Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பாகிஸ்தான் பூகம்பம்: பலி 45 ஆக அதிகரிப்பு

Posted: 24 Sep 2013 01:44 PM PDT

பாகிஸ்தான் பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் நேரப்படி மாலை 4.29 மணிக்கு, பலூச்சிஸ்தான் அருகே ஆவாரன் பகுதியில் 23 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்தப் பயங்கர நிலநடுக்கத்தால், ஆவாரன் பகுதியில் உள்ள வீடுகளும் கட்டடங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. இந்த நிலநடுக்கத்தில் ...

முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்!

Posted: 24 Sep 2013 11:54 AM PDT

புதுச்சேரி ரயில்வே நிலைய வாயில் அருகே உள்ள சாலைக்கு எதிரே கம்பீரமாக அமைந்துள்ளது கௌசிக பாலசுப்பிரமணியர் திருக்கோயில். அழகிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இக்கோயிலில் வள்ளி, தெய்வானை மற்றும் உடனுறை கௌசிக பாலசுப்பிரமணியருக்கு சந்நதிகள் உள்ளன. இக்கோயிலில் அனைத்து மதத்தி னரும் வழிபடுகின்றனர். இக்கோயிலைக் கட்டியவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முகமது கௌஸ். அவரது தம்பி முகம்மது அலியும், மகன் முகம்மது காதரும் தற்போது கோயில் நிர்வாகிகளாக உள்ளனர். மதுரையைப் பூர்வீகமாக கொண்ட முகமது கௌஸ் குடும்பத்தினர், ...

நாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்..

Posted: 24 Sep 2013 11:41 AM PDT

1.நடிகனுக்கு பூசை செய்வதையும், கொடி பிடிப்பதையும் நிறுத்த வேண்டும். 2.யோசிக்காமல் அறியாமையால், இலவசத்திற்காக மட்டும் ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டும். 3.எதற்காக இதை படிக்கிறோம் என்று தெரியாமலேயே உயர் கல்வி கற்பதை நிறுத்த வேண்டும். 4.நம் வசதிகளுக்காக,நம் தேவைகள் சுலபமாக நிறைவேற அரசாங்க அலுவலங்களில் ஐந்து ,பத்து கொடுப்பதை நிறுத்த வேண்டும். 5.படிப்பறிவு இல்லாதவர்களிடமும், இயலாதவர்களிடமும் நம் புலமையையும், வீரத்தையும் காட்டுவதை நிறுத்த வேண்டும். 6.கேள்வி கேட்க வேண்டிய இடங்களில் ...

அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Posted: 24 Sep 2013 10:12 AM PDT

அன்புடன் அமெரிக்காவிலிருந்து

அமெரிக்க உறவினர்
அருமையாய் கொணர்ந்த  
அன்பளிப்பு
டீ ஷர்ட்
இந்திய தயாரிப்பு.

ரமணியன்.

இப்படியும் சில மோசடிகள்...! ஹைவே ஹோட்டல்,,,,,,

Posted: 24 Sep 2013 09:59 AM PDT

இப்படியும் சில மோசடிகள்...! இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திருமணத்திற்கு சென்று திருச்சியில் இருந்து setc கவர்மென்ட் பேருந்தில் சென்னை வந்து கொண்டு இருந்தேன். அந்த பேருந்து மாலை நாலு மணிக்கு கிளம்பியதால் இரவு உணவிற்காக விகிரவாண்டியில் நிப்பாடினார்கள். அங்கு தோசை கேட்டேன் கொண்டுவந்தார்கள் ஒரு தட்டில் இரண்டு ஆறிபோன தோசையை, ஒன்று போதும் என்றேன் அதற்கு அவர்கள் இல்லை ஒரு ப்ளேட்டில் இரண்டுதான் வரும் ஒன்று தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் நானும் சரி என்று விட்டுவிட்டேன் என் உடன் பேருந்தில் ...

சாக்ரடீஸ் விஷ கோப்பை நூலினை டவுன்லோட் செய்ய

Posted: 24 Sep 2013 09:59 AM PDT

சாக்ரடீஸ் விஷ கோப்பை நூலினை டவுன்லோட் செய்ய சிபி .சிற்றரசு -விஷ கோப்பை நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க்: http://www.mediafire.com/download/sy76kdh56dm66vr/VISHAKKOPAI%28OrathanaduKarth*k.blogspot.com%29-.pdf

எப்ஷன் டி60 பிரிண்டர் / உதவி தேவை

Posted: 24 Sep 2013 09:21 AM PDT

நண்பர்களுக்கு மாலை வணக்கம்
எப்சன் டி60 பிரிண்டர் பயன்படுத்தி வருகிறேன்,
மதியம் பிரிண்டரை சுத்தம் செய்துவிட்டு ஆன் செய்தால்
red light மாறி மாறி எரிகிறது.
அதனை சரி செய்ய உதவுங்கள் நண்பர்களே.

தமிழா தமிழ் படி

Posted: 24 Sep 2013 09:18 AM PDT

'நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் 'தம்மைத் துன்புறுத்து வோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது' என்று குறிப்பிட்டார். கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, 'இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளுவரையே ...

நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்?

Posted: 24 Sep 2013 09:14 AM PDT

மனிதன் வாழப் பிறந்தவன்; உண்மை தான். ஆனால், அவன் எப்படி வாழ ஆசைப்படுகிறான் என்பதில் தான் பிரச்னையே ஏற்படுகிறது. பணத்துக்கும், பொருளுக்கும் ஆசை; புகழுக்கும், பெயருக்கும் ஆசை; தலைவனாக ஆசை; பிறரை அடிமைப் படுத்துவதற்கு ஆசை என்று, ஆசைகள் ஒன்றன் பின் ஒன்றாக முளைத்துக் கொண்டே வருகிறது. தேவைக்கு மேல் தான் இருக்கிறதே மேலும் எதற்கு, என்று நினைப்பதில்லை. இதுதான், மனித சுபாவம். மனிதனைத் தவிர மற்ற இதர ஜீவன்கள் இப்படி ஆசைப்படுவதில்லை. அன்றைக்கு என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிட்டு, நிம்மதியாக தூங்குகின்றன. ...

தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் ....

Posted: 24 Sep 2013 09:10 AM PDT

நான் ராமன் ஆகணும் என்று  எண்ணி   நான்  ராமா ராமா என்று  பாடி  நின்றேன்  ... தந்தை சொல்  தட்டாது   தாயகம்  தாண்டி  வேலை  சென்றேன்   தந்தையோ  தவிப்பார்  என்றேன்   தந்தையோ என்னை தவிக்கவைத்து   தனம் கொண்டே தன்னை மறந்து  வாழ்ந்தார் தந்தை சொல் மந்திரம் என்பார்கள் தந்தை சொல்லிலும் தந்திரம் கண்டேன் ...  ... நான் ராமன் ஆகணும் என்று  எண்ணி   நான்  ராமா ராமா என்று  பாடி  நின்றேன்  ... தன் கவலை  மறக்கவே   தம்பி அவனை  நம்பி  கூற வந்தேன் தன்னை  மறந்த  தம்பியோ   தாயகத்தையும் மறந்து ...

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Posted: 24 Sep 2013 09:08 AM PDT

வாசலில் விளையாண்ட பாலாவிடம் பக்கமாய் வந்ததொரு குட்டி ஆடு பயந்துபோன பாலாவோ தள்ளியோட ஆடோ அவனை நோக்கி துள்ளியோட பயப்படாதே பாலா என அன்னை சொல்ல ஆட்டை அரைமனதாய் தொட்டு பார்த்தான்  முகத்தில் சிறு புன்னகையோட  விளையாட்டை மறந்து விட்டு ஆட்டை கட்டி அணைத்து விட்டு  முதுகில் ஏறி படுக்க முயன்று  தோற்றுப்போன முகத்துடனே அவன்  தரையில் கிடந்த செடிகளை எல்லாம்  கையில் பிறக்கி எடுத்துகிட்டு  ஆட்டின் வாயில் ஊட்டி நிற்க  ஊட்டிய இலைகளை தின்றபடி கெஞ்சிய குரலில் மாவென கத்த அருகில் நின்ற அவன் அன்னையோ  பாலாவை ...

என்னவளே ! கவிஞர் இரா .இரவி !

Posted: 24 Sep 2013 09:06 AM PDT

என்னவளே ! கவிஞர் இரா .இரவி ! என்னை எறும்பாக்கியவள் நீ ! ஆம் உன்னால் தூங்காத எறும்பு ஆனேன் ! எறும்பு தூங்குவதில்லை ! உன்னைக் கண்ட நாள் முதலாய் நானும் தூங்குவதே இல்லை ! எறும்பு ஒய்வது இல்லை நானும் ஓயவில்லை ! ---------------------------------------------- மரங்கொத்தி பறவை மரத்தை ஒரு நொடியில் 20 முறை கொத்தும் ! மனம் கொத்தி பறவையான நீ ஒரு நொடியில் 100 முறை கொத்துகின்றாய் ! அலகால் கொத்தும் பறவை அது ! அழகால் கொத்தும் பாவை நீ -------------------------------------------------- .தலை ...

நாம் நினைப்பது போல அல்ல பழச்சாறுகள் :(

Posted: 24 Sep 2013 08:27 AM PDT

பழச்சாறு.. உடலுக்கு மிகவும் நல்ல உணவு வகையில் முதலிடத்தில் இருப்பது. மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் சரி, அதிக நாள் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும் சரி முதலில் கொடுப்பது பழச்சாறு தான். மேலும், வீட்டில் இருக்கும் நோயாளிகளுக்கும் நாம் அடிக்கடி பழச்சாறு கலந்து கொடுத்து வருவோம். பழச்சாறு என்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் உடலுக்கு மிக அதிக நன்மை கிடைக்கும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், பழச்சாறு என்பது நாம் நினைப்பது போல மிகவும் நல்ல உணவாக இல்லாமல், அதில் சில குறைபாடுகளும் ...

சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள்

Posted: 24 Sep 2013 08:21 AM PDT

சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் இதோ உங்களுக்காக... அமெரிக்க தூதரகம் 220, அண்ணாசாலை, சென்னை-6. போன்: 044-28112000 பெல்ஜியம் தூதரகம் ஸ்பிக் ஹவுஸ், 88, அண்ணாசாலை, கிண்டி. போன்: 044-22350877 ஜெர்மனி தூதரகம் 9, போட் கிளப் ரோடு, ராஜா அண்ணாமலைபுரம். போன்: 044-24301600 ரஷ்யா தூதரகம் 14, சந்தோம் ஹைரோடு, மயிலாப்பூர். போன்: 044-24982330 ஆஸ்திரியா தூதரகம் 114-117, கோத்தாரி பில்டிங், நுங்கம்பாக்கம் ஹைரோடு, நுங்கம்பாக்கம். 04428334515 கனடா தூதரகம் 24/18, ...

மூக்குத்தி அணிவது ஏன்?

Posted: 24 Sep 2013 08:02 AM PDT

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். ...

எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு

Posted: 24 Sep 2013 07:40 AM PDT

இவ்வாண்டு துவக்கத்தில் எழுத்து.காம் நடத்திய (பொங்கல்) கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற அடியேனின் கவிதை.... உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே... விவசாய நிலமெல்லாம் வீட்டுமன ஆகுதடா! வெள்ளாம செஞ்ச கூட்டம் வேற பக்கம் ஓடுதடா! ஆன கட்டிப் போரடிச்ச அந்தக் காலம் போனதடா! - இப்ப ஆறு மூட்ட வெளச்சலுக்கே ஆண்டியாத்தான் போனமடா! காவேரி கனவு எல்லாம் கானல் நீராப் போனதடா! கடைசிவரைக்கும் மின்சாரமும் கண்ணாமூச்சி காட்டுதடா! நம்பி நட்ட நடவெல்லாம் நாசமாத்தான் போனதடா! தண்ணி ...

MR Radha speech-M.G.R-ரை ஏன் சுட்டேன்?

Posted: 24 Sep 2013 07:35 AM PDT

கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Posted: 24 Sep 2013 07:11 AM PDT

மீண்டும் உங்களுடன் மரிஸ்டெல்லா.... நான் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிந்தால் கூறுங்கள்...
9 8 7 6 5 4 3 2 1 இதுதான் கணக்கு...45 இருந்து 45_கழித்தால் விடை 45 வரவேண்டும்....
உங்கள் எல்லோருக்கும் தெரியும் என நினைக்கின்றேன்..பதிலை கண்டுபிடிக்கவும்..நன்றி மீண்டும்
உங்களுடன் மரிஸ்டெல்லா ...............................

மருந்தீஸ்வரர் கோவிலில் பாடப்படும் “ஓம் நம சிவாய” சித்தர் பாடல்!

Posted: 24 Sep 2013 05:58 AM PDT

திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் ஆலயத்தில் சித்தரால் சிவன் சன்னதி முன் அமர்ந்து தினமும் இரவு பாடப்பட்ட பாடலை இன்றும் சிவ பக்தர்கள் கடைபிடித்து பாடிவருகிறார்கள்! அனைவரின் குரலும் சற்றும் பிறழாது பக்தியுடன் ஓங்கி ஒலிப்பது கேட்கும் நமக்கும் அவர்களுடன் சேர்ந்து பாட வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது! தரவிறக்கம் செய்ய: 5821 KB http://rs569.rapidshare.com/files/219981904/OmNamaShivayaOm_64kbps.mp3 பாடல் வரிகள்: ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் ...

EEGARAI FLASH NEWS

Posted: 24 Sep 2013 05:33 AM PDT

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி



நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Posted: 24 Sep 2013 05:19 AM PDT

விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி

சிவ கவசம்

Posted: 24 Sep 2013 04:51 AM PDT

அகில நாயகனாய், ஞான ஆனந்த ரூபியாகித், துகள்தரும் அணுவாய், வெற்பின் தோற்றமாய், உயிரை எல்லாம் தகவுடன் அவனி யாகித் தரிப்பவன் எம்மை இந்த மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க எல்லாவற்றிற்கும் தலைவனாகியும் ஞானனந்த வடிவினராகியும் துகளாகிய அணுதன்மையாகியும் மலைபோலப் பெரியதாகியும் பூமியுமாகியும் தகுதியுடன் ஆன்ம கோடிகளைத் தாங்குகின்ற கடவுள் இந்த உலகத்திற்குத் தீங்கு நேரிடாவண்னம் அருள் செய்து என்னைக் காக்கக்கடவர் குரைபுனல் உருவம் கொண்டு கூழ்தொறும் பயன்கள் நல்கித் தரையிடை உயிர்கள் யாவும் ...

அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Posted: 24 Sep 2013 04:33 AM PDT

கேப்டன் டோணி தனது ஹேர்ஸ்டைலை படு ஜில்லாக்ஸ் ஆக மாற்றி விட்டார். நடுவில் கீரிப்புள்ளை மாதிரி முடியை வைத்துக் கொண்டு சைடில் முடியை சிராய்த்து எடுத்து விட்டு புதிய கெட்டப்பில் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நுழைந்துள்ளார் டோணி. ஆரம்பத்தில் அப்துல் கலாமின் ஜெராக்ஸ் போல காணப்பட்டார் டோணி. ஆனால் அப்துல் கலாமை விட சற்றே நீளமான முடியுடன் .. ப்ரீஸி தலையுடன் விக்கெட் கீப்பராக வெளுத்துக் கட்டி வந்தார். திடீரென அவரைத் தூக்கி கேப்டன் பதவியில் அமர்த்தியதும் முதலில் முடியைத்தான் அவர் வெட்டினார்.. அதன் பிறகுதான் ...

வண்ணம்

Posted: 24 Sep 2013 04:09 AM PDT

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு)

Posted: 24 Sep 2013 04:04 AM PDT

த்வமேகம், கூனம்ம பதாலு என்ற இரு முக்கியமான கவிதை நூல்களும், சிறுகதைகள்,தெலுங்கு இலக்கிய வரலாறு, நாடகங்கள், ஆந்திராவின் சிவவாக்கியரான வேமனாவின் கவிதைகளைப் பற்றிய விமர்சனங்கள். எண்ணற்ற தெலுங்கு திரைப்பாடல்களுக்காகவும் படித்தவர்கள் பாமரரரஃகள் வேறுபாடின்றி மெச்சப்படும் ஆருத்ரா (பாகவதலு சதாசிவ சங்கர சாஸ்திரி(1925-1999)) தன் 17வது வயதில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். பேச்சு மொழியை தன் கவிதைகளில் கையாண்டவர். தெலுங்கு கவிதை இலக்கணத்தில் தேர்ந்தவரானாலும் கவிதை எளிமையாலும் இசைத்தன்மையாலும் ...

தீபாவளிக்குக் கிளம்பிவிட்ட திகில் கொள்ளையர்கள்!

Posted: 24 Sep 2013 03:59 AM PDT

'திருச்சி ராம்ஜி நகர்' - இந்தப் பெயரை கேட்டாலே வடநாட்டு போலீஸ் வட்டாரமே அலறும். காரணம் இங்குள்ள ராயல் கொள்ளையர்கள்! அசந்தால் ஆட்டையப் போடும் தங்களது நேர்த்தியான தொழில் திறமையால் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியையே அலறவைத்த இவர்கள், இப்போது தீபாவளி சம்பாத்தியத்துக்காக(!) ஆகஸ்ட் 22-ம் தேதியிலிருந்து கூட்டம் கூட்டமாக கிளம்பி இருக்கிறார்கள். ஒரேநேரத்தில் ஆயிரம் பேருக்கு மேல் களத்துக்கு போயிருப்பதால் ஆண்கள் நடமாட்டம் அற்றுக் கிடக்கிறது ராம்ஜிநகர் கேப்மாரிகள் ஏரியா. இதனால் எந்த நேரத்தில் எந்த ஸ்டேட் போலீஸ் ...

கண்ணதாசன்

Posted: 24 Sep 2013 03:16 AM PDT

சோழ வேங்கை நாவலை டவுன்லோட் செய்ய

Posted: 24 Sep 2013 02:58 AM PDT

சோழ வேங்கை நாவலை டவுன்லோட் செய்ய கௌதம நீலாம்பரன் -சோழ வேங்கை நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/b4o73k88gs6huuq/chozha+vengai%28OrathanaduKarth*k.blogspot.com%29.pdf

"பிளாக்பெர்ரி" பட்ஜெட் ஸ்மார்ட் போன்.

Posted: 24 Sep 2013 01:48 AM PDT

மிகப்பிரபலமான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் பிளாக்பெர்ரி. தாம் தயாரிக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களையும், BlackBerry OS -ல் இயங்கும் வகையில் வடிவமைத்து வெளியிடுகிறது. விலையுயர்ந்த போன்களையே வெளியிட்டு வந்த பிளாக்பெர்ரி நடுத்தர வர்க்கத்தினரின் வசதியை பொருட்படுத்தி, தற்பொழுது நடுத்தர விலையுள்ள பட்ஜெட் ஸ்மார்ட்போன்களையும் வெளியிட்டு வருகிறது. கடந்த மாதம் பிளாக்பெர்ரி நிறுவனம் தன்னுடைய புதிய "பட்ஜெட் ஸ்மார்ட் போன்" ஐ (BlackBerry 9720) இந்தியாவிற்கு விற்பனைக்கு கொண்டு வந்தது. பிளாக்பெர்ரி ...

இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்!

Posted: 24 Sep 2013 01:05 AM PDT

இறைவழிபாடு தொடர்பான அனைத்தும் முன்னர் தமிழிலேயே இருந்தன. பின்னர் வேற்றவர் மொழியாலும், வேற்றவர் ஆட்சியாலும், வேற்றுச் சமயங்களின் நுழைவாலும் தமிழ்வழிபாடு பாதிக்கப்பட்டது. அதை மீட்டெடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. வழிபாடு தொடர்பான தமிழ்ப்பெயர்களை இந்தத் திரியில் பதிவு செய்ய உள்ளேன். தமிழ் வழிபாடு இருந்ததைப்பற்றி திருஞானசம்பந்தரும் பின்வரும் பாடல்களில் தெரிவிக்கிறார். "செந்தமிழர் தெய்வமறை நாவர் செழுநற்சுவை தெரிந்த அவரோடு அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரனூர்" என்ற பாடலால் ...

நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)

Posted: 23 Sep 2013 11:48 PM PDT

அமைதியான கிராமம் அறிவற்ற மக்கள், கலப்படமில்லா காற்று, கர்வம் நிறைந்த மனது, இறைவன் வாழும் இயற்கை இதயமற்ற மனிதன்..!! தகுதியாய் வாழ நாதி இருந்தும் தரிசு நிலமாய் மக்கள்..!! அடுத்தவன் பிழைப்பில் மண் விழ கொண்டாடும் மக்கள் மனம்..!! கிராமங்கள் சூடியிருந்த மண் வாசனை மக்கி, கலாச்சார ஆடை கிழிந்து இயற்கை இழிவாகி நிற்கிறது..!! தெரு வழிப்போக்கன் தங்கி செல்ல தினுசாய் திண்ணை கட்டியவர்கள், எவரும் இன்று தங்கி விடாமல் எட்டி மிதிக்க வேலியிடுகின்றனர்..!! ஆடுபுலி ஆட்டத்துடன் தாயம் விளையாடியவர்கள், அன்பு ...

கவிதையில் யாப்பு

Posted: 23 Sep 2013 11:21 PM PDT

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

Posted: 23 Sep 2013 10:01 PM PDT

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஜெயகாந்தன்-ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/vgkcxwo4or3tktx/jayakanthan-oru+manithan+oru+veedu+oru+ulakam%28OrathanaduKarth*k.blogspot.com%29.pdf

சுஜாதா -நிலா நிழல் நாவலை டவுன்லோட் செய்ய

Posted: 23 Sep 2013 10:00 PM PDT

சுஜாதா -நிலா நிழல் நாவலை டவுன்லோட் செய்ய

http://www.mediafire.com/download/q8h4b4gd3lcdbq0/sujatha-nila+nizhal%28OrathanaduKarth*k.blogspot.com%29.pdf

பரதேசி வந்தான் ஆன்மிக கதை

Posted: 23 Sep 2013 09:58 PM PDT

பரதேசி வந்தான் ஆன்மிக கதை தி .ஜானகிராமன் -பரதேசி வந்தான் ஆன்மிககதையை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க்: http://www.mediafire.com/download/vdr3szmh5u74kth/Paradesi-Vandhan%28OrathanaduKarth*k.blogspot.com%29.pdf

திருந்துவார்களா?

Posted: 23 Sep 2013 09:32 PM PDT

கீழ்த்திசையின் அடிவானம் இன்னும் வெளுக்கவில்லை. மார்கழி மாதத்துக்கே உரிய அதிகாலைப் பனிக்காற்றின் குளுமை. கனத்த போர்வைக்கடியில் இதமான வெப்பத்தில் பொய்த்தூக்கம். மனச்சிறகுகளின் விசிறியடிப்பில் நெஞ்சில் நினைவுகளின் புரளல். "பிளாஸ்க்கில் காப்பி இருக்கு எழுந்து குடிங்க. நான் கோயிலுக்குப் போயிட்டு வந்துடுறேன்.' கோபாலகிருஷ்ணன் போர்வை விலக்கி எழுந்த பொழுது தெரு விளக்கு வெளிச்சத்தில் மங்களம் நடை இறங்கிச் செல்வது தெரிந்தது. மார்கழி முடியும்வரை இந்த கூத்துதான். பச்சைத் தண்ணியைத் தலையில் ஊற்றி, முற்றம் ...

காளிவதம்!

Posted: 23 Sep 2013 09:29 PM PDT

"என்னாடி செல்லி... என்னாத்துக்கு விழுந்தடிச்சு வர்ற?' அத்த... அவுத்த... கன்னிமார் ஓடையோரம்...என்ன எழவுடி? சொல்லித்தான் தொலையேன்.ஒரு அறியாப் பச்சைக்குழந்தை...நாலு வயசு இருக்கும். பொணமா கிடக்குது அத்த... மூச்சி நெஞ்செல்லாம் இரத்தமா பிராண்டிக் கிடக்குது அய்யோ! செங்காளி.. வனத்தாயி... ரத்தக் காவா விழுகுதே... உனக்குப் பெரும் படையல் போடணும்... மாரி, மக்க காக்கோணும்... தாமதமாயிடுச்சு... பொறுத்துக்கடி செங்காளி! புலம்பிக் கொண்டே தலையாரிக்குத் தகவல் சொல்ல ஓடியவள் திரும்பி நின்று! அமாவாசை, பௌர்ணமிக்கு ...

பக்திக்கு எதுவும் தடையல்ல!

Posted: 23 Sep 2013 09:00 PM PDT

செப்., 25 - நந்தனார் குருபூஜை பக்திக்கு ஜாதியோ, தொழிலோ தடையாக இருக்க முடியாது என்பதை, உலகிற்கு உணர்த்துகிறது, திருநாளைப்போவார் புராணம். திருநாளைப்போவார் - பெயரே வித்தியாசமாக உள்ளதல்லவா! இவர் குலத்தால் புலையர். நிஜப்பெயர் நந்தனார். விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாலும், குலத்தொழிலான மாட்டுத்தோல், நரம்பு ஆகியவற்றையும் சேகரிப்பார். ஆனால், அவர், மற்றவர்களைப் போல், இவற்றை விற்று, பணம் சம்பாதிக்கவில்லை. கோவில்களுக்கு தேவையான பேரிகை, யாழ் போன்ற வாத்தியங்களை செய்ய கொடுத்து விடுவார். மிருகமாய் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™