Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மாநில கட்சிகளுடன் கூட்டணி இல்லாமலே மெஜாரிட்டி பெற வேண்டும்: ராகுல்காந்தி பேச்சால் சர்ச்சை

Posted: 25 Sep 2013 11:20 PM PDT

மராட்டிய மாநிலம் புனேயில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது

கேரள விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை

Posted: 25 Sep 2013 11:00 PM PDT

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த நெடும்பாச்சேரி விமான நிலையத்தில் பணியில் இருந்த சுங்க இலாகா உயர் அதிகாரிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விமானத்தில் தங்கம் கடத்தி வந்த பைசல் என்பவரை பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, இதுபோல பல முறை வளைகுடா நாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வந்ததாகவும்

காஷ்மீர் இன்னமும் இந்தியாவுடன் சேரவில்லை: முதல்–மந்திரி உமர் சொல்கிறார்

Posted: 25 Sep 2013 10:51 PM PDT

ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் குழு இந்தியாவில் சுற்று பயணம் செய்து வருகிறது. நேற்று அந்த பிரதிநிதிகள் காஷ்மீர் மாநிலம் சென்றனர். முதல்–மந்திரி உமர் அப்துல்லாவை அவர்கள் சந்தித்து பேசினார்கள். காஷ்மீர் நிலவரம் குறித்து அவர்கள் விவாதித்தனர். அப்போது ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் உமர் அப்துல்லா

தாய் வாங்கிய கடனுக்காக மகளை கடத்தி கற்பழித்த வேலூர் கோழிப்பண்ணை அதிபர் கைது

Posted: 25 Sep 2013 10:46 PM PDT

தாய் வாங்கிய கடனுக்காக அவரது 5 வயது மகளை கடத்தி கற்பழித்த வேலூர் கோழிப்பண்ணை அதிபர் கைது செய்யப்பட்டார். கைதான கோழிப் பண்ணை அதிபர் பெயர் முபாரக். வேலூர் பழைய நகரைச் சேர்ந்தவர். இவரிடம் வேலூர் தேவராஜ நகரைச் சேர்ந்த ஒரு பெண் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை அந்த பெண் செலுத்தவில்லை.

காஷ்மீரில் 2 போலீஸ் நிலையங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 போலீஸ் உள்பட 7 பேர் பலி

Posted: 25 Sep 2013 09:49 PM PDT

பாகிஸ்தான் தீவிரவாதிகள் சமீபகாலமாக காஷ்மீரில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ஜம்மு பிராந்தியத்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல், அந்த மாநிலத்தில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது

குறிப்பிட்ட நிறுவனங்களுக்கே சுரங்கங்களை ஒதுக்குவது ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

Posted: 25 Sep 2013 05:21 PM PDT

குறிப்பிட்ட நிறுவனங்களுக்கே நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வது ஏன்? இதன்மூலம் தொழிலில் ஏகபோகத்தை உருவாக்குவதா என்று நிலக்கரி சுரங்க வழக்கில், மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

நேர்மையான நகரம் என்ற ஆய்வில் இரண்டாமிடத்தைப் பிடித்த மும்பை

Posted: 25 Sep 2013 05:20 PM PDT

ஊழல் குறித்த கணக்கீடுகள் வெளியிடப்படும்போது இந்தியா பெரும்பாலும் முன்னிலை இடங்களில் இருக்கும் இக்கட்டான நிலைமை ஏற்படும். ஆனால், சமீபத்தில் நகரங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் மும்பை வித்தியாசமான முடிவைக் காண்பித்தது. உலக நாடுகளின் முக்கிய

கூடங்குளத்தில் இன்னும் ஒரு வாரத்தில் மின்சார உற்பத்தி தொடங்கும்

Posted: 25 Sep 2013 04:10 PM PDT

கூடங்குளத்தில் இன்னும் ஒருவாரத்தில் மின்சார உற்பத்தி தொடங்கும் என்று இந்திய அணுசக்தி கழக மூத்த அதிகாரி தெரிவித்தார். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும்: வீரப்பமொய்லி

Posted: 25 Sep 2013 12:40 PM PDT

ஈராக், வெனிசுலா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய மந்திரி வீரப்பமொய்லி கூறினார். மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்பமொய்லி பெங்களூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் உளவாளி கைது

Posted: 25 Sep 2013 10:59 AM PDT

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள லபோக் பகுதியை சேர்ந்தவர் தர்விந்தர் சிங் (வயது 39). இவன் பாகிஸ்தானுக்காக உளவு வேலை பார்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று வாகா எல்லை அருகே உள்ள அட்டாரி சாலையில் தர்விந்தர் சிங்கை கைது செய்தனர்.

தண்டனை பெற்ற எம்.பி.க்கள் குறித்த அவசரச்சட்டம் ஏன்? - காங்கிரஸ் விளக்கம்

Posted: 25 Sep 2013 08:51 AM PDT

குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்.பி., எல்.எல்.ஏ.க்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும்

போபால் பொதுக்கூட்டம்: மோடியை வாழ்த்தி கோஷமிட்டதால் சுருக்கமாக உரையை முடித்தார் அத்வானி

Posted: 25 Sep 2013 06:44 AM PDT

மத்தியப் பிரதேசத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தலைநகர் போபாலில் பாரதிய ஜனதாவின் மிகப்பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, எல்.கே. அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, வெங்கையா மற்றும் மத்தியப்பிரதேச மாநில முதல் மந்திரி சிவ்ராஜ் சிங் சவுஹான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த ஜனாதிபதி ஒப்புதல்

Posted: 25 Sep 2013 06:24 AM PDT

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிர்வாக குளறுபடி மற்றும் முறைகேடுகள் இருப்பதால் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதேசமயம் நிதி நெருக்கடி காரணமாக பல்கலைக் கழகத்தை நடத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. இதற்கிடையே, ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், சம்பளத்தை குறைக்கவும்

வெடிகுண்டு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சிக்கவைக்க காங்கிரஸ் முயற்சி: ராஜ்நாத் சிங்

Posted: 25 Sep 2013 05:48 AM PDT

வெடிகுண்டு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சிக்கவைக்க காங்கிரஸ் முயற்சி: ராஜ்நாத் சிங்

0% வட்டியில் கடன் தவணை திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி தடை

Posted: 25 Sep 2013 05:35 AM PDT

கிரெடிட் கார்டுகள் திட்டத்தில், பொருட்கள் வாங்கும் நுகர்வோருக்கு மாத தவணைகளில் செலுத்தும் வகையில் வங்கிகள் கடன் வழங்கும்போது, அதற்கு ஒரே மாதிரியான வட்டி மற்றும் ஒரே மாதிரியான பரிசீலனை கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி இன்று உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் பொருளுக்கு 0% வட்டியில் கடன் வழங்கும் திட்டத்திற்கும் தடை விதித்து

காங்கிரசுக்கு விடை கொடுத்து காந்தியின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்: போபால் பொதுக்கூட்டத்தில் மோடி சூளுரை

Posted: 25 Sep 2013 05:12 AM PDT

போபாலில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது:- சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் மத்திய பிரதேச மாநிலம் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தீனதயாள் உபாத்யாவுக்கு சிறப்பான அஞ்சலி செலுத்துவதாக இந்த பேரணி அமைந்துள்ளது. 60 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரசால் என்ன வளர்ச்சி ஏற்பட்டுள்ளது?

அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கத்தை எதிர்த்து வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

Posted: 25 Sep 2013 04:57 AM PDT

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கின் விசாரணை முடிவடையும் தருவாயில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை கர்நாடக அரசு நீக்கியது. மேலும் இவ்வழக்கினை விசாரித்து வரும் நீதிபதி பாலகிருஷ்ணாவும் இந்த மாத இறுதியில் ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில், கர்நாடக அரசின் முடிவினை எதிர்த்து ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில்

போபாலில் பா.ஜனதா பொதுக்கூட்டம்: அத்வானியின் காலை தொட்டு வணங்கினார் மோடி

Posted: 25 Sep 2013 03:06 AM PDT

மத்தியப்பிரதேசத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி மத்தியப்பிரதேசத்தில் பா.ஜனதா கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான் ஏற்பாடு செய்தார்.

9 காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜெகன் கட்சியில் சேர முடிவு: தெலுங்கானா மசோதாவை எதிர்த்து வாக்களிக்க போவதாக அறிவிப்பு

Posted: 25 Sep 2013 01:19 AM PDT

ஆந்திராவில் தெலுங்கானா பிரிவு விவகாரம் காங்கிரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா பிரிப்பதால் தெலுங்கானா பகுதி மக்கள் காங்கிரசை வரவேற்கிறார்கள். ஆனால் சீமாந்திரா (ராயலசீமா, கடலோர ஆந்திரா) பகுதி மக்கள் ஒருங்கிணைந்த ஆந்திராவாக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அவர்கள் தெலுங்கானா பிரிப்பு முடிவு எடுத்த காங்கிரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து 59 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீமாந்திரா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். இதற்கிடையே சீமாந்திரா பகுதியில் ஒய்.எஸ்.ஆர்.

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கா புறப்பட்டார்

Posted: 25 Sep 2013 01:13 AM PDT

ஐ.நா. பொதுசபை கூட்டம் அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் வருகிற 27–ந்தேதி முதல் 29–ந்தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங் 5 நாள் பயணமாக இன்று காலை அமெரிக்கா புறப்பட்டார். நியூயார்க்கில் நடைபெறும்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™