Tamil Star |
- புதிய லோகோவை அறிமுகப்படுத்தியது Bing
- 200-வது டெஸ்ட் போட்டியுடன் தெண்டுல்கர் ஓய்வு பெற நிர்ப்பந்தமா?: இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு
- கேரளாவில் சோனியாகாந்தி 2 நாள் சுற்றுப்பயணம்
- சிரியாவில் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது கிளர்ச்சியாளர்களே: ரஷ்யா
- அமெரிக்க படை தளங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு
- இசை கேட்ட காதலனுக்கு கத்திக்குத்து: காதலி கைது
- இராணுவ தளபாட கொள்வனவு மோசடி நாடுகள் வரிசையில் இலங்கைக்கு 14வது இடம்
- தமிழக மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையால் கைது
- யாழில் சுயேட்சை குழு வேட்பாளர்கள் மீது தாக்குதல்
- 25 வருடங்களுக்கு முன் சிறுமியை கொலை செய்த நபர் கைது
| புதிய லோகோவை அறிமுகப்படுத்தியது Bing Posted: 18 Sep 2013 11:24 PM PDT யாஹூ நிறுவனத்தை தொடர்ந்து, பிங்கும் தனது லோகோவை மாற்றியுள்ளது. சமீபத்தில் யாஹூ நிறுவனம் தனது புதிய லோகோவை அறிமுகம் செய்தது. இதுகுறித்து பல்வேறு கருத்துகளும் எழுந்தன. இந்நிலையில் மைக்ரோசாப்டின் பிங் சர்ச் இஞ்சின் தனது புதிய லோகோவை அறிமுகம் செய்துள்ளது. லோகோ மட்டுமல்லாமல் பிங் இணையதளத்தின் வலை பக்கங்களும் புதிய தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| 200-வது டெஸ்ட் போட்டியுடன் தெண்டுல்கர் ஓய்வு பெற நிர்ப்பந்தமா?: இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு Posted: 18 Sep 2013 11:12 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் இதயம் போன்றவர் சச்சின் தெண்டுல்கர். சாதனை படைக்கவே பிறந்தவரான தெண்டுல்கரின் சாதனை பட்டியல் அனுமாரின் வாலையும் மிஞ்சும் எனலாம். தனது சாதனை சரித்திரத்தில் தெண்டுல்கர் மேலும் ஒரு மகுடத்தை சேர்க்க இருக்கிறார். 40 வயதான தெண்டுல்கர், 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், டெஸ்ட் போட்டியில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஒவ்வொரு தொடரின் போது தனது உடல் தகுதியை ஆராய்ந்து அதற்கு தகுந்தபடி ஆடுவது பற்றி […] |
| கேரளாவில் சோனியாகாந்தி 2 நாள் சுற்றுப்பயணம் Posted: 18 Sep 2013 10:25 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 2 நாள் பயணமாக கேரள மாநிலத்திற்கு 29-ந்தேதி செல்கிறார். நெய்யூரில் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி மேம்பாட்டு கல்வி நிறுவனத்தை அவர் திறந்து வைக்கிறார். மேலும், நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தையும் சோனியாகாந்தி தொடங்கி வைக்கிறார். பின்னர், கட்சியின் மாநில நிர்வாகிகளை சோனியாகாந்தி சந்தித்து பேசுகிறார். இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், கேரளாவில் கட்சியை பலப்படுத்துவது குறித்து சோனியாகாந்தி ஆலோசனை நடத்துகிறார். இதனால் சோனியாகாந்தியின் வருகை […] |
| சிரியாவில் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது கிளர்ச்சியாளர்களே: ரஷ்யா Posted: 18 Sep 2013 10:23 PM PDT சிரிய கிளர்ச்சியாளர்கள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியமைக்கான புதிய ஆதாரங்களை அந்த நாடு தம்மிடம் சமர்ப்பித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த ஐ.நாவின் அறிக்கை அரசியல் மயப்படுத்தப்பட்டதும, பக்கச்சார்பானதும் ஒரு தலைப்பட்சமானது எனவும் ரஷ்ய பிரதி வெளிவிகார அமைச்சர் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி கூட்டா நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தே ஐ.நா கண்காணிப்பாளர்கள் விசாரணை செய்துள்ளதாக ரஷ்யா குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் நடத்தப்பட்ட இரசாயன ஆயுதத் தாக்குதல்கள் […] |
| அமெரிக்க படை தளங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு Posted: 18 Sep 2013 10:20 PM PDT
கடற்படை தளத்தில் பணியாற்றி பல்வேறு காரணங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட 34 வயதான ஆரோன் அலெக்ஸிஸ் எவ்வாறு கடற்படை தளத்துக்குள் நுழைய அனுமதி கிடைத்தது என்று விசாரணை நடத்தவும், அமெரிக்க படை தளங்களின் பாதுகாப்பு பரிசீலித்து உறுதி செய்யுமாறும் பென்டகன் உத்தரவிட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இசை கேட்ட காதலனுக்கு கத்திக்குத்து: காதலி கைது Posted: 18 Sep 2013 10:15 PM PDT
அவரது ஆண் நண்பர் தொலைக்காட்சியில் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, "டிவி'யை அணைத்துவிடும்படி, பாடர் கூறினார். ஆனால், இதை பொருட்படுத்தாமல், அவரது நண்பர் இசையை ரசித்துக் கொண்டிருந்தார். இதில், ஆத்திரமடைந்த பாடர், கத்தியால் அவரது ஆண் நண்பரை, பல இடங்களில், சரமாரியாக குத்தினார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் நடந்தபோது, பாடர், அளவுக்கு அதிகமாக குடித்திருந்தார். இந்த பெண்ணை கைது செய்த பொலிஸார், குடும்ப சண்டை தொடர்பான வழக்கு பதிவு செய்துள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இராணுவ தளபாட கொள்வனவு மோசடி நாடுகள் வரிசையில் இலங்கைக்கு 14வது இடம் Posted: 18 Sep 2013 09:58 PM PDT
ட்ரான்ஸ்பேரன்ஸி சர்வதேச நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 82 நாடுகள் குறித்து இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதிலேயே இலங்கைக்கு 14வது இடம் கிடைத்துள்ளது. அல்ஜீரியா, அங்கோலா, கெமரூன், ஐவரிகோஸ்ட், கொங்கோ, எகிப்து, ஈரான், எரித்திரியா, லிபியா, கட்டார், சவுதிஅரேபியா, சிரியா மற்றும் யேமன் ஆகிய நாடுகள் இந்த ஆய்வில் முன்னிலை வகிக்கின்றன. இராணுவ தளபாட கொள்வனவு ஊழல் குறைந்த நாடுகள் வரிவையில் அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகள் உள்ளன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழக மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையால் கைது Posted: 18 Sep 2013 09:53 PM PDT இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 5 படகுகளுடன் நேற்று (18) இரவு காங்கேசன்துறை வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இது குறித்து இந்திய இணையமொன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி, புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த 19 தமிழக மீனவர்கள் தமிழக எல்லை பகுயில் மீன்களை […] |
| யாழில் சுயேட்சை குழு வேட்பாளர்கள் மீது தாக்குதல் Posted: 18 Sep 2013 09:50 PM PDT யாழ். பண்ணை பாலத்துக்கு அருகில் சுயேட்சை குழு வேட்பாளர்கள் இருவர் இனந்தெரியாதவர்களால் தாக்கபட்டு அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் எரியூட்டப்பட்டுள்ளது. பண்ணைப்பாலத்துக்கு அருகில் இன்று (19) அதிகாலை 12.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த சுயேட்சை குழு 7 இன் வேட்பாளர்களான மண்கும்பானை சேர்ந்த சு.பிரகலாதன் (வயது 29) ச. தேவரஞ்சித் (வயது 29) ஆகிய இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக காயமடைந்த பிரகலாதன் தெரிவிக்கையில், நாம் இருவரும் மண்கும்பான் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| 25 வருடங்களுக்கு முன் சிறுமியை கொலை செய்த நபர் கைது Posted: 18 Sep 2013 09:31 PM PDT ஜெர்மனியில் 25 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை கொலை செய்த குற்றவாளியை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜெர்மனியில், ஒஸ்னாபிரியூக் நகரை சேர்ந்த, ஒன்பது வயது சிறுமி பள்ளியிலிருந்து வீடு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் செய்தனர். 25 ஆண்டுகளுக்கு முன், நடந்த இந்த சம்பவம் குறித்து, பொலிஸார் நடத்திய விசாரணையில் எவ்வித ஆதாரமும் சிக்காததால், வழக்கை கை விட்டனர். அண்மையில், அந்நாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், குற்ற சம்பவம் தொடர்பான தொடரை பார்த்த பொலிஸ் அதிகாரி ஒருவர், […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


