Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தெற்காசிய கால்பந்து போட்டி :இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இன்று மோதல்

Posted: 10 Sep 2013 10:06 PM PDT

football

football8 அணிகள் இடையிலான 10-வது தெற்காசிய கால்பந்து போட்டி நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடந்து வருகிறது. இதன் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இன்று (புதன்கிழமை) பலப்பரீட்சை நடத்துகின்றன. 6 முறை சாம்பியனான இந்தியா, தெற்காசியாவில் நாங்கள் தான் 'ராஜா' என்ற பெருமையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கும். முந்தைய ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் சுனில் சேத்ரி அணிக்கு திரும்புவது இந்திய அணியின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். தரவரிசையை ஒப்பிடும் போது இந்தியாவை விட (145-வது இடம்) ஆப்கானிஸ்தான் (139-வது இடம்) முன்னிலை வகிக்கிறது. அது மட்டுமின்றி இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி ஆப்கானிஸ்தான் தான். அந்த அணியின் உதவி பயிற்சியாளர் அலி ஜவாத் அட்டாய் கூறுகையில், 'கடந்த முறை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் (0-4), நடுவரின் கடினமான தீர்ப்புகளால் நாங்கள் தோற்றோம். அந்த தோல்விக்கு பழிதீர்க்க விரும்புகிறோம் என்றார். இந்த ஆட்டம் மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

காலி குடிநீர் போத்தல்களை கொடுத்து, ரயில் கட்டணம் செலுத்தும் திட்டம் – சீனா அறிமுகம்

Posted: 10 Sep 2013 10:01 PM PDT

mt botles

mt botlesகாலி குடிநீர் போத்தல்களை கொடுத்து, ரயில் கட்டணம் செலுத்தும் திட்டத்தை பீஜிங் சப்வே ரயில் அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் ரயில் பயணம் செய்யும் பயணிகள், காலி குடிநீர் போத்தல்களை ஆங்காங்கே வீசுகின்றனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

காலி குடி நீர் ப போத்தல்களை ஒன்றாக சேகரித்து மறு சுழற்சி முறையில் பயன்படுத்த பீஜிங் சப்வே ரயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி 2 சப்வே ரயில் நிலையங்களில், காலி போத்தல் சேகரிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஒரு காலி போத்தலை இயந்திரத்தில் போட்டால், 0.15 டொலர் அளவுக்கு ஒரு சிறு தொகை வாடிக்கையாளருக்கு கிடைக்கும். 15 போத்தல்களை போட்டால், ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு டிக்கெட் எடுக்கும் அளவுக்கு பணம் கிடைக்கும். திட்டம் வெற்றி பெற்றால் விரிவுபடுத்தப்படும் என சப்வே ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஷ்யாவின் அறிவுரைப்படி, ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க, சிரியா முன்வருகை

Posted: 10 Sep 2013 09:53 PM PDT

syria

syriaஅமெரிக்க தாக்குதலை தவிர்க்க, ரஷ்யாவின் அறிவுரைப்படி, ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க, சிரியா நாடு முன்வந்து உள்ளது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சிரியா ராணுவம், கடந்த, 21ம் தேதி, ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதில், 1,300 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரசாயனக் குண்டு வீச்சில், நச்சுப் புகை பரவி, பலர் இறந்த இடத்தை, ஐ.நா., பார்வையாளர்கள் ஆய்வு செய்து, தடயங்களைச் சேகரித்து உள்ளனர். இன்னும் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்படவில்லை. சர்வதேச விதிகளை மீறி, ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்திய சிரியா மீது, ராணுவத் தாக்குதலை நடத்த, அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.

சிரியா வைத்துள்ள ரசாயன ஆயுதங்களை, சர்வதேச பார்வையாளர்கள் பார்க்கவும், அவர்கள் முன்னிலையில் அவற்றை ஒப்படைக்கவும் முன்வந்தால், தாக்குதல் நடத்தும் முடிவை வாபஸ் பெறுகிறோம்' என, அமெரிக்கா தெரிவித்தது. இதையடுத்து, சிரியாவின் நேச நாடான ரஷ்யா, ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க வலியுறுத்தியது. ரஷ்யாவின் அறிவுறுத்தலின் பேரில், தங்களிடம் உள்ள ரசாயன ஆயுதங்களைப் பார்வையிட, சர்வதேச பார்வையாளர்களை அனுமதிக்கவும், ஒப்படைக்கவும், சிரியா அரசு முன்வந்து உள்ளது. சிரியாவின் இந்த நடவடிக்கையால், அமெரிக்கா தனது நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிரியாவின் ரசாயன ஆயுதங்களை சர்வதேசக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ரஷியாவின் யோசனையை இந்தியா வரவேற்றுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: ரசாயன ஆயுதங்கள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. அவற்றை ஒழிப்பதற்கு முன் அவற்றை பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பது முக்கியம். இதற்கு வழி செய்யும் எந்த ஒரு நடவடிக்கையையும் இந்தியா மகிழ்ச்சியுடன் வரவேற்கும்.சிரியாவின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதை இந்தியா ஆதரிக்கவில்லை. சிரியா விவகாரத்தில் அரசியல் தீர்வை மட்டுமே இந்தியா ஆதரிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

யாழ்ப்பாணத்தில் தாயும் மகளும் கொலை: தந்தை மீது மகன் புகார்!

Posted: 10 Sep 2013 09:45 PM PDT

Murder_title

Murder_titleயாழ்ப்பாணம் கொடிகாமம் கச்சாய் பகுதியில் இன்று அதிகாலை குடும்பஸ்தர் ஒருவர் தமது மனைவியையும் மகளையும் கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான முறைப்பாட்டை குறித்த குற்றம் சுமத்தப்பட்டுள்ள குடும்பஸ்தரின் மகன் பொலிஸில் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

தெற்கில் ராஜபக்ஷ அரசை விரட்டி அடிக்க மக்கள் தயார் :வடக்கில் இந்த அரசுக்கு ஒட்சிசன் வழங்க வேண்டாம் – ரணில்

Posted: 10 Sep 2013 09:32 PM PDT

ranil

ranilதெற்கில் ராஜபக்ஷ அரசை விரட்டி அடிக்க மக்கள் தெருவில் இறங்க தயாராகவுள்ள நிலையில் வடக்கில் நீங்கள் இந்த அரசுக்கு ஒட்சிசன் வழங்க வேண்டாம் என எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க யாழ். மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக நேற்று மாலை நல்லூர் சங்கிலியன் மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எந்த விதமான அச்சுறுத்தல்களுக்கும் அடி பணியாது வடக்கு மாகாண மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி தான் இந்த மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்தியது. 2005ம் ஆண்டு நான் வாக்கு கேட்ட போது தெற்கு மக்கள் என்னை ஆதரித்தார்கள். வடக்கு கிழக்கு மக்கள் என்னை ஆதரிக்கவில்லை. அன்று எனக்கு வாக்களித்திருந்தால் இன்று இந்த வடக்கு கிழக்கு மக்கள் எவ்வளவு துன்ப துயரங்களுக்கு முகம் கொடுத்திருக்க மாட்டார்கள். நாங்கள் அரசியல் பரவலாக்கத்தை ஏற்படுத்த விரும்புகின்றோம்.

வடக்கு மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டும் என விரும்புகின்றோம். ராஜபக்ஷ ரெஜிமென்டின் கீழ் அடிமையாக மக்கள் வாழ்வதை விரும்பவில்லை. வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் மக்களை அடிமையாக வைத்திருக்கவே ராஜபக்ஷ ரெஜிமென்ட் விரும்புகின்றது. இந்த நாட்டில் சகல மக்களையும் ஐக்கியமாக வாழ வைக்க ஐக்கிய தேசிய கட்சியினால் தான் முடியும் இதனை சர்வதேசமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இன்று அரசாங்கம் சொல்லுகின்ற அபிவிருத்தி திட்டங்களை அரசின் செலவில் செய்யவில்லை. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இந்தியா, சீனா, உலக வங்கி, ஆசிய வங்கி போன்றவர்களிடம் இருந்து உதவிகளை பெற்றே அபிவிருத்திகளை மேற்கொள்கின்றது.

இந்த அபிவிருத்திகளை மேற்கொள்வதன் மூலம் அவர்களுக்கு கிடைத்த கொமிஷன் ஏராளம். அவர்கள் வடக்கில் அபிவிருத்தி மேற்கொண்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இன்று வடக்கில் இளைஞர்களுக்கு வேலை இல்லை, காணாமல்போனவர்கள் பிரச்சினை, இராணுவ ஆட்சி, சுவீகரிக்கப்பட்ட காணிகள் மீண்டும் கையளிக்கப்படாமை, போன்ற பல பிரச்சினைகள் உண்டு.

தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற அத்தனை பிரச்சினைகளையும் ஐக்கிய தேசிய கட்சியினால் மட்டுமே தீர்க்க முடியும். தெற்கில் ராஜபக்ஷ அரசை விரட்டி அடிக்க மக்கள் தெருவில் இறங்க தயாராகவுள்ளனர். நீங்கள் இந்த அரசுக்கு ஒட்சிசன் வழங்க வேண்டாம். தெற்கு இனவாதத்தையும் வடக்கு இனவாதத்தையும் ஐக்கிய தேசிய கட்சியினால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும் என மேலும் தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கேதர்நாத் கோவிலில் மீண்டும் பூஜை இன்று முதல் தொடக்கம்

Posted: 10 Sep 2013 09:17 PM PDT

temple

templeஉத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் மலை மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம் பாய்ந்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. ஏராளமான பக்தர்கள் பலியானார்கள். ஆனால் பிரசித்தி பெற்ற கேதர்நாத் கோவில் சேதம் அடையவில்லை. கோவிலுக்கு செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் பூஜைகள் நிறுத்தப்பட்டன. கோவிலில் மீண்டும் பூஜை நடத்துவதற்காக கடந்த 3-ந் தேதி முதல் திருப்பணிகள் தொடங்கின. 86 நாட்களுக்குப்பிறகு இன்று (புதன்கிழமை) முறைப்படி பூஜைகள் தொடங்குகின்றன. கேதர்நாத்-பத்ரிநாத் குழுவினரின் மேற்பார்வையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மலைப்பாதை சீர்செய்யப்படாததால் ஹெலிகாப்டர் மூலமாக 24 அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் கோவிலில் தங்கி பணியாற்றுகின்றனர். சுவாமி ஹன்ஸ்தேவாச்சாரிய சங்கராச்சாரியார் முன்னிலையில் பூஜைகள் தொடங்குகின்றன. அவர் கூறுகையில், 'இயற்கை பேரிடர் காரணமாக நீண்ட காலமாக பூஜைகள் நிறுத்தப்பட்டதற்காக சிவபெருமானிடம் மன்னிப்பு கோருவோம்' என்றார். இன்று நடக்கும் பரிகார பூஜைகளில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி விஜய் பகுகுனா மற்றும் மந்திரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். கேதர்நாத் கோவிலில் பூஜை தொடங்கினாலும் கோவிலுக்கு செல்லும் பாதை இன்னும் சரி செய்யப்படாததால், கேதர்நாத் கோவிலுக்கு, இப்போது பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பொது நலவாய வர்த்தக மாநாட்டுக்கு சீனாவில் இருந்து 120 பிரதிநிதிகள்

Posted: 10 Sep 2013 09:01 PM PDT

Commonwealth

Commonwealthஎதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொது நலவாய வர்த்தக மாநாட்டுக்கு சீனாவில் இருந்து 120 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு ஒன்று அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த நிவ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய கலந்துக் கொள்ள கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.எனினும்; இந்தியா இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் தமது தீர்மானத்தை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் சீனா, இவ்வாறு 120 பிரதிநிதிகளை அனுப்புகின்றமையானது, இந்தியாவை அழுத்ததுக்கு உட்படுத்தும் என்று அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

‘முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்’ : தமிழநாட்டில் தமிழீழ சின்னம்!

Posted: 10 Sep 2013 08:54 PM PDT

Thansai-Thiyil-Illam-2013-seithy-803-(3)

Thansai-Thiyil-Illam-2013-seithy-803-(3)2009 நாடாளுமன்றத் தேர்தலில் புயலைக் கிளப்பிய ஈழ விவகாரம்தான் இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கப் போகிறது. இலங்கையில் போர் உக்கிரமாக வெடித்து தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட நேரத்தில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் ஜரூராக நடந்தன.

இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள மிஸ்டர் கழுகு பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் போர் முடிவுக்கு வந்தபோது தமிழகத்தில் தேர்தல் நெருங்கி விட்டது. அந்த முள்ளிவாய்க்காலை மீண்டும் முன்னிலைப்படுத்துவதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.

பெரிய அரசியல் முடிச்சு போடுகிறீரே…

ஈழத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்' என்ற பெயரில் நினைவு மண்டபத்தை அமைத்திருக்கின்றனர் தமிழ் அமைப்புகள்.

முள்ளிவாய்க்காலில் தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் சுட்டுக்கொல்லும் காட்சிகள் சிற்பங்களாக இங்கே வைக்கப்பட்டு இருக்கின்றன.

மாமல்லபுரத்தில் இருக்கும் ஒரேகல்லில் செதுக்கப்பட்ட அர்ஜுனன் தபசு சிற்பங்களைப் போல ஒரே கல்லில் முள்ளிவாய்க்கால் காட்சிகளை செதுக்கி உள்ளனர்.

தமிழ் அறிஞர்கள், தமிழ் மொழிக்காக உயிர் நீத்த தியாகிகள், ஈழத்துக்காக தீக்குளித்தவர்களின் படங்களும் சிலைகளும் இந்த நினைவு மண்டபத்தில் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

தஞ்சாவூர் பக்கமுள்ள விலார் கிராமத்துக்கு அருகே இந்த நினைவு மண்டபம் கட்டப்பட்டு பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்காகத் தயாராக இருக்கிறது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை திறந்துவைக்க யாரை எல்லாம் அழைக்கலாம். விழாவை எப்படி நடத்தலாம் என்பது பற்றிய ஆலோசனைக் கூட்டத்தை, தஞ்சையில் நடத்தியிருக்கிறார் பழ.நெடுமாறன்.

250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், ஈழ ஆதரவாளர்கள், தமிழ் அமைப்புகள் என பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை கேட்டார்களாம்!

"ம்" பலரும் பலவிதமான கருத்துகளைச் சொல்லி இருக்கின்றனர். அதில் ஒருவர்,

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தால் நன்றாக இருக்கும். பொருத்தமாகவும் இருக்கும் என்று தன் விருப்பத்தைச் சொன்னாராம். ஈழப் பிரச்னைக்காக ஜெயலலிதா பல வகைகளில் குரல்கொடுத்துள்ளார்.

ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத்தர வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டும் என்று சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா.

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா-வில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நேரத்தில் அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என, தன்னுடைய கருத்தை அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்தவர் ஜெயலலிதா.

20-வது ஆசிய தடகளப் போட்டியை சென்னையில் நடத்த முடிவுசெய்த நிலையில் இலங்கை வீரர்கள் அந்தப் போட்டியில் கலந்துகொள்வதால் தமிழகத்தில் அந்தப் போட்டியை நடத்த தடைவிதிக்க வேண்டும் என்று சொன்னதோடு அந்தப் போட்டியை சென்னையில் நடத்த அனுமதி தரவும் மறுத்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதை அனு மதிக்கக் கூடாது என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.

இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று உறுதி அளித்தால் மட்டுமே சென்னையில் போட்டியை நடத்த தமிழக அரசு அனுமதிக்கும் என தைரியமாகச் சொன்னார்.

தமிழர் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதியைவிட ஜெயலலிதாவின் நிலைப்பாடுதான் உறுதியாக இருந்தது.

ராஜபக்சவுக்கு சிலர் செருப்பாக இருந்தபோதும் ஜெயலலிதா மட்டுமே நெருப்பாக இருந்தார்.

அதனால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை ஜெயலலிதா திறந்து வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்' என்று அதற்கான காரணங்களையும் சொல்லி இருக்கிறார் அவர்."

"ஓஹோ!"  தமிழ் அமைப்புகள் சார்பாக முதல்வருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் முற்றத்தை திறந்து வைக்க வேண்டும் என்று தேதி கேட்டு முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கடிதத்துக்கு இதுவரை பதில் வரவில்லை. பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

"ஜெயலலிதாவின் ரியாக்சன் என்னவாம்"

விழாவுக்கு முதல்வரின் தேதி கேட்டு வரும் கடிதங்களுக்கு உடனே பதில் அனுப்பிவிடுவார்கள். ஆனால், இந்தக் கடிதத்துக்கு மட்டும் இன்னும் பதில் அனுப்பாமல் வைத்திருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு முன், நாடாளுமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது. அந்த நேரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை திறந்துவைத்தால் அது ஈழ உணர்வாளர்கள் மத்தியில் தன் அரசியல் இமேஜை உயர்த்தும் என்று நினைக்கிறாராம் முதல்வர்.

ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உலகில் எங்குமே நினைவு மண்டபம் இல்லை. தமிழகத்தில்தான் முதன்முறையாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் கருணாநிதி மீது ஈழ உணர்வாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் உதவலாம் என்று நினைக்கிறாராம் முதல்வர்.

"அப்படின்னா வருவாங்கன்னு சொல்லும்!"

முதல்வரை விழாவுக்கு அழைத்து வர நெடுமாறன் தரப்பு தொடர்ந்து முயன்று வருகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளையையும் விழாவுக்கு அழைக்க முடிவு எடுத்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா பங்கெடுத்தால் ஈழ ஆதரவு கூட்டணிக்கு அச்சாரம் போட்டதாக அமையும் என்று பேச்சுக்கள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன என்று சொல்லிவிட்டு எழுந்தார் கழுகார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரச்சினைக்குரிய கடல் பகுதியில் 15 நாட்கள் தமிழக மீனவர்களும், 15 நாட்கள் இலங்கை மீனவர்களும் மீன்பிடிக்க ஏற்பாடு : இலங்கையின் முடிவு என்ன?

Posted: 10 Sep 2013 08:46 PM PDT

alakiri

alakiriதமிழக மீனவர்களை நடுக்கடலில் அடாவடியாகப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்யும் இலங்கை கடற்படையின் அத்துமீறிய செயல்கள் தினம்தினம் அரங்கேறுகிறது. இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை இந்தியா திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் குரல்கொடுத்து வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி-யான கே.எஸ்.அழகிரி திடீர் விசிட்டாக இலங்கைக்குப் போய் அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துவிட்டு திரும்பியிருக்கிறார்.

இந்த நேரத்தில் இவர் ஏன் அங்கு சென்றார்? என்று தமிழக அரசியல் கட்சியினர், தமிழ் ஆர்வலர்கள் உட்பட அனைவருமே வினா எழுப்புகின்றனர்.

இலங்கையில் இருந்து திரும்பிய கே.எஸ்.அழகிரி விகடன் இதழுக்கு அளித்த செவ்வி வருமாறு,

நீங்கள் இலங்கை சென்றதன் நோக்கம்?

இலங்கை நாடாளுமன்றத்தில் சௌமியமூர்த்தி தொண்டமானின் நூற்றாண்டு விழா மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இப்போதைய கபினெட் அமைச்சர் ஆறுமுக தொண்டமானின் தாத்தா அவர். இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக முதன்முதலாக 'சிலோன் தொழிலாளர் காங்கிரஸ்' என்ற அமைப்பை உருவாக்கியவர்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, என்னையும் புதுச்சேரியின் முன்னாள் மந்திரி கந்தசாமியையும் அழைத்தார் ஆறுமுக தொண்டமான். அதை ஏற்று நாங்கள் இருவரும் விழாவில் கலந்துகொண்டோம்.

அந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சவைச் சந்தித்தேன். திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணச் சிறைகளில் தமிழக மீனவர்கள் சிரமப்படுகிறார்கள் என்று எடுத்துச் சொன்னேன். அதைக்கேட்ட ராஜபக்ச, 'ஏன், எங்கள் நாட்டு மீனவர்கள் ஆந்திரச் சிறையில் மூன்று மாதங்களாக இருக்கிறார்களே?' என்றார்.

மேற்கொண்டு இந்த விவகாரம் பற்றி அவரது சகோதரரும் அமைச்சருமான பசில் ராஜபக்சவிடம் பேசச் சொன்னார். மறுநாள் நானும் கந்தசாமியும் பசிலுடன் முக்கால் மணி நேரம் பேசினோம். எங்களுடன் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமானும் வந்திருந்தார்.

இப்போது புலிகள் இல்லை. ஆயுதம் கடத்துவதோ, பெட்ரோல் கடத்துவதோ கடலில் நடப்பது இல்லை. மீன்பிடிக்க மட்டுமே எங்கள் மீனவர்கள் போகிறார்கள் என்று நான் சொன்ன போது, அமைச்சர் பசில்,

எங்கள் நாட்டில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழர்கள்தான் மீன்பிடி தொழிலைச் செய்கிறார்கள். அவர்களிடம் உள்ளது சாதாரண சிறு ரக படகுகள். ஆனால், உங்கள் மீனவர்கள் மீன்பிடி டிராலியையும், ஆழ்கடலில் பயன்படுத்தும் வலையையும் எடுத்து வருகிறார்கள்.

நான் டெல்லி வந்தபோது, என்னைச் சந்தித்த தமிழக மீனவர்களிடம், 'இருநாட்டு மீனவர்களும் பேசுங்கள். உங்கள் முடிவு எதுவோ அதை நாங்கள் நிறைவேற்றுகிறோம்' என்று சொன்னேன்.

ஆனால், நான் எதிர்பார்த்தபடி தமிழக மீனவர்கள் இலங்கைக்கு பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. நான் விசாரித்தவரை, மாநில அரசு அவர்களுக்கு அனுமதி தரவில்லை எனறு கேள்விப்பட்டேன்' என்றார்.

அப்போது அவரிடம் நான் ஒரு யோசனை சொன்னேன். பிரச்சினைக்குரிய கடல் பகுதியில் 15 நாட்கள் தமிழக மீனவர்களும், 15 நாட்கள் இலங்கை மீனவர்களும் மீன்பிடிக்க ஏற்பாடு செய்யலாம் என்றேன்.

அவரும், 'இது நல்ல கருத்துதான்' என்றார். பிறகு, திருகோணமலை சிறையில் இருந்த தமிழ் மீனவர்களை நான் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன்.

உங்கள் விசிட்டில் பேசிய விஷயங்கள் குறித்து, டெல்லி காங்கிரஸ் மேலிடத்திடம் பேசினீர்களா?

கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கடந்த 3-ம் தேதியன்று என்னை அழைத்து இது விஷயமாக 45 நிமிடங்கள் பேசினார். தலைவி சோனியாவிடமும் விளக்கினேன். வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் பேசினேன்.

இருநாட்டு மீனவர்களும் சந்தித்து விவாதிப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு முறைப்படி கடிதம் எழுதினார்களாம். ஆனால், இங்கிருந்து ரெஸ்பான்ஸே இல்லையாம். பிரச்சினை என்றால், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ஆனால், தீர்வு எட்டுவதை இவர்கள் அறவே விரும்பவில்லை போலும்!

அதிபர் ராஜபக்சவை நீங்கள் சந்தித்தது தமிழகத்தில் ஒருசிலர் மத்தியில் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறதே?

45 வருடங்களாக காங்கிரஸில் இருக்கும் எனக்கு எதைச் செய்ய வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். தமிழக மீனவர்களை இலங்கைச் சிறையில் இருந்து மீட்டு வருவது காங்கிரஸுக்குப் பெருமை. அந்தப் பெருமையான காரியத்தை நான் செய்திருக்கிறேன்.

இதற்குமுன், நான்கு முறை சென்று இலங்கைச் சிறையில் இருந்த தமிழக மீனவர்களை திரும்ப அழைத்துவர ஏற்பாடு செய்திருக்கிறேன். இது மீனவர்களுக்கும் நன்றாக தெரியும்.

இலங்கைச் சிறையில் தவிப் பவர்களுக்கு உதவ வேண்டுமே' என்று துளிகூட இங்கு யாரும் நினைப்பது இல்லை. இங்குள்ள தமிழ் ஆர்வலர்களுக்கும் இலங்கையில் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.

இவர்கள் அவர்களிடம் சொல்லி, அட்லீஸ்ட்… சிறைச்சாலையில் போய் பார்க்கச் சொல்லலாம். வக்கீலை ஏற்பாடு செய்து  கொடுக்கலாம். அதையெல்லாம் யாரும் செய்வதில்லை.

நல்ல விஷயத்தை நான் செய்தேன். அதற்காக என்னை விமர்சனம் செய்தால் கவலைப்படப் போவதில்லை என்றார்.

இவரது கருத்துகள் இன்னும் என்னென்ன பிரச்னைகளைத் தூண்டப்போகிறதோ?

This posting includes an audio/video/photo media file: Download Now

புலம் பெயர்ந்த தமிழன்செயலாற்ற வேண்டிய தருணம் இது : உங்கள் உறவுகளை வீட்டிற்கு வாக்களிக்க செய்யுங்கள் -அக்கினிக்கவிஞர் -மா.கி.கிறிஸ்ரியன் (பிரான்ஸ்)

Posted: 10 Sep 2013 08:35 PM PDT

election

electionபுலம் பெயர்ந்த தமிழன் மூளைக்கும் வாக்குக்கும் வோட்டுக்கும் வேளை வந்துள்ள அரியதும் உரியதுமான நேரமிது உங்களது தொலைபேசிகள் முகனூல் இணையத்தளங்கள் தாய்மண்ணில் வாழும் உறவுகள் தாய் தந்தை சகோதரர்களை நோக்கி வினாடி தப்பாது மாகாணசபை தேர்தலில் வீட்டுக்கு வாக்களிககும்படி ஒலிக்கட்டும். காலத்தின் கட்டாயக் கடமையின் வேண்டு கோளாய் விடுங்கள். தமிழன் வாழ்வின் சரித்திரம் சந்திக்கும் தேர்தல் இம்மாகாணசபைத் தேர்தல்! புலம் பெயர்ந்தவர் இடும் வேண்டுகோளை நமது மக்கள் கட்டாயம் நிறைவேற்றுவார்கள்.
தமிழன் சந்திக்கும் இத்தேர்தலில் வாக்குகளின் எண்ணிக்கை பெறும்பேறு தமிழினத்தின் பூர்வீகத்தை நிலத்தின் இருப்பை புலம்பெயர் தமிழனின் அடையாளத்தின் வெற்றியை நிர்ணயம் செய்யும் வாக்குப் பெறுமதியாகும். இந்தவேளை தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கப் பண்ணுவது புலம்பெயர்ந்த தமிழர்களின் பொறுப்புவாய்ந்த கடமையாக உள்ளது. இந்த மகாணசபையின் வெற்றியுடன் நமது தீர்வுகள் முடிந்துவிட்டதாக எண்ணவேண்டாம்!சர்வதேசத்தின் முன் இத்தேர்தல் களம் பெறும் வெற்றி உலகுக்கு உணர்த்தும் பலம் என்பதை நிரூபிக்கும்!   »வீடு »  நமக்குத் தேவை.  குடிலிழந்த பறவைகளாக சிதறுண்ட  புண் ஆற்றப்பட வேண்டும். புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் புனிதமும்-வீரமும்-விவேகமும் மிக்க ஆற்றலை உறவுகளின் தொடர்பின்போது தொய்வேற்படாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பை சுத்தத் தமிழனை வெற்றியடைய வாக்களிக்கும்படி உறுதிபடக் கூறவேண்டும்.
மண்ணில் வாழும் மகிமைக்கும் பெருமைக்கும் தியாகத்திற்கும் உரிய மக்களை வீட்டுக்கு வாக்களிக்கும்படி புலம்பெயர்ந்த தமிழர்கள் கேட்டுக்கொள்ளுங்கள் சர்வதேசம் மிகப் பெறுமதியான தேர்தலாகாகவும் தமிழன் அளிக்கும் வாக்கு எண்ணிக்கையையும் உன்னிப்பாக கவனித்தபடி இருக்கின்றனர். தமிழன் போர் செய்தது-சண்டை பிடித்துக் கொண்டது புதியதல்ல! உலகின் புதிய மாற்றங்கள் புரிய புரட்சி நம்முன் நிற்கிறது. எகிப்தின் மாற்றம். துணிசியாவின் நிலமை. லிபியா, ஏமன், எகிப்தின் புரட்சியே அடித்தளமிட்டது. ஒருங்கிணைந்து போராட வைத்தது. « தொழில் நுட்பக் கருவிகள் » இளைஞர் தீக்குளிப்பும் துணிசியாவில் « முகமது வாசி » பட்டதாரி-ஏகிப்தில் « காலித் சையித் » இன்றளவும் சர்வதேசமெங்கும் தீக்குளிப்பில் தன்மானத் தமிழன்!! இந்தத் தொழில் நுட்பக் கருவிகள், முகனூல், தொலைபேசி வெற்றிகளைச் சாதித்துக் காட்ட வல்லவைகள். புலம்பெயர்ந்த தமிழர் தொழில் நுட்பக் கருவிகள் தாயகத் தமிழரோடு பேசட்டும். தன்மானத்தைத் தட்டி « வீடு » சின்னத்திற்கு வாக்களிக்களித்து பெரும்பான்மை வெற்றியப் பெறவழி வகுக்கட்டும்!
இத்தேர்தலில் தமிழன் வாக்கு பெரும்பான்மைப் பலத்தை தமிழ்தேசியக் கூட்டமை பெறும் பச்சத்தில் சர்வதேசத்தின் ஒற்றைக்கண் பார்வை அகன்று இரண்டு கண்களும் விழிக்கும். அயல்தேசம் இந்தியா போடும் கபட நாடகத்தின் உச்சக்கட்டம் தமிழனை நோக்கிய பார்வைக்குள் பக்குவப்படும்! காந்தியின் கண்ணைக் குத்திவிட்டு குதர்க்கத்தில் குரைக்கும் கொலைகார தேசம் மாகாணசபையின் மாபெரும் வெற்றி நல்வழியத் திறக்கும்.
புலத்துத் தமிழர் அறிந்து கொண்டிருப்பீர்கள் ராஜபக்ச ஆட்சியின் கோரமான முகத்தை! கைக்கூலிகளின் அசிங்கமான முகத்தையும், இலங்கை படுகொலைகளின் மண்! தீர்வைப் பெற்றுதருவேன் என்று நம்பிக்கை தருகின்றார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளை' 5 வருடங்களின் பின் தமிழர்கள் வாழ இடமில்லாமல் போகலாம்! என்கின்றான் ஐ.தே.கட்சி தலைவர் ரணில். சிங்கள அரசு உரிமைதர மறுத்தால் 10 வயதிலிருக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆயுதம் பற்றிச் சிந்திப்பதைத் தடுக்க முடியாது என்கின்றார் சி.சிறிதரன்-பா.உ
மகாணசபை தேர்தலை நடத்துவதால் நான் சர்வதிகாரி இல்லை என்கின்றான் சிறிலங்காவின் தலைவன் சர்வதிகாரி! தேர்தல்களை நடத்த மாட்டார்கள்! ராஜபக்ச கும்பல் கச்சிக்கிறது.
நாங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்ட இனம்! இதற்கு ஐ.நாவும் உடந்தையாக இருந்தது வேதனைக்குரிய விடயம். வேட்பாளர் ஆனந்தி சசிகரன் இந்த நிலை உணரும் வேளை சர்வதேசத்திற்கு தவறாக படும் அதை மேலும் வலுப்படு இந்தமாகாணசபைத் தேர்தல் வெற்றி எம்மினத்தின் விடுதலைக்கான ஆதரவையும் ஆறுதலையும் நியாயப்படுத்தும்.
எதுவாக இருக்கட்டும் புலம் பெயர்ந்த தமிழன் நாக்கிற்கு ஓரு தனி ஆற்றல் உண்டு அல்லவா அந்த மொழி பலதைச் சாதித்துள்ளது இத்தேர்தல் வெற்றியையும் சாதித்துக் காட்டும். சரித்திரம் சந்திக்காத சாதனையாக விளங்கட்டும். இன்றே « வீடு »சின்னத்திற்கு தமிழன் தலை நிமிர வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுங்கள். சர்வதேசம் மாபெரும் வெற்றிகண்டு தமிழன் மண் மீட்சிபெறும் வழிகளைத் திறக்கட்டும்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™