Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருப்பதி மலை பாதையில் வேலூர் சிறுவனை சிறுத்தை புலி தாக்கியது: காயத்துடன் தப்பினான்

Posted: 02 Sep 2013 10:50 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவில் மலை பாதையில் சிறுத்தை புலிகள் அவ்வப்போது நடமாடுவது உண்டு. நேற்று வேலூரை சேர்ந்த 20 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் ஏழுமலையானை தரிசிக்க யூவாரிமெட்டு வழியாக மலை பாதையில் நடந்து சென்றனர். இந்த குழுவினருடன் வேலூரைச் சேர்ந்த சங்கர்–அமுதா தம்பதியின் 7 வயது மகன் சுபாஷ் என்பவனும் பெற்றோருடன் நடந்து சென்றான். இரவு 7.30 மணி

நரேந்திர மோடியுடன் கவர்னர் மீண்டும் மோதல்

Posted: 02 Sep 2013 10:41 PM PDT

லோக் ஆயுக்தா விவகாரம் தொடர்பாக குஜராத்தில் கவர்னருக்கும் முதல்– மந்திரிக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. குஜராத் மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக முதல்–மந்திரி நரேந்திர மோடிக்கும் கவர்னர் கமலா பெனிவாலுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு: அண்ணன்–தம்பி கைது

Posted: 02 Sep 2013 10:07 PM PDT

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் முதுகுப்பா நகரைச் சேர்ந்தவர் ராம கிருஷ்ணா. இவரது மகள் வாணி. இவர் தனது தாய் மாமா வீட்டில் தங்கி இருந்து கல்லூரியில் பி.காம் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். தாய் மாமா வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் ராகவேந்திரா அடிக்கடி மாணவி வாணியை சந்தித்து பேசி பழகி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தனது அக்காள் மகன் பிறந்த நாள் விழாவுக்கு

தெலுங்கானா போராட்டத்தில் திருப்பதி கோவில் வருமானம் ரூ.15 கோடி குறைந்தது

Posted: 02 Sep 2013 09:52 PM PDT

ஆந்திராவில் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. இதன் காரணமாக பஸ் போக்குவரத்து முடங்கி போனது. பஸ் போக்குவரத்து இல்லாததாலும் முழு அடைப்பு காரணமாகவும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22.94 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 19.50 லட்சமாக குறைந்தது. இதே போல் உண்டியல் வருமானமும் கடுமையாக சரிந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கோவில் உண்டியல் வருமானம் ரூ.77.50 கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 62.07 கோடியாக குறைந்தது. இதன் மூலம் கோவிலுக்கு ரூ.15 கோடி நஷ்டமானது. அதே வேளையில் சிறப்பு கட்டண வருமானம் கடந்த ஆண்டை போலவே இருந்தது. கட்டண சேவை டிக்கெட் விற்பனை க

ஆந்திர காங்கிரஸ் அமைச்சர்கள் சோனியாவின் வளர்ப்பு நாய்கள்: சந்திரபாபு நாயுடு தாக்கு

Posted: 02 Sep 2013 09:43 PM PDT

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் ஆத்ம கவுரவ யாத்திரையை தொடங்கி உள்ளார். பஸ் மூலம் அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். குண்டூர் மாவட்டம் சந்தனப்பள்ளி என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசும் போது, காங்கிரஸ் அமைச்சர்களை கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறியதாவது:– காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தெலுங்கு மக்களை பற்றி தெரியாது. என்.டி.ராமராவை பதவி இறக்கும் போது என்ன நடந்தது என்பது இந்திரா காந்திக்கு தெரியும். அதனை சோனியா காந்திக்கு காட்ட வேண்டும். ஆந்திராவைச் சேர்ந்த அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் ஏன் முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி கூட சோனியாவின் வளர்ப்பு நாய்களாக அவரது காலடியில் கிடக்கிறார்கள். இங்கு ராஜினாமா செய்வது போல் பேசி விட்டு டெல்லியில் சோனியா காலடியில் வாலாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். பிரதமர் மன்மோகன்சிங் கூட அப்படி மாறிவிட்டார். சோனியாவை

காங். வேட்பாளர்களை தேர்வு செய்ய ராகுல்காந்தி புதிய வியூகம்

Posted: 02 Sep 2013 09:23 PM PDT

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கட்சியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளார். டெல்லி, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. அதை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் நடக்க இருக்கிறது. இந்த முறை சட்ட சபை, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் திறமையானவர்களாகவும், அரசியல் அனுபவம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்று ராகுல்காந்தி விரும்புகிறார். இதற்காக புதிய வியூகம் வகுத்துள்ளார். வழக்கமாக தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள பல்வேறு கோஷ்டிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும். காங்கிரஸ் வேட்பாளர்களின் அறிவிப்பில் கோஷ்டிகளின் ஆதிக்கம் இருக்கும். இடைத்தரகர்களின் சிபாரிசு மூலமும் பலர் டிக்கெட் வாங்கும் நிலை இருந்தது.

மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி அமெரிக்கா சென்றார்

Posted: 02 Sep 2013 08:41 PM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மருத்துவ பரிசோதனைக்காக நேற்று அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மகள் பிரியங்காவும் சென்றார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2011-ம் ஆண்டு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெறுவதற்காக அவர் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அவருக்கு 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் சோனியா காந்தி, தொடர் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமும், மீண்டும் செப்டம்பர்

மதகுருமார்கள் பெண்களிடம் தள்ளியிருப்பதை கடைபிடிக்க ராம்தேவ் அறிவுரை

Posted: 02 Sep 2013 03:43 PM PDT

சாமியார் ஆசாராம் பாபு பாலியல் வழக்கில் சிக்கி 14 நாள் நீதிமன்ற காவலில் உள்ளார். இப்பிரச்சினை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதகுருமார்கள் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க யோகா குரு பாபா ராம் தேவ் அறிவுறுத்தியுள்ளார்.

அக்டோபர் முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்

Posted: 02 Sep 2013 03:42 PM PDT

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இம்மாதம் 6-ந் தேதியிலிருந்து அன்றைய நிலவரப்படி சந்தாதாரர்கள் கணக்கில் உள்ள தொகை குறித்த முழு விவரங்களையும் வெளியிட ஆயத்தமாகி வருகிறது என வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் கே.கே.ஜலான் தெரிவித்துள்ளார்

டி.சி.எஸ். நிறுவனத்தின் வர்த்தக மதிப்பு 4 லட்சம் கோடியைத் தாண்டியது

Posted: 02 Sep 2013 03:05 PM PDT

நேற்று எடுக்கப்பட்ட வர்த்தக சந்தை மதிப்பின்படி, டாட்டா கன்சல்டன்சி நிறுவனம் 4 லட்சம் கோடியைத் தாண்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக 4 லட்சம் கோடி மதிப்பீட்டைத் தாண்டிய இரண்டாவது நிறுவனம் என்ற பெருமையை இதன் மூலம் டிசிஎஸ் பெறுகின்றது

ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்க உள்துறை ஆலோசனை?

Posted: 02 Sep 2013 02:45 PM PDT

ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து தெலுங்கான பகுதியை பிரித்து தனி மாநிலமாக அறிவிக்க மத்திய அரசு முடிவெடித்து இருக்கிறது. இதற்கு ஆந்திராவில் அனைத்து கட்சியினரும், அரசு ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைமையிலான அரசு நாட்டிற்கு கல்லறை கட்டி வருகிறது: மோடி

Posted: 02 Sep 2013 01:25 PM PDT

குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளாராக அறிவிக்க எதிர்பார்க்கப்படுகிறார். இவர் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசு குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

டெல்லி மேல்-சபையில் உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறியது

Posted: 02 Sep 2013 12:52 PM PDT

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கனவு திட்டமாக கருதப்படும் உணவு பாதுகாப்பு மசோதா, கடந்த 26-ந் தேதி பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. டெல்லி மேல்-சபையிலும் நிறைவேற்றப்பட்டால்தான், மசோதா சட்டம்

ஆசாராம் பாபு மீது நில ஆக்கிரமிப்பு வழக்கு: அதிகபட்ச அபராதம் விதிக்க குஜராத் அரசு நடவடிக்கை

Posted: 02 Sep 2013 12:36 PM PDT

சாமியார் ஆசாராம் பாபு (72) மீது 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை படுத்தியதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து தலைமறைவான அவரை இந்தூர் ஆசிரமத்திலிருந்து கடந்த சனிக்கிழமையன்று இரவு ஜோத்பூர் போலீசார் கைது செய்தனர்.

கச்சத்தீவை மீட்க வேண்டும்: டெல்லி மேல்-சபையில் தமிழக எம்.பி.க்கள் வற்புறுத்தல்

Posted: 02 Sep 2013 12:24 PM PDT

கடந்த 1974-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தின்படி, தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு செல்லவும், அங்கு அவர்கள் மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளவும் உரிமை உள்ளது

ஜெய்சங்கர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு: கர்நாடக அரசு அறிவிப்பு

Posted: 02 Sep 2013 11:39 AM PDT

பெங்களூர் சிறையில் இருந்து தப்பி ஓடிய ஜெய்சங்கர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்து உள்ளது. நேற்று காலையில், பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு கர்நாடக மாநில போலீஸ் துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ்

தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்கு கொண்டு வருவோம்: ஷிண்டே சூசகம்

Posted: 02 Sep 2013 10:48 AM PDT

இந்தியாவின் உள்துறை அமைச்சராக சுஷில்குமார் ஷிண்டே கடந்த ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி பதவி ஏற்றார். இவரது பதவிக் காலத்தில்தான் இந்திய அரசினால் தேடப்பட்டு வந்த பல தீவிரவாத குற்றவாளிகளை பாதுகாப்புத்துறை வெற்றிகரமாக இந்தியாவிற்கு கொண்டுவந்து விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளது

காஷ்மீரில் ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: இந்தியா தக்க பதிலடி

Posted: 02 Sep 2013 10:46 AM PDT

இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி சமீபத்தில் 5 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் கொன்றது. இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் தொடர்ந்து எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து இரு நாடுகள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஜோத்பூர் சிறைக்கு வெளியே ஆசாராம் பாபு ஆதரவாளர்கள் போராட்டம்: போலீஸ் தடியடி

Posted: 02 Sep 2013 08:23 AM PDT

கற்பழிப்பு வழக்கு தொடர்பாக சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவை 31-ந் தேதி நள்ளிரவில் இந்தூர் ஆசிரமத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து ஜோத்பூர் கொண்டு செல்லப்பட்டு ராஜஸ்தான் ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் வைத்து, அவரிடம் 4 மணி நேரம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையின் போது தனக்கு வயதாகி, ஆண்மைத்தன்மையை இழந்து விட்டதால் கற்பழிப்பு

காஷ்மீர் எல்லைப்பகுதியில் கண்ணிவெடி தாக்குதல்: 2 ராணுவ வீரர்கள் படுகாயம்

Posted: 02 Sep 2013 08:04 AM PDT

காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டம், கிரன் செக்டாரில் எல்லை கட்டுப்பாடு பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்ணிவெடி வெடித்து சிதறியது. இதில் 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™