Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தேர்தல் கண்காணிப்பாளர்களை வடக்கில் நிறுத்துமாறு பிரித்தானியாவிடம், பிரித்தானிய தமிழ் கன்சர்வேட்டிவ் அமைப்பு கோரிக்கை

Posted: 04 Sep 2013 09:31 PM PDT

bitish_tamil_conservation

bitish_tamil_conservationவடக்கில்  தேர்தல் கண்காணிப்பாளர்களை நிறுத்துமாறு பிரித்தானியாவிடம், பிரித்தானிய தமிழ் கன்சர்வேட்டிவ் என்ற அமைப்பு கோரியுள்ளளது. எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலை கண்காணிப்பதற்கு, பிரித்தானிய தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டுமென கோரியுள்ளது.
சர்வதேச அழுத்தம் காரணமாகவே இலங்கை அரசாங்கம் வடக்கில் தேர்தல் நடத்துவதாகத் தெரிவித்துள்ளது. வடக்கில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் சுயாட்சி அதிகார விருப்பத்தை வெளிப்படுத்த இந்தத் தேர்தல் ஒர் சிறந்த வாய்ப்பாக அமையும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் மக்களின் சுயாட்சி அதிகாரங்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இதேவேளை, தேர்தல்களின் போது தெற்காசிய மற்றும் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை – கெஹலிய ரம்புக்வெல

Posted: 04 Sep 2013 09:10 PM PDT

keheliya

keheliyaஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்தவர்கள், சிறிலங்கா காவல்துறையினராலும், இராணுவத்தினராலும் அச்சுறுத்தப்பட்டதற்கு, அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

தன்னைச் சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று நவநீதம்பிள்ளை கடந்த சனிக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, நியுயோர்க்கைத் தளமாக கொண்ட மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் நேற்று அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இந்தநிலையில், நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள சிறிலங்கா அரசின் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல,

"ஆதாரங்களின்றி பொதுமக்கள் சுமத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாக நவநீதம்பிள்ளை கருத்து தெரிவிக்கக் கூடாது.

நவநீதம்பிள்ளையை சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டிருந்தால், அதுகுறித்து காவல்நிலையில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அதன் மீது விசாரணைகளை நடத்த முடியும். ஆனால் காவல்துறையிடம் எந்த முறைப்பாடும் செய்யப்படவில்லை.

அதிகாரிகளிடம் இதுகுறித்து நவநீதம்பிள்ளை விசாரித்ததாக எனக்குத் தெரியவில்லை.

சிலர் தன்னிடம் கூறியதாக மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

அவர்கள் எப்போதும் பக்கசார்புடையவர்களாகவே செயற்படுகின்றனர்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சகல மனித உரிமை செயற்பாட்டாளர்களின் பணிகளும் மதிக்கப்பட வேண்டும் : நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் – ஐ.நா

Posted: 04 Sep 2013 08:58 PM PDT

un-logo

un-logoஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு கருத்து வெளியிட்ட காரணத்திற்காக எவரும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சகல மனித உரிமை செயற்பாட்டாளர்களின் பணிகளும் மதிக்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். நவனீதம்பிள்ளையினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாகிஸ்தான் வீழத்த்தி வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கி கொண்டுள்ள தமிழீழ அணி

Posted: 04 Sep 2013 09:02 AM PDT

tamil

tamilபிரான்சில் முதன்முறையாக இடம்பெற்றிருந்த தமிழீழ வெற்றிக்கிண்ணத்திற்கான துடுப்பெடுத்தாட்ட போட்டியில், பாகிஸ்தான் வீழத்த்தி வெற்றிக்கிண்ணத்தினை தமிழீழ அணி தனதாக்கி கொண்டுள்ளது. தெரிவு அணிகளாக இடம்பெற்றிருந்த இப்போட்டியில் 11 அணிகள் இரண்டு நாள் ஆகளத்தில் துடுப்பாடியிருந்தன.

தமிழர் விளையாட்டு; செயலகம் - பிரான்சு நடத்தியிருந்த இந்நிகழ்வில் , நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் நாகலிங்கம் பாலசந்திரன் , மகிந்தன் சிவசுப்பிரமணியம் மற்றும் மைக்கல் கொலின்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை பிரென்சு தேசிய துடுப்பெடுத்தாட்ட தேசிய அணிக்கு ஆறு ஆண்டுகள் அணித்தலைவராக பங்காற்றியிருந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த சாசீர் அவர்களும் இந்நிகழ்வில் சிறப்பாக பங்கெடுத்திருந்தமை ஆடுகளத்திற்கு வலுவூட்டியிருந்தென, தமிழர் விளையாட்டு செயலகம் - பிரான்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரான்ஸ் தமிழ்சமூகபரப்பின் விளையாட்டுத்துறையில் ,அனைவரையும் ஒருங்கிணைத்த வகையிலான, துறைசார் வேலைத்திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ள இருப்பதாக தமிழர் விளையாட்டு; செயலகம் - பிரான்சின் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிரியாவில் இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பில் இலங்கை கவலை

Posted: 04 Sep 2013 08:45 AM PDT

srilanka flg

srilanka flgசிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு அருகில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதால், பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள ஊடக செய்திகள் தொடர்பில் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஒரு பாரபட்சமற்ற உரிய விசாரணைகளை நடத்த வேண்டியது இன்றியமையாதாக தேவை என இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இராசாயன ஆயுதங்கள் உற்பத்தி செய்வவதையும் அதனை பயன்படுத்துவதையும் கையிருப்பில் வைத்திருப்பதையும் இலங்கை எதிர்க்கின்றது எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எது எப்படியிருந்த போதிலும், இலங்கை இறுதிக்கட்ட போரின் போது கொத்து குண்டுகள் உட்பட இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக சர்வதேச அமைப்புகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளால் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக நிரூபித்தால் தாக்குதலுக்கு ஒத்துழைக்க தயார்: புதின் திடீர் அறிவிப்பு

Posted: 04 Sep 2013 08:06 AM PDT

dd858e9b-9768-4d4d-8d31-636c419ebc34_S_secvpf

dd858e9b-9768-4d4d-8d31-636c419ebc34_S_secvpfரசாயன ஆயுதங்களை ஏவி அதிபர் பஷர் அல் ஆசாத் பொதுமக்களை கொன்று குவித்ததாக குற்றம் சாட்டும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரியா மீதான ராணுவ தாக்குதலுக்கு தயாராகி வருகிறார். இந்த தாக்குதல் தேவையற்றது என கூறிவரும் ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் முஸ்லிம் கூட்டமைப்பு நாடுகள் சிரியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ரசாயன தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா வைத்திருக்கும் வீடியோ ஆதாரம் அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளால் புனையப்பட்டவை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, நேற்று பேட்டியளித்த புதின், 'தற்போதைய சர்வதேச சட்டங்களின்படி, தனி அந்தஸ்து பெற்ற ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை மட்டுமே உத்தரவிட முடியும். அதை மீறிய வகையில் எந்த நாட்டின் மீதும் இன்னொரு நாடு தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்தவோ, அனுமதிக்கவோ முடியாது' என்று கூறியுள்ளார். சிரியா அரசு ரசாயன தாக்குதலை நடத்தியுள்ளது என நிரூபிக்கப்பட்டால், சிரியா மீதான தாக்குதலுக்கு ஒப்புக்கொள்வீர்களா? என நிருபர்கள் கேட்டபோது, 'நான் அதை எதிர்க்க மாட்டேன்' என்று புதின் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளுக்கு இடையில் இருப்பது அகதிகள் தொடர்பிலான பிரச்சினையல்ல

Posted: 04 Sep 2013 07:55 AM PDT

aus

ausஇலங்கைக்கும் அவுஸ்திரேலியாக்கும் இடையில் இருப்பது அகதிகள் தொடர்பிலான பிரச்சினையல்ல என்று அவுஸ்திரேலியாவின் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அலெக்ஸ்சாண்டர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அகதிகள் தொடர்பான பிரச்சினையானது, திருட்டுப் பொருள் வியாபாரிகளை போல் செயற்படும் திட்டமிட்ட சிலரால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினை என லிபரல் கட்சி நம்புகிறது. அடுத்த தேர்தலில் தாம் தெரிவு செய்யப்பட்டால், தமது கூட்டணி திட்டமிட்டுள்ள சட்டத்திற்கு விரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் வருபவர்களை தடுக்க யோசனைகள் முன்வைக்கப்படும். இதனடிப்படையில் அவுஸ்திரேலிய லிபரல் கட்சி இந்தியா, இலங்கை மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்க 67 மில்லியன் டொலர்களை பயன்படுத்த எண்ணியுள்ளது என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சர்வதேச சமூகம் இந்தத் தேர்தலின் முடிவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது

Posted: 04 Sep 2013 07:36 AM PDT

TNA-logo

TNA-logoதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் முழங்காவில் பகுதியில் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டப் பொருளாளர் தனராஜின் தலைமையில் நேற்று மாலை 4.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 8.00 மணிக்கு நிறைவு பெற்றது.

இப்பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அவர்கள் தனது உரையில் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.

எங்களுடைய மக்களுடைய தீர்ப்பை சர்வதேசத்திற்கு வெளிக்கொண்டு வருகின்ற வெளிக்காட்டுகின்ற ஒன்றாக இத்தேர்தல் முடிவினை நாம் காட்ட வேண்டும். இத்தேர்தல் வெறும் உள்ளூர்த் தேர்தலாகவோ வெறும் மாகாண சபைத் தேர்தலாகவோ இல்லாமல் சர்வதேசமே உற்று நோக்குகிற தேர்தலாக மாறியுள்ளது.

வேறு எந்த ஒரு இடத்திற்கும் ஒரு மாகாணசபைத் தேர்தலுக்கும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் வருவதில்லை. ஆனால் இங்கு நடைபெறப்போகும் மாகாணசபைத் தேர்தலுக்கு இரண்டு இடங்களைச் சேர்ந்த சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் வருகிறார்கள்.

இலங்கை அரசாங்கமும் அதற்கு இடங்கொடுக்க வேண்டிய நிலையில் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகி இணங்கியுள்ளது. அதற்குக் காரணம் இதுதான். இத்தேர்தல் சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் சர்வதேசத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வதேசத்தின் அழுத்ததின் மீது நடைபெறுகிற ஒரு தேர்தல் ஆகையால் சர்வதேச சமூகம் இந்தத் தேர்தலின் முடிவை, எப்படியான ஜனநாயகத் தீர்ப்பினை இம்மக்கள் கொடுக்கிறார்கள் எனப் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில் ஒருவாக்குக் கூட அரசாங்கத்திற்கு செல்லக்கூடாது என்ற இறுக்கமான ஒரு நிலைப்பாட்டில் நாங்கள் தங்கியிருக்கிறோம். இது அரசாங்கத்திற்காக, அரசாங்கம் கொடுக்கும் நன்மைக்காக, அறிந்தவர் தெரிந்தவர் உறவினர் என்பதற்காக அளிக்கப்படும் வாக்கு அல்ல.

அரசாங்கத்திற்கு அளிக்கிற ஒவ்வொரு வாக்கும் எங்கள் இனத்தைக் காட்டிக் கொடுக்கிற ஒரு துரோகச் செயலாக இருக்கும் என்பதை எம்மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் வாக்களிப்பு விகிதாசாரம் எவ்வளவுக்கு உயர்கிறதோ அந்த அளவுக்கு எங்களது ஆசனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். நீங்கள் வாக்களிப்பதோடு மற்றவர்களையும் வாக்களிப்பதற்குத் தூண்ட வேண்டும்.

65 ஆண்டுகளாக நாம் செய்த தியாகங்கள் வீண்போகக் கூடாது. எமக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நாம் இழந்து விடக் கூடாது. இத் தேர்தல் எமது அரசியல் போராட்ட வடிவங்களின் ஒரு திருப்புமுனை என்பதை மக்கள் உணர வேண்டும்.

போராட்டங்கள் காலத்துக்குக் காலம் வடிவங்கள் மாறுபடலாம். இது நியதி. நாம் இப்போது சர்வதேசத்தை இணைத்துக் நாம் தொடுத்திருக்கும் ஜனநாயகப் போரிலே நாம் வெல்வது உறுதி எனத் தெரிவித்தார்.

இப்பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களுடன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச தவிசாளர் நாவை குகராசா, உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன், கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள் வி.சுவிஸ்கரன், சு.தயாபரன், ப. குமாரசிங்கம், இ.பொன்னம்பல நாதன் யாழ்.வலிகாமம் பிரதேச சபை உறுப்பினர் த.நடனேந்திரன், கிளிநொச்சி மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.சுரேன் கட்சி செயற்பாட்டாளர் தி.சிவமாறன், குலேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக மனோ கணேசன் தேர்தல் பிரச்சாரம்

Posted: 04 Sep 2013 01:50 AM PDT

mano

manoதற்சமயம் நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் தங்கியிருந்து முன்னணியின் வேட்பாளர்களது தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வரும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக நாளையும், நாளை மறுதினமும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பிரச்சார நடவடிக்கைகளில் கலந்து கொள்வார்

என முன்னணியின் ஊடக செயலாளர் சின்னத்தம்பி பாஸ்கரா தெரிவித்துள்ளார். வட மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும் முகமாக, கூட்டமைப்பு தலைவர்களுடன் இணைந்து, மனோ கணேசன் பிரச்சார கூட்டங்களில் உரையாற்றவும், ஊடக மாநாட்டில் கலந்து கொள்ளவும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என பாஸ்கரா மேலும் தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வந்தாச்சு மிக மெலிதான பேப்பர் போன்ற Keyboard (வீடியோ இணைப்பு)

Posted: 04 Sep 2013 01:40 AM PDT

thinnest_keyboard_003

thinnest_keyboard_003இன்றைய உலகில் தினமும் புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி கொண்டே உள்ளது. இந்நிலையில் தற்போது புதியதொரு படைப்பு என்னவென்றால், Wireless Tocuh Keyboard தான். பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த Keyboard, 0.5 mm அளவே தடிமன் கொண்டது. இதனை டேப்லட், ஸ்மார்ட் போன் மற்றும் கைபேசிகளில் பயன்படுத்தலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™