மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ராகுல் பிரதமர் வேட்பாளராக நவம்பர் மாதம் அறிவிக்கப்படுகிறார்: காங்கிரஸ் ரகசிய திட்டம்
- நிலக்கரி அமைச்சகத்தில் சோதனையிட சி.பி.ஐ. முடிவு: மாயமான ‘பைல்’களை மீட்க நடவடிக்கை
- இந்திய நகரங்களில் பெருகிவரும் தண்ணீர் பற்றாக்குறை
- ரத்னகிரி அருகே பஸ் கவிழ்ந்து 45 பேர் படுகாயம்
- காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்
- ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் போது நெரிசலில் சிக்கி 18 பேர் படுகாயம்
- பிரதமர் மன்மோகன்சிங் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
- ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: நரேந்திர மோடி செவ்வாய்க் கிழமை பிரசாரம்
- பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மும்பை போலீஸ் கமிஷனருக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்
- செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்பும் திட்டம்: இஸ்ரோ 11–ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது
- விநாயகர் சதுர்த்தி: பிரணாப் முகர்ஜி வாழ்த்து
- தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து ஆலோசனை: பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் நாளை சந்திப்பு
- உ.பி-யில் சமாஜ்வாடி ஆட்சியை விட பகுஜன் சமாஜ் ஆட்சியே சிறந்தது: திக் விஜய் சிங்
- நாடு முழுவதும் 90 சதவீத ஆணுறை எந்திரங்கள் மாயமாகி விட்டது: கணக்கு தணிக்கை துறை குற்றச்சாட்டு
- போக்குவரத்துக்கு இடையூறாக பேரணி: சிவசேனா எம்.எல்.ஏ.க்கு ஜெயில்
- இரும்பு ஏற்றுமதியில் முறைகேடு: ரெயில்வே துறைக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு
- உத்தரபிரதேசத்தில் கலவரத்தில் 12 பேர் பலி: ஊரடங்கு உத்தரவு அமல்
| ராகுல் பிரதமர் வேட்பாளராக நவம்பர் மாதம் அறிவிக்கப்படுகிறார்: காங்கிரஸ் ரகசிய திட்டம் Posted: 08 Sep 2013 10:51 PM PDT பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 17–ந்தேதிக்குள் மோடி பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நரேந்திர மோடி முன் நிறுத்தப்படும் பட்சத்தில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. எனவே அதே பாணியில் பதிலடி |
| நிலக்கரி அமைச்சகத்தில் சோதனையிட சி.பி.ஐ. முடிவு: மாயமான ‘பைல்’களை மீட்க நடவடிக்கை Posted: 08 Sep 2013 10:38 PM PDT நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடுகளில் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கைத்துறை தெரிவித்தது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. கடந்த மாதம் இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்தபோது நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு தொடர்பான சில பைல்களை காணவில்லை என்று நிலக்கரி அமைச்சகம் கூறியது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. |
| இந்திய நகரங்களில் பெருகிவரும் தண்ணீர் பற்றாக்குறை Posted: 08 Sep 2013 05:03 PM PDT இந்தியாவில் மக்களின் அதிகரித்து வரும் தேவைகளில் தண்ணீரும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களின் தண்ணீர்த்தேவை பூர்த்தி செய்யப்பட முடியவில்லை. அரசு அறிக்கையின்படி நாட்டின் முக்கியமான 32 நகரங்களில் 22 நகரங்கள் |
| ரத்னகிரி அருகே பஸ் கவிழ்ந்து 45 பேர் படுகாயம் Posted: 08 Sep 2013 04:41 PM PDT தானே விராரில் இருந்து கூடல் நோக்கி மும்பை-கோவா நெடுஞ்சாலையில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரத்னகிரியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அசுர்தே என்ற கிராமம் அருகே |
| காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் Posted: 08 Sep 2013 03:55 PM PDT இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு படையின் |
| ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் போது நெரிசலில் சிக்கி 18 பேர் படுகாயம் Posted: 08 Sep 2013 02:02 PM PDT உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு பணி நடைபெற்றது. இதில் 10 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டனர். |
| பிரதமர் மன்மோகன்சிங் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து Posted: 08 Sep 2013 01:26 PM PDT பிரதமர் மன்மோகன்சிங் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ''இந்த விழா, பாரம்பரியமிக்க ஆன்மீகவாதிகள் நிறைந்த சுதந்திர இந்தியாவில் அனைவருக்கும் சகோதரத்துவம் ஒற்றுமை மற்றும் அன்பை |
| ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: நரேந்திர மோடி செவ்வாய்க் கிழமை பிரசாரம் Posted: 08 Sep 2013 10:23 AM PDT அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிற ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற பாரதீய ஜனதா தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது. முன்னாள் முதல்–மந்திரியும் பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே மாநிலம் தழுவிய யாத்திரையும் மேற்கொண்டு வந்தார். இந்த யாத்திரை செவ்வாய்க்கிழமை நிறைவு அடைகிறது. |
| பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மும்பை போலீஸ் கமிஷனருக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் Posted: 08 Sep 2013 09:39 AM PDT விநாயகர் சதுர்த்தியையொட்டி பெண்களின் பாதுகாப்பு கருதி மும்பை போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங் நேற்று தெரிவிக்கையில்:– விநாயகர் சதுர்த்தி அன்று கூட்ட நெரிசல்களில் பெண் பக்தர்கள் விநாயகர் சிலையிடம் ஆசி பெற வரும்போது அவர்களின் பாதுகாப்பை மண்டல்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் பெண் பக்தர்கள் தாக்கப்பட்டாலோ அல்லது பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாலோ சம்பந்தப்பட்ட மண்டல்கள் |
| செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்பும் திட்டம்: இஸ்ரோ 11–ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது Posted: 08 Sep 2013 07:30 AM PDT இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) சார்பில் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்பும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ முழுவீச்சில் செய்து வருகிறது. இந்தியாவின் கனவு திட்டமான இந்த செயற்கைகோள் திட்டம் பற்றி |
| விநாயகர் சதுர்த்தி: பிரணாப் முகர்ஜி வாழ்த்து Posted: 08 Sep 2013 06:27 AM PDT இந்துக்கள் முழுமுதற் கடவுளாக வணங்குகிற விநாயகப்பெருமான் அவதரித்த தினம் நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தியாக நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர், 'விநாயகப்பெருமானின் அவதார தினம், பல்வேறு தரப்பு மக்களையும் ஒன்று சேர்க்கிறது. இந்த நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை |
| தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து ஆலோசனை: பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் நாளை சந்திப்பு Posted: 08 Sep 2013 04:21 AM PDT அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. இத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பது சம்பந்தமாக சங் |
| உ.பி-யில் சமாஜ்வாடி ஆட்சியை விட பகுஜன் சமாஜ் ஆட்சியே சிறந்தது: திக் விஜய் சிங் Posted: 08 Sep 2013 03:28 AM PDT உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் நேற்று நடந்த இன மோதல்களில் ஒரு நிருபர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் உத்தரப்பிரதேசத்தில் |
| நாடு முழுவதும் 90 சதவீத ஆணுறை எந்திரங்கள் மாயமாகி விட்டது: கணக்கு தணிக்கை துறை குற்றச்சாட்டு Posted: 08 Sep 2013 01:41 AM PDT நாடு முழுவதும் 90 சதவீத ஆணுறை எந்திரங்கள் மாயமாகி விட்டதாகவும் பல இடங்களில் எந்திரங்கள் செயல்படவில்லை என்றும் கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அரசின் ஒவ்வொரு துறை பற்றியும் கணக்கு தணிக்கை துறை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது |
| போக்குவரத்துக்கு இடையூறாக பேரணி: சிவசேனா எம்.எல்.ஏ.க்கு ஜெயில் Posted: 07 Sep 2013 11:41 PM PDT போக்குவரத்துக்கு இடையூறாக பேரணி நடத்திய சிவசேனா எம்.எல்.ஏ. மற்றும் 10 தொண்டர்களுக்கு கோர்ட்டு 1 மாதம் ஜெயில் தண்டனை விதித்துள்ளது. மராட்டிய மாநிலம் கோத் ரூட் தொகுதியில் கடந்த 2010–ம் ஆண்டு சிவசேனா கட்சி சார்பில் கண்டன பேரணி, சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. |
| இரும்பு ஏற்றுமதியில் முறைகேடு: ரெயில்வே துறைக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு Posted: 07 Sep 2013 11:36 PM PDT ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு என அடுக்கடுக்கான ஊழல் புகார்களில் சிக்கி தவிக்கும் மத்திய அரசு மீது புதிதாக ரெயில்வே துறை மீதும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேட்டையும் மத்திய கணக்கு தணிக்கை துறையே அம்பலப்படுத்தியுள்ளது. ரெயில்வே துறையானது இரும்பு ஏற்றுமதியில் இரட்டை விலை முறையை கடந்த 2008–ம் ஆண்டு மே 22–ந்தேதி அறிமுகப்படுத்தியது. |
| உத்தரபிரதேசத்தில் கலவரத்தில் 12 பேர் பலி: ஊரடங்கு உத்தரவு அமல் Posted: 07 Sep 2013 10:31 PM PDT உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கவால் என்ற கிராமத்தில் கடந்த மாதம் 27–ந் தேதி இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்குகளை வாபஸ் பெறக்கோரி ஒரு சமூகத்தினர் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்துக்கு பிறகு இரு சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |