Tamil Star |
- அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் சாம்பியன்
- ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் மீண்டும் இடம் பெறுகின்றது
- 1950–ம் ஆண்டில் தயாரித்த ‘ரோபோ’ ரூ.17 லட்சத்துக்கு ஏலம்
- ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் போது நெரிசலில் சிக்கி 18 பேர் படுகாயம்
- இந்திய நகரங்களில் பெருகிவரும் தண்ணீர் பற்றாக்குறை
- காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல்
- மாவீரர்களை வழிபடுவதற்கு எமக்கு எவருடைய அனுமதியும் தேவையில்லை கீதாஞ்சலிக்கு சரவணபவன் எம்.பி. பதிலடி
- வட,கிழக்கு இணைப்பு யோசனை குறித்து முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுக்கவில்லை
- சரணடைந்தவர்கள் இரகசிய முகாமிலா? – மனோ கணேசன்
- ஐநா மனித உரிமை பேரவையின் 24 ஆவது பருவகால அமர்வு இன்று ஆரம்பம்
| அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் Posted: 08 Sep 2013 11:10 PM PDT
இதில் செரீனா 7–5, 6–7 (6–8), 6–1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியை பெற செரீனாவுக்கு 2 மணி 45 நிமிட நேரம் தேவைப்பட்டது. 1980–ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ஓபன் பெண்கள் இறுதிப் போட்டி அதிக நேரம் நடந்த ஆட்டம் இதுவாகும். செரீனா கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் அசரென்காவை வீழ்த்தினார். இந்த முறை அதற்கு அசரென்கா பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செரீனாவின் அபாரமான ஆட்டத்துக்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. அமெரிக்க ஓபன் பட்டத்தை அதிக வயதில் வென்றவர் என்ற சாதனையையும் 31 வயதான செரீனா படைத்தார். 1973–ம் ஆண்டு மார்கர் சோர்ட் அதிக வயதில் சாம்பியன் பட்டம் பெற்றதே சாதனையாக இருந்தது. அவரை விட செரீனா 293 நாட்கள் அதிகமாகி பட்டம் வென்றார். செரீனா வில்லியம்ஸ் பெற்ற 17–வது கிராண்ட் சிலாம் பட்டம் இதுவாகும். அவர் அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை (1999, 2002, 2008, 2012, 2013) வென்று உள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 5 முறையும் (2003, 2005, 2007, 2009, 2010), பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2 முறையும் (2009, 2013) விம்பிள்டன் பட்டத்தை 5 முறையும் (2002, 2007, 2009, 2010, 2012) வென்று உள்ளார். ஓபன் எராவில் ஸ்டெபி கிராப் 22 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்று முதல் இடத்தில் உள்ளார். கிறிஸ்வொர்ட், மார்ட்டினா நவரத்திலோவா (அமெரிக்கா) ஆகியோர் தலா 18 கிராண்ட்சிலாம் பட்டமும் பெற்று உள்ளனர். செரீனா வில்லியம்ஸ் அதற்கு அடுத்த நிலையில் உள்ளார். ஒட்டு மொத்த கிராண்ட்சிலாம் கணக்கில் மார்க்கரெட் கோர்ட் (அமெரிக்க) 24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற செரீனாவுக்கு ரூ.24 கோடி பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் அவர் 2 கிராண்ட் சிலாமை (பிரெஞ்சு ஓபன் அமெரிக்கா) வென்றார். இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை அசரென்காவும், விம்பிள்டன் பட்டத்தை மரியான் பர்ட்டோலியும் வென்றனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் மீண்டும் இடம் பெறுகின்றது Posted: 08 Sep 2013 11:08 PM PDT ஏழு மாதங்களுக்கு முன்னர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட மல்யுத்தப் போட்டிகளை மீண்டும் அனுமதிப்பதாக ஒலிம்பிக் கமிட்டி நேற்று அறிவித்தது. அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்சில் கடந்த வெள்ளியன்று துவங்கிய கமிட்டி கூட்டத்தில் வரும் 2020 ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பினை டோக்கியோ பெற்றது. நேற்று நடந்த கூட்டத்தில் மல்யுத்தம், பேஸ்பால்,சாப்ட் பால் மற்றும் ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகளுக்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், மல்யுத்ததிற்கு ஆதரவாக 49 வோட்டுகளும், பேஸ்பாலுக்கு 24 வோட்டுகளும், ஸ்குவாஷ் விளையாட்டிற்கு […] |
| 1950–ம் ஆண்டில் தயாரித்த ‘ரோபோ’ ரூ.17 லட்சத்துக்கு ஏலம் Posted: 08 Sep 2013 11:05 PM PDT 1950–ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட 'ரோபோ' ரூ. 17 லட்சத்துக்கு ஏலம் போனது. அந்த 'ரோபா' லண்டன் அருகே கெ ன்சிங்டனில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. அதன் ஏலத் தொகையாக ரூ.8 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த 1950–ம் ஆண்டில் 'சிகான்' என்ற 'ரோபோ' (எந்திரமனிதன்) தயாரிக்கப்பட்டது. அது 8 அடி உயரமுடையது. 3 லட்சம் பகுதிகளாக வடிவமைக்கப்பட்டு தானியங்கி எந்திரமாக உருவானது. ஆனால், அது எதிர்பார்த்ததைவிட 2 மடங்குக்கு மேல் அதாவது ரூ.17 லட்சத்திற்கு (17,500 […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் போது நெரிசலில் சிக்கி 18 பேர் படுகாயம் Posted: 08 Sep 2013 11:03 PM PDT உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு பணி நடைபெற்றது. இதில் 10 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனுமதிச்சீட்டு வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டு இருந்த போது திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. இதனால் வரிசையில் நின்று கொண்டு இருந்த இளைஞர்கள் ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு ஓடத் தொடங்கினர். அப்போது அங்கு நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 18 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை உடனே மீட்டு […] |
| இந்திய நகரங்களில் பெருகிவரும் தண்ணீர் பற்றாக்குறை Posted: 08 Sep 2013 11:01 PM PDT இந்தியாவில் மக்களின் அதிகரித்து வரும் தேவைகளில் தண்ணீரும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களின் தண்ணீர்த்தேவை பூர்த்தி செய்யப்பட முடியவில்லை. அரசு அறிக்கையின்படி நாட்டின் முக்கியமான 32 நகரங்களில் 22 நகரங்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கின்றன. கான்பூர், அசன்சோல், தன்பாத், மீரட், பரிதாபாத், விசாகப்பட்டினம், மதுரை மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் 30 சதவிகிதம் பற்றாக்குறை உள்ளது. இதில், ஜாம்ஷெட்பூரில் அதிகபட்சமாக 70 சதவிகிதம் தேவைகள் பூர்த்தி செய்யப்படமுடியவில்லை. கிரேட்டர் மும்பை […] |
| காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் Posted: 08 Sep 2013 10:58 PM PDT இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு படையின் கண்காணிப்பு முகாம் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உயிர்ச் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
| மாவீரர்களை வழிபடுவதற்கு எமக்கு எவருடைய அனுமதியும் தேவையில்லை கீதாஞ்சலிக்கு சரவணபவன் எம்.பி. பதிலடி Posted: 08 Sep 2013 10:56 PM PDT நாம் வீடுகளில் தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றோம். இதை யாராலும் தடுக்கமுடியாது. இப்படி இருக்கையில் கிளிநொச்சியில் கீதாஞ்சலி அம்மையார் மாவீரர் தினம் கொண்டாட அரசிடம் அனுமதி பெற்றுத் தருவேன் என் கிறார். இவர் யார் எமக்கு அனுமதி பெற்றுத்தர? காணாமற் போன தன் கணவரைத் தேட முயற்சிக்காத இவர் வாக்குப் பெறுவதற்காக கதைவிடுகிறார். இவரிடம் ஒரு சவால் விடுக்கிறேன் முடிந்தால் சிங்கள அரசினால் தரை மட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டி எழுப்பி […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| வட,கிழக்கு இணைப்பு யோசனை குறித்து முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுக்கவில்லை Posted: 08 Sep 2013 10:47 PM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை குறித்து தென்னிலங்கை கட்சிகள் பலவும் எதிர்ப்பையும், விமர்சனத்தையும் வெளியிட்டிருக்கின்றன. விடுதலைப் புலிகளினால் முடியாமல் போயுள்ள தனிநாட்டை உருவாக்குவதற்குரிய ஆரம்ப நடவடிக்கையாகவும் இந்தத் தேர்தல் அறிக்கையை சில கட்சிகள் வர்ணித்திருக்கின்றன. சர்வதேசத்தின் ஆதரவுடன் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தென்னிலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றன. எனினும் தென்னிலங்கைக் கட்சிகளின் பார்வையையும், குற்றச்சாட்டுக்களையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்வு நிராகரித்திருக்கின்றது. அத்துடன் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு […] |
| சரணடைந்தவர்கள் இரகசிய முகாமிலா? – மனோ கணேசன் Posted: 08 Sep 2013 10:44 PM PDT காணாமற்போனோர் என எவரும் இல்லை என்று கூறும் அரசு, இறுதி போரில் இராணு வத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட மறுக்கின்றது. அரசின் இத்தகைய பதில்கள் இலங்கையில் இரகசியத் தடுப்பு முகாம்கள் உள்ளனவோ என்று சந்தேகப்பட வைக்கின்றன. இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் நேற்று தெரி வித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: "இலங்கையில் இரகசியத் தடுப்புமுகாம்கள் எங்கு இருக் கின்றன என்று பாதுகாப்புச் செயலர் சவால் விட்டுள்ளார். இது தெருவில் அப்பாவி […] |
| ஐநா மனித உரிமை பேரவையின் 24 ஆவது பருவகால அமர்வு இன்று ஆரம்பம் Posted: 08 Sep 2013 10:37 PM PDT ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 24 ஆவது பருவகால அமர்வுகள் இன்று 9 ஆம் திகதி முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளன. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை பேரவையின் நடவடிக்கைகள், செயற்பாடுகள் தொடர்பில் விவாதத்துக்கான வருடாந்த அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார். அவரது உரையின் போது இலங்கை தொடர்பிலும் பிரஸ்தாபிக்கவுள்ளார் என தெரியவருகிறது. இலங்கைக்கான தனது ஒரு வார கால விஜயத்தின் போது கண்டறியப்பட்ட சில விடயங்களையே […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
