரை, கேலி செய்ததாக கூறி, மூன்று பேர் அடித்துக் கொல்லப்பட்டனர். இதனால், ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை தாக்கினர். இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், பெரும் கலவரமாக மாறியது. ... | |
| சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா? Posted: 09 Sep 2013 11:49 AM PDT தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சென்னையில், கடத்தல் தங்கம் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில், ஓர் ஆண்டிற்கு தங்கத்திற்கான தேவை, 850 டன் என்ற அளவில் உள்ளது. உள்நாட்டில், தங்கம் உற்பத்தி குறைவாக உள்ளதால், துபாய், லண்டன், சுவிட்சர்லாந்தில் இருந்து, இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கம் இறக்குமதிக்கான உரிமம் வைத்துள்ள ஆபரண வர்த்தகர்கள், வங்கிகள் மூலம் தங்கத்தை வாங்கி, ஆபரணங்களாக மாற்றி, நகை கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.சர்வதேச அளவில், லண்டனில் ... | |
| Posted: 09 Sep 2013 11:46 AM PDT கனவு ******** காரிலே ஊர்வலம் தேரிலே நகர்வலம் நீரிலே சுகவலம் காதிலே தங்கக்கம்மல் இடுப்பிலே ஒட்டியாணம் கழுத்திலே மலர்மாலை கையிலே மாங்கல்யம் ஏந்தி வரும் அவனுக்கு தலை சாய்த்துக் காத்திருந்தால் படுக்கையில் ஏழை மங்கை.....கல்யாணக்கனவுடன். ---மு.கோகுலக்கண்ணன்-- | |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 09 Sep 2013 11:38 AM PDT benazeerfathima wrote:எல்லாம் அருமை... | |
| நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Posted: 09 Sep 2013 11:04 AM PDT நற்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான். "கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான்." என நினைத்துக்கொண்டே சென்றான். அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான் "இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டதுபோல் தூங்குகிறான் " என நினைத்துக்கொண்டே ... | |
| கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம். Posted: 09 Sep 2013 09:57 AM PDT கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களில் கிழ்க்கண்ட நபர்களுக்குப் பரிசுகள் அனுப்பியுள்ளோம். வங்கி மூலமாக அவர்கள் கொடுத்த வங்கி கணக்குக்கு அனுப்பப் பட்டுள்ளது. சரி பார்த்து உடனடியாக வந்து சேர்ந்தமைக்கான அல்லது பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதலை இங்கு பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் அனுப்பப் படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். முதல் பரிசு திருமதி சைலஜா(மைதிலி நாராயணன்) 5 ௦௦௦ இரண்டாம் பரிசு சச்சிதானந்தம் 3 000 ராம் ... | |
| அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Posted: 09 Sep 2013 09:56 AM PDT அன்பு மகளுக்கு... விசேஷம் இல்லையா... என்கிற நிறையப்பேரின் தொல்லைகளுக்கு விடையாக நீ வந்தாய்.... சிரித்த முகம் ....! ஆண்குழந்தை பிறக்கும் என்றார்கள்...! பெருத்த வயிறு.... பெண் பிள்ளைதான் -என்றார்கள்....! உரத்த சத்தி... ஆண்பிள்ளை என்றார்கள்....!!! முதல் பிள்ளை ஆண்பிள்ளை தான் பிறக்கணும்-என முடிவுகளும் பலர் சொல்ல... பிறக்கிற குழந்தை... ஆரோக்கியமாய் பிறக்கணும்-எனும் பிரார்தனைகளோடு மட்டும்... நாமிருந்தோம் ....!!! இன்றைய நாளில்.. நீ பிறந்தாய்.....! உன் -முகம் பார்த்து... வலி ... | |
| மயிலைத் தமிழ்ச்சங்க விருது வழங்கும் விழாவில் - ஆதிரா Posted: 09 Sep 2013 09:19 AM PDT | |
| போடியில் இருந்து ஏழுமலையானுக்கு தங்க பாதக்கவசம்! :) அவசியம் பாருங்கோ ! Posted: 09 Sep 2013 09:12 AM PDT போடி: போடியில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு, 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் 5 கிலோ தங்கத்திலான பாதக் கவசம் வழங்கப்பட்டது. போடியை சேர்ந்தவர் இலவம் பஞ்சு பேட்டை உரிமையாளர் தங்கத்துரை. இவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, ஆண்டு தோறும் பல்வேறு சேவைகள் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் தங்கத்திலான பாதக் கவசம் வடிவமைக்கப்பட்டு, திருப்பதி ஏழுமலையானுக்கு வழங்கும் வகையில் தேவஸ்தான கோயில் பட்டாச்சாரியர்கள் மூலம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சிறப்பு பூஜை செய்யப்பட்ட ... | |
| Posted: 09 Sep 2013 06:50 AM PDT தடுக்கி விழுந்தாலும் மிடுக்காக ஓடுகிறது நடை வண்டி ..... உயரத்தில் இருந்து உருண்டாலும் தெருவெல்லாம் உருளுது நுங்கு வண்டி ....
| |
| BBC-BETTER SPEAKING SPOKEN ENGLISH GUIDE (12 PAGES -1MB ONLY) Posted: 09 Sep 2013 05:12 AM PDT BBC-BETTER SPEAKING SPOKEN ENGLISH GUIDE (12 PAGES -1MB ONLY) http://www.mediafire.com/download/wb3ba5z4fet82mj/Better_Speaking_Guide_to_Improving_Your_Spoken_English%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf (OR) http://www.slideshare.net/pashabda/33507-better-speaking-guide-to-improving-your-spoken-english | |
| Posted: 09 Sep 2013 04:51 AM PDT நான் யார்? நான் யார்? இந்த கேள்வி என்னுள் வந்து ஆகிவிட்டன நிறைய நாட்கள்! செந்தில் குமார் என்றென்னை அழைத்தபோது அந்த செந்தில் குமார்தான் நான் என்றெண்ணியிருந்தேன் !! சதையும் தோலும் கலந்த கலவை அதற்கும் அடையாளம் தேவை அதற்குத்தான் பெயரையே வைத்துள்ளார்கள் என அறிந்தபோது நான் யார்? அம்மா என்னை தங்கம் என்றால் அப்பா என்னை உருப்படாதவன் என்றார் தங்கை என்னை போடா என்றால் மனைவி என்னை மாமா என்றால் குழந்தை என்னை அப்பா என்றால் !! இப்படி பல அவதாரம் எடுக்கிறேன் எனில் நான் யார்? ... | |
| Posted: 09 Sep 2013 04:51 AM PDT Cracy Russian motorcyclist....! மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது) | |
| இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Posted: 09 Sep 2013 04:42 AM PDT கடவுளைக் கூவி விற்கிறான் கூறுகெட்ட மனிதன், எடையிட்டு ஏலமிடுகிறான் ஏட்டறிவைத் தொலைத்தவன், கையால் செய்த ஒன்றை கண்ணிட்டு கடவுள் என்கிறான்..!! உள்ளங்கையில் உருவான ஒன்று உன்னதம் பெறுமெனில் இவ்வுலகம் படைக்க இறைவன் தேவையில்லை..!! படைத்தல் தொழிலை இறைவனுடன் பகிர்ந்து கொண்டான் மனிதன்..!! ஆண்டவனை இவன் படைத்து ஆனந்த ஆட்டமாடி வீதியில் கூச்சல் போட்டு விற்றுத் தீர்க்கிறான் உலகத்தின் முதலாளியை..!! தூணிலும் துரும்பிலும் இருக்கத் தெரிந்த இறைவன், சிரம் மட்டும் தந்துவிட்டு சிந்தனை தர ... | |
| Posted: 09 Sep 2013 04:26 AM PDT மறுமணம் செய்துவைப்போம் ****************************************** இருமணம் இணைந்து நடந்தது ஒரு திருமணம் வருடம் இரண்டும் கடந்தது வாரிசு ஒன்றும் பிறந்தது வானம்பாடிப் பறவைகளாய் இருந்த அவர்கள் வாழ்வில் வேடனால் வந்ததுபோல் ஓர் விபத்து ஈருயிரில் ஓர் உயிர் பிரிந்தது அதைப்பார்த்து அவள் உயிர் துடித்தது.. கணவனை இழந்த அவள் காலமெல்லாம் தனிமையிலா வேண்டாம்..... இன்று காலம் மாறிவிட்டது கணவனின்றி கலங்கி நிற்கும் பெண்களுக்கு புது வாழ்க்கை வழங்கிடுவோம் கணவனில்லா கவலையைப் போக்கிடுவோம் மறுமணம் ... | |
| Posted: 09 Sep 2013 04:15 AM PDT அண்ட்ராய்ட் அப்ளிகேசன்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்ய ஈகரை அண்ட்ராய்ட் அப்ளிகேசன் தளத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணம் செலுத்திப் பெற வேண்டிய அப்ளிகேஷன்கள் இங்கு இலவசமாகக் கிடைக்கும். உங்கள் அலைபேசியிலிருந்து நேரடியாக அப்ளிகேசன்களை தரவிறக்கம் செய்வதற்கான முகவரி: http://apps.eegarai.com/ கீழ்கண்ட Repo-வை உங்கள் Aptoide ஸ்டோருடன் இணைத்துக் கொள்ளுங்கள். http://eegarai.store.aptoide.com/ உங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை இந்த பகுதியில் கேளுங்கள். ஈகரை அண்ட்ராய்ட் தளத்தில் இணைத்துத் ... | |
| கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி) Posted: 09 Sep 2013 02:47 AM PDT கிரிஸ்டல் ரிபோர்ட் உபயோகித்து நாம் சில மென்பொருள்களை தயார் செய்கின்றோம் எனினும் அந்த மென்பொருள் நமது வாடிக்கையாளர்(client) கணினியில் வேலை செய்ய என்ன என்ன வழிமுறைகனை கையாள வேண்டும் . உதவுங்கள் உறவுகளே மிகவும் முக்கியமான தேவை . கூகிள் தேடலினினும் தெளிவான பதில் இங்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் . குறிப்பு : வாடிக்கையாளர்கள் கணினியில் அவர்கள் நிறுவ வேண்டிய முன்-மென்பொருள்களின் சிரமத்தை குறைத்தாக வேண்டிய கட்டாயம் . மேலும் எனது வாடிக்கையாளர்கள் அனைவரும் ரிமோட் லொகேஷன் (தொலைவில் உள்ளனர் ... | |
| மனைவி பெயரில் சொத்துக்களை வாங்கி குவிக்கும் மத்திய அமைச்சர்கள்!! Posted: 09 Sep 2013 01:51 AM PDT துடில்லி : மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. ஆனால் சிதம்பரம், சரத்பவார், வீரப்ப மொய்லி ஆகிய முக்கிய அமைச்சர்கள் தங்கள் மனைவிகளின் பெயர்களில் அதிகளவில் சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றனர். அமைச்சர்கள் பட்டியல் : மத்திய அமைச்சர்கள் தங்களின் சொத்து விபரங்கள் மற்றும் தாங்கள் வகிக்கும் பொறுப்புக்களின் விபரங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் பிரதமரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ... | |
| 17000 ஆயிரம் பதிவுகள் கடந்த ஈகரை சமையல் ராணி கிருஷ்ணாம்மா Posted: 09 Sep 2013 01:06 AM PDT 17000 ஆயிரம் பதிவுகள் கடந்த ஈகரை சமையல் ராணி கிருஷ்ணாம்மா வாழ்த்தலாம் வாங்க . மனமார்ந்த வாழ்த்துகள்மா... ![]() | |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -46) Posted: 09 Sep 2013 01:02 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... | |
| Posted: 09 Sep 2013 12:17 AM PDT நிலைமண்டில ஆசிரியப்பா ஓமெனும் எழுத்தாம் ஓருரு அதுவே தாமென வந்த தற்பர போற்றி! தோற்றம் முக்கட் கடவுள் உமை யொடு மகிழ்ந்து மக்கட் களித்த முன்னவ போற்றி! கணபதி வணக்கம் கண்டேன் கணபதி களிற்றைக் கைதலைக் கொண்டே குட்டி வணங்கினன் போற்றி! கோப்பாய் காதிரு கரங்கள் கோர்த்து தோப்பு கரணம் தொடர்ந்தனன் போற்றி! இதயம் இருத்தல் கொஞ்சக் கொஞ்சக் குழைவாய் வந்து நெஞ்சத் தமர்ந்த நாத போற்றி! திருப்பெயர்கள் பேரே ஊரே இல்லாப் பிள்ளை யாரே பலபேர் ஏற்றாய் போற்றி! திருத்தலங்கள் எத்தனை தலங்கள் எங்கெலாம் ... | |
| Posted: 08 Sep 2013 10:49 PM PDT இவர்களும் நம் மக்கள் ******************************** பத்து மாசம் சுமந்த அவ பெத்தெடுத்தா ஒரு அழகுப்புள்ள அது கொஞ்சம் கருப்புதான் ஆனால் அதுவும் ஒரு அழகுதான் அதுக்கு சிங்காரின்னு பேருவெச்சா அந்தக்குழதைக்கு ஆனது வருஷம் மூனு அம்மா... உச்சந்தல வகுடெடுத்து உச்சிக்குடும போட்டுவிட்டு புத்தகப்பை கொடுத்து பள்ளிக்கு அனுப்பிவச்சா அதுவும் நல்லாத்தான் படுச்சுது வயசு பத்து ஆகும் வர அதுக்கப்பறம் அது முகத்துல வந்தது ஒரு குறை பெண்முகம் மாறிப்போயி ஆண் தோன்றலாச்சு சிங்காரின்னு பேரு போயி ... | |
| Posted: 08 Sep 2013 10:15 PM PDT காதல் சோலை - 2 நீ கடந்து போன தடங்களை ரசித்தபடி கடற்கரையில் இன்னும் நான்... உனக்காகக் காத்திருக்கையில் பொறுக்கிய சிப்பிகள் உன் பெயர் வாசிக்கின்றன... கடற்கரை முழுவதும் அனாதையாய் சிப்பிகள்... முத்துச்சிப்பி நீ உலவுகையில்... உன்னைத்தொட்டுவிட எத்தனை முறை முயல்கிறது தெரியுமா அலைகள்? என்னைப்போலவே... கரைகள் உன்மீதான காதலில் கனிந்தே ஈரமாகின்றன என்று நினைக்கிறேன்... - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com) | |
| தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு Posted: 08 Sep 2013 06:37 PM PDT விளையாட்டைப் பற்றிய சிறு குறிப்பு:- ௧. இந்த விளையாட்டில் சொல்லின் படம் கொடுக்கப்பட்டிருக்கும். ௨. சொல்லின் வேறு பெயர்கள் கொடுக்கப்படும். ௩. சொல் எத்தனை எழுத்து உடையது என்றும் சொல்லப்படும் முதல் விளையாட்டுக்கான படம்:- தூய தமிழ்ச் சொல் : _ _ _ _ (நான்கு எழுத்துக்கள் கொண்டது) (தொடரும்) இதுவரை சொன்ன சொற்கள்: ௧. ஜன்னல் = காலதர் ௨. வானம், விரிந்த கடல் = அம்பரம் ௩. திமில் = அக்கு ௪. வயல் = பழனம் ௫. வைகை ஆறு = வேகவதி |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
