ஈகரை தமிழ் களஞ்சியம் |
- உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன்ஷாட் -ஐ இங்கு பதிவிடுங்கள்!
- கைம்பெண் கவலை
- கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!!
- 24000 பதிவுகளை கடந்துள்ள அன்பு தலைமை நடத்துனர் யினியவன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்
- என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா
- அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றது லியான்டர் பயஸ் ஜோடி
- விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :)
- யார் தான் ஏழை!
- இனியும் வேண்டாம் முதியோர் இல்லம்
- கனவான கல்யாணம்
- ஞாயிறு
- நம்மவூர்த் தெரு அழுகிறதே!
- உறவுகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
- "எண்களைத் தமிழில் சொல்ல முடியுமா?' - ஓர் எளிய வழி!
- தமிழ்த் திரைப்படங்களில் மோசமான பாத்திர வார்ப்புகள்!
- திருக்குறள் சொல்லும் மணிக்கூண்டு!
- தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!
- வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை!
- பிள்ளையார் ஸ்லோகங்கள்
- விவேகானந்தர் -தியானமும் அதன் முறையும்
- பிரதமர் மன்(ண்)மோகன்
- சிரியா மீது ‘3 நாள் அதிரடி ஏவுகணைத் தாக்குதல்’ நடத்த அமெரிக்கா திட்டம்
- உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு
- என் அறிமுகம்
- கேள்விப்பட்டியளோ!
- பரிச்சியம்
- விதைக்கபடாத விதைகள்!!!
- நீயும் நானும்!!!
- களவாடியக் கனவுகள் ....
- நைஜீரியா ராணுவம் தாக்குதல்: 50 தீவிரவாதிகள் பலி
- குர்ஷீத் உசேன்
- ஈகரையின் இளைய தேவதை லக்க்ஷனா ராஜசேகரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
- நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்–கயல்விழி திருமணம் இன்று நடந்தது.
- 2013 - AUGUST/SEPTEMBER ஆங்கில இதழ்கள் இலவசமாக
- ரமணியின் கவிதைகள்
- விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
- தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்! - பா.ஜ.க
- இது உங்கள் இடம்..!
- செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு நிரந்தர இயக்குநரை நியமிக்க வேண்டும்
- காதல் சோலை - 1
- குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!!
| உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன்ஷாட் -ஐ இங்கு பதிவிடுங்கள்! Posted: 08 Sep 2013 03:20 PM PDT விருப்பமுள்ளவர்கள் உங்கள் மொபைல் போனின் Screenshot -ஐ இங்கு பதிவிடுங்கள்! இது என்னுடைய Tab2 ஸ்க்ரீன்ஷாட் . GT-P3100 ROM: Sungsonic™ HD |
| Posted: 08 Sep 2013 01:52 PM PDT கைம்பெண் கவலை ***************************** தெருவோரத் திண்ணையிலே பெண்ணவள் அமர்ந்திருந்தாள் வெள்ளை நிறப்புடவையுடன் கையிலே குழந்தை ஒன்று ஆறு மாதம் முன்புதன்னில் இறந்துவிட்டான் அவள் கணவன் இறப்பதற்கு முன்பவர்கள் இருவரும்தான் அந்த ஊர் செல்லங்கள் இப்பொழுது அவளானால் பூணையினும் கேவலமாய் அந்த ஊர் மக்களுக்கு... அவர்கள் காட்டிய பாசமெல்லாம் வெறும் வேஷம்தான் அண்ணன் என்றெண்ணியவள் அண்ணமிட்டாள் அவனோ இன்று அவளை சகுணமாய் பார்க்கிறான் அன்னை போன்ற பெண்ணொருவள் வாய் கூசாமல் பேசுகிறாள் இப்பொழுதுதான் ... |
| கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!! Posted: 08 Sep 2013 01:45 PM PDT காங்கிரஸே.....! எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தமிழினத்திற்கு... எத்தனை வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும் காலில் விழுந்தும் கதறியும் கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்ந்தாயிற்று... எதுவுமே காதில் விழாத உங்களுக்கு இன்னும் தராத ஒன்று மிச்சம் உண்டு என்னிடம்.... அழுது வீங்கிய கண்களோடும் அரற்றிய துக்கத்தோடும் களைந்த கூந்தலோடும் வயிரெரிந்து இதோ விடுகிறேன்.. கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூள் தூளாகட்டும்!!.. கவிஞர் தாமரை. 'பாரத் ... |
| 24000 பதிவுகளை கடந்துள்ள அன்பு தலைமை நடத்துனர் யினியவன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள் Posted: 08 Sep 2013 12:34 PM PDT 24.000 பதிவுகளைக் கடந்துள்ள யினியவன் அவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்! ![]() |
| என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Posted: 08 Sep 2013 12:31 PM PDT வெளிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி பயிலும் போது என் பேராசிரியர் இவர். டாக்டர் ஹேமா. சற்றேறக்குறைய 15 ஆண்டுகள் கழித்து சந்தித்த போது. அவர் இன்றைய சிறப்பு விருந்தினர் என் மாணவி. இன்றைய சிறப்பு விருந்தினர் என் மாணவி. இவள் என் மகள் என்று கிட்டத்தட்ட 100 முறை ஒவ்வொருவரிடமும் அறிமுகப்படுத்தியது இன்னும் என் செவிகளில் ஒலிக்கிறது இனிமையாக.... அவரது முகத்தில் நான் கண்ட மகிழ்ச்சி. அவர் ஒவ்வொரு வார்த்தை பேசும்போதும் பெருமையாகப் பார்த்தது..... இன்னும் கண்களில்..... அன்று இருமுறை ... |
| அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றது லியான்டர் பயஸ் ஜோடி Posted: 08 Sep 2013 12:24 PM PDT அமெரிக்கன் ஓபன் டென்னிசில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இன்று நடந்த போட்டியில், லியாண்டர் பயஸ்- ஸ்டெப்பனெக் ஜோடி, அலெக்சாண்டர்- புருனோ ஜோடியை 6-1, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இது பயஸ் வெல்லும் 14வது பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. |
| விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) Posted: 08 Sep 2013 11:49 AM PDT சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05) வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10) இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே! முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15) இப்பொழு ... |
| Posted: 08 Sep 2013 11:47 AM PDT ஏழையென்று எவரையும் சொல்லேன்! உள்ளம் நிறைந்தவனுக்கு ஏனையவற்றில் தட்டுப்பாடு வரலாம்... எல்லாம் நிறைந்தவனுக்கு உள்ளம் கல்லுப் போல... எதை வைத்து எவரை ஏழை என்பேன்! |
| இனியும் வேண்டாம் முதியோர் இல்லம் Posted: 08 Sep 2013 11:42 AM PDT இனியும் வேண்டாம் முதியோர் இல்லம் ******************************************************** தாய்ப்பால் ஊட்டியவள் தனியாய் ஓரிடத்தில் தள்ளாடும் தந்தையவர் துணையாய் அவர் அருகில் பெற்றமகன் விட்டுவிட்டான் மற்றவர்கள் பேச்சைக்கேட்டு தாய் தந்தை அன்பு இனி வேண்டாம் என்று மாதம் மூவாயிரம் பாசக்கடன் கட்டுகிறான் ஆறு மாதம் ஒருமுறைக்கு தன் மகனைக் காட்டுகிறான் அவன் ஏன் அறிவதில்லை அறுவதில் தானும் இங்குதான் என்று தன் மகன் ராமனாவான் என்றுதான் வளர்த்தார்கள் ஆனால் அவன் இராவணனாய் வளர்ந்துவிட்டான் கல்லிலும் ... |
| Posted: 08 Sep 2013 11:41 AM PDT கனவான கல்யாணம் ****************************** கனவு காணும் கன்னிக்கு அகவை இப்ப மூனு பத்து ஏழ மக இவளுக்கு இப்பவர மணமில்ல அவள கட்டித்தர அப்பனுக்கும் சொத்து சுகம் எதுமில்ல சொந்தமா இருப்பதொரு கட்டுமரம் கடலுக்குப் பக்கத்துல ஒண்டிக்க ஒரு குடிச ஒட்டல் போட்ட சில துணியும் ஒடுங்கிப்போன பாத்திரமுன் படுத்துறங்க பாய் இரண்டும் தெச்சுவச்ச மீன் வலையும் அப்பன் சேத்த சில சொத்து பாவாம் இவ என்ன செய்ய அப்பன் காலையில கடலுக்கு சென்றிடுவான் மாலையில கிடச்ச மீனோட வந்திடுவான் அத வித்தா கிடைக்கும் ... |
| Posted: 08 Sep 2013 11:40 AM PDT ஞாயிறு திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலகம் சென்று வந்து சனிக்கிழமை ஓய்வெடுத்து ஞாயிறு காலை மனைவியிடம் சொன்னேன் சீக்கிரம் கிளம்பு படத்துக்கு போகலாமேன - விளையாடிவிட்டு ஓடிவந்த என் அன்பு மகள் சொன்னாள் அப்பா படத்துக்கு வேண்டாம் - நாம் பாட்டியை பார்த்து வரலாம் என! ஞாயிறு விடுமுறையிலும் - நான் மறந்து போய்விட்ட என் அன்னை முகம் என் முன்னே தோன்றி மறைந்தது !! வாரத்தின் ஏழு நாட்களும் கஷ்டப்பட்டு ஞாயிறன்று மாலையில் கால் கிலோ ஆட்டு கறி வங்கி வந்து அத்தனையும் எனக்கே ஊட்டி ... |
| Posted: 08 Sep 2013 11:37 AM PDT அந்தத் தெருப் பக்கமாக இந்த ஆளுகள் போகையிலே சொந்த மூக்கை மூடுறாங்க எந்த ஆளுக்குமிது தெரியாதோ வந்து பார்த்தால் புரியாதோ முந்துவது வாக்கு வேண்ட பிந்துவது தெருவோரத்துக் கழிவுகளை அகற்றவா? |
| உறவுகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் Posted: 08 Sep 2013 11:30 AM PDT பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா. வினையெல்லாம் தீர்த்துவைப்பாய் விநாயகா. |
| "எண்களைத் தமிழில் சொல்ல முடியுமா?' - ஓர் எளிய வழி! Posted: 08 Sep 2013 11:06 AM PDT முகநூலில் (facebook) நல்லதை மட்டுமே தேடிக்கொண்டிருந்த என் கண்ணில் சட்டென்று பட்டது, யாரோ ஒரு நண்பர், எல்லோருக்கும் அனுப்பியிருந்த "எண்களைத் தமிழில் சொல்ல முடியுமா?' என்ற முத்தான பொதுத்தகவல் ஒன்று. அந்தத் தகவல் தமிழ் எண்களை நினைவில் வைத்துக்கொள்ள ஓர் அற்புதமான வழியைக் கூறுகிறது. அதை அப்படியே தருகிறேன். படியுங்கள்; பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எண்களைத் தமிழில் சொல்ல முடியுமா? ""பத்தாம் வகுப்புப் படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம், தமிழ்ப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில், 1-இல் ... |
| தமிழ்த் திரைப்படங்களில் மோசமான பாத்திர வார்ப்புகள்! Posted: 08 Sep 2013 11:04 AM PDT இதுவா படைப்பு சுதந்திரம்? ஒரு படைப்பாளி கவிஞனாக இருந்தால் - அவனது கவிதைகள் அறவயப் பட்டவையாக, ஆளுமை மிக்கவையாக, அறச்சீற்றம் கொண்டவையாக, அழகியல் உள்ளவையாக, சமூக அக்கறை நிறைந்தவையாக இருக்கும்பட்சத்தில் அவை வரவேற்கப்படுகின்றன; பின்பற்றப்படுவதற்கும், மேற்கோள்கள் காட்டப்படுவதற்கும் உரியவையாகி, நினைவுகளிலும் நூலகங்களிலும் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு படைப்பாளி சிற்பியாக இருந்தால் - அவனது சிற்பங்கள் செய்நேர்த்தி மிக்கவையாக, செய்திகளைச் சொல்பவையாக, படைத்தவனின் கடுமையான உழைப்பாற்றலைப் பிரதிபலிப்பவையாக ... |
| திருக்குறள் சொல்லும் மணிக்கூண்டு! Posted: 08 Sep 2013 10:59 AM PDT சென்னை - கே.கே.நகர் சிவன் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது ஒரு "தமிழ்' மணிப்பொறி. ஆம்! ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சரியான நேரத்தைக் கூறி, அத்துடன் ஒரு திருக்குறளையும் அதற்கான பொருளையும் கூறுகிறது. இந்த மணிப்பொறியை அமைத்தவர் சென்னை மாநகர மேயரான சைதை துரைசாமியாம். இதுபோல பல பூங்காக்களிலும் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அன்னாரின் திருக்குறள் ப(ம)ணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துவோம்! நன்றி-தினமணி |
| தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்! Posted: 08 Sep 2013 10:54 AM PDT செல்வமும், செல்வாக்கும் மிக்கப் பெருமகனார் சுந்தரராஜத்தேவர் விருதுநகர் மாவட்டம் அருகில் அமைந்த சேத்தூர் ஜமீனை செங்கோல் செலுத்தியவர். இவர் தமிழன்னையின் மீது தணியாக் காதல் பூண்டொழுகியவர். எண்ணற்ற தமிழ்ப் புலவர்களை ஆதரித்து, அரவணைத்தவர்; கவி இயற்றுவதிலும் வல்லவர். திருநெல்வேலி மாவட்டம் சென்னிக்குளத்தில் பிறந்து பின்னாளில் "காவடிச்சிந்து' பாடிப் பெரும் புகழ் ஈட்டியவரான (சிறுவன்) அண்ணாமலையை அவ்வூரைச் சார்ந்த பெரும்ஞானி சுந்தர அடிகளார் சேத்தூர் ஜமீனிடம் அழைத்துச் சென்றார். அவர் ஜமீன்தாரிடம், ""இயற்கையிலேயே ... |
| வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Posted: 08 Sep 2013 10:48 AM PDT ஆள் அறிவுறுத்தும் கணந்துள் பறவை! மலைச் சாரல்களும் அடர்ந்த காடுகளுமாக இருக்கும் வழியிடையே செல்லும் பயணிகளையும் வாணிபம் செய்வோரையும் வழிப்பறி செய்யும் "ஆறலை கள்வர்கள்' அங்கு சுற்றித் திரிவர். அம் மலையடுக்கக் காடுகளிலேயே "கணந்துள்' பறவைகள் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். அவற்றைப் பிடிக்க, மலை வேடர்கள் வலை பின்னி வைத்திருப்பர். அதைப் பார்த்ததும், இப் பறவைக் கூட்டம் அஞ்சி, ஒலி எழுப்புவது, பாலை வழியே செல்லும் கூத்தர்கள் இசைக்கும் யாழிசை போல் கேட்கும். காலம் காலமாக அங்கு வாழும் அப் பறவைகள் அறிவு ... |
| Posted: 08 Sep 2013 09:43 AM PDT "பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா" குள்ள குள்ளனை குண்டு வயிரனை வெள்ளைக்கொம்பனை விநாயகனைத்தொழ தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி) தேவரும் தொழும் தெய்வம் " பெரியவா " ளின் பிள்ளையார் ச்லோகம் அப்யந்யாமரம் ஆரிராதயிஷதாம் யத் பாத பங்கேருஹ- த்வந்த்வாராதநம் அந்தராயஹதயே கார்யம் த்வவச்யம் ... |
| விவேகானந்தர் -தியானமும் அதன் முறையும் Posted: 08 Sep 2013 07:17 AM PDT விவேகானந்தர் -தியானமும் அதன் முறையும் http://www.mediafire.com/download/4dxacme5ea9j3t9/THIYANAMVIVEGANANTHAR%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 08 Sep 2013 07:17 AM PDT இன்று இந்தியாவில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள நாம் தின, வார, மாத இதழ்களை படிக்க வேண்டியது இல்லை,அன்றாடம் நாடாளுமன்ற நிகழ்வுகளை கவனித்தால் போதும்.நாடு எதை நோக்கி செல்கிறது ,நாட்டில் என்ன என்ன பிரச்சனை போன்ற அணைத்து அம்சங்களும் நாடாளுமன்றம் என்ற அந்த திண்ணையில் விவாதிக்கபடுகிறது. தற்போது நாட்டில் என்ன நடக்கிறது என்ற ஒரு சிறு பட்டியல் எடுத்தேன்.நிலகரி ஊழல், அது சார்ந்த ஆவணங்கள் காணவில்லை, பயமில்லாத கற்பழிப்புகள், படுமோசமான பொருளாதார பின்னடைவு அதன் ... |
| சிரியா மீது ‘3 நாள் அதிரடி ஏவுகணைத் தாக்குதல்’ நடத்த அமெரிக்கா திட்டம் Posted: 08 Sep 2013 07:09 AM PDT சிரியா மீது 3 நாட்கள் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த மூன்று நாட்களிலும் அதி தீவிரமான தாக்குதலை சிரியா மீது நடத்த அமெரிக்க படைகள் தயாராகி வருகின்றனவாம். இந்த செய்தியை லாஸ் ஏஞ்செலஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. ஏவுகணைத் தாக்குதலே இதில் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறதாம். பலமுனைகளிலிருந்து இத்தாக்குதலை நடத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாம். முதலில் 50 இலக்குகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கூடுதல் இலக்குகளை சேர்க்குமாறு ... |
| உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Posted: 08 Sep 2013 05:44 AM PDT லக்னோ: உ . பி., மாநிலத்தில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 -ஐ தொட்டது, மேலும் கலவரம் பரவாமல் தடுக்க முஷாபர் மாவட்டம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாரால் கட்டுப்படுத்த முடியாமல் போனது அகிலேஷ் அரசின் சட்டம் ஒழுங்கு குறித்து மேலும் விமர்சனத்திற்குள்ளாகி யிருக்கிறது. உ . பி.,யில் கடந்த முறை நடந்த தேர்தலில் முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது. கடந்த மாயாவதி ஆட்சியில் இங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனது. ... |
| Posted: 08 Sep 2013 05:34 AM PDT வணக்கம் நண்பர்களே! எனது பெயர் அமிர்தா. மதுரைப் பொண்ணு. BCA படிக்கிறேன். |
| Posted: 08 Sep 2013 04:55 AM PDT வயிறு சமிபாடு அடையாவிட்டால் இஞ்சித் தேத்தண்ணி - நல்ல மருந்தாகுமெனக் கேள்விப்பட்டியளோ! வயிறு நல்லா சமிபாடு அடைந்தால் வயிற்றோட்டம் வருமே வந்த வேளை பார்த்து தேனைக் குடி... வயிற்றை இறுக்கி விட்டால் தேனுக்குள்ளே பச்சைத் தண்ணி கலந்து குடி... மருந்தாகும் தேனைப் பற்றிக் கேள்விப்பட்டியளோ! |
| Posted: 08 Sep 2013 04:28 AM PDT பார்த்தேன், படர்ந்தாய்.............. பழகினேன், பரவசமாக்கினாய்......... பகிர்ந்தேன், பக்கதுணையாகினாய்........ என் பாவனையாய்............ என் பார்வையாய்................ என் பாலமாய்............... என் பிரகாசமாய் பிரகாசித்தாய்........ என் நட்சத்திர வானில் நிலாவிற்கு இணையாய் நிலவும் உன்னை..... என் நினைவிழந்தாலும் என் நிஜம்யிழக்காது...... -கொற்றவை |
| Posted: 08 Sep 2013 04:27 AM PDT இன்னும் எத்தனை காலம்..... பரிகாசிக்கும் மனிதர்கள், பட்டம் வழங்கியே பாழாய்போன பலவித பாறாங்கற்கள்... புவியா இல்லை பல்கலைக்கழகமா? பெற்றவை எல்லாம் பெற்றவை என்று இருப்பினும்.... அவை வந்த வழி தெரியாமல் எத்தனை..... வசைக்களுடன் வாழும் பெண்களுக்கு, வாங்கிய விடுதலை எல்லாம் வெற்று காகிதம்தான் ..... -கொற்றவை |
| Posted: 08 Sep 2013 04:24 AM PDT எங்கிருந்தாய் நீ! என் நிலவாய்........... என் கனவாய்........... என் கவிதையாய்........... என் மூச்சாய்....... என் நிழலாய்......... என் உயிராய்........ இப்படி எல்லாம் இயல்பாய் சொல்லிட நீ ஒன்றும் அத்தனை இயற்கை இல்லை..... உன் இயல்பை என்னக்காய் மாற்றி.... எல்லாம் மாறி..... புரிதலை புரிந்து பூவாய் மலர்ந்தாய் அதுவும் எனக்காக மட்டும்........ எத்தனை கசப்புக்கள்...... அத்தனைக்கும் கடைசியில் கண்டது உன்னை மட்டும்தான்..... மாற்றங்கள் மாறின நீ எனக்காக மாறிய போது...... ஆனால் சந்தேகங்கள் சட்டென்று ... |
| Posted: 08 Sep 2013 04:14 AM PDT கனாக் கண்டேனடிக் காதலி கனாக் கண்டேனடி... நான் உனை காதலிப்பது போல் ,, நீயும் எனை காதலிப்பது போல் ,, நம்மை காதல் காதலிப்பது போல் ,, கனாக் கண்டேனடிக் காதலி கனாக் கண்டேனடி... உனக்கும் எனக்கும் ஒரே ஒரு நிழல் இருப்பது போல் ,, உன் நெஞ்சில் என் உருவத்தை நீ ஒட்டிக் கொண்டது போல் ,, என் கண்ணில் உன் உருவத்தை நான் பசைக்குத்தியது போல் ,,, கனாக் கண்டேனடிக் காதலி கனாக் கண்டேனடி... உன் நினைவுகள் என்னை ஆட்டிப் படைப்பது போல்,, உன் கனவுகள் என் இரவுகளை உண்டுவாழ்வது போல் ,, நம் காதல் என் கவிதைகளை ... |
| நைஜீரியா ராணுவம் தாக்குதல்: 50 தீவிரவாதிகள் பலி Posted: 08 Sep 2013 03:01 AM PDT மைடுகுரி:நைஜீரியா ராணுவத்திற்கும் தீவீரவாதிகளுக்கும் நடந்த சண்டையில் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் என்ற தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு,போர்னோ என்ற இடத்தில் தாக்குதலில் 20 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு ஹெலிகாப்டர் படையுடன் சென்று ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது. இதில் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதை ராணுவ வட்டாரம் உறுதிபடுத்தியுள்ளது. |
| Posted: 08 Sep 2013 02:58 AM PDT என் அன்புத் தமிழ் தோழர்களே, நான் சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியை சேர்ந்தவன். இப்போது சென்னையில் பொறியியலில் பலபடிதுறை பயின்று வருகின்றேன். சிறுவயதில் இருந்தே பல கவிதை கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றிறுக்கிறேன். |
| ஈகரையின் இளைய தேவதை லக்க்ஷனா ராஜசேகரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! Posted: 08 Sep 2013 02:52 AM PDT இன்று தனது 4-வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரையின் இளைய தேவதை லக்க்ஷனாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! ![]() |
| நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்–கயல்விழி திருமணம் இன்று நடந்தது. Posted: 08 Sep 2013 02:48 AM PDT நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். சீமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அளிந்து இருந்தார். மணப்பெண் கயல்விழி தங்கநிற பட்டு சேலை அணிந்து இருந்தார். தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழ் முதல் எழுத்தான 'அ' பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை 10 மணியளவில் ... |
| 2013 - AUGUST/SEPTEMBER ஆங்கில இதழ்கள் இலவசமாக Posted: 08 Sep 2013 02:41 AM PDT SEP-2013-FHM INDIA MAGAZINE டவுன்லோட் செய்ய http://www12.zippyshare.com/v/11969000/file.html SEP.2013 -ADVANCED PHOTOSHOP MAGAZINE http://www67.zippyshare.com/v/39978308/file.html SEP.2013-PLAY BOY MAGAZINE http://www9.zippyshare.com/v/22652110/file.html SEP.2013-PLAY BOY MAGAZINESER MAGAZINE (UK) http://www52.zippyshare.com/v/13517104/file.html SEP-2013 MENS HEALTH INDIA (2013 SEX SURVEY) http://www58.zippyshare.com/v/29746520/file.html AUG-2013-PREVENTION INDIA ... |
| Posted: 08 Sep 2013 01:00 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் Posted: 08 Sep 2013 12:50 AM PDT யானை முகத்தோடு அரச மரத்தடியில் அமர்ந்துள்ளவனே ! நாளும் உன்னை தொழுதிட வருவோரின் குறைகளை தீர்த்து வையப்பா! முதல் கடவுள் நீதான் - எங்கள் குலக் கடவுளும் நீதான்!! உன்னை நாடி வரும்போது உள்ளத்தை சுத்தமாக்கி வாழ்க்கையை நல்லதாக்கி வாழ்ந்திட வையப்பா வையகம் வாழ்த்தும் விநாயகா!!! அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் |
| தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்! - பா.ஜ.க Posted: 08 Sep 2013 12:19 AM PDT தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் மாநில நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநில வாரியாக பிரிந்து குரல் கொடுக்கும் காட்சிகள் மட்டும் தான் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், முதன்முறையாக பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என குரல் கொடுத்திருப்பதுடன், ... |
| Posted: 07 Sep 2013 11:53 PM PDT நன்றி: வாரமலர் வேண்டாம் சுய வைத்தியம்! என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன். அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான். சுய வைத்தியம் எனும் ... |
| செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு நிரந்தர இயக்குநரை நியமிக்க வேண்டும் Posted: 07 Sep 2013 09:11 PM PDT புது தில்லி / 07 September 2013 / செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு (சிஐசிடி) நிரந்தர இயக்குநர் நியமிக்கவும், அதிக நிதி கிடைக்கவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினர் பி. லிங்கம்(படம்) வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: "மிகவும் தொன்மையான பத்து வழக்கு மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. அத்தகைய மொழியை முழு மனது இல்லாமல் மத்திய அரசு செம்மொழியாக அறிவித்து, செம்மொழி மையத்தையும் உருவாக்கியது. அந்த ... |
| Posted: 07 Sep 2013 07:50 PM PDT காதல் சோலை - 1 காற்றில் படபடக்கும் உன் தாவணிக்கு எப்படித் தெரிந்தது உன்னைப் பார்க்கும்போதெல்லாம் தடதடக்கும் என் இதயத்துடிப்பை... உன்னழகை எட்டிப்பிடிக்க முயன்று தோற்றுத்தான் வீழ்ந்து கிடக்கிறதோ இந்த அழகான ரோஜாக்கள் உன் தாவணி முழுவதும்... வயல்வெளிகளூடே நீ நடக்கிறாய்... தங்களினூடே எப்படி தாமரை பூத்தது என வியக்கின்றன வயல்வெளிகள்... வாழைத்தோட்டத்தில் கரும்புக்காடாய் நீ... நீ கவன்கல் அடித்து எதை வீழ்த்துகிறாயோ இல்லையோ என்னை மிக எளிதாக வீழ்த்திவிடுகிறாய்... ... |
| குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Posted: 07 Sep 2013 07:37 PM PDT நண்பர்களே, பொதுவாக , குறுந்தொகைப் பாடல்களில் பெரும்பாலானவை தோழியோ , தலைவியோ களவு வாழ்க்கை மேற்கொள்ளுதல் எத்துனை அல்லல் நிறைந்ததாக உள்ளது என்பதனை தலைவனுக்கு நெஞ்சில் உறுத்தும்/தைக்கும் வண்ணம எடுத்துச் சொல்லி , கற்பு வாழ்க்கை - அதாவது , மணமுடித்து மனநிம்மதியுடன் அறவாழ்க்கை - விரைவில் மேற்கொள்ள வற்புறுத்துவதையே காணமுடிகிறது ; அகநானுற்றின் ஓர் பாடலில் தோழி நறுக்கெனவே சொல்வாள் : " மன்றல் வேண்டினும் பெறுகுவை ... " என்று ! இவையன்றி , தங்கள் காதலின் மேன்மை பற்றியும் , தலைவன் தன் சொல்லை காக்க மறந்தது ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

