Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


யாழ் மாவட்டத்தில் 16 வைத்தியசாலைகள் இயங்க வைக்க முடியாத நிலையில்

Posted: 26 Sep 2013 11:00 PM PDT

Jaffna.hospital2

Jaffna.hospital2யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து வருடாந்த இடமாற்றம் பெற்றுள்ள வைத்தியர்களை விடுவிக்க யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா மறுத்து வருகின்றார் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ். போதனா வைத்தியசாலையில் வருடாந்த இடமாற்றம் பெற்றுள்ள சுமார் 44 வைத்தியர்களை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பவானி பசுபதிராஜா விடுவிக்க மறுத்து வருவதால் யாழ் மாவட்டத்தில் உள்ள மூடப்பட்டுள்ள 16 வைத்தியசாலைகளை இயங்க வைக்க முடியாமல் உள்ளது. மேலும் மிகுந்த ஆளணி பற்றாக;குறையுடன் இயங்கிவரும் சிறு வைத்தியசாலைகளின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தென் பகுதியில் உள்ள கராபிட்டி போதனா வைத்தியசாலை சுமார் 119 வைத்தியர்களை (மூன்றிலொரு பங்கு ) விடுவித்து இயங்கி வருவதை இங்கு சிறந்த உதாரணமாய் இங்கு குறிப்பிடலாம். மேலும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்கள் சுகாதார அமைச்சுடன் தொடர்பற்ற யாழ். பல்கலைகழக வைத்தியர் சு.ரவிராஜ் ஆகியோரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலை மீறியும் செயற்பட்டு வருகின்றனர். இதனால் யாழ்.மாவட்டத்தில் சுகாதார சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களாயின் யாழ். போதனா வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள சுமார் 58 வைத்தியர்களுக்கு நாட்டின் வேறு பகுதிகளுக்கு நியமனம் வழங்குவதை தடுக்க முடியாது. இதனால் ஏற்படும் சுகாதார சேவை பாதிப்புகளுக்கு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பவானி பசுபதிராஜா, யாழ் பல்கலைகழக வைத்தியர் சு.ரவிராஜ் போன்றவர்களே பொறுப்புகூற வேண்டும் என்பதை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றது. என குறிப்பிடப்பட்டுள்ளது

This posting includes an audio/video/photo media file: Download Now

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு ஒரு லட்சம் டாலர் பரிசு

Posted: 26 Sep 2013 07:34 PM PDT

Anna-hazare

Anna-hazareஊழலை எதிர்த்து போராடியதற்காக, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு ஒரு லட்சம் டாலர் (ரூ.62 லட்சம்)  வழங்கப்பட்டது. கனடா நாட்டின் வான்கூவர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் கொலம்பியா சட்ட பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச நேர்மைக்கான இந்த அல்லார்டு பரிசு வழங்கப்பட்டது. ஊழலை எதிர்த்து போராடுபவர்கள் மற்றும் மனித உரிமைக்காக போராடுபவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில் பேசிய அன்னா ஹசாரே, 'எனக்கு பணம், சொத்து மீது ஆசை இல்லை. இருப்பினும், இந்த பரிசை பெற்றதன் மூலம், ஊழலுக்கு எதிரான எனது வாழ்நாள் போராட்டம் மேலும் வலிமை அடையும். இந்த சர்வதேச அங்கீகாரம் மூலம் மாற்றத்துக்கான இயக்கம் வலுப்பெறும்' என்று கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ . நா .மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் கருத்துக்கு அமெரிக்கா ஆதரவு

Posted: 26 Sep 2013 07:16 PM PDT

american-flag-2a

american-flag-2aஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் கருத்துக்கு அமெரிக்கா ஆதரவினை வெளியிட்டுள்ளது.

குற்றச் செயல் விசாரணை, குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு காத்திரமான வகையில் தீர்வு காணாவிட்டால், சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.

நவனீதம்பிள்ளையின் மதிப்பீடுகள் கவனத்திற் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளது

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அரசாங்கம் பயன்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச் சாட்டுக்கள் குறித்து சர்வதேச தரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வட பகுதியில், இருந்து சிறிலங்கா இராணுவத்தை விலக்குவதற்கு இந்தியா உதவும்

Posted: 26 Sep 2013 07:03 PM PDT

gk vasan

gk vasanசிறிலங்காவின் வடக்குப் பகுதியில், இருந்து சிறிலங்கா இராணுவத்தை விலக்கிக் கொள்வதற்கு இந்தியா உதவும் என்றும் இந்திய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

"இந்திய அரசாங்கத்தின் நெருக்கடியினால் தான், சிறிலங்கா அரசாங்கம் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்தியுள்ளது.

படைக்குறைப்பின் மூலமே, சிறிலங்காவின் வடக்குப் பகுதியில், அமைதி சாத்தியமாகும்.

வடக்கு மாகாணத்தின் முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி. விக்னேஸ்வரன், சிறிலங்கா இராணுவம் அங்கிருந்து விலக வேண்டும் என்பதை தனது முதல் கோரிக்கையாக முன்வைத்துள்ளார்.

அதற்கான சூழலை இந்திய அரசாங்கம் உருவாக்கிக் கொடுக்கும். அது ஒன்றே அங்கு அமைதியை திரும்ப வைக்கும்.

அங்குள்ள தமிழர்களை சமமாகவும் கௌரவமாகவும் நடத்தும்படி சிறிலங்காவை இந்தியா வலியுறுத்தும்." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆல்ப்ஸ் மலையில் திடீர் அதிர்ஷ்டம் : புதையலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பிரான்சு நாட்டு வாலிபர்

Posted: 26 Sep 2013 06:57 PM PDT

alps

alpsஆல்ப்ஸ் மலையில், பிரான்ஸ்–இத்தாலி நாட்டு எல்லையில் அமைந்துள்ள சிகரத்தில் ஏறிய பிரான்சு நாட்டு வாலிபர் ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்தது. பனிக்கட்டியால் ஆன அந்த சிகரத்தில் சிரமத்துடன் ஏறிய அவருக்கு பழங்கால பெட்டியில் விலை உயர்ந்த ஆபரண கற்கள் அடங்கிய புதையில் கிடைத்தது. அந்த பெட்டியில் இருந்த மரகதம், மாணிக்கம் மற்றும் நீல நிற கற்களின் மதிப்பு ரூ.2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. யாருக்கும் தெரியாத நிலையில், அந்த அபூர்வ புதையலை அவர் தனது வீட்டிற்கு எடுத்துச்சென்று இருக்கலாம். ஆனால், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அந்த புதையலை அந்த வாலிபர் ஒப்படைத்துவிட்டார். அந்த கற்களில் அவை இந்தியாவில் செய்யப்பட்டவை என்று பொறிக்கப்பட்டு இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1950 மற்றும் 1966–ம் ஆண்டுகளில் இரு ஏர் இந்தியா விமானங்கள் அந்த மலைச்சிகரத்தில் மோதி சிதறின. அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உயிர் இழந்து பனிப்பாறைக்குள் சமாதி ஆனார்கள். அந்த பயணிகளின் உடைமைகளும் அவர்களுடன் புதைந்துவிட்டன. தற்போது மலையேறும் வாலிபரிடம் கிடைத்தது அந்த பயணிகளில் ஒருவருடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது குறித்து இந்திய அரசுக்கு பிரான்சு அரசு தகவல் கொடுத்து அந்த பெட்டி பற்றிய விவரங்களை கேட்டு உள்ளது. இந்தியாவில் அந்த புதையலுக்கான உரிமையாளர் கண்டு பிடிக்கப்படாவிட்டால், பிரான்சு நாட்டு சட்டப்படி, அதைக் கண்டெடுத்த மலையேறும் வாலிபருக்கே அது சொந்தமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. புதையலை கண்டதும், நேராக போலீசாரிடம் ஒப்படைத்த அந்த வாலிபரின் நேர்மையை போலீசார் பாராட்டினார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வட மாகாணசபைத் தேர்தல்கள் மிகவும் முக்கியமானது : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு

Posted: 26 Sep 2013 06:47 PM PDT

European-Union

European-Unionதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது.

வட மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான நம்பிக்கையை உருவாக்க வழிகோலும் என சுட்டிக்காட்டியுள்ளது.
வட மாகாணசபைத் தேர்தல்கள் மிகவும் முக்கியமானது என ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசிய பாராளுமன்ற உறுப்பினர் ஜேன் லம்பார்ட் தெரிவித்துள்ளார்.
அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இரண்டு தரப்பினரும் முனைப்பு காட்ட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரனுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மற்றும் மாகாண ஆட்சியாளர்கள் ஒருங்கிணைந்து செயற்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒபாமாவுடன் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை

Posted: 26 Sep 2013 06:38 PM PDT

obama-manmohan

obama-manmohanஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் பிரதமர் மன்மோகன்சிங் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பிறகு, பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கா சென்றுள்ளார். முதலில், அவர் தலைநகர் வாஷிங்டனுக்கு சென்றார். அங்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை அவர் நாளை சந்தித்துப் பேசுகிறார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெறுகிறது. கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவது, இது 3--வது தடவை ஆகும். ஒபாமாவின் பதவிக்காலத்தில் மன்மோகன்சிங் அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வது, இது 2-வது தடவை ஆகும். முதலில், ஒபாமாவும், மன்மோகன்சிங்கும் தனியாக சந்தித்து பேசுகிறார்கள். அப்போது, இருதரப்பு விவகாரங்கள், பிராந்திய விவகாரங்கள், சர்வதேச விவகாரங்கள் ஆகியவை குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அமெரிக்க விசா விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றம் காரணமாக, இந்திய தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் பாதிக்கப்படுவது குறித்த இந்தியாவின் கவலைகளை மன்மோகன்சிங் எடுத்துக் கூறுவார் என்று தெரிகிறது. ஆக்கப்பூர்வ அணுசக்தி தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு போன்றவற்றில் வருங்கால ஒத்துழைப்பு பற்றி அவர்கள் விவாதிக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு ஏற்படும் நிலவரம் உள்ளிட்ட தெற்கு ஆசிய விவகாரம் குறித்தும், சிரியா உள்ளிட்ட சர்வதேச விவகாரம் குறித்தும் இருவரும் விவாதிக்கிறார்கள். இந்த சந்திப்பை தொடர்ந்து, இரு நாடுகளின் பிரதிநிதிகள் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பின்னர், இருதரப்புக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அவற்றில், பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களும் அடங்கும். பின்னர், பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஒபாமா மதிய விருந்து அளிக்கிறார். மேலும், பிரதமரின் மனைவி குர்சரண் கவுருக்கு ஒபாமாவின் மனைவி மிச்செல், தனியாக தேநீர் விருந்து அளிக்கிறார். இதுபோன்று அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி தேநீர் விருந்து அளிப்பது, அபூர்வமானது ஆகும். இது, ஒபாமா–மன்மோகன்சிங் இடையிலான பிணைப்பைக் காட்டுவதாக அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, மன்மோகன்சிங்கை சந்திக்க ஒபாமா ஆர்வமாக இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜே கர்னி நிருபர்களிடம் தெரிவித்தார். பொதுவான நோக்கங்கள் மற்றும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அவர் கூறினார். ஒபாமா சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன்சிங் நியூயார்க் செல்கிறார். அங்கு ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். 29–ந் தேதி, அங்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். முன்னதாக, பிரதமர் வருகை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரியுடன் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் ஆலோசனை நடத்தினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சனல் 4 தொலைக்காட்சியிடம் இலங்கையின் புது போர்குற்ற ஆதாரங்கள் ?

Posted: 26 Sep 2013 02:38 PM PDT

BreakingNews

BreakingNewsகொலைக்களங்கள் மற்றும் யுத்த சூனியப் பிரதேசம் போன்ற 3 ஆவணப் படத்தை தயாரித்த சனல் 4 தொலைக்காட்சியிடம் சமீபத்தில் மேலதிக வீடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி இதுவரை சுமார் 3 ஆவணப் படங்களை வெளியிட்டுள்ளது. கைகள் கட்டப்பட்ட நிலையில் தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவம் சுடும் காட்சி மற்றும் தேசிய தலைவரது மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் கொலைசெய்த காட்சிகள் என்பன இவற்றுள் அடங்கும். இருப்பினும் இதனை தவிர்த்து மேலதிகமாக பிறிதொரு போர்குற்ற ஆதார வீடியோ ஒன்று தற்போது சனல் 4 தொலைக்காட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என உள்ளக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இந்த வீடியோவில் இலங்கை இராணுவத்தினர் புரியும் கொடுமைகள் தெளிவாகப் பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோவின் நம்பகத் தன்மை தொடர்பாக ஆராய , இதனை கிராஃபிக்ஸ் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது உண்மையில் முள்ளிவாய்க்காலில் எடுக்கப்பட்ட வீடியோவா என்று ஆராய்ந்த பின்னர் அதனை வெளியிட இருப்பதாகவும் மேலும் அறியப்படுகிறது. ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக நவிப்பிள்ளை காரசாரமான விடையங்களை முன்வைத்துள்ளார். இதனை இலங்கை அரசு வன்மையாகக் கண்டித்தும் உள்ளது. நவிப்பிள்ளை வழங்கியுள்ள கால எல்லை பற்றி இலங்கை அரசு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இன் நிலையில் வரும் மார்ச் மாதம் மீண்டும் மனித உரிமைச் சபை கூடவுள்ளது. அதற்கு முன்னதாக இந்தப் போர்குற்ற ஆதார ஆவணப் படம் வெளியாகும் என்று பலராலும் எதிர்வு கூறப்படுகிறது. தற்போது சிக்கியுள்ள போர்குற்ற ஆதார வீடியோ வெளியாகும் பட்சத்தில் அது உலகளாவிய ரீதியாக பெரும் அதிர்வலைகளை தோற்றுவிக்கும் என்று நம்பப்படுகிறது. இதனூடாக இலங்கை மேல் மார்ச் மாதம் பாரிய அளவில் சர்வதேச அழுத்தம் ஒன்று பிரயோகிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

9 வயது மகளை சேர்ந்து நண்பர்களுடன் பலாத்காரம் செய்த கொடூர தந்தை

Posted: 26 Sep 2013 09:18 AM PDT

வயது மகளை நண்பர்களுடன் சேர்ந்து 2 வருடங்களாக வீட்டில் சிறைவைத்து தந்தையே பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகேயுள்ள குண்டரா படப்பக்கரையை சேர்ந்தவர் விஜயன்(44). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 15 ஆண்டுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. விஜயன் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவி, குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்தார். இதனால், அவரது மனைவி, குழந்தைகள் விஜயனிடமிருந்து […]

நீங்கள் தைரியமானவரா?…. இத்தருணத்தில் உங்களது மனநிலை எப்படியிருக்கும்?….

Posted: 26 Sep 2013 05:54 AM PDT

நீங்கள் தைரியமானவரா?…. இத்தருணத்தில் உங்களது மனநிலை எப்படியிருக்கும்?….

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™