மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஜிமெயில், யாகூவை பயன்படுத்த அரசு தடை: தகவல் திருட்டை தடுக்க நடவடிக்கை
- சிரியாவில் போர் அபாயம்: இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் கடும் சரிவு
- தெலுங்கானாவை பிரிக்க எதிர்ப்பு: ஆந்திராவில் 35–வது நாளாக போராட்டம் நீடிப்பு
- காங்., தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி ஏற்படுமா?: ராகுல் காந்தியுடன் கனிமொழி ஆலோசனை
- ஆந்திராவை பிரிப்பதற்கு சந்திரபாபு நாயுடுவே காரணம்: ஜெகன்மோகன்ரெட்டி சகோதரி தாக்கு
- 5 மாநில சட்டசபை தேர்தல்: ராகுல் அடுத்த வாரம் பிரசாரம் தொடங்குகிறார்
- ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் இன்று ரஷியா செல்கிறார்
- போலி என்கவுன்டர் வழக்கில் கைதான போலீஸ் அதிகாரி ராஜினாமா: நரேந்திரமோடி மீது பகிரங்க குற்றச்சாட்டு
- கைதி ஜெய்சங்கர் தப்பிச்செல்ல ஜெயில் அதிகாரி உடந்தையா?
- ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக ஏற்கமுடியாது: தெலுங்கானா ராஷ்டிர சமிதி எச்சரிக்கை
- உ.பி., பீகார் மக்களை இழிவுபடுத்தியதாக வழக்கு: ராகுல் காந்திக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியது
- அத்வானிக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கு: 2 மாதங்கள் முன்னதாக தொடங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
- ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் ராஜன் நாளை பதவி ஏற்பு
- மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- மூன்றாவது அணி அமைப்பது குறித்து இடது சாரி தலைவர்களுடன் முலாயம் சந்திப்பு
- டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் 10-ம் தேதி தீர்ப்பு
- நாசிக்கில் ராகிங் கொடுமையால் பன்னாட்டு நிறுவன பெண் ஊழியர் சாவு: 10 பட்டதாரிகள் கைது
- சுஷ்மா சுவராஜ்-அருண் ஜெட்லிக்கு பிரதமர் திடீர் அழைப்பு
- மும்பை: 5 குற்றவாளிகள் மீது மேலும் ஒரு பெண் கற்பழிப்பு புகார்
- சோலார் பேனல் மோசடி: நீதி விசாரணையில் நானும் பங்கேற்க தயார்-உம்மன் சாண்டி அறிவிப்பு
| ஜிமெயில், யாகூவை பயன்படுத்த அரசு தடை: தகவல் திருட்டை தடுக்க நடவடிக்கை Posted: 03 Sep 2013 11:07 PM PDT மத்திய–மாநில அரசு ஊழியர்கள், அரசு தொடர்பான தகவல்களை இ– மெயில் மூலம் அனுப்பி வருகிறார்கள். இதற்காக அவர்கள் ஜிமெயில், யாகூ போன்ற தனியார் இணையத்தள சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். தனியார் இணையத் தள சேவைகளை பயன்படுத்தி அனுப்பப்படும் அரசு தகவல்கள் மர்ம நபர்களால் திருடப்படுவதாக தெரிய வந்தது. மேலும் சில இ–மெயில் தகவல்களை சில நாடுகள் கடத்தி பிறகு |
| சிரியாவில் போர் அபாயம்: இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் கடும் சரிவு Posted: 03 Sep 2013 10:55 PM PDT சிரியாவில் ஏற்பட்டுள்ள போர் அபாயத்தால் இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் சர்வதேச வெளி மார்க்கெட்டில் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 68.85 ஆக வீழ்ச்சி அடைந்தது. இது இந்திய பங்கு சந்தையிலும் சரிவை ஏற்படுத்தி உள் நாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. |
| தெலுங்கானாவை பிரிக்க எதிர்ப்பு: ஆந்திராவில் 35–வது நாளாக போராட்டம் நீடிப்பு Posted: 03 Sep 2013 10:26 PM PDT தெலுக்கானா தனிமாநிலம் உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது இன்று 35–வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து கழக ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இன்று 35–வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் உள்ள 13 |
| காங்., தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி ஏற்படுமா?: ராகுல் காந்தியுடன் கனிமொழி ஆலோசனை Posted: 03 Sep 2013 10:20 PM PDT கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் சமீபத்தில் விலகிவிட்டன. பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகிவிட்டது. 3–வது அணியை உருவாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், தேசிய கட்சிகள், தங்கள் கூட்டணியில் செல்வாக்கு உள்ள மாநில கட்சிகளை சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. இதற்காக தேசிய |
| ஆந்திராவை பிரிப்பதற்கு சந்திரபாபு நாயுடுவே காரணம்: ஜெகன்மோகன்ரெட்டி சகோதரி தாக்கு Posted: 03 Sep 2013 10:18 PM PDT மறைந்த ஆந்திர முதல்–மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகளும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான சர்மிளா ஏற்கனவே ஆந்திராவில் 3200 கி.மீ. தூரம் பாதயாத்திரை சென்று பொதுமக்கள் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தற்போது அவர் ஆந்திரா மாநிலம் முழுவதும் பஸ்யாத்திரை சென்று பொதுமக்கள் மத்தியில் பேசினார். சித்தூர் மாவட்டம் மதனபள்ளியில் நடந்த கூட்டத்தில் சர்மிளா |
| 5 மாநில சட்டசபை தேர்தல்: ராகுல் அடுத்த வாரம் பிரசாரம் தொடங்குகிறார் Posted: 03 Sep 2013 09:21 PM PDT மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு இது முன்னோட்டமாக கருதப்படுவதால் காங்சிரசும், பாரதீய ஜனதாவும் 5 மாநில சட்டசபை தேர்தலில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி 5 மாநில தேர்தல் பிரசாரத்தை ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளார். உதய்ப்பூரில் வரும் 11–ந் தேதி நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் ராகுல் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு அவர் முக்கிய நகரங்களில் சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார். ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரிலும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் பேசுகிறார். ஆனால் ஜெய்ப்பூர் கூட்டத்துக்கான தேதி இன்னமும் முடிவாகவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்ப்பூர் மண்டலம் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஆதிவாசிகள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். 2003–ம் |
| ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் இன்று ரஷியா செல்கிறார் Posted: 03 Sep 2013 08:03 PM PDT ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் இன்று ரஷியா செல்கிறார் |
| போலி என்கவுன்டர் வழக்கில் கைதான போலீஸ் அதிகாரி ராஜினாமா: நரேந்திரமோடி மீது பகிரங்க குற்றச்சாட்டு Posted: 03 Sep 2013 05:24 PM PDT குஜராத் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போலீஸ் என்கவுன்டரில் சொராபுதீன் ஷேக் என்பவர் கொல்லப்பட்டார். பின்னர் இது போலியாக நடந்த என்கவுன்டர் என தெரிய வந்தது. அங்கு இது போல் மேலும் சில போலி என்கவுன்டர்கள் நடந்ததும் பின்னர் தெரிய வந்தது. இந்த போலி என்கவுன்டர்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. குஜராத்தில் நடந்த 4 போலி என்கவுன்டர்கள் தொடர்பான வழக்குகளில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 32 போலீசார் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் குஜராத் மாநில ஐ.பி.எஸ். அதிகாரியான 'டி.ஐ.ஜி.' வன்சாரா. சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கு தொடர்பாக 'டி.ஐ.ஜி.' வன்சாரா கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கைது செய்யப்பட்டார். சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவர், கடந்த 6 ஆண்டுகளில் மேலும் சில போலி என்கவுன்டர் வழக்குகளிலும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். |
| கைதி ஜெய்சங்கர் தப்பிச்செல்ல ஜெயில் அதிகாரி உடந்தையா? Posted: 03 Sep 2013 03:28 PM PDT பெங்களூர் சிறையில் இருந்து ஜெய்சங்கர் தப்பிச்செல்வதற்கு, ஜெயில் அதிகாரி ஒருவர் உடந்தையாக இருந்ததாக கருதப்படுகிறது. கள்ளக்காதலனுடன் ஓடிய அவருடைய மனைவியை தீர்த்துக்கட்டுவதற்காக ஜெய்சங்கரை அவர் அனுப்பினாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது |
| ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக ஏற்கமுடியாது: தெலுங்கானா ராஷ்டிர சமிதி எச்சரிக்கை Posted: 03 Sep 2013 03:24 PM PDT ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து தெலுங்கான பகுதியை பிரித்து தனி மாநிலமாக அறிவிக்க மத்திய அரசு முடிவெடித்து உள்ளது. இதற்கு ஆந்திர சீமாந்திரா பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். |
| உ.பி., பீகார் மக்களை இழிவுபடுத்தியதாக வழக்கு: ராகுல் காந்திக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியது Posted: 03 Sep 2013 03:10 PM PDT காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி மீது சண்டிகாரை சேர்ந்த வக்கீல் ஒருவர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் உத்தரபிரதேசம், பீகார் மாநில மக்களை தரக்குறைவாக பேசியதாக 2011-ம் ஆண்டு டிசம்பரில் அவதூறு வழக்கு தொடர்ந்தார் |
| அத்வானிக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கு: 2 மாதங்கள் முன்னதாக தொடங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி Posted: 03 Sep 2013 02:53 PM PDT கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி அன்று, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. மசூதி இடிக்கப்பட்ட அன்று அந்த பகுதியில் போடப்பட்டு இருந்த மேடையில் அமர்ந்து இருந்த அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீது ஒரு வழக்கும், சர்ச்சைக்குரிய பகுதியில் |
| ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் ராஜன் நாளை பதவி ஏற்பு Posted: 03 Sep 2013 02:09 PM PDT ரூபாய் மதிப்பு சரிவு, பணவீக்கம் உயர்வு, பொருளாதார மந்தநிலை, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பாரத ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் ராஜன் நாளை (வியாழக்கிழமை) பதவி ஏற்கிறார் |
| மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 03 Sep 2013 01:58 PM PDT 1996-ம் ஆண்டு வரை 2ஜி ஸ்பெக்ட்ரம் கூடுதல் ஒதுக்கீடு கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக ஒதுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது |
| மூன்றாவது அணி அமைப்பது குறித்து இடது சாரி தலைவர்களுடன் முலாயம் சந்திப்பு Posted: 03 Sep 2013 01:41 PM PDT சமுதாயத்தில் பின் தங்கியவர்கள் மற்றும் விவசாயிகள் மீது அக்கறை கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் இடது சாரி கட்சித்தலைவர்களை டெல்லியில் சந்தித்து பேசினார். |
| டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் 10-ம் தேதி தீர்ப்பு Posted: 03 Sep 2013 08:58 AM PDT டெல்லியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பேருந்து ஒன்றில் சென்றபோது, ஆறு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டார். அவருடன் வந்த ஆண் நண்பரையும் சரமாரியாகத் தாக்கிய அந்தக் கும்பல் இருவரையும் பின்னர் சாலையோரத்தில் வீசிச் சென்றது. இதில் படுகாயமடைந்த அந்தப் பெண் இரண்டு வாரங்கள் சிகிச்சைக்குப்பின் சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்து போனார். |
| நாசிக்கில் ராகிங் கொடுமையால் பன்னாட்டு நிறுவன பெண் ஊழியர் சாவு: 10 பட்டதாரிகள் கைது Posted: 03 Sep 2013 08:34 AM PDT மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பிரனலி ரகானே (வயது 19) என்ற இளம்பெண் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அவர் தன் கையை அறுத்துக்கொண்டதுடன், படுக்கை அறையில் தூக்குப் போட்டுக் கொண்டார். உயிருக்குப் போராடிய அவரை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் |
| சுஷ்மா சுவராஜ்-அருண் ஜெட்லிக்கு பிரதமர் திடீர் அழைப்பு Posted: 03 Sep 2013 07:44 AM PDT பிரதமர் மன்மோகன் சிங் நிலக்கரி துறையை கவனித்த போது நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்கள் மாயமானது. இந்த பிரச்சினையை எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கிளப்பி வரும் நிலையில், இன்று பிரதமர் மன்மோகன்சிங் மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார். அப்போது, நிலக்கரி ஒதுக்கீடு ஆவணங்கள் காணாமல் போன விவகாரத்தில் |
| மும்பை: 5 குற்றவாளிகள் மீது மேலும் ஒரு பெண் கற்பழிப்பு புகார் Posted: 03 Sep 2013 04:52 AM PDT மும்பை சக்தி மில்ஸ் புதரில் பெண் போட்டோ கிராபரை கற்பழித்த 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே அதே இடத்தில் மேலும் ஒரு பெண் பிடிபட்ட 5 குற்றவாளிகளால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் |
| சோலார் பேனல் மோசடி: நீதி விசாரணையில் நானும் பங்கேற்க தயார்-உம்மன் சாண்டி அறிவிப்பு Posted: 03 Sep 2013 04:31 AM PDT கேரள மாநிலத்தில் நடந்த சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசின் மந்திரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கேரள எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும் முதல்–மந்திரி உம்மன்சாண்டியின் அலுவலக உதவியாளர் டென்னி ஜோப்பன் இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |