Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சிரஞ்சீவி பேச்சால் ராம்சரண் படத்தை திரையிட எதிர்ப்பு

Posted: 04 Sep 2013 10:38 PM PDT

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய மந்திரி சிரஞ்சீவி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தெலுங்கானா எதிர்ப்பு போராட்டக்காரர்கள் கேட்டுக் கொண்டும் அவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அதோடு ஐதராபாத் நகரை யூனியன் பிரதேசமாக மாற்றினால் ஆந்திரா மக்கள் போராட்டம் முடிவுக்கு வந்து விடும் என்று மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் நரேந்திர மோடி 10 நகரங்களில் பிரசாரம்

Posted: 04 Sep 2013 10:12 PM PDT

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி நாடெங்கும் முக்கிய நகரங்களில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். குறிப்பாக உத்தரபிர தேசத்தில் அதிக கவனம் செலுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது: 5 மணி நேரத்தில் தரிசனம்

Posted: 04 Sep 2013 10:07 PM PDT

தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. பஸ்கள் ஓடாததால் இந்த நிலை நீடிக்கிறது.

தேர்தலில் பணபலத்தை தடுக்க 10 அம்ச திட்டம்: தேர்தல் ஆணையம் பரிந்துரை

Posted: 04 Sep 2013 10:04 PM PDT

தேர்தலில் பண பலத்தை தடுப்பதில் மத்திய தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. தேர்தலில் பண பலத்தை தடுப்பதற்காக 10 அம்ச திட்டத்தை மத்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

நரேந்திரமோடி ராஜினாமா செய்யக்கோரி குஜராத்தில் நாளை முழு அடைப்பு: காங்கிரஸ் போராட்டம்

Posted: 04 Sep 2013 10:00 PM PDT

குஜராத் மாநிலத்தில் நடந்த சொராபுதீன் ஷேக் போலி என் கவுண்டர் வழக்கில் 2007–ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான டி.ஜி. வன்சாரா கைது செய்யப்பட்டு ஆமதாபாத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது மும்பையைச் சேர்ந்த இஸ்ரத் ஜகான் மற்றும் 3 பேர் ஆமதாபாத்தில் என் கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கும் உள்ளது. இந்த என் கவுண்டரில் கொல்லப்பட்ட அனைவரும் குஜராத் முதல்–மந்திரி நரேந்திர

ஆஸ்பத்திரியில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி டிஸ்சார்ஜ்: மீண்டும் சிறையில் அடைப்பு

Posted: 04 Sep 2013 09:48 PM PDT

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜதராபாத் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் சிறையில் காலவறையற்ற உண்ணா விரதத்தை கடந்த மாதம் 25–ந் தேதி தொடங்கினார். 5 நாள் உண்ணாவிரத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு அவர் 29–ந் தேதி உஸ்மானியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பாதுகாப்பு கருதி நிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். ஆஸ்பத்திரியிலும் அவர் உண்ணாவிரத்தை தொடர்ந்தார். சிகிச்சை பெற மறுத்தார். இதையடுத்து சிறைத்துறை அதிகாரி அனுமதியுடன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு டாக்டர்கள் பலவந்தமாக சிகிச்சையை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களாக அளித்த சிகிச்சையால் அவரது உடல்நிலை தேறியது. இதையடுத்து அவர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். அதற்கான சம்மதத்தை சிறைத்துறைக்கு டாக்டர்கள் அனுப்பினர். இதையடுத்து நேற்று இரவு 9.15 மணிக்கு ஜெகன்மோகன் ரெட்டி குண்டு துளைக்காத காரில் சஞ்சல்குடா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு

சோலார் பேனல் மோசடி: உம்மன்சாண்டிக்கு கறுப்புக்கொடி - கம்யூனிஸ்டுகள் மீது தடியடி

Posted: 04 Sep 2013 09:31 PM PDT

கேரளாவில் சோலார் பேனல் மோசடி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த மோசடியில் கேரள மந்திரிகள், அரசு உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சியான கம்யூனிஸ்டு குற்றம் சாட்டியது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் உம்மன்சாண்டி பதவி விலக வேண்டுமென்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் சோலார் பேனல் மோசடி விவகாரத்தை விசாரிக்க நீதி விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று உம்மன் சாண்டி அறிவித்தார். ஆனால் விசாரணை கமிஷன் நீதிபதி நியமனம் மற்றும் சில காரணங்களால் விசாரணை கமிஷன் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து உடனே விசாரணை கமிஷன் அமைக்கக்கோரியும் உம்மன்சாண்டி பதவி விலகக்கோரியும் கம்யூனிஸ்டுகள் தொடர் கறுப்புக்கொடி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் போக்குவரத்து வசதி இல்லாத பள்ளிகளால் அவதிப்படும் ஆசிரியர்கள்

Posted: 04 Sep 2013 08:27 PM PDT

குஜராத் மாநிலத்தின் கேதா மாவட்டத்தில் உள்ள மகுதா தாலுக்காவில் அமைந்துள்ளது உந்த்ரா என்ற கிராமம். இங்கு 5 ஆரம்பப் பள்ளிகளும், ஒரு நடுநிலைப் பள்ளியும் இயங்கி வருகின்றது. அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களில் இருந்து 800-900 வரையிலான பிள்ளைகள் கல்வி கற்க இங்கு வருகின்றார்கள். இந்தப் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 15 ஆசிரியர்கள் தினமும் நகர்ப்புறத்திலிருந்து இங்கு வந்து போகின்றனர். இந்த கிராமத்திற்கு சாலை வழியே வருவதென்றால் 25 கி.மீ சுற்றிக் கொண்டுதான் வரவேண்டும்.

103 வயது மனிதருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை: ஆந்திராவில் சாதனை

Posted: 04 Sep 2013 05:22 PM PDT

1910ம் ஆண்டில் சஹீராபாத்தில் பிறந்த மணிக்யம் என்பவர் கடேஸ்கர் என்ற இடத்தில் தனது மகனுடன் வசித்து வருகின்றார். 103 வயதான இவருக்கு 9 பிள்ளைகளும், 57 பேரப்பிள்ளைகளும், 20 கொள்ளுப் பேரக் குழந்தைகளும் உண்டு

மத்திய பிரதேசத்தில் கற்பழிப்பு வழக்கில் சாமியார் கைது

Posted: 04 Sep 2013 05:00 PM PDT

மத்திய பிரதேச மாநிலம் சிகூர் மாவட்டத்தின் நீல்கண்ட் கிராமத்தில் ஆசிரமம் நடத்தி வருபவர் மகேந்திரா கிரி என்கிற துன்னு பாபா (வயது 65). இவர் தனது ஆசிரமத்தில் 24 வயது இளம்பெண் ஒருவரை கடந்த 4 மாதங்களாக அடைத்து வைத்து கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதற்கு, அந்த ஆசிரமத்தில் தங்கியுள்ள அந்த பெண்ணின்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தப்படுமா? - சி.பி.ஐ. இயக்குனர் பதில்

Posted: 04 Sep 2013 04:44 PM PDT

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழலுக்கு பொறுப்பு ஏற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஏற்கனவே வற்புறுத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்த ஊழல் பற்றி விசாரித்து வரும் விசாரணை குழு பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் விசாரணை

நிலம் கையகப்படுத்துதல் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

Posted: 04 Sep 2013 02:55 PM PDT

வரலாற்று புகழ்மிக்க நிலம் கையகப்படுத்துதல் மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. இந்த மசோதாவானது விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் நிலங்களை கையகப்படுத்தும் போது விவசாயிகளுக்கு உரிய, நியாயமான

கோப்புகள் காணாமல் போகவில்லை திருடப்பட்டுள்ளன: பாரதீய ஜனதா குற்றச்சாட்டை காங்கிரஸ் நிராகரித்தது

Posted: 04 Sep 2013 01:02 PM PDT

பாராளுமன்றத்தில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்பு காணாமல் போன விவகாரம் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் நேற்று பங்கேற்று பேசினார். அப்போது அவர், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள் காணாமல் போய்விட்டன என்பதை ஏற்கவில்லை. கோப்புகள் காணாமல் போகவில்லை

ஓய்வூதிய மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: புதிய திட்டத்தில் இணைய 28 மாநிலங்கள் ஒப்புதல்

Posted: 04 Sep 2013 06:37 AM PDT

ஓய்வூதிய பயன்கள் மேலும் பலருக்கு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதாவை (பி.எப்.ஆர்.டி.ஏ.) மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அப்போது முதல் இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்தது.

பாலியல் பலாத்கார வழக்கில் ஆசாராம் பாபுவின் ஜாமின் மனு தள்ளுபடி

Posted: 04 Sep 2013 05:26 AM PDT

குஜராத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் ஆசாராம் பாபு (வயது 72), ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் வைத்து உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரை அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி இரவு

ஷீலா தீட்சித் மீது புகார் பதிவு செய்ய டெல்லி போலீசாருக்கு ஐகோர்ட் தடை

Posted: 04 Sep 2013 04:38 AM PDT

டெல்லியில் 2008ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது முதல்வர் ஷீலா தீட்சித் விளம்பரம் செய்வதற்காக அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: மத்திய அரசின் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Posted: 04 Sep 2013 04:21 AM PDT

அரசியலில் ஈடுபடும் குற்றவாளிகளை கட்டுப்படுத்தும் வகையில் சுப்ரீம் கோர்ட் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. அதன்படி, குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனை பெறும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும். அவர்கள் தங்கள் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தாலும் கூட அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் நீக்கம்: கர்நாடக அரசு விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted: 04 Sep 2013 03:40 AM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பவானி சிங் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார்.

படத்தயாரிப்பு பணியில் தோழியின் தலையீடு: ஹர்பஜன் சிங்-தொழில் கூட்டாளி இடையே விரிசல்?

Posted: 04 Sep 2013 02:54 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், தனது நண்பரான சந்தன் மதனுடன் இணைந்து சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விரைவில் இதற்கான அறிவிப்பை

தொழில்நுட்பப் பிழை ஒன்றைக் கண்டுபிடித்ததற்காக பேஸ்புக்கின் அன்பளிப்பினைப் பெறும் இந்தியப் பொறியியல் பட்டதாரி

Posted: 04 Sep 2013 02:13 AM PDT

பேஸ்புக் என்பது பிரபல சமூக இணையதளம் ஆகும். இதன் மூலம் பல தகவல் பரிமாற்றங்கள் உலகெங்கிலும் நொடிப்பொழுதில் கொண்டு செல்ல முடியும். இதில் தனி நபருக்கான தகவல் பக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளதால் தனி ஒரு நபர் தன்னுடைய தகவல் தொடர்புகள் அனைத்தையும் இதன் மூலம் பராமரித்துக் கொள்ள முடியும். இத்தகைய வலைத்தளங்களிலும் தொழில்நுட்பக் குறைகள் ஏற்படுவது உண்டு.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™