மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- செவ்வாய் கிரக ஆய்வுக்காக இந்தியா அனுப்பும் விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படுகிறது
- திருவனந்தபுரத்தில் ஆஸ்பத்திரி உணவில் செத்த குட்டி பாம்பு
- 'ராகுல் காந்திதான் காங்கிரசின் பிரதமர் பதவி வேட்பாளர்': ஷிண்டே
- ராஜஸ்தானில் ராகுல் காந்தி பிரசாரம் தொடங்கினார்
- காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி
- காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு மாற்றான ஒரு அரசை மக்கள் விரும்புகிறார்கள்: முலாயம் சிங்
- லூதியானாவில் 2 வயது குழந்தையை கடத்தி பாலியல் சித்ரவதை
- ஆசாராம் பாபுவிடம் போதைமருந்து சோதனை நடத்தவேண்டும்: பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பேட்டி
- பிரதமர் வேட்பாளர்: எல்.கே.அத்வானியுடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு
- டெல்லி மாணவி கற்பழித்து கொலை: வெள்ளிக்கிழமை தீர்ப்பு
| செவ்வாய் கிரக ஆய்வுக்காக இந்தியா அனுப்பும் விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படுகிறது Posted: 11 Sep 2013 05:14 PM PDT செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பும் விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படுகிறது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக (இஸ்ரோ) செயற்கைகோள் மைய இயக்குனர் சிவகுமார், இந்திய தொலை உணர்வு செயற்கைகோள் திட்ட |
| திருவனந்தபுரத்தில் ஆஸ்பத்திரி உணவில் செத்த குட்டி பாம்பு Posted: 11 Sep 2013 04:45 PM PDT கேரளாவில் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு பெண்மணி, உடல் நலமில்லாத தனது மகனை சிகிச்சைக்காக சேர்த்திருந்தார். அங்குள்ள உணவு விடுதியில் அவர் தனது மகனுக்கு உணவு வாங்கி கொடுத்தார். அந்த உணவு பாக்கெட்டை (பச்சைப்பட்டாணி கறி) திறந்து பார்த்தால் அதில் ஒரு குட்டி பாம்பு செத்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ந்துபோனார். |
| 'ராகுல் காந்திதான் காங்கிரசின் பிரதமர் பதவி வேட்பாளர்': ஷிண்டே Posted: 11 Sep 2013 04:30 PM PDT ராகுல் காந்திதான் காங்கிரசின் பிரதமர் பதவி வேட்பாளர் என்று சுஷில்குமார் ஷிண்டே கூறினார். குஜராத் மாநில முதல்-மந்திரியும், பா.ஜனதா பிரசார குழு தலைவருமான நரேந்திரமோடியை கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்க பா.ஜனதா தயாராகி வருகிறது. இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவரும், |
| ராஜஸ்தானில் ராகுல் காந்தி பிரசாரம் தொடங்கினார் Posted: 11 Sep 2013 11:30 AM PDT ராஜஸ்தானில் தேதி அறிவிக்கும் முன்பாகவே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. அங்கு ராகுல்காந்தி பிரசாரம் தொடங்கினார். அப்போது அவர், எதிர்க்கட்சிகள் மக்கள் விரோத மனோபாவத்தை கொண்டிருப்பதாக சாடினார். ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் சட்டசபை |
| காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி Posted: 11 Sep 2013 05:29 AM PDT ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் உள்ள சோபியான் பகுதியில் கடந்த சனிக்கிழமை மத்திய ரிசர்வ் படை போலீசார் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். |
| காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு மாற்றான ஒரு அரசை மக்கள் விரும்புகிறார்கள்: முலாயம் சிங் Posted: 11 Sep 2013 05:28 AM PDT முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வருகிறது. இந்நிலையில் உ.பி.யில் நடந்துவரும் சமூக மோதல்கள் குறித்து சமாஜ்வாடி கட்சியின் இரண்டுநாள் தேசிய செயற்குழு கூட்டம் ஆக்ராவில் நடந்து வருகிறது. இதில் முலாயம் சிங் கலந்துகொண்டு பேசினார். |
| லூதியானாவில் 2 வயது குழந்தையை கடத்தி பாலியல் சித்ரவதை Posted: 11 Sep 2013 03:41 AM PDT டெல்லியில் 23 வயது மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள 4 வாலிபர்களுக்கான அதிகபட்ச தண்டனையை நாடே எதிர்நோக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டாலும், பாலியல் குற்றங்கள் மட்டும் குறைந்தபாடில்லை |
| ஆசாராம் பாபுவிடம் போதைமருந்து சோதனை நடத்தவேண்டும்: பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பேட்டி Posted: 11 Sep 2013 03:02 AM PDT உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| பிரதமர் வேட்பாளர்: எல்.கே.அத்வானியுடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு Posted: 11 Sep 2013 03:00 AM PDT குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாரதீய ஜனதா முடிவு செய்துள்ளது. நரேந்திர மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. அவரை தேர்தலுக்கு முன் அறிவிக்க வேண்டும் என்றும் மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள் |
| டெல்லி மாணவி கற்பழித்து கொலை: வெள்ளிக்கிழமை தீர்ப்பு Posted: 11 Sep 2013 02:35 AM PDT டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16–ந்தேதி ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். கும்பலுடன் போராடிய போது அவர் இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கப்பட்டு ரோட்டில் வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவி சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |