Tamil Star |
- பெண் நிருபர் பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை
- சோனியா பிரதமர் ஆவதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன்
- காமக்கொடூரன் ஜெய்சங்கருக்கு உதவியது யார்? வெளிவரப்போகும் உண்மைகள்
- அமெரிக்க நிர்பந்தத்துக்கு அடிபணிகிறது மன்மோகன் அரசு!
- சுவாசக்குழாயில் இட்லி சிக்கி முதியவர் மரணம்
- குமரன் பத்மநாதனை பயன்படுத்திக்கொள்ளப் போவதில்லை – ரணில்
- பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும்
- மஹிந்த ராஜபக்ஷ இன்று அல்லது நாளை அமெரிக்காவிற்கு விஜயம்
- வடக்கு தேர்தல் இலங்கையில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நல்ல சந்தர்ப்பம் – பான் கீ மூன்
- அரச வானொலி தமிழ் கூட்டமைப்புக்கு எதிரான பிரசாரங்களை இன்றும் ஒலிபரப்புகிறது
| பெண் நிருபர் பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை Posted: 19 Sep 2013 11:02 PM PDT
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிறார் என்பதால், அவர் மீதான குற்றப்பத்திரிகை சிறார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சோனியா பிரதமர் ஆவதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன் Posted: 19 Sep 2013 10:48 PM PDT 2004-ம் ஆண்டு காங்கிரஸ் வெற்றிபெற்ற போது, அக்கட்சியின் தலைவரான சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்றும் எனவே அவர் இந்தியாவின் பிரதமர் ஆகக்கூடாது என்றும் பாரதிய ஜனதா உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது சோனியா பிரதமர் ஆனால், தனது தலை முடியை மழித்துக்கொள்கிறேன் என்று பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார். இந்நிலையில் நேற்று இதுகுறித்து கேள்வியின் போது சுஷ்மா சுவராஜ் பதிலளித்து பேசியதாவது:- சோனியா காந்தி, ராஜீவ் காந்தியின் மனைவியாகவும் இந்திராகாந்தியின் மருமகளாகவும் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| காமக்கொடூரன் ஜெய்சங்கருக்கு உதவியது யார்? வெளிவரப்போகும் உண்மைகள் Posted: 19 Sep 2013 10:38 PM PDT பெங்களூர் சிறையிலிருந்து தப்பியோடிய ஜெய்சங்கருக்கு அவர் தப்பிக்க உதவியது யார்? என்பது தொடர்பான விசாரணை முடிவடைந்து விட்டது. கர்நாடகா மட்டுமின்றி தமிழகம், ஆந்திர மாநிலங்களில் தனியாக இருக்கும் பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்து வந்தவன் சைக்கோ குற்றவாளி ஜெய்சங்கர். தமிழகத்தை தவிர கர்நாடகா மாநிலத்தில் மட்டும் இவர் மீது 20க்கும் மேற்பட்ட பலாத்கார, கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. போதையில் சுற்றி திரியும் இவன், பொலிஸ் அதிகாரிகளின் கவனத்தை திசைதிருப்பி சாமர்த்தியமாக தப்பி செல்லும் முறையை கற்று […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்க நிர்பந்தத்துக்கு அடிபணிகிறது மன்மோகன் அரசு! Posted: 19 Sep 2013 10:35 PM PDT
அணுஉலை விபத்து இழப்பீடு விவகாரத்தில், அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு மத்திய அரசு அடிபணிவது, நாடா ளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை அவமதிப்பதுடன், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக் அணுமின் உற்பத்திக்காக, அயல்நாட்டு நிறுவனங்களின் கூட்டுடன் இந்தியாவில் அணு உலைகளை அமைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் மின் நிறுவனத்திடமிருந்து அணு உலைகள் மற்றும் உதிரிபாகங்களை வாங்க, மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய அணுமின் வாரிய நிறுவனம் (என்.பி.சி.ஐ.எல்.) ஒப்பந்தம் செய்துகொள்ளவுள்ளது.கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்லவிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் வரும் 27-ம் தேதி சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது, இந்தியாவில் அணு மின்னுற்பத்திக்காக அணு உலைகள் நிறுவும் விஷயத்தில்,நாட்டின் நலனுக்கு எதிராகவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட இருப்பதாக சர்ச்சை மூண்டுள்ளது. இதுபோல் அயல்நாட்டு நிறுவனங்களின் அணு உலைகள் இந்தியாவில் நிறுவப்பட்டு, அவற்றில் விபத்து ஏற்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்குரிய நஷ்டஈட்டை அணுஉலை மற்றும் உதிரிபாகங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்பதை, 2010-இல் கொண்டுவரப்பட்ட அணு விபத்து பொறுப்புச் சட்டத்தின் 17-வது பிரிவு உறுதி செய்கிறது. இதனால், போபால் விஷவாயு சம்பவத்தைப்போல, இந்தியாவில் நிறுவப்படவிருக்கும் அணுஉலைகளில் ஏதேனும் விபத்து நேர்ந்தால், அதற்குப் பெருமளவு நஷ்டஈட்டுத் தொகையைத் தர வேண்டுமே? என அமெரிக்க நிறுவனம் கவலைப்படுகிறது. அந்தக் கவலையைப் போக்கும் வகையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஜி.ஈ. வாஹன்வதி, அணு விபத்து பொறுப்புச் சட்டத்தின் 17-வது பிரிவை செயல்படுத்தலாமா அல்லது வேண்டாமா என்பதை அணுமின்நிலையத்தை நடத்தும் இந்திய நிறுவனத்தின் விருப்பத்துக்கு விட்டுவிடலாம் என்று மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், பிரதமரின் அமெரிக்கப் பயணத்தின்போது அணு விபத்து பொறுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலும், அமெரிக்க நிறுவனங்களைக் காப்பாற்றும் வகையிலும் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனிடையே, அமெரிக்க நிறுவனத்துடன் இந்தியாவின் என்.பி.சி.இ.எல். நிறுவனம் மேற்கொள்ளும் எந்தவோர் ஒப்பந்தமும், இந்தியச் சட்டத்திற்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும் என அணுசக்தித் துறை (டி.ஏ.இ.) வலியுறுத்தியுள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக, பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக்குழு வரும் 24-ம் தேதி விவாதிக்கும் எனத் தெரிகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சுவாசக்குழாயில் இட்லி சிக்கி முதியவர் மரணம் Posted: 19 Sep 2013 09:23 PM PDT கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் திருவேணி நகரை சேர்ந்தவர் குச்சு (வயது 63). இந்த பகுதியில் ஓணம் பண்டிகையையொட்டி திருவோணத்திருவிழா நடந்தது. திருவிழாவையொட்டி பல கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டு போட்டிகளும் நடந்தது. இந்த விளையாட்டு போட்டிகளில் இட்லி சாப்பிடும் போட்டியும் நடந்தது. இதில் குச்சு உள்பட 10–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டி ஆரம்பித்தவுடன் போட்டியாளர்கள் அனைவரும் வேகமாக இட்லிகளை சாப்பிடத் தொடங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக குச்சு சாப்பிட்ட இட்லி ஒன்று அவரது தொண்டையில் […] |
| குமரன் பத்மநாதனை பயன்படுத்திக்கொள்ளப் போவதில்லை – ரணில் Posted: 19 Sep 2013 09:17 PM PDT தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை பயன்படுத்திக்கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமது அரசியல் நடவடிக்கைகளுக்காக குமரன் பத்மநாதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குமரன்பத்மநாதனைப் பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதன் இன்னமும் இந்தியாவின் தேடப்பட்டு வருவோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட நபர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான நபர்களை அரசியல் மேடைகளில் களமிறக்குவதன் மூலம் […] |
| பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் Posted: 19 Sep 2013 09:08 PM PDT இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று வட மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழக கட்சிகள் இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்ற நிலையில் விக்னேஸ்வரன் தமது கருத்தை டைம்ஸ் ஒப் இந்தியாவுக்கு தெரிவித்துள்ளார். தாம் மாநாட்டு புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்துக்கு இதனை செய்ய வேண்டும் என்ற தமிழர்கள் வலியுறுத்த வேண்டும். இதற்கு பொதுநலவாய நாடுகள் ஒரு […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| மஹிந்த ராஜபக்ஷ இன்று அல்லது நாளை அமெரிக்காவிற்கு விஜயம் Posted: 19 Sep 2013 07:59 PM PDT ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அல்லது நாளை அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகியுள்ளது. 193 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இம்முறை அமர்வுகளின் போது உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதி, எப்போது அமெரிக்கா […] |
| வடக்கு தேர்தல் இலங்கையில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நல்ல சந்தர்ப்பம் – பான் கீ மூன் Posted: 19 Sep 2013 07:52 PM PDT எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி இடம்பெறும் வட மாகாண சபைத் தேர்தல் இலங்கை மக்களுக்கு முக்கியமான ஒன்று என ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்து பான் கீ மூன் இன்று (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ´வட மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி இடம்பெறவுள்ளது. குறிப்பாக வட மாகாணத்தில் 1987ம் […] |
| அரச வானொலி தமிழ் கூட்டமைப்புக்கு எதிரான பிரசாரங்களை இன்றும் ஒலிபரப்புகிறது Posted: 19 Sep 2013 07:22 PM PDT யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்திலிருந்து ஒலிபரப்பாகும் அரச வானொலியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பிரசாரங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நள்ளிரவுடன் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்திருந்தது. ஆனாலும் யாழ் அரச வானொலி பிரசாரத்தை தொடர்கிறது. நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய உற்சவத்தின் நேரடி வர்ணனை குறித்த வானொலியில் ஒலிபரப்பட்டது. அந்த வர்ணணையின் இடையிலும் தமிழ் தேசியக் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

