Tamil News | Online Tamil News |
- 7 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை : உ.பி., கலவரத்தை அடுத்து மத்திய அரசு உஷார்
- ரிசர்வ் வங்கி அனுப்பிய கடிதத்தால் பொதுமக்கள் கொந்தளிப்பு : குருவாயூர் கோவில் தங்கத்தை கைப்பற்ற திட்டமா?
- எளிதில் கடன் கிடைக்காததே விவசாயிகள் தற்கொலைக்கு காரணம்: மோடி புகார்
- மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்ற கருணாநிதி விருப்பம்
- தா.கிருட்டினன் கொலை வழக்கில் அழகிரி விடுதலையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி
- "இலங்கையில் என்னை சந்தித்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்'
- டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு: போலி 'சரக்கு' வரத்து காரணமா?
- திருச்சியில் பயணிகளை தவிக்கவிட்ட ஆம்னி பஸ்: களையெடுக்குமா போக்குவரத்து துறை?
- திருப்பூர் முதலிடம்: இதில், பெருமைப்படவா முடியும்? அதிகரிக்கும் தற்கொலை மரணங்கள்
| 7 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை : உ.பி., கலவரத்தை அடுத்து மத்திய அரசு உஷார் Posted: லக்னோ: உ.பி.,யில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, ஏழு மாநிலங்களில், கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசு எச்சரித்துள்ளது. அதனால், போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, அந்த மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது.உ.பி.,யின், முசாபர் நகர் மாவட்டத்தில், கடந்த மாத இறுதியில், இளம் பெண் ஒருவரை, கேலி செய்ததாக கூறி, மூன்று பேர் அடித்துக் கொல்லப்பட்டனர். இதனால், ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை தாக்கினர். இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், பெரும் கலவரமாக மாறியது. மற்ற மாவட்டங்களுக்கும், கலவரம் பரவியது. தீ வைப்பு, கத்தி ... |
| Posted: திருவனந்தபுரம் : குருவாயூர், சபரிமலை உள்ளிட்ட, கேரள கோவில்களில் உள்ள தங்கத்தைக் கைப்பற்ற, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலால், பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கோவில்களுக்கு சொந்தமான தங்கம் பற்றிய விவரங்களை, ரிசர்வ் வங்கி கேட்டுள்ளதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி:அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதால், இந்திய பொருளாதாரம் தள்ளாடத் துவங்கியுள்ளது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும், கடுமையாக உயர்ந்து ... |
| எளிதில் கடன் கிடைக்காததே விவசாயிகள் தற்கொலைக்கு காரணம்: மோடி புகார் Posted: காந்தி நகர் :""விவசாயத் துறைக்கு எளிதில் கடன் கிடைக்காததே, விவசாயிகள் தற்கொலைகள் அதிகம் நிகழக் காரணம்,'' என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.குஜராத் மாநிலம், காந்தி நகரில் நடைபெற்ற விவசாயத் துறை தொடர்பான மாநாட்டில், மோடி பேசியதாவது:விவசாயத் துறைக்கு, எளிதில் வங்கிக் கடன் கிடைப்பதில்லை. வங்கிகளின் ஏராளமான சட்ட நடைமுறைகளால், விவசாயிகள் கடன் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால், கடன் சுமையால் தவிக்கும் விவசாயிகள், தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். கடந்த, 20 ஆண்டுகளில், 2.70 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து ... |
| மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்ற கருணாநிதி விருப்பம் Posted: சென்னை : "மூட நம்பிக்கை ஒழிப்புக்கு, உரிய சட்டம் ஒன்றை, மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:மஹராஷ்டிரா மாநில அரசு சமீபத்தில், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது. நரபலி, பில்லி, சூனியம், மாந்திரீகம் மற்றும் இதர மனித நேயமற்ற கொடுமையான பழக்கங்களுக்கு எதிராக, அச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இச்சட்டத்தின்படி மோசடி செயல்களில் ஈடுபடுவோர் கைதானால், குற்றம் நிரூபிக்கப்படும்போது, ஏழாண்டு தண்டனை கிடைக்கும்.மகராஷ்டிர மாநிலத்தில் புகழ் பெற்ற ... |
| தா.கிருட்டினன் கொலை வழக்கில் அழகிரி விடுதலையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி Posted: புதுடில்லி :தி.மு.க., முன்னாள் அமைச்சர், தா.கிருட்டினன் கொலை வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர், மு.க.அழகிரி உட்பட, 13 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு தாக்கல் செய்த, மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.வெட்டி கொலை:தி.மு.க., முன்னாள் அமைச்சர், தா.கிருட்டினன், 2002 மே, 20ம் தேதி, மதுரை அண்ணாநகரில், "வாக்கிங்' சென்று, திரும்பிக் கொண்டிருந்த போது, சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான, மு.க.அழகிரி உட்பட, 13 பேர் மீது, வழக்குத் ... |
| "இலங்கையில் என்னை சந்தித்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்' Posted: கொழும்பு : ""இலங்கையில் என்னை சந்தித்த பத்திரிகையாளர்கள் மற்றும் மக்களுக்கு, உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்,'' என, ஐ.நா., மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டை, 2009ல் முடிவுக்கு வந்தது. இந்த சண்டையில், போர் குற்றம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே, ஐ.நா., மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, இலங்கையில் போர் பாதித்த பகுதிகளில் நடக்கும், சீரமைப்பு நடவடிக்கைகளை, கடந்த மாதம், ஆய்வு செய்தார்; இந்நிலையில், ஐ.நா., மனித உரிமை ஆணையத்தின், 24வது கூட்டம், ஜெனிவாவில் நேற்று ... |
| டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு: போலி 'சரக்கு' வரத்து காரணமா? Posted: போலி சரக்கு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் சரக்குகளால், "டாஸ்மாக்' கடைகளில், மது விற்பனை சரிவடைந்து வருகிறது.1.60 லட்சம் பெட்டி:தமிழகத்தில், 6,800க்கும் மேற்பட்ட, "டாஸ்மாக்' கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.60 லட்சம் பெட்டி மது வகைகள் விற்பனையாகின்றன."டாஸ்மாக்' கடைகளில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகள் மற்றும் பீர் வகைகள், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில் விற்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான கடைகளில், ஒரு பாட்டிலுக்கு, 5 முதல், 10 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து ... |
| திருச்சியில் பயணிகளை தவிக்கவிட்ட ஆம்னி பஸ்: களையெடுக்குமா போக்குவரத்து துறை? Posted: ஆம்னி பஸ்சில் பயணித்தவர்களை, திருச்சியில் தவிக்கவிட்ட சம்பவம், பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை நாட்களில், பயணிகளிடம் பணத்தை கறப்பதுடன், ஏமாற்று வேளையில் ஈடுபடும் இதுபோன்ற பஸ்களை, போக்குவரத்து துறையினர் களையெடுக்க வேண்டும்.நெல்லைக்கு பயணம்:கடந்த, 7ம் தேதி, சென்னையில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட ஆம்னி பஸ்சில், 36 பேர் சென்றுள்ளனர். சாதாரண பேருந்தை, "வால்வோ பஸ்' எனக் கூறி, டிக்கெட் கட்டணமாக, 1,500 ரூபாய் வ‹லித்துள்ளனர்.திருச்சி, பொன்மலை அருகே, பஸ் சென்று கொண்டிருந்த போது, டயர் பஞ்சர் ஆகியுள்ளது. "டயர் மாற்றப்பட்ட பின் பஸ் புறப்படும்' ... |
| திருப்பூர் முதலிடம்: இதில், பெருமைப்படவா முடியும்? அதிகரிக்கும் தற்கொலை மரணங்கள் Posted: கோவை : "தற்கொலை செய்ய முடிவெடுப்பவர், தன்னை மட்டும் மாய்த்துக் கொள்வதில்லை. தன்னை சார்ந்திருக்கும் குடும்பத்தையும் சேர்த்தே படுகுழியில் தள்ளி விடுகிறார். தற்கொலை என்னும் தவறான முடிவு, பல்வேறு சமூகப்பிரச்னைகளை ஏற்படுத்துகிறது' என்கின்றனர், மன நல நிபுணர்கள்.கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்கள் அடங்கிய தமிழக மேற்கு மண்டலத்தில், இந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான எட்டு மாதத்தில் மட்டும், 1,287 ஆண்கள், 615 பெண்கள், 58 சிறுவர்கள், 94 சிறுமிகள் என, மொத்தம் 2,054 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இவர்களில் 905 ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 10,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |