மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய ரூ.1¼ கோடி சந்தன கட்டைகள் பறிமுதல்: டிரைவர்–கிளீனர் கைது
- ஆந்திராவில் பஸ் ஏற நின்ற பெண்ணை கடத்தி கற்பழித்த போலீஸ்காரர்
- சிறு குழந்தைகளுக்கான பிளே ஸ்கூல்களின் விதிமுறைகள் திருத்தப்படுகின்றன
- மருத்துவ மாணவர்கள் சேர்க்கை ஊழல்: முன்னாள் மத்திய மந்திரி ரஷீத் மசூது குற்றவாளி - சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
- அணுசக்தி விபத்து இழப்பீட்டு சட்டம் தளர்த்தப்படுமா?: மத்திய அரசு நடவடிக்கையால் சர்ச்சை
- சோனியா பிரதமர் ஆவதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன்: சுஷ்மா சுவராஜ்
- டெல்லி யமுனையில் பிள்ளையார் சிலைகள் கரைப்பு: நீராடி இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு
- நரேந்திர மோடிக்கு கமாண்டோ வீரர்களுடன் 'இசட்' பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு அனுமதி
- வெங்காயம் விலை ஏற்றம் குறித்து கருத்து தெரிவித்த சரத்பவார் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்
- புதிய சரக்கு வரத்தொடங்கியதும் வெங்காய விலை 2 வாரங்களில் குறையும்: சரத்பவார் பேட்டி
- நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் 18 கோப்புகள் மாயமானது உறுதி: விசாரணை அறிக்கை பதிவு செய்கிறது சி.பி.ஐ.
- முசாபர்நகர் கலவர வழக்குகள்: அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம்
- கட்சியை கலைக்க மாட்டேன்; ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணி - எடியூரப்பா
- கலவர வழக்கில் எம்.எல்.ஏ.க்களை கைது செய்யாதது ஏன்? உ.பி. காவல்துறை விளக்கம்
- காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் யார்? - ராஜ்நாத் சிங் கேள்வி
- கொச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது
- திருவோணம் திருவிழா: சாப்பிடும் போட்டியில் சுவாசக்குழாயில் இட்லி சிக்கியதால் முதியவர் சாவு
- அரியானாவில் ஓடிப்போன காதல் ஜோடி கவுரவக் கொலை: ஊர்மக்கள் முன்னிலையில் நடந்த கொடுமை
- சுவாசக்குழாயில் இட்லி சிக்கியதால் முதியவர் சாவு: வினோத போட்டியால் வந்த வினை
- திருப்பதி கோவிலில் தமிழக பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 28 மணி நேரம் ஆகிறது
| ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய ரூ.1¼ கோடி சந்தன கட்டைகள் பறிமுதல்: டிரைவர்–கிளீனர் கைது Posted: 19 Sep 2013 10:25 PM PDT கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வழிக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார், போலீஸ்காரர்கள் மணி, தாமஸ் ஆபிரகாம் ஆகியோர் நேற்று மாலை 4 மணி அளவில் நெல்லிக்குத்து என்ற இடத்தில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் ஒரு லாரி வந்தது. அதனை போலீசார் தடுத்து நிறுத்தி அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது லாரியில் சரக்குகள் ஏற்றப்படும் பகுதியில் ஏராளமான காலி அட்டைப் பெட்டிகள் இருந்தன. ஏதோ பொருட்களை கடத்துகிறார்கள் என சந்தேகமடைந்த போலீசார் |
| ஆந்திராவில் பஸ் ஏற நின்ற பெண்ணை கடத்தி கற்பழித்த போலீஸ்காரர் Posted: 19 Sep 2013 10:10 PM PDT ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மகபூப் நகருக்கு சென்றிருந்தார். அங்கு உறவினர்கள் வீட்டுக்கு சென்று விட்டு ஐதராபாத் திரும்ப அவர் மகபூப் நகர் பஸ் நிலையத்துக்கு வந்தார். ஐதராபாத் பஸ்கள் அனைத்தும் சென்று விட்டதால் அந்த பெண் மகபூப் நகர் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார். நள்ளிரவு 1 மணிக்கு அங்கு ரோந்து பணிக்கு வந்த போலீஸ்காரர் சீனு (வயது26). அந்த |
| சிறு குழந்தைகளுக்கான பிளே ஸ்கூல்களின் விதிமுறைகள் திருத்தப்படுகின்றன Posted: 19 Sep 2013 05:47 PM PDT சிறுகுழந்தைகளுக்கான பிளேஸ்கூல்கள் நாடெங்கும் அதிகரித்து வரும் நிலையில் அவற்றுக்கு என சில தரக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு நிர்ணயம் செய்ய உள்ளது. இந்தத் தரக் கட்டுப்பாடுகள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் முறைப்படுத்தப்படுகின்றது இன்று நடைபெற உள்ள மத்திய |
| Posted: 19 Sep 2013 04:37 PM PDT மத்தியில் வி.பி. சிங் ஆட்சிக்காலத்தில் (1990-1991) மத்திய சுகாதாரத்துறை மந்திரி பதவி வகித்தவர் ரஷீத் மசூது. தற்போது இவர் டெல்லி மேல்-சபையில் காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார். இவர் மத்திய சுகாதாரத்துறை மந்திரி பதவி வகித்த காலத்தில், திரிபுரா மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி |
| அணுசக்தி விபத்து இழப்பீட்டு சட்டம் தளர்த்தப்படுமா?: மத்திய அரசு நடவடிக்கையால் சர்ச்சை Posted: 19 Sep 2013 03:26 PM PDT பெரும் சர்ச்சைக்கிடையே இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கடந்த 2005-ம் ஆண்டு கையெழுத்தானது. 8 ஆண்டுகள் முடிந்தும் அந்த ஒப்பந்தம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அணுசக்தி பேரிடர் நிர்வாக இழப்பீடு சட்டம்தான் |
| சோனியா பிரதமர் ஆவதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன்: சுஷ்மா சுவராஜ் Posted: 19 Sep 2013 01:55 PM PDT 2004-ம் ஆண்டு காங்கிரஸ் வெற்றிபெற்ற போது, அக்கட்சியின் தலைவரான சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்றும் எனவே அவர் இந்தியாவின் பிரதமர் ஆகக்கூடாது என்றும் பாரதிய ஜனதா உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது சோனியா பிரதமர் ஆனால், தனது தலை முடியை மழித்துக்கொள்கிறேன் என்று பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார். |
| டெல்லி யமுனையில் பிள்ளையார் சிலைகள் கரைப்பு: நீராடி இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு Posted: 19 Sep 2013 01:07 PM PDT புதுடெல்லியில் வருட வருட கணேஷ் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருட கணேஷ் சதுர்த்தி முன்னிட்டு அங்குள்ள குடேஷியா காட், வசிராபாத், புராரி, சோனியா விஹார் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்ற புதன் கிழமையன்று பிள்ளையார் சிலைகளை வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். |
| நரேந்திர மோடிக்கு கமாண்டோ வீரர்களுடன் 'இசட்' பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு அனுமதி Posted: 19 Sep 2013 01:05 PM PDT நரேந்திர மோடிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.) கமாண்டோக்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்குவார்கள். பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார் |
| வெங்காயம் விலை ஏற்றம் குறித்து கருத்து தெரிவித்த சரத்பவார் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் Posted: 19 Sep 2013 12:42 PM PDT வெங்காய விலை உயர்வது விவசாயிகளுக்கு நல்லது என கருத்து கூறி சர்ச்சையில் சிக்கியவர் மத்திய விவசாய மந்திரி சரத்பவார். நேற்று அவர் டி.வி. சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின்போது அவர் தெரிவித்த கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது |
| புதிய சரக்கு வரத்தொடங்கியதும் வெங்காய விலை 2 வாரங்களில் குறையும்: சரத்பவார் பேட்டி Posted: 19 Sep 2013 11:28 AM PDT வெங்காயத்தை உரிக்கிறபோது தாய்மாருக்கு கண்ணீர் வருவது இயற்கை. ஆனால் இப்போது வெங்காய விலையைக் கேட்டாலே தாய்மாருக்கு கண்ணீர் வருகிறது. அந்தளவுக்கு வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது |
| Posted: 19 Sep 2013 11:10 AM PDT நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் தொடர்புடைய முக்கிய கோப்புகள், ஆவணங்கள் மத்திய நிலக்கரித்துறை அமைச்சகத்தில் இருந்து காணாமல் போய் விட்டதாக வெளியான தகவல், நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது |
| முசாபர்நகர் கலவர வழக்குகள்: அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் Posted: 19 Sep 2013 11:02 AM PDT உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இரு சமூகத்தினரிடையே நடந்த வன்முறையில் 48 பேர் கொல்லப்பட்டனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக தஞ்சமடைந்தனர். இந்த வன்முறையில் ஈடுபட்டதாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. |
| கட்சியை கலைக்க மாட்டேன்; ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணி - எடியூரப்பா Posted: 19 Sep 2013 08:47 AM PDT கர்நாடக மாநில பா.ஜனதா கட்சியில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலில், வேட்பாளர்களை நிறுத்தி பா.ஜனதாவின் ஓட்டுக்களை பிரித்தார். இதனால் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. |
| கலவர வழக்கில் எம்.எல்.ஏ.க்களை கைது செய்யாதது ஏன்? உ.பி. காவல்துறை விளக்கம் Posted: 19 Sep 2013 08:24 AM PDT உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் நடந்த கலவரம் தொடர்பாக, பா.ஜனதா எம்.எல்.ஏ. சங்கீத் சோம், பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நூர் சலீம், மவுலானா ஜமீல், பா.ஜனதா பிரமுகர் பார்டெண்டு சிங், காங்கிரஸ் தலைவர் சயீதுஜமான் உள்ளிட்ட 16 அரசியல்வாதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் யார்? - ராஜ்நாத் சிங் கேள்வி Posted: 19 Sep 2013 07:57 AM PDT பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், அவருக்குப் போட்டியாக காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராகுல் காந்திக்கு கட்சியில் செல்வாக்கு அதிகரித்து வருவதால் அவரை களமிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுபற்றி காங்கிரஸ் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. |
| கொச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது Posted: 19 Sep 2013 07:07 AM PDT இன்று காலை கொச்சி விமான நிலையத்திற்கு வந்து சேரும் ஐக்கிய அரபுக் குடியரசு விமானத்தில் மிகப் பெரிய அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா துறையினருக்குத் தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து சுங்கத்தடுப்பு அதிகாரிகள் குழு ஒன்று சோதனைப் பணியில் ஈடுபட்டது. |
| திருவோணம் திருவிழா: சாப்பிடும் போட்டியில் சுவாசக்குழாயில் இட்லி சிக்கியதால் முதியவர் சாவு Posted: 19 Sep 2013 05:38 AM PDT கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் திருவேணி நகரை சேர்ந்தவர் குச்சு (வயது 63). இந்த பகுதியில் ஓணம் பண்டிகையையொட்டி திருவோணத்திருவிழா நடந்தது. திருவிழாவையொட்டி பல கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டு போட்டிகளும் நடந்தது. இந்த விளையாட்டு போட்டிகளில் இட்லி சாப்பிடும் போட்டியும் நடந்தது. இதில் குச்சு உள்பட 10–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டி ஆரம்பித்தவுடன் போட்டியாளர்கள் அனைவரும் வேகமாக இட்லிகளை சாப்பிடத் தொடங்கினர். |
| அரியானாவில் ஓடிப்போன காதல் ஜோடி கவுரவக் கொலை: ஊர்மக்கள் முன்னிலையில் நடந்த கொடுமை Posted: 19 Sep 2013 04:41 AM PDT அரியானா மாநிலம் ரோட்டாக் அருகே உள்ள கர்னாவதி கிராமத்தைச் சேர்ந்த நிதி பாரக் (20) என்ற பெண் தர்மேந்தர் பாரக் (23) என்ற வாலிபரைக் காதலித்துள்ளார். ஒரே கல்லூரியில் படித்து வந்த இவர்களின் காதலுக்கு பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டனர். |
| சுவாசக்குழாயில் இட்லி சிக்கியதால் முதியவர் சாவு: வினோத போட்டியால் வந்த வினை Posted: 19 Sep 2013 02:30 AM PDT கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் திருவேணி நகரை சேர்ந்தவர் குச்சு (வயது 63). இந்த பகுதியில் ஓணம் பண்டிகையையொட்டி திரு ஒணத்திருவிழா நடந்தது. திருவிழாவையொட்டி பல கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டு போட்டிகளும் நடந்தது. |
| திருப்பதி கோவிலில் தமிழக பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 28 மணி நேரம் ஆகிறது Posted: 19 Sep 2013 12:58 AM PDT ஆந்திராவில் தனி தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் காரணமாக திருப்பதியில் 1½ மாதங்களுக்கு மேலாக பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை. திருப்பதியில் இருந்து திருலைக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ் போக்குவரத்து முழுமையாக இல்லாததால் திருமலைக்கு பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் புரட்டாசி மாதம் பிறந்தது. இது பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |