Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சமூக மோதலில் 48 பேர் பலியானதற்கு மதவாத சக்திகளே காரணம்: அகிலேஷ் யாதவ்

Posted: 10 Sep 2013 10:20 PM PDT

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக இரு சமூகங்களிடையே (ஜாட்&முஸ்லிம்) நடந்த மோதலில் இதுவரை 48 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் முசாபர்நகரில் மட்டும் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று இரவு மற்ற மாவட்டங்களில் நடந்த மோதலில் 6 பேர் பலியாயினர்.

உம்மன்சாண்டியின் பாதுகாவலர் ஆள் கடத்தல் வழக்கில் கைது

Posted: 10 Sep 2013 09:31 PM PDT

கேரள முதல்-மந்திரியின் பாதுகாவலராக இருந்தவர் சலீம் ராஜ். இவருக்கு சோலார் பேனல் மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இவரை முதல்-மந்திரி அலுவலகம் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்தது. பின்னர் இவர் இந்த வழக்குக்காக கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் நேற்று இவரை கோழிக்கோடு போலீசார் ஒரு ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்தனர். அதன்விபரம் வருமாறு:- கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவரது மனைவி

கேதர்நாத் கோவிலில் மீண்டும் இன்று முதல் பூஜைகள் தொடக்கம்

Posted: 10 Sep 2013 08:29 PM PDT

உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் மலை மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம் பாய்ந்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. ஏராளமான பக்தர்கள் பலியானார்கள். ஆனால் பிரசித்தி பெற்ற கேதர்நாத் கோவில் சேதம் அடையவில்லை. கோவிலுக்கு செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் பூஜைகள் நிறுத்தப்பட்டன. கோவிலில் மீண்டும் பூஜை நடத்துவதற்காக கடந்த 3-ந் தேதி முதல் திருப்பணிகள் தொடங்கின. 86 நாட்களுக்குப்பிறகு இன்று (புதன்கிழமை) முறைப்படி பூஜைகள்

டெல்லி மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்: சுஷ்மா சுவராஜ் வற்புறுத்தல்

Posted: 10 Sep 2013 08:14 PM PDT

டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்றும், கற்பழிப்பு சம்பவங்களை தடுத்து நிறுத்த இது ஒரு பாடமாக அமையும் என்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறி உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் மேற்கண்டவாறு கூறிய அவர்; கற்பழிப்பு மற்றும் கொலை குற்றத்துக்கு தூக்கு தண்டனை விதிக்க புதிய சட்டம் வகை செய்கிறது

‘அதிகார வர்க்கத்திடம் இருந்து சுதந்திரம் வேண்டும்’: சி.பி.ஐ. கோரிக்கை

Posted: 10 Sep 2013 05:17 PM PDT

வழக்குகள் விசாரணையில், அதிகாரவர்க்கத்திடம் இருந்து தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று சி.பி.ஐ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் பற்றி 33 அதிகாரிகளை கொண்ட சி.பி.ஐ. குழு விசாரித்து வருகிறது.

2ஜி வழக்கில் சி.பி.ஐ. நேர்மையாக விசாரணை நடத்தவில்லை: ஆ.ராசா புகார்

Posted: 10 Sep 2013 04:25 PM PDT

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், சி.பி.ஐ. விசாரணை நேர்மையாக நடக்கவில்லை, சாட்சிகளை மிரட்டி பணிய வைத்தனர் என ஆ.ராசா சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதை சி.பி.ஐ. அதிகாரி மறுத்தார். மத்திய தொலை தொடர்புத்துறை மந்திரியாக ஆ.ராசா பதவி வகித்த காலத்தில், முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்

அமெரிக்காவில் இருந்து சோனியா இன்று டெல்லி திரும்புகிறார்

Posted: 10 Sep 2013 02:44 PM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 2-ந் தேதி அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மகள் பிரியங்காவும் சென்றார். மருத்துவ பரிசோதனை முடிந்து சோனியா காந்தி அமெரிக்காவில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை டெல்லி திரும்ப இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவிலுக்கு மகளை நரபலி கொடுத்த தந்தை கைது

Posted: 10 Sep 2013 01:56 PM PDT

மத்திய பிரதேச மாநிலத்தில் மலைவாழ் மக்கள் வசிக்கும் ஜோலா கிராமத்தை சேர்ந்தவர் சத்லால் இர்பாச்சே. இவர் தனது 8 வயது மகள் ரிதுவுடன் துருங்காவில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்குள்ள கோவிலுக்கு மகளை அழைத்துக் கொண்டு சென்ற அவர் சாமி தரிசனம் செய்தார். இதை அடுத்து அவர், கோவில் முன்பு மகள்

பணிந்தது பீகார் அரசு: பாட்னாவில் நரேந்திரமோடி பேரணிக்கு அனுமதி

Posted: 10 Sep 2013 12:26 PM PDT

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அரசில் இருந்து பா.ஜனதா விலகிவிட்டது. இந்த நிலையில், தலைநகர் பாட்னாவில் பா.ஜனதா தேர்தல் பிரசார குழு தலைவர் நரேந்திரமோடி பங்கேற்கும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. அக்டோபர் 27-ந்தேதி அன்று வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில்

ஜெகன் மோகன் வழக்கு: புதிய குற்றப்பத்திரிகையில் சீனிவாசன் பெயர் சேர்ப்பு

Posted: 10 Sep 2013 09:32 AM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது சி.பி.ஐ. இன்று மேலும் 3 குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்தது. அவற்றில் ஒரு குற்றப்பத்திரிகையில் இந்தியா சிமென்ட்ஸ் தலைவர் என்.சீனிவாசனின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்தியா

கலவரத்தை கையாள்வதில் அகிலேஷ் அரசு தோல்வியடையவில்லை: முலாயம் பதிலடி

Posted: 10 Sep 2013 08:40 AM PDT

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவால் கிராமத்தில் ஒரு இளம் பெண்ணை கேலி செய்த வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டார். இதையடுத்து இரு சமுதாயத்தினரிடையே மோதல் ஏற்பட்டு, பின்னர் மாவட்டம் முழுவதும் கலவரம் வெடித்தது. கடந்த 10 நாட்களாக நடந்து வரும் கலவரத்திற்கு 38 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உத்தர பிரதேச சமாஜ்வாடி ஆட்சி தோல்வியடைந்து விட்டதாகவும்

நேபாளத்தில் அல்கொய்தா-தாவூத்துடன் தொடர்புடைய 224 பேரின் சொத்துக்கள் முடக்கம்

Posted: 10 Sep 2013 06:08 AM PDT

உலகில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றி வரும் அல்கொய்தா போன்ற தீவிரவாத இயங்கங்கள் மற்றும் அந்த இயங்கங்களுடன் தொடர்புடைய மும்பை தாதா தாவூத் இப்ராஹிம் போன்றோரின் சொத்துக்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களின் சொத்துக்களை முடக்கவும், மேலும் அவர்களின் பயணங்களை தடை செய்யவும் உலக நாடுகள்

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகள் மேல்முறையீடு செய்ய முடிவு

Posted: 10 Sep 2013 05:58 AM PDT

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கி கற்பழித்தது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய அந்த மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் 29-ம்தேதி இறந்தார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின்

ஏழைகளுக்கு உணவு வழங்குவதால் பணம் வீணாகாது: ராகுல் காந்தி பேச்சு

Posted: 10 Sep 2013 05:04 AM PDT

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:- நாட்டில் உள்ள ஏழைகளின் பசியைப் போக்கும் நோக்கத்துடன் உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் உணவுப் பொருட்கள் வழங்குவதால் அரசுப் பணம்

தீவிரவாதி பட்கல்-அக்தரின் காவல் 17-ம் தேதி வரை நீட்டிப்பு

Posted: 10 Sep 2013 04:47 AM PDT

பல்வேறு தீவிரவாத தாக்குதல் வழக்குகளில் தேடப்பட்ட இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தின் தலைவர் யாசின் பட்கல், அவனது கூட்டாளி அசதுல்லா அக்தர் ஆகியோர் சமீபத்தில் இந்திய-நேபாள எல்லையில் டெல்லி சிறப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

டெல்லி மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

Posted: 10 Sep 2013 04:00 AM PDT

கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவி கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி தன் காதலனுடன் வெளியில் சென்றிருந்தார். ஷாப்பிங் மாலில் பொருட்கள் வாங்கி விட்டு சினிமாவுக்கு சென்ற அவர்கள் படம் முடிந்து 9.30 மணிக்கு வெளியில் வந்த போது பஸ், ஆட்டோ கிடைக்காமல் நின்று கொண்டிருந்தனர்

உத்தர பிரதேச கலவரத்தில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

Posted: 10 Sep 2013 03:40 AM PDT

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவால் கிராமத்தில் ஒரு இளம் பெண்ணை கேலி செய்த வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டார். இதையடுத்து இரு சமுதாயத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. அது மெல்ல, மெல்ல மாவட்டம் முழுவதும் பரவி கலவரமாக வெடித்துள்ளது

கேரளாவில் சுடிதார் துப்பட்டா இறுக்கியதில் எம்.எல்.ஏ.வின் மகன் சாவு

Posted: 10 Sep 2013 03:36 AM PDT

கேரள மாநிலம் கடுத்துருத்தி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மோன்ஸ் ஜோசப். இவர் கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். கேரள காங்கிரஸ் (எம்) கட்சியை சேர்ந்த இவர் அந்த பகுதியில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்று இருந்தார். அவரது வீட்டில் மனைவி சோனியா, மகன் இம்மானுவேல் (வயது 11) ஆகியோர் இருந்தனர். சோனியா அந்த பகுதியில் உள்ள ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மகன் இம்மானுவேல் 6–ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம்: சென்செக்ஸ் 20 ஆயிரத்தை தொட்டது

Posted: 10 Sep 2013 03:23 AM PDT

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்ற ரகுராம் ராஜன், பொருளாதாரம் மற்றும் ரூபாய் மதிப்பை உயர்த்துவதற்கான சில அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் காரணமாக சில தினங்களாக ரூபாய் மதிப்பு மற்றும் பங்குச்சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றும் பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 730

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மட்டுமே சாதனை: மோடி

Posted: 10 Sep 2013 02:51 AM PDT

ஜெய்ப்பூரில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கட்சியின் பிரச்சாரக் குழு தலைவர் நரேந்திர மோடி பேசியதாவது:- எல்லா வகையான ஊழல்களும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நடந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் ஒன்றே சாதனையாக உள்ளது. எந்த ஒரு முடிவையும் தைரியமாக எடுக்க திறன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™