Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் ஆந்திரா ராணுவ வீரர் பலி

Posted: 26 Sep 2013 10:56 PM PDT

காஷ்மீரில் நேற்று ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் போலீஸ் நிலையம், ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினார்கள். அடுத்தடுத்து நடந்த இந்த இரட்டை தாக்குதலில் ராணுவ அதிகாரி உள்பட 13 பேர் பலியானார்கள். பலியானவர்களில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரரும் ஒருவர். அவரது பெயர் மீசாலா ஸ்ரீனிவாசராவ் (வயது 34). இவர் விஜயநகர மாவட்டம் மெண்டாடா கிராமத்தைச் சேந்தவர்.

திருப்பதி கோவில் பிரமோற்சவத்துக்கு கூடுதல் பஸ்கள்

Posted: 26 Sep 2013 10:38 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவில் புரட்டாசி மாத பிரமோற்சவம் அடுத்த மாதம் 5–ந் தேதி தொடங்குகிறது. 13–ந் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் மாடவீதிகளில் மலையப்ப சுவாமியின் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. திருவிழாக்காலங்களில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அணிவிக்கப்படும்

ஆந்திர அரசு ஊழியர்களுடன் டெல்லியில் ஜெகன்மோகன் தாயார் போராட்டம்

Posted: 26 Sep 2013 10:11 PM PDT

ஆந்திராவில் தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். சுமார் 1 மாதத்துக்கு மேலாக நடக்கும் இந்த வேலை நிறுத்தத்தால் அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. அதோடு அவர்கள் தினமும் வீதியில் இறங்கி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் சீமாஆந்திர அரசு ஊழியர்கள் டெல்லியில் 3 நாள் போராட்டத்தை நேற்று தொடங்கினார்கள். இந்த போராட்டத்துக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. நேற்று ஆந்திரா பவனில் இருந்து இந்தியா கேட் வரை பேரணி நடத்தினார்கள். இன்று 2-வது நாளாக ஆந்திராபவனில் இருந்து பேரணியாக புறப்பட்டு ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டம் நடத்துகிறார்கள். இந்த போராட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கவுரவ தலைவரும், ஜெகன்மோகன் ரெட்டியின் தாயாருமான விஜயம்மா கலந்து கொண்டார். அவருடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பதவி பறிப்பில் இருந்து எம்.பி.க்களை பாதுகாக்கும் அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரி மிலிந்த் தியோரா எதிர்ப்பு

Posted: 26 Sep 2013 08:42 PM PDT

எம்.பி.க்களை பதவி பறிப்பில் இருந்து பாதுகாக்கும் அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரி மிலிந்த் தியோரா எதிர்ப்பு தெரிவித்தார். குற்ற வழக்குகளில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தீர்ப்பு வெளியான உடனே, பதவி இழந்து விடுவார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை 10-ந்தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை செயலிழக்க செய்வதற்காக, மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கிடையே, அவசர சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன. காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கூறுகையில், 'இதுபோன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில், அனைத்து கட்சிகளிடையே கருத்து ஒற்றுமையை உருவாக்கிய பிறகே

2ஜி வழக்கை விசாரிக்கும் பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது

Posted: 26 Sep 2013 08:15 PM PDT

பரபரப்பான சூழ்நிலையில் 2ஜி வழக்கை விசாரித்து வரும் பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. ஆ.ராசாவை சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், கூட்டுக்குழுவில் அறிக்கை நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து விசாரித்து வரும் பாராளுமன்ற கூட்டுக்குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய புதிய ஆவணங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், எனவே இந்த கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவர் பி.சி.சாக்கோவுக்கு, தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பினார். ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்த பி.சி.சாக்கோ, திட்டமிட்டபடி கூட்டுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பான இறுதி அறிக்கையை இன்றைய கூட்டத்தில் ஓட்டெடுப்புக்கு விட்டு நிறைவேற்ற அவர் உறுதியாக இருப்பதாகவும் தெரிகிறது.

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: காங்கிரஸ் எம்.பி.க்கு சி.பி.ஐ. நோட்டீஸ்

Posted: 26 Sep 2013 05:21 PM PDT

காங்கிரஸ் எம்.பி.யும், தொழிலதிபருமான நவீன் ஜிண்டாலுக்கு சொந்தமான நிறுவனங்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளன. இந்த நிறுவனங்கள் முன்னாள் மத்திய நிலக்கரி சுரங்கத்துறை இணை மந்திரி தாசரி நாராயண ராவிடம் இருந்து நிலக்கரி சுரங்கங்களை முறைகேடாக பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

ஊழலை எதிர்த்து போராடியதற்காக அன்னா ஹசாரேவுக்கு 1 லட்சம் டாலர் பரிசு

Posted: 26 Sep 2013 04:34 PM PDT

ஊழலை எதிர்த்து போராடியதற்காக, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு ஒரு லட்சம் டாலர் (ரூ.62 லட்சம்) பரிசு வழங்கப்பட்டது. கனடா நாட்டின் வான்கூவர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் கொலம்பியா சட்ட

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: மன்மோகன்சிங் பிறந்த நாளை கொண்டாடவில்லை

Posted: 26 Sep 2013 03:36 PM PDT

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக பிரதமர் மன்மோகன்சிங், தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. பிரதமர் மன்மோகன்சிங், 1932–ம் ஆண்டு செப். 26-ம் தேதி பஞ்சாப்

தீவிரவாதிகள் தாக்குதலுக்கு மன்மோகன்சிங் கண்டனம்

Posted: 26 Sep 2013 01:47 PM PDT

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்தார். எல்லைக்கு அப்பால் இருந்து தீவிரவாதத்துக்கு ஊக்கம் அளிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

கோவா சுற்றுலாத்துறைக்கு வர்த்தக தூதுவர்கள் தேவையில்லை: அரசு முடிவு

Posted: 26 Sep 2013 12:27 PM PDT

சில வருடங்களுக்கு முன்னால் கோவா மாநிலத்தின் சுற்றுலாத்துறைக்கு வர்த்தக தூதுவராக நடிகை பிரச்சி தேசாய் செயல்பட்டார். தற்போது மீண்டும் விளம்பர ஏஜென்சிகள் கோவா அரசை அணுகியுள்ளன.

பிரபலங்களின் வருமான வரிக் கணக்குகளை முடக்கிய மாணவர்

Posted: 26 Sep 2013 11:17 AM PDT

பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் வருமான வரிக் கணக்குகளை முடக்கியதாக ஹைதராபாத்தில் உள்ள சிஏ பயிற்சி பெறும் மாணவி ஒருவர் மீது பதினைந்து நாட்களுக்கு முன்பு மும்பையின் கிரைம் பிரான்ச் வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளது. இப்போது மீண்டும் நொய்டாவைச் சேர்ந்த சிஏ பயிற்சி பெறும் மாணவர் ஒருவர் மீது இந்தக் குற்றச்சாட்டு விழுந்துள்ளது.

பலவீனமான மத்திய அரசை தூக்கியெறிய வேண்டும்: திருச்சி மாநாட்டில் மோடி பேச்சு

Posted: 26 Sep 2013 09:56 AM PDT

தமிழ பாரதிய ஜனதாவின் இளைஞர் அணி சார்பில் திருச்சியில் இன்று இளந்தாமரை மாநாடு நடைபெற்றது. குஜராத் முதல் மந்திரியும், பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.

தீவிரவாதி துண்டாவின் மாமனாருக்கு மேலும் 4 நாள் போலீஸ் காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

Posted: 26 Sep 2013 09:27 AM PDT

லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி அப்துல்கரீம் என்ற துண்டா (70). இந்தியாவில் தேடப்பட்டு வந்த மிக முக்கியமான 20 தீவிரவாதிகளில் ஒருவனான துண்டா, சமீபத்தில் நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இவனுக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடந்த 40–க்கும் மேற்பட்ட

நிலக்கரி ஊழல் வழக்கு: குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய தொடங்குகிறது சி.பி.ஐ.

Posted: 26 Sep 2013 08:19 AM PDT

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. 1993 முதல் 2011ம் ஆண்டு வரை 192 நிலக்கரி சுரங்கள் ஒதுக்கீடு செய்ததில் நடைபெற்ற முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

அசாமில் போடோலேண்ட் போராளிகள் தாக்குதல்: 2 போலீசார் பலி

Posted: 26 Sep 2013 07:48 AM PDT

அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தின் பனெரிகுரி மற்றும் மக்ரிஜகரா காட்டுப்பகுதி இடையே போலீசார் இன்று மதியம் வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். இவர்கள் அப்பகுதியில் செயல்பட்டு வரும் ரஞ்சன் டைமாரி என்ற போராளிகள் குழுவிடம் சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவிட்டு இந்த மலைப்பகுதி வழியே

அவசர சட்டத்தில் கையெழுத்திடக் கூடாது: ஜனாதிபதியிடம் பா.ஜனதா தலைவர்கள் வேண்டுகோள்

Posted: 26 Sep 2013 07:12 AM PDT

தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்வதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பின்னர் இந்த அவசர சட்டம் நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று

காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Posted: 26 Sep 2013 06:46 AM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலம் காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியை கடந்து கெரன் செக்டரில் பாகிஸ்தானை சேர்ந்த 30 தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றனர். துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த கூடாது - பா.ஜனதா எதிர்ப்பு

Posted: 26 Sep 2013 01:10 AM PDT

காஷ்மீரில் தீவிரவாதிகள் இன்று இரட்டை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். ராணுவ உடையில் வந்து 4 போலீசார் உள்பட 12 பேரை சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது

சீக்கிய அமைப்பு தொடர்ந்த வழக்கு: பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அமெரிக்க கோர்ட்டு சம்மன்

Posted: 26 Sep 2013 12:30 AM PDT

ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் சீக்கியர் அமைப்பு தொடர்ந்த வழக்கில் அமெரிக்க கோர்ட்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்பி உள்ளது. 1990–ம் ஆண்டுகளில் பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நீதிக்கான சீக்கியர்

திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு முன் பசுக்களை வழிபட ஏற்பாடு

Posted: 25 Sep 2013 11:47 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் "பசுக்களை பராமரிக்க" கீழ் திருப்பதியில் கோசாலை உள்ளது. இங்கு இடப்பற்றாக்குறை உள்ளதால் பலம்நேரு தொகுதியில் 800 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய கோசாலையை தேவஸ்தானம் அமைத்து வருகிறது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™