மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கர்நாடகத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி
- டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 61.80 ஆக உயர்வு
- கூகுள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்
- கேரளாவில் சோனியாகாந்தி 2 நாள் சுற்றுப்பயணம்
- கோவாவில் ரூ.3.60 கோடி தங்ககட்டிகள் பறிமுதல்: இலங்கையை சேர்ந்த இருவர் கைது
- இந்திய நிலக்கரி நிறுவன சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கப்பட்டது எப்படி?: மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
- கைது செய்து பாருங்கள், பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்: அகிலேஷூக்கு உமாபாரதி எச்சரிக்கை
- கேரளாவில் மீண்டும் கனமழை: அத்தப்பூ கோலம் போட முடியாமல் மக்கள் அவதி
- பிரதமர் போட்டியில் அத்வானி இல்லை: வெங்கையா நாயுடு
- கொழிஞ்சாம்பாறையில் குளத்தில் மூழ்கிய தோழியை காப்பாற்ற சென்ற மாணவிகள் பலி
- உத்தரபிரதேச கலவரம்: 3 எம்.எல்.ஏ.–எம்.பி. கைது ஆகிறார்கள்
- ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர்
- மந்திரி வீட்டில் நடந்த விருந்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. துப்பாக்கியால் சுட்டார்: 2 பேர் காயம்
- ஐக்கிய ஆந்திராவுக்காக போராடும் அரசு ஊழியர்களுக்கு வட்டி இல்லாத கடன்: எம்.எல்.ஏ அறிவிப்பு
| கர்நாடகத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி Posted: 18 Sep 2013 10:44 PM PDT விநாயகர் சதுர்த்தியையொட்டி நாட்டின் பல்வேறு நகரங்களில் விநாயகர் சிலைகள் வைத்து கடந்த 10 நாட்களாக வழிபட்டு வந்தனர். மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர். டெல்லியில் விநாயகர் சிலைகள் யமுனை ஆற்றில் கரைத்தனர். அப்போது 5 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். 10 பேரை காணவில்லை. அவர்கள் நீரில் மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. |
| டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 61.80 ஆக உயர்வு Posted: 18 Sep 2013 10:27 PM PDT கடந்த மாத இறுதியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 69 வரை சென்று வீழ்ச்சி அடைந்தது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்ற பின்பு செய்த சீர்திருத்தங்கள் காரணமாக மீண்டும் பொருளாதார வளர்ச்சி அடைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ரூபாய் மதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.63.39 ஆக இருந்தது. இன்று ரூபாய் மதிப்பு மேலும் 158 காசுகள் அதிகரித்து 61.80 ஆக உயர்ந்துள்ளது. |
| கூகுள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் Posted: 18 Sep 2013 08:33 PM PDT இந்தியாவின் டெல்லி தொழில்நுட்பக் கல்லூரியின் இந்த ஆண்டு வேலை வாய்ப்பு முகாம் திறமையான மாணவர்களுக்கு பிரகாசமான வாய்ப்புகளை அளித்துள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் பல்கலைக்கழகத்தின் புதிய கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன. முதல் மாதத்திலேயே கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில் 265 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுள், ஹிமான்ஷு ஜிண்டால் என்ற நான்காம் வருட மாணவருக்கு ஆண்டிற்கு ரூ. 93 லட்சம் சம்பள அடிப்படையில் அமெரிக்க நிறுவனமான கூகுள் வேலைவாய்ப்பினை அளித்துள்ளது. இந்தப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றில் முதன் முறையாக அதிக சம்பளத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன் என்ற பெருமையை ஜிண்டால் பெறுகின்றார்.இதுகுறித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்திய ஜிண்டால் இதற்குக் காரணமாக இருந்த தனது பெற்றோர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மற்றொரு அமெரிக்க மென்பொருள் நிறுவனமான ஈபிஐசி, நிலேஷ் அகர்வால் என்ற நான்காம் வருட மாணவனுக்கு ஆண்டுக்கு 70 லட்சம் என்ற சம்பளத்துடன் வேலைக்கான உத்தரவை அளித்துள்ளது |
| கேரளாவில் சோனியாகாந்தி 2 நாள் சுற்றுப்பயணம் Posted: 18 Sep 2013 08:23 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 2 நாள் பயணமாக கேரள மாநிலத்திற்கு 29-ந்தேதி செல்கிறார். நெய்யூரில் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி மேம்பாட்டு கல்வி நிறுவனத்தை அவர் திறந்து வைக்கிறார். மேலும், நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தையும் சோனியாகாந்தி தொடங்கி வைக்கிறார். பின்னர், கட்சியின் மாநில நிர்வாகிகளை சோனியாகாந்தி சந்தித்து பேசுகிறார். இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், |
| கோவாவில் ரூ.3.60 கோடி தங்ககட்டிகள் பறிமுதல்: இலங்கையை சேர்ந்த இருவர் கைது Posted: 18 Sep 2013 03:43 PM PDT இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று துபாயிலிருந்து மும்பை வழியாக நேற்று கோவா பனாஜி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அப்போது விமானப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அந்தே விமானத்தில் உள்ளே சோதனை மேற்கொண்டனர். |
| Posted: 18 Sep 2013 01:34 PM PDT பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரித்துறை மந்திரி பொறுப்பையும் வகித்த காலத்தில், நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.86 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது |
| கைது செய்து பாருங்கள், பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்: அகிலேஷூக்கு உமாபாரதி எச்சரிக்கை Posted: 18 Sep 2013 11:23 AM PDT உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் இரு சமூகத்தினரிடையே நடந்த வன்முறையில் கிட்டத்தட்ட 50 பேர் வரை கொல்லப்பட்டனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தனர். இந்த வன்முறையை தூண்டியதாக பாரதிய ஜனதா, |
| கேரளாவில் மீண்டும் கனமழை: அத்தப்பூ கோலம் போட முடியாமல் மக்கள் அவதி Posted: 18 Sep 2013 05:17 AM PDT கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு நல்ல பலனை கொடுத்துள்ளது. கேரளாவில் உள்ள பெரும் பாலான அணைகள் நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் சற்று ஓய்ந்திருந்த பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கேரளாவில் மீண்டும் மழை பெய்து வருகிறது. |
| பிரதமர் போட்டியில் அத்வானி இல்லை: வெங்கையா நாயுடு Posted: 18 Sep 2013 03:23 AM PDT பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை நியமித்ததால், மூத்த தலைவர் அத்வானி அதிருப்தி அடைந்தார். கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்த அத்வானி, ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. |
| கொழிஞ்சாம்பாறையில் குளத்தில் மூழ்கிய தோழியை காப்பாற்ற சென்ற மாணவிகள் பலி Posted: 18 Sep 2013 01:59 AM PDT கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரபோட்டையை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் கோகிலா (வயது 16). இவர் பொள்ளாச்சி அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இவரும் உடுமலை தோட்டம்பட்டி பழனிசாமி என்பவரின் மகள் பிரேமேஸ்வரி (12) என்பவரும் தோழிகள். பிரேமேஸ்வரி உடுமலையில் உள்ள அரசு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தார். தோழிகள் 2 பேரும் ஓணம் பண்டிகையை யொட்டி |
| உத்தரபிரதேச கலவரம்: 3 எம்.எல்.ஏ.–எம்.பி. கைது ஆகிறார்கள் Posted: 18 Sep 2013 01:08 AM PDT உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த வாரம் இரு பிரிவினருக்கு இடையே பயங்கர கலவரம் மூண்டது. இதில் 48 பேர் பலியானார்கள். ஏராளமான மக்கள் கலவரத்துக்கு பயந்து கிராமங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். 40 ஆயிரம் மக்கள் இவ்வாறு அகதிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரம் பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவியதால் பாதுகாப்புக்கு |
| ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Posted: 18 Sep 2013 12:50 AM PDT கர்நாடகா மாநிலத்தின் தீர்த்தஹள்ளி என்ற ஊரைச் சேர்ந்த கிம்மனே ரத்னாகர், அம்மாநிலத்தின் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சராக இருக்கின்றார். இவர் நேற்று காலை தனது ஊரிலிருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தார். அமைச்சருடன் அவரது பாதுகாப்பு ஊழியர்களும் பயணித்துக் கொண்டிருந்தனர்.காலை 7 மணி அளவில் தீர்த்தஹள்ளியிலிருந்து 20 கி.மீ தொலைவில் |
| மந்திரி வீட்டில் நடந்த விருந்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. துப்பாக்கியால் சுட்டார்: 2 பேர் காயம் Posted: 18 Sep 2013 12:38 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வேளாண்துறை மந்திரியாக சீனியர் தலைவரான ஹரக் சிங்ரவாத் உள்ளார். மந்திரி ஹரக்சிங் வீட்டில் நேற்று இரவு விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் ஹரித்துவார் மாவட்டம் கான்பூர் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரணவ்சிங் பங்கேற்றார். திடீரென பிரணவ் துப்பாக்கியால் சுட்டார். அவர் 4 முறை சுட்டார். |
| ஐக்கிய ஆந்திராவுக்காக போராடும் அரசு ஊழியர்களுக்கு வட்டி இல்லாத கடன்: எம்.எல்.ஏ அறிவிப்பு Posted: 18 Sep 2013 12:08 AM PDT தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து கழக ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் கடந்த 48 நாட்களாக ஸ்டிரைக் நடத்தி வருகிறார்கள். இதனால் அரசு ஊழியர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை. இனி அடுத்த மாதமும் அவர்களுக்கு சம்பளம் கிடைக்காது. எனவே அரசு ஊழியர்கள் பலரின் குடும்பங்கள் செலவுக்கு திண்டாடும் சூழ்நிலை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |