Tamil Star |
- இந்திய பொருளாதாரம் விரைவில் சீரடையும்: பிரணாப் முகர்ஜி
- ஒடிசாவில் பாதுகாப்புப் படையினர் அதிரடித் தாக்குதல்: 13 பேர் பலி – ஆயுதங்கள் மீட்பு
- ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் கொலைகளில் கருணாவிற்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் தொடர்பு –விக்கிலீக்ஸ்
- தப்பிக்க பார்க்கிறார் ராஜபக்சே : நாடுகடந்த தமிழீழ அரசின் எம்.பி. குற்றச்சாட்டு
- டக்லஸ் தேவானந்தா, சிறுவர்,சிறுமிகளை பாலியல் தொழிலுக்காக சிங்கள அரசின் துணையுடன் விற்றதை அம்பல்படுத்திய விக்கிலீக்ஸ்
- விக்னேஸ்வரனின் உதாரணமும் சீமானின் கண்டனமும்.
- வடக்கிற்கும் அதிகாரமாம்! யாழ்ப்பாணத்தினில் மஹிந்த!!
- கொழும்பு வர மன்மோகன்சிங் நிபந்தனை விதிக்கவில்லை – சிறிலங்கா
- சம்பந்தன் உயிர் வாழ படை வீரர்கள்தான் காரணம்!
- புதன் நள்ளிரவு தொடக்கம் தேர்தல் பரப்புரைகளுக்கு தடை – தேர்தல் ஆணையாளர் உத்தரவு
| இந்திய பொருளாதாரம் விரைவில் சீரடையும்: பிரணாப் முகர்ஜி Posted: 14 Sep 2013 08:21 PM PDT ஜனாபதி பிரணாப் முகர்ஜி, தனது சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்திற்கு 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சென்றார். தனி விமானத்தில் கொல்கத்தா சென்று இறங்கிய அவரை விமான நிலையத்தில் மாநில கவர்னர் எம்.கே. நாராயணன், மாநில மந்திரிகள், உயர் அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர். கவர்னர் மாளிகையில் அவரை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் என்ன பேசிக்கொண்டனர் என்பது வெளியிடப்படவில்லை. கொல்கத்தாவில் வங்காள தொழில், […] |
| ஒடிசாவில் பாதுகாப்புப் படையினர் அதிரடித் தாக்குதல்: 13 பேர் பலி – ஆயுதங்கள் மீட்பு Posted: 14 Sep 2013 08:13 PM PDT ஒடிசா மாநிலம், மல்கான்கிரி மாவட்டம் போடியா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் சனிக்கிழமை அதிகாலை நடத்திய அதிரடித் தாக்குதலில் பெண் உள்பட 13 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இது என்றும், மாவோயிஸ்டுகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளது இதுவே முதன்முறை என்றும் கூறப்படுகிறது. கடந்த மே மாதம் 25-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தார் மாவட்டத்தில் காங்கிரஸார் நடத்திய பேரணியில் மாவோயிஸ்டுகள் நடத்திய […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் கொலைகளில் கருணாவிற்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் தொடர்பு –விக்கிலீக்ஸ் Posted: 14 Sep 2013 07:51 PM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் படுகொலைகளுடன் , பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்காவை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கருணாவுக்கும், ஈ.பி.டி.பி. பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. முன்னாள் EPDPயின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி கே. விக்னேஸ்வரன் தெரிவித்ததாக அமெரிக்கத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு […] |
| தப்பிக்க பார்க்கிறார் ராஜபக்சே : நாடுகடந்த தமிழீழ அரசின் எம்.பி. குற்றச்சாட்டு Posted: 14 Sep 2013 07:45 PM PDT காமென்வெல்த் மாநாட்டை பயன்படுத்தி போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்கபார்க்கிறார் ராஜபக்சே என்று நாடுகடந்த தமிழீழ அரசின் எம்.பி. சரஸ்வதி குற்றச்சாட்டினார். மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நாடுகடந்த தமிழீழ அரசின் எம்.பி. சரஸ்வதி, ''இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்கள் மூலம் நடத்திய இனப்படு கொலையின் கோரமுகத்தை சர்வதேச நாடுகளுக்கு கொண்டு செல்லும் நோக்கத்திலும், ஈழத்தமிழர்களுக்கு ஒரே தீர்வு தனி தமிழீழம் தான் என்ற கோரிக்கையை முன்னெடுத்து செயல்படு வதற்கும் புலம் பெயர்ந்த தமிழர்களால் […] |
| Posted: 14 Sep 2013 07:39 PM PDT இலங்கையில் ஈ.பி.டி.பி என்ற இராணுவத் துணைக்குழுவினால் தமிழ்ச் சிறுவர்கள் அடிமைகளாக விற்கப்படுவதாக விக்கிலீக்ஸ் இரகசியத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முன்னாள் சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரோபேட் ஓ பிளாக்கினால் எழுதப்பட்ட கேபிளில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கையில்: ஈ.பி.டி.பி என்கிற இராணுவ துணைக்குழுவினால் குறிப்பாக ஆண் சிறுவர்கள் அடிமை வேலைகளை மேற்கொள்ளவும், பெண் சிறுமிகள் விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்தவும் இந்தியா […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| விக்னேஸ்வரனின் உதாரணமும் சீமானின் கண்டனமும். Posted: 14 Sep 2013 07:36 PM PDT இலங்கையில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி நடக்கவிருக்கும் வடமாகாணசபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் சி வி விக்னேஸ்வரன் தி ஹிந்து பத்திரிக்கைக்கு பேட்டியளித்திருந்தார். அதில், இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று குற்றம் சுமத்தியிருந்தார். குறிப்பாக இலங்கை பிரச்சனைக்கு தனித்தமிழ் ஈழமே தீர்வு என்று தமிழக அரசியல்வாதிகள் சொல்வதால் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மோசமாக பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். இலங்கையில் […] |
| வடக்கிற்கும் அதிகாரமாம்! யாழ்ப்பாணத்தினில் மஹிந்த!! Posted: 14 Sep 2013 07:33 PM PDT தெற்கிலுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைப்புக்கள் கொண்டுள்ள அதிகாரங்களை வடக்கிற்கும் வழங்கப்போவதாக மஹிந்த தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையினில் வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகளும் புத்திஜீவிகளும் மீண்டும் இங்கு வந்து வாழவேண்டுமென்பதுடன் இங்கு வாழும் மக்களுக்காக அவர்களும் சேவை செய்ய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.யாழ்.துரையப்பா விளையாட்டரங்கினில் இடம்பெற்ற ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பிரச்சாரக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிலையில் பழைய சம்பவங்களை நாம் பேசுவது அர்த்தமும் அல்ல நல்லதுமல்ல. நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| கொழும்பு வர மன்மோகன்சிங் நிபந்தனை விதிக்கவில்லை – சிறிலங்கா Posted: 14 Sep 2013 07:30 PM PDT கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்கு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளதாக சில ஊடகங்களில் வெளியான தகவல்களை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம, "கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்கு மூன்று நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய தரப்பில் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை." என்று தெரிவித்துள்ளார். கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது என்று தமிழ்நாட்டில் இருந்து தொடர்ச்சியாக அழுத்தங்கள் […] |
| சம்பந்தன் உயிர் வாழ படை வீரர்கள்தான் காரணம்! Posted: 14 Sep 2013 07:27 PM PDT தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இன்று கடுமையாக விமர்சிக்கும் இதே பாதுகாப்பு தரப்பினர் தான் ஒரு காலத்தில் அவரின் உயிரை காபபாற்றி அவரை தேர்தலில் வெற்றிபெற வைத்தனர். அதனை இன்று சம்பந்தனும் அவருடன் கூட உள்ளவர்களும் மறந்து விட்டனர் என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். வடக்குத் தேர்தல் காலத்தில் இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்க வேண்டும் என்று கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு […] |
| புதன் நள்ளிரவு தொடக்கம் தேர்தல் பரப்புரைகளுக்கு தடை – தேர்தல் ஆணையாளர் உத்தரவு Posted: 14 Sep 2013 07:18 PM PDT வடக்கு, வடமேல், மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல் பரப்புரைகள் அனைத்தும் வரும் 18ம் நாள் நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வதற்கும், அரசியல் விளம்பரங்கள் மற்றும் அறிக்கைளை வெளியிடுவதற்கும், ஒலிபரப்பவும் ஒளிபரப்பவும், வரும் 18 ம் நாள் நள்ளிரவு 12 மணி தொடக்கம், தேர்தல் முடியும் வரைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் தேர்தல் தொடர்பாக அரசியல்கட்சிகள், […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |