Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


நேர்மையான நகர ஆய்வில் இரண்டாமிடத்தைப் பிடித்த மும்பை

Posted: 25 Sep 2013 07:44 PM PDT

300px-Gateway_of_India

300px-Gateway_of_Indiaஊழல் குறித்த கணக்கீடுகள் வெளியிடப்படும்போது இந்தியா பெரும்பாலும் முன்னிலை இடங்களில் இருக்கும் இக்கட்டான நிலைமை ஏற்படும். ஆனால், சமீபத்தில் நகரங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் மும்பை வித்தியாசமான முடிவைக் காண்பித்தது. உலக நாடுகளின் முக்கிய நகரங்கள் 16 தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு தெருவில் கைவிடப்படும் பணப்பைகளில் எத்தனை திருப்பி ஒப்படைக்கப்படுகின்றன என்ற சோதனை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. ரூ.3,000, செல்போன் நம்பர், வர்த்தக அட்டைகள், குடும்ப போட்டோ போன்றவை அடங்கிய சிறிய பணப்பைகள் வணிக வளாகங்கள், நடைபாதைகள், பூங்காக்கள் போன்ற இடங்களில் விடப்பட்டன. மற்ற நாடுகளில் இந்தப் பணத்திற்கு ஈடான தொகை அமெரிக்க டாலராகவோ, அந்தந்த நாட்டு பணமாகவோ வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நகரத்திலும் 12 பைகள் வீதம் மொத்தம் 192 பைகள் இதுபோல் கீழே விடப்பட்டன. கைவிடப்பட்ட பைகளில் 47 சதவிகிதம் பைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கியில் 12ல் 11 திரும்ப ஒப்படைக்கப்பட்டு அந்த நகரம் நேர்மையான மக்களுக்கான முதலிடத்தைப் பெற்றது. அடுத்து மும்பையில் 9 பைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தது. புடாபெஸ்ட் மற்றும் நியுயார்க் நகரங்களில் 8 பைகள் திரும்பக் கிடைத்தன. ஆம்ஸ்டர்டாம் மற்றும் லண்டனில் ஏழும், பெர்லினில் ஆறும், வார்சாவில் ஐந்தும், சூரிச்சில் நான்கும்,புகாரெஸ்ட் மற்றும் ரியோ டி ஜெனிரோவில் மூன்றும் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. கனடாவின் மாட்ரிட் நகரில் இரண்டு பைகள்தான் திரும்பக் கிடைத்தன. அதுபோல் போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் ஒரு பை மட்டுமே திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அதுவும் நெதர்லாந்திலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த தம்பதியர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் நேர்மையான நகரங்கள் என்ற குறியீட்டைப் பெற்றிருந்த சூரிச், லண்டன் போன்ற நகரங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மும்பை இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகக் கருதப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

விசாரணைகளை நடத்தி இலங்கை போர் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் – நவி பிள்ளை

Posted: 25 Sep 2013 07:20 PM PDT

navaneetham-pillai-5-380x270

navaneetham-pillai-5-380x270 குற்றங்கள் குறித்து  அரசு நம்பகமான ,அதையும் மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும், அப்படி செய்யாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக ஒரு விசாரணையை நடத்த வேண்டிவரும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவி பிள்ளை எச்சரித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் நவி பிள்ளை இலங்கைக்கு ஒரு வாரகால விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் கண்டதையும், கேட்டதையும், விசாரித்து அறிந்ததையும் அவரின் சார்பில், மனித உரிமைகள் பேரவையின் துணைத் தலைவர் வாயிலாக வாய்வழி அறிக்கையாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

போரின்போது பொதுமக்கள் தரப்புக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், இராணுவம் விசாரணையின்றி சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டும் சேனல் 4 வெளியிட்ட வீடியோ போன்றவை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை கவலை வெளியிட்டும் இது தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக தனக்குத் தெரியவில்லை என்று நவி பிள்ளை கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக இராணுவமும், கடற்படையும் நடத்தும் விசாரணைகள் நம்பிக்கையை அளிப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

போர்க்குற்றங்கள் குறித்த தேசிய விசாரணைகள் நம்பகமான முறையில் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக விசாரணை நடத்தும் பொறிமுறையை ஏற்படத்த வேண்டிய கடமை இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்

விடுதலைப் புலிகள் தொடர்புடைய போர் குற்றங்களை முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தான் தொடர்ந்து வலியுறுத்திவருவதாகவும் இது தொடர்பில் சம்மந்தப்பட்டோர் மீதான வழக்குகள் விரைவு படுத்தப்பட வேண்டும் என்றும் ஐநா ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.

' திருகோணமலை கொலை விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை'

திருகோணமலை கடற்கரையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபர் தன்னிடம் விளக்கமளித்தார் என்றும் இந்த வழக்கு விசாரணை தொடர்பில் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கத் தயாராக இருப்பதாக இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏசிஎப் நிறுவனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்ட வழக்கு உள்ளிட்ட பலவற்றில் முன்னேற்றம் இல்லாத நிலையையும் தாம் அவதானிப்பதாக நவி பிள்ளை தெரிவித்தார்.

இலங்கைக்கு சென்றபோது தான் சென்ற கிராமங்களுக்கு, தான் செல்வதற்கு முன்பும், பின்பும் காவல்துறையும் இராணுவமும் சென்றது என்று குறிப்பட்ட நவி பிள்ளை திருகோணமலையில் தன்னை சந்தித்தவர்கள் தன்னிடம் என்ன கூறினார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டார்கள் என்றும் தெரிவித்தார். இது இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளியுறவுச் செயலரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது என்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்த செய்திகள் மீது ஐநா மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இலங்கையில் சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயக நிறுவனங்களும் மதிப்பிறக்கம் செய்யப்படுவது மற்றும் அருகிப்போவது குறித்து தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக கூறிய நவி பிள்ளை, 17 ஆவது சட்ட திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவது மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் மேலாய்வு செய்ய வழி செய்யப்பட வேண்டும் என்று படிப்பினைகள் ஆணைக்குழு தெரிவித்திருந்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

வட மாகாணத் தேர்தல் நடைபெற்றதை வரவேற்றுள்ள நவி பிள்ளை, 13 ஆவது சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று நம்புவதாகத் தெரிவித்தார் நவி பிள்ளை.

போர் முடிந்து நான்கு ஆண்டுகளான பிறகும் அங்கு காணப்படும் கணிசமான இராணுவப் பிரசன்னம் குறித்து ஐ நா ஆணையர் கவலை வெளியிட்டார்.

பெண்கள், சிறுமிகள் மற்றும் பலவீனமான நிலையில் இருக்கும் பெண்களின் தலைமையிலான வீடுகளில் இருக்கும் பெண்கள் இராணுவத்தால் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்க் ஆளாகக் கூடிய சூழல் குறித்து கவலை வெளியிட்ட நவி பிள்ளை, பாலியல் துஷ்பிரயோகங்களை அரசு கிஞ்சிதமும் சகிக்கக் கூடாது என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

தனியார் நிலங்களை இராணுவத் தேவைகளுக்காக கட்டாயமாக கையகப்படுத்துவது குறித்த ஆவணங்கள் நவி பிள்ளைக்கு அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகணத்தில் சிவில் நிர்வாகத்திலும், பொருளாதார நடவடிக்கைகளிலும், கல்வி , விவசாயம், சுற்றுலா போன்ற துறைகளிலும் இராணுவத்தின் பங்களிப்பு அதிகம் காணப்படுவதாகவும் அவர் அவதானித்துள்ளார். சிவில் நிர்வாகத்துக்குட்பட்ட விடயங்களில் இருந்து இராணுவத்தை ஒரு காலவரைக்குள் விலக்கிக் கொள்ளுமாறு அரசிடம் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.

கற்றறிந்த பாடங்கள் ஆணைக்குழு அளித்த பரிந்துரைகளில் கூடுதலாக 53 பரிந்துரைகளை அமல்படுத்த அரசு முன்வந்துள்ளதை பாராட்டியுள்ள மனித உரிமைகள் ஆணையர் அதே நேரம் அரசு இது தொடர்பில் ஒரு பொது விவாதத்தை நடத்தினால் அதனால் கூடுதல் பயன் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

காணாமல் போனோர் நிலை

காணமல் போனோர் நிலையும் இன்று முக்கிய இடத்தை பிடித்தது.

கடந்த 1990 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடையில் வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் போனோர் குறித்து விசாரிக்க அரசு ஒரு குழுவை அமைத்திருந்தாலும், போருக்குப் பிறகு கொழும்பிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் விசாரணை நடக்காது என்பதால் இந்த ஆணையத்தின் வரம்புகளை விரிவு படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். காணமல் போனோர் குறித்து அரசு முன்பு அமைத்த 5 ஆணையங்களால் பயனேதும் ஏற்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

காணமல் போனோர் தொடர்பிலான சர்வதேச ஒப்பந்தத்தை 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கைச்சாத்திடுவதன் மூலம் இது தொடர்பில் அரசுக்குள்ள உறுதிப்பாட்டை காட்ட முடியும் என்றும் காணமல் போனோர் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த கடத்தி காணமல் போனோர் தொடர்பிலான ஐ நா நிபுணர் குழுவின் சேவைகளை அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கடவுள் துகளை கண்டறிந்த 2 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

Posted: 25 Sep 2013 06:15 PM PDT

48d21_neutron_proton_electron_6313062659_43ce1fbba8_m

48d21_neutron_proton_electron_6313062659_43ce1fbba8_mஅணுவில் எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய மூன்று துகள்கள் உண்டு என்பது விஞ்ஞானி ரூதர் போர்டின் கண்டுபிடிப்பு. ஆனால் அந்த அணுவுக்கு அடிப்படை 16 துகள்கள் என்று கண்டறியப்பட்டது. இந்த 16 துகள்களும்தான் கல், மண், பேனா, பென்சில், விமானம், கார், ரெயில் என அனைத்துப் பொருட்களின் இயக்கத்துக்கும் அடிப்படை எனவும் தெரிய வந்தது. ஆனால் 17-வது அடிப்படை துகள் என்று ஒன்று உண்டு என கூறி கண்டுபிடித்து அதை உலகுக்கு அறிவித்தவர் இங்கிலாந்து விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் (வயது 84). அவர் தான் கண்டறிந்த துகளுக்கு 'போஸான் துகள்' என பெயரிட்டார். இதை 'கடவுள் துகள்' என்றும் 'கடவுள் இல்லாத துகள்' என்றும் கூறுவோர் உண்டு. அணுவின் அடிப்படையான 16 துகள்களுக்கும் நிறை இருப்பதற்கு ஹிக்ஸ் போஸான் தான் காரணம் என்பது பீட்டர் ஹிக்ஸின் வாதம். இந்த ஆராய்ச்சியில் பீட்டர் ஹிக்சுக்கு உதவியவர் சக விஞ்ஞானியான பிராங்கோயிஸ் இங்கிலெர்ட் (80) ஆவார். இந்த இருவருக்கும் இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐந்தாவது பிறந்த தினத்தில் அன்ரோயிட்

Posted: 25 Sep 2013 07:31 AM PDT

முதற்தர இணைய சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனத்தினால் ஏனைய இயங்குதள நிறுவனங்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டதே அன்ரோயிட் இயங்குதளம் ஆகும். இவ் இயங்குதளம் 2008ம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வருடம் தனது 5வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது. தற்போது ஸ்மார்ட் அதிகளாவான கைப்பேசிகளில் பயன்படுத்தப்பட்டுவரும் இந்த இயங்குதளம் சம்சுங் தயாரிப்புக்களின் 64 சதவீதமான சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதேவேளை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இதுவரை 48 பில்லியன் வரையான அன்ரோயிட் அப்பிளிக்கேஷன்கள் தரவிறக்கம் செய்து நிறுவப்பட்டுள்ளதுடன், […]

This posting includes an audio/video/photo media file: Download Now

உயர் வினைத்திறன் கொண்ட HTC One ஸ்மார்ட் கைப்பேசிகள் உருவாக்கம்

Posted: 25 Sep 2013 07:24 AM PDT

உயர் வினைத்திறன் கொண்ட HTC One ஸ்மார்ட் கைப்பேசியின் புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் HTC நிறுவனம் மும்முரமாக இறங்கியுள்ளது. 8 Core Processor மற்றும் பிரதான நினைவகமாக 3GB RAM ஆகியவற்றினைக் கொண்டதாக இந்த கைப்பேசிகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் 4.7 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய HD தொடுதிரைகள் மற்றும் Ultrapixel கமெரா போன்றன இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் விரைவில் ஏனைய தகவல்களும் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தியாவை அசத்தும் கூகிள் பாய்(வீடியோ இணைப்பு)

Posted: 25 Sep 2013 07:18 AM PDT

ஹரியானாவை சேர்ந்த 5 வயது சிறுவன் தனது அதீத ஞாபக சக்தியால் கூகிள் பாய் என்ற பெயரில் கலக்கி வருகிறான். ஹரியானாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுவன் கவுடில்யா(5). இந்த சிறுவனின் ஞாபக சக்தியை பார்த்து மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 5 வயது சிறுவனுக்கு இருக்கும் அப்பாவித்தனத்துடன் காணப்படும் இச்சிறுவனுக்கு உலகின் உள்ள அனைத்து நாடுகளின் பெயர்கள், மொழிகள், நிலப்பரப்பு, நதிகள், மலைகள், கடல்கள், கிரகங்கள், மக்கள் தொகை என அனைத்து தகவல்களும் தெரிந்திருக்கிறது. இவ்வளவு […]

This posting includes an audio/video/photo media file: Download Now

பேஸ்புக்கை கலக்கிய கருணாநிதி!

Posted: 25 Sep 2013 07:15 AM PDT

திமுக தலைவர் கருணாநிதி பேஸ்புக்கில் பலர் கேட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார். சாதாரண அறிக்கை, கேள்வி பதில் பாணி அறிக்கை, கடித வடிவ அறிக்கை என்று அறிக்கையில் பல யுத்திகளைப் புகுத்து அசத்திய கருணாநிதி தற்போது பேஸ்புக் மூலமாகவும் பதிலளிக்கிறார். கேள்வி: முதல்வர் தான் கூறும் குட்டிக் கதைகளை கூட மேடைகளில் பார்த்து பார்த்து தான் படிக்கிறார், இதனை பற்றி உங்களது கருத்து என்ன பதில்: குட்டிகளைப் பார்த்துப் படிப்பது தாயின் பழக்கம் தானே! கேள்வி: […]

ரஜினிகாந்துக்கு பூச்செண்டு கொடுத்த மோடி! போஸ்டரால் பரபரப்பு

Posted: 25 Sep 2013 07:13 AM PDT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், மோடியையும் இணைத்து ஒரு போஸ்டரை ஒட்டி திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ரஜினிகாந்த் பாஜகவை ஆதரிக்க வேண்டும், மோடியை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். கோரியும் வருகின்றனர். பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், தமிழிசை செளந்தரராஜன் என பலரும் அடிக்கடி இதை இப்போது பேச ஆரம்பித்துள்ளனர். ஆனால் ரஜினி தரப்பில் மகா மெளனமே பதிலாக கிடைத்துள்ளது. இந்நிலையில், திருச்சியில் நாளை நடக்கும் பாஜக இளம் தாமரை மாநாட்டில் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

காதலர்களின் கசமுசாக்களை அம்பலமாக்கும் நிகழ்ச்சி

Posted: 25 Sep 2013 07:11 AM PDT

பிரிட்டனில் காதலர்கள் கசமுசா பண்ணுவதை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக, புதிய ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி ஒன்றை சேனல் 4 தொலைக்காட்சி அறிவித்துள்ளது. புதியதாக தொடங்கவுள்ள இந்நிகழ்ச்சிக்கு ‘செக்ஸ் பாக்ஸ்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில், காதல் ஜோடிகளுக்கென அதிநவீன ஒளி மற்றும் ஒலி அமைப்புகளுடன், செட் ஒன்று சேனல் 4 தெலைக்காட்சி நிறுவன ஸ்டுடியோவில் போடப்பட்டுள்ளதாக சேனல் 4 நிர்வாகி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதில் பங்குபெறும் காதலர்கள் தங்களது கசமுசா லீலைகள் முடிந்தவுடன், […]

This posting includes an audio/video/photo media file: Download Now

கடலில் குட்டித் தீவினை உருவாக்கிய பூகம்பம் (வீடியோ இணைப்பு)

Posted: 25 Sep 2013 07:10 AM PDT

பாகிஸ்தான் நாட்டில் தென்மேற்கு பகுதியை உலுக்கிய பூகம்பமானது கடலில் புதிய குட்டித்தீவு ஒன்று தோன்றி உள்ளது. சுமார் 60 மீற்றர் நீள அகலத்தில் தோன்றியுள்ள இந்த தீவின் மணல் பகுதி சுமார் 20-30 மீற்றர் உயரத்துக்கு உயர்ந்துள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் இது போன்ற தீவு உருவாகி இருந்தது. நாளடைவில் அந்த தீவு கடலில் கரைந்து காணாமல் போய்விட்டது. தற்போது பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அதே […]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™