மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- போபாலில் 25-ந்தேதி பொதுக்கூட்டத்தில் அத்வானி- மோடி ஒரே மேடையில் பேசுகிறார்கள்
- குளியலறை பிரச்சினையில் வாலிபருக்கு கத்திக்குத்து
- திருவனந்தபுரத்தில் போலி ரத்தின கற்கள் விற்ற 4 பேர் கைது
- அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி
- நகர்ப்புற ஏழை மக்களுக்காக 15 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு
- கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ள விமானப் பயணக் கட்டணம்
- இந்திய பொருளாதாரம் விரைவில் சீரடையும்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
- தனி தெலுங்கானா பிரச்சினை: சீமாந்திரா பகுதி காங். எம்.பி.க்கள் சோனியாவை சந்தித்து பேச முடிவு
- டி-சர்ட் அணிந்து அலுவலகம் வரக்கூடாது: கர்நாடக அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு
- பாராளுமன்ற தேர்தலுக்கு முன் பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்காது: ஆர்.பி.என்.சிங் பேட்டி
- அண்ணா பிறந்தநாளையொட்டி 131 காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள்: ஜெயலலிதா உத்தரவு
- பா.ஜனதாவால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்: நரேந்திர மோடி பேச்சு
- மோடியை வேட்பாளராக நிறுத்தி பா.ஜ.க. தலையில் மண்ணை வாறிக்கொட்டி கொண்டுள்ளது: சமாஜ்வாடி கட்சி
- முசாபர் நகரில் இயல்பு நிலை திரும்புகிறது
- பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட ரூ. 85 கோடி ஹெராயின் பஞ்சாபில் பறிமுதல்
- டெல்லி கற்பழிப்பு வழக்கு: சர்ச்சையில் சிக்கிய எதிர்தரப்பு வழக்கறிஞர்
- மேற்கு வங்க கல்லூரிகளில் ராகிங்: 4 மாணவர்கள் கைது-22 பேர் சஸ்பெண்ட்
- அத்வானியுடன் கருத்து வேறுபாடு இல்லை: ராஜ்நாத் சிங் பேட்டி
- இந்தியாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம்: கனடா நம்பிக்கை
- மோடியை முன்னிலைப்படுத்தியதால் அழிவுப்பாதையில் செல்கிறது பா.ஜனதா: நிதிஷ் குமார்
| போபாலில் 25-ந்தேதி பொதுக்கூட்டத்தில் அத்வானி- மோடி ஒரே மேடையில் பேசுகிறார்கள் Posted: 14 Sep 2013 10:51 PM PDT பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடியை தேர்வு செய்ய மூத்த தலைவரான அத்வானி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கட்சி தலைவர் களுக்கும் அத்வானிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவரது எதிர்ப்பையும் மீறி நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அத்வானிக்கு ஆதரவாக இருந்த சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டவர்கள் கூட கடைசி நேரத்தில் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்தனர். |
| குளியலறை பிரச்சினையில் வாலிபருக்கு கத்திக்குத்து Posted: 14 Sep 2013 10:46 PM PDT மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் உள்ள நேரு நகரில் நதுஜி பாவ்னே, அருண் என்ற சகோதரர்கள் தங்களின் பூர்வீக வீட்டை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு அதில் தனித்தனியே வசித்து வருகின்றனர். ஆனால் அங்கிருந்த குளியலறை இரண்டு வீட்டினராலும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இரண்டு குடும்பத்தினருக்கும் இடையில் உறவுகள் சரியில்லாத நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று குளியலறையைப் பயன்படுத்துவதில் இரண்டு சகோதரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்ச் |
| திருவனந்தபுரத்தில் போலி ரத்தின கற்கள் விற்ற 4 பேர் கைது Posted: 14 Sep 2013 10:40 PM PDT திருவனந்தபுரம் பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் லாலு. இவரது மனைவி வினுமோள். சம்பவத்தன்று இவர்களது வீட்டுக்கு 4 பேர் வந்தனர். அவர்கள் தங்களிடம் ரத்தின கற்கள் இருப்பதாகவும், அதை குறைந்த விலைக்கு விற்க உள்ளதாகவும் கூறினார்கள். அப்போது வீட்டில் வினுமோள் மட்டும் இருந்தார். அவரிடம் அந்த கும்பல் சாதுரியமாக பேசியதால் அவரும் ரத்தின கற்களை வாங்க |
| அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி Posted: 14 Sep 2013 10:06 PM PDT இந்திய ராணுவ விஞ்ஞானிகள் அக்னி ஏவுகணைகளை தயாரித்து சோதனை நடத்தி வருகிறார்கள். அக்னி ஏவுகணையானது கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரியின் இலக்கை தாக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது. அந்த வரிசையில் தற்போது 'அக்னி 5' ஏவுகணையை விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர். இன்று காலை 8.50 மணிக்கு இது சோதித்து பார்க்கப்பட்டது. ஒடிசாவில் வீலர் தீவில் உள்ள ஏவுகணை |
| நகர்ப்புற ஏழை மக்களுக்காக 15 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு Posted: 14 Sep 2013 08:45 PM PDT பஞ்சாப், அரியானா மாநிலங்களின் தலைநகராகவும், யூனியன் பிரதேசமாகவும் விளங்குகிற சண்டிகார் புறநகரில் குடிசைவாழ் மக்களுக்காக ரூ.2 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான வீட்டுவசதி திட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் நேற்று தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நகர்ப்புற மக்கள் தொகை அதிரடியாக உயர்ந்துள்ளது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் நகர்ப்புற கட்டமைப்பு தேவையில் மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தும். அடுத்த 20 ஆண்டுகளில் நகர்ப்புற மக்கள் தொகை 22 கோடி உயரும். நகரங்களில் குடிசைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, |
| கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ள விமானப் பயணக் கட்டணம் Posted: 14 Sep 2013 05:30 PM PDT கடந்த இரண்டு வாரங்களாக விமானப் பயணக் கட்டணங்கள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகின்றன. சென்ற மூன்று வருடங்களில் இல்லாத அளவிற்கு 55 சதவிகிதம் கட்டண உயர்வுகள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன |
| இந்திய பொருளாதாரம் விரைவில் சீரடையும்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நம்பிக்கை Posted: 14 Sep 2013 05:05 PM PDT ஜனாபதி பிரணாப் முகர்ஜி, தனது சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்திற்கு 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சென்றார். தனி விமானத்தில் கொல்கத்தா சென்று இறங்கிய அவரை விமான நிலையத்தில் மாநில கவர்னர் எம்.கே. நாராயணன், மாநில மந்திரிகள், உயர் அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர் |
| தனி தெலுங்கானா பிரச்சினை: சீமாந்திரா பகுதி காங். எம்.பி.க்கள் சோனியாவை சந்தித்து பேச முடிவு Posted: 14 Sep 2013 04:10 PM PDT ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகளையும் மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. ஆனால் ஆந்திராவை பிரிக்கக் கூடாது. தொடர்ந்து ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் நீடிக்க வேண்டும் என்று சீமாந்திரா பகுதி காங்கிரசார் |
| டி-சர்ட் அணிந்து அலுவலகம் வரக்கூடாது: கர்நாடக அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு Posted: 14 Sep 2013 04:03 PM PDT அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து கர்நாடக அரசு அரசாணை பிறப்பித்தது. இது தொடர்பாக கர்நாடக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் ஒரு அரசாணை பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது |
| பாராளுமன்ற தேர்தலுக்கு முன் பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்காது: ஆர்.பி.என்.சிங் பேட்டி Posted: 14 Sep 2013 03:00 PM PDT பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி நேற்று முன்தினம் நடந்த அக்கட்சியின் ஆட்சி மன்றகுழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் மத்திய வீட்டு வசதித்துறை மந்திரி ஆர்.பி.என்.சிங்கை டெல்லியில் நிருபர்கள் சந்தித்து பா.ஜனதா |
| அண்ணா பிறந்தநாளையொட்டி 131 காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள்: ஜெயலலிதா உத்தரவு Posted: 14 Sep 2013 01:46 PM PDT தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை மற்றும் தமிழ்நாடு விரல் ரேகைப்பிரிவு அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணி புரிந்ததை |
| பா.ஜனதாவால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்: நரேந்திர மோடி பேச்சு Posted: 14 Sep 2013 01:09 PM PDT பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான ஆட்சிமன்ற குழுவின் கூட்டம் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடந்தது. கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தை மூத்த தலைவரான அத்வானி புறக்கணித்தார் |
| மோடியை வேட்பாளராக நிறுத்தி பா.ஜ.க. தலையில் மண்ணை வாறிக்கொட்டி கொண்டுள்ளது: சமாஜ்வாடி கட்சி Posted: 14 Sep 2013 01:00 PM PDT பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி கடும் அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில் நரேந்திர மோடியை தேர்ந்தெடுத்தது குறித்து சமாஜ்வாடி விமர்சித்துள்ளது. |
| முசாபர் நகரில் இயல்பு நிலை திரும்புகிறது Posted: 14 Sep 2013 12:23 PM PDT உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இது அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் பரவியது. இந்த கலவரத்தில் 47 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து முசாபர்நகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு |
| பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட ரூ. 85 கோடி ஹெராயின் பஞ்சாபில் பறிமுதல் Posted: 14 Sep 2013 12:11 PM PDT பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பகுதி பாகிஸ்தான் எல்லையோரமாக நேற்று அதிகாலை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து சென்றனர். அதிகாலை 3.35 மணி அளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய பகுதிக்குள் ஆள் நடமாட்டம் இருப்பதை வீரர்கள் அப்போது கண்டனர். |
| டெல்லி கற்பழிப்பு வழக்கு: சர்ச்சையில் சிக்கிய எதிர்தரப்பு வழக்கறிஞர் Posted: 14 Sep 2013 09:13 AM PDT டெல்லியில் மாணவி கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 குற்றவாளிகளின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.சிங், தனது கருத்துக்களால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட |
| மேற்கு வங்க கல்லூரிகளில் ராகிங்: 4 மாணவர்கள் கைது-22 பேர் சஸ்பெண்ட் Posted: 14 Sep 2013 07:37 AM PDT மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் ராகிங்கில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 22 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சேராம்பூரில் 100 ஆண்டு பழமை வாய்ந்த அரசு பொறியியல் மற்றும் ஜவுளி தொழில்நுட்ப கல்லூரியில், தகவல் தொழில்நுட்பம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஆரிஜித் சிக்தரை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர் |
| அத்வானியுடன் கருத்து வேறுபாடு இல்லை: ராஜ்நாத் சிங் பேட்டி Posted: 14 Sep 2013 07:11 AM PDT பா.ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நியமித்ததில் அத்வானியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. மோடி பிரதமர் வேட்பாளர் ஆகக்கூடாது என்று அத்வானி ஒருபோதும் கூறவில்லை. இதேபோல் கட்சியில், அத்வானி தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக கூறும் பேச்சுக்கே இடமில்லை. |
| இந்தியாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம்: கனடா நம்பிக்கை Posted: 14 Sep 2013 07:00 AM PDT இந்தியாவுடனான தனது வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்தும் திட்டத்தில் கனடா செயல்பட்டு வருகின்றது. இதற்கான இரு தரப்பு அரசுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றத்தைத் தரக்கூடியவையாக அமையவேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. |
| மோடியை முன்னிலைப்படுத்தியதால் அழிவுப்பாதையில் செல்கிறது பா.ஜனதா: நிதிஷ் குமார் Posted: 14 Sep 2013 06:20 AM PDT பா.ஜனதா கட்சியில் மோடியை பிரதமர் வேட்பாளராக நியமித்ததால், அந்த கட்சி அழிப்பாதையில் சென்றுகொண்டிருப்பதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடுமையாக தாக்கினார். பிரதமர் வேட்பாளராக மோடி நியமனம் குறித்து நிதிஷ் குமார் மேலும் கூறியதாவது:- மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் விலைவாசி உயர்வு மற்றும் ஊழல் உள்ளிட்ட |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |