Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சரஸ்வதி மகால் நூலகத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை

Posted: 24 Sep 2013 01:31 PM PDT

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தை சர்வதேச அளவில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியரும், நூலக இயக்குநருமான கா. பாஸ்கரன்.

பெண்ணைத் தாக்கிய 5 பேர் மீது வழக்கு

Posted: 24 Sep 2013 01:31 PM PDT

கீழப்பழூவூரில் முன்விரோதத்தில் பெண்ணைத் தாக்கியதாக 5 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மூன்றாவது அணி

Posted: 24 Sep 2013 01:31 PM PDT

தமிழகம், புதுச்சேரியில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் தெரிவித்தார்.

ஜயங்கொண்டம் அருகே மினிலாரி கவிழ்ந்து 2 பேர் சாவு

Posted: 24 Sep 2013 01:31 PM PDT

: ஜயங்கொண்டம் அருகே செவ்வாய்க்கிழமை மினி லாரி கவிழ்ந்ததில் 2 பேர் இறந்தனர், 29 பேர் காயமடைந்தனர்.

கால்நடைப் பாதுகாப்புத் திட்ட மருத்துவ முகாம்

Posted: 24 Sep 2013 01:31 PM PDT

அரியலூர் அருகேயுள்ள மலத்தாங்குளத்தில் கால்நடை பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

என்எஸ்எஸ் முகாம் தொடக்கம்

Posted: 24 Sep 2013 01:30 PM PDT

அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம் அண்மையில் தொடங்கியது.

அதிக மகசூல் பெற மண் பரிசோதனை அவசியம்

Posted: 24 Sep 2013 01:30 PM PDT

விவசாயிகள் அதிக மகசூல் பெற மண் பரிசோதனை செய்ய வேண்டும் என்றார் விதைப் பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் சீ. தெய்வீகன்.

பெரம்பலூரில்அக். 1-ல் முதன்மை வாக்காளர்  பட்டியல்

Posted: 24 Sep 2013 01:30 PM PDT

பெரம்பலூர் ஆட்சியரகத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அக். 1-ஆம் தேதி நடைபெறும் முதன்மை வாக்காளர் பட்டியல் வெளியீடு நிகழ்ச்சியில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

சுமை ஆட்டோ கவிழ்ந்து 22 பெண்கள் காயம்

Posted: 24 Sep 2013 01:29 PM PDT

பெரம்பலூர் அருகே செவ்வாய்க்கிழமை காலை சுமை ஆட்டோ கவிழ்ந்ததில் கூலி வேலைக்கு சென்ற 22 பெண்கள் காயமடைந்தனர்.

"என்.எஸ்.எஸ். மாணவர்கள் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

Posted: 24 Sep 2013 01:29 PM PDT

நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார் திருச்சி மண்டல அண்ணா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதி வெங்கடாசலம்.

ரூ. 4.27 கோடியில் கல்விக்கடன் ஆணைகள் அளிப்புமாணவருக்கு கல்விக்கடன் ஆணையை அளிக்கிறார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

Posted: 24 Sep 2013 01:29 PM PDT

ரூ. 4.27 கோடியில் கல்விக்கடன் ஆணைகள் அளிப்புமாணவருக்கு கல்விக்கடன் ஆணையை அளிக்கிறார் மாவட்ட  ஆட்சியர் தரேஸ் அஹமது.

அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க மாநாடு

Posted: 24 Sep 2013 01:28 PM PDT

பொன்னமராவதியில் புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் 12வது மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். அரசு போக்குவ

பெரம்பலூரில் இன்றும்,நாளையும் குடிநீர் விநியோகம் இருக்காது

Posted: 24 Sep 2013 01:28 PM PDT

  பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு புதன், வியாழக்கிழமைகளில் காவிரிக் குடிநீர் விநியோகம் இருக்காது என்றார் ஆணையர் போ. குருசாமி. 

கண்மாய் வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை

Posted: 24 Sep 2013 01:28 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், சமுத்திரம் ஊராட்சியில் மண்ணால் மூடப்பட்ட கண்மாய் வாய்க்காலை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயி மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளார்.

திமுக வழக்குரைஞர்கள் துண்டு பிரசுரம் விநியோகம்

Posted: 24 Sep 2013 01:28 PM PDT

: புதுக்கோட்டையில் திமுக வழக்குரைஞர்கள் பிரிவு சார்பில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுவை அருகே இரு தரப்பினர் மோதல்: போலீஸ் துப்பாக்கிச் சூடு

Posted: 24 Sep 2013 01:27 PM PDT

புதுச்சேரி அருகே பண்டசோழநல்லூரில் செவ்வாய்க்கிழமை, இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. மோதலுக்கு திரண்டிருந்தவர்களை போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கலைத்தனர்.

ஐஓபி சார்பில் இலவச தொழில் பயிற்சி

Posted: 24 Sep 2013 01:27 PM PDT

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மதிப்புகூட்டிய உணவுப்பொருட்கள்

மூளைக்காய்ச்சல் தடுப்பூசி பணிகள் புறக்கணிக்கப்படும்

Posted: 24 Sep 2013 01:26 PM PDT

புதுக்கோட்டையில் பணியாற்றும் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநரின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்து நாளை (செப்.26) நடைபெறவுள்ள மூளைக்காய்ச்சல் தடுப்

சார்நிலை கருவூலம் அமைக்க வலியுறுத்தல்

Posted: 24 Sep 2013 01:26 PM PDT

பொன்னமராவதியில் அரசால் அறிவிக்கப்பட்ட சார்நிலை கருவூலத்தை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பல்கலை. மகளிர் கூடைப்பந்துப் போட்டி:திருச்சி இந்திராகாந்தி கல்லூரி சாம்பியன்

Posted: 24 Sep 2013 01:26 PM PDT

புதுக்கோட்டையில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைகழக அளவிலான மகளிர் கூடைப்பந்தாட்ட போட்டிகளில் திருச்சி இந்திராகாந்தி கல்லூரி சாம்பியன் கோப்பையை வென்றது.

மதுபானக் கடையைஇடமாற்றம் செய்ய பாமக வலியுறுத்தல்

Posted: 24 Sep 2013 01:26 PM PDT

அறந்தாங்கியில் பாமக ஒன்றிய செயற்குழுக்கூட்டம் ஒன்றியச் செயலாளர் இராம. துரைராஜன் தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. மாநில துணைப் பொதுச்செயலாளர் சுப. அருள்மணி சிறப்புரையாற்றினார்.

கண்தானம்

Posted: 24 Sep 2013 01:25 PM PDT

பொன்னமராவதி ராயல் அரிமா சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை கண் தானம் பெறப்பட்டது.

பொன்னமராவதியில்கிணற்றில்தவறி விழுந்து நகைத் தொழிலாளி சாவு

Posted: 24 Sep 2013 01:25 PM PDT

பொன்னமராவதியில் செவ்வாய்க்கிழமை கிணற்றில் தவறி விழுந்த நகைத் தொழிலாளி உயிரிழந்தார்.

புதுகையில் மழை நீர் கால்வாயை சீரமைக்க கோரி இன்று கடையடைப்பு

Posted: 24 Sep 2013 01:24 PM PDT

புதுக்கோட்டை நகரின் கிழக்கு ராஜவீதியில் இடிக்கப்பட்ட மழைநீர் கால்வாயை சீரமைக்க கோரி இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர்.

மக்கள் குறைகேட்பு முகாமில் 100 பேருக்கு முதியோர் ஓய்வூதிய ஆணை

Posted: 24 Sep 2013 01:24 PM PDT

புதுக்கோட்டை அருகே அண்மையில் நடந்த மக்கள் குறை கேட்பு முகாமில் நூறு பேருக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

மகசூல் இழப்பை தவிர்க்க வேளாண்துறை யோசனை

Posted: 24 Sep 2013 01:24 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி மேட்டூர் பாசனப் பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு சாகுபடியில் மகசூல் இழப்பை தடுக்க என வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.

என்எஸ்எஸ் மாணவர்கள் தூய்மைப் பணி

Posted: 24 Sep 2013 01:23 PM PDT

அறந்தாங்கி மற்றும் மணமேல்குடியில் என்எஸ்எஸ் மாணவ, மாணவிகள் தூய்மைப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

மறைந்து வரும் மன்னர் காலக் குளங்கள்

Posted: 24 Sep 2013 01:23 PM PDT

புராதன நகரமான தஞ்சாவூரில் நீராதாரத்துக்காக மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட குளங்களில் பல இப்போது ஆக்கிரமிப்பு காரணமாக சிறிது, சிறிதாக மறைந்து வருகின்றன.

கால்நடை மருத்துவப் படிப்பு: திருநெல்வேலி, ஒரத்தநாடு கல்லூரிகளுக்கு அனுமதி

Posted: 24 Sep 2013 01:23 PM PDT

தமிழகத்தில் திருநெல்வேலி, ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் தலா 40 பி.வி.எஸ்சி. இடங்களில் மாணவர்களைச் சேர்க்க இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

பெரியகோவில் உண்டியலில் ரூ. 5.69 லட்சம் காணிக்கை

Posted: 24 Sep 2013 01:22 PM PDT

தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தர்கள் ரூ. 5.69 லட்சம் காணிக்கை செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

திருவையாறு அருகே கால்நடை மருத்துவ முகாம்

Posted: 24 Sep 2013 01:22 PM PDT

திருவையாறு அருகிலுள்ள கோவிலூர் கிராமத்தில் கால்நடை சிகிச்சை முகாம் அண்மையில் நடைபெற்றது.

கோவையில் யு.பி.எஸ்.சி. தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை: வி.நாராயணசாமி

Posted: 24 Sep 2013 01:22 PM PDT

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) முதல்நிலைத் தேர்வு மையத்தை கோவையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பிரதமர் அலுவலக இணையமைச்சர் வி.நாராயணசாமி கூறினார்.

சர்வதேச தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை: ஆட்சியர்

Posted: 24 Sep 2013 01:22 PM PDT

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தை சர்வதேச அளவில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியரும், நூலக இயக்குநருமான கா. பாஸ்கரன்.

"சங்க காலத்திலும் வளர்ச்சியடைந்த குறுநில அரசுகள்'

Posted: 24 Sep 2013 01:22 PM PDT

தென்னிந்தியாவில் சங்க காலத்தில் குறுநில ஆட்சிகளாக இருந்தாலும், வளர்ச்சியடைந்த அரசுகளாக இருந்தன என்றார் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறைத் தலைவர் ஒய். சுப்பராயலு.

பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Sep 2013 01:21 PM PDT

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நீடாமங்கலம் கூட்டுறவு பால் சங்க அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூலி குறைவைக் கண்டித்து சாலை மறியல்

Posted: 24 Sep 2013 01:21 PM PDT

: வேலை உறுதி திட்டத்தில் குறைவான கூலி வழங்கப்படுவதை கண்டித்து, சங்கரன்பந்தலில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

நாகை ஆட்சியரக வளாகத்தில்தீக்குளிக்க முயன்றவர் கைது

Posted: 24 Sep 2013 01:21 PM PDT

போலீஸாரின் கெடுபிடி நடவடிக்கைகளிலிருந்து காப்பாற்றக் கோரி, நாகை ஆட்சியரக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

Posted: 24 Sep 2013 01:20 PM PDT

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்தியன் ராணுவக் (மிலிட்டரி) கல்லூரியில் சேர்ந்து பயில விரும்பும் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

Posted: 24 Sep 2013 01:20 PM PDT

நாகை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பு ஊசி செலுத்தும் பணி செவ்வாய்க்கிழமை (செப். 24) முதல் தொடங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்துக்கு1.25 டன் நெல் கொள்முதல் இலக்கு

Posted: 24 Sep 2013 01:20 PM PDT

நாகை மாவட்டத்தில் 22,259 ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது; இதையொட்டி, மாவட்டத்துக்கு 1.25 டன் நெல் கொள்முதல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் து

திருக்குவளை மனுநீதி நாள் முகாம் ஒத்திவைப்பு

Posted: 24 Sep 2013 01:19 PM PDT

நாகை மாவட்டம், திருக்குவளை வட்டத்துக்குள்பட்ட மடப்புரம் கிராமத்தில் நாகை வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில், செப். 25-ம் தேதி நடைபெறவிருந்த மனுநீதி நாள் முகாம்

இலங்கை இனப் படுகொலை: சுதந்திரமான பன்னாட்டு விசாரணை தேவை

Posted: 24 Sep 2013 01:19 PM PDT

இலங்கை இனப் படுகொலை தொடர்பாகச் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை தேவை என்று ஐ.நா. கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நலத் திட்டங்களுக்கு ஓஎன்ஜிசி ரூ. 25 லட்சம் உதவி

Posted: 24 Sep 2013 01:19 PM PDT

ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகளுக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளது.

44 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

Posted: 24 Sep 2013 01:18 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், 44 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என ஆட்சியர் சி. நடராசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2ஜி வழக்கு ஆவணங்களை ஆராயாமல் அறிக்கையை இறுதி செய்யக் கூடாது

Posted: 24 Sep 2013 01:18 PM PDT

2ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை முழுமையாக ஆராயாமல் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) தனது வரைவு அறிக்கையை இறுதி செய்யக் கூடாது என்று அதன் தலைவர் பி.சி. சாக்கோவுக்கு நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு நிபந்தனை விதித்துள்ளார். ஏற்கெனவே, கடந்த திங்கள்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஜேபிசி கூட்டத்தை கடந்த வாரம் சாக்கோ வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

பெரம்பூர் அருகேசாலை விபத்தில் இளைஞர் சாவு

Posted: 24 Sep 2013 01:18 PM PDT

நாகை மாவட்டம், பெரம்பூர் அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

ரூ.4,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது

Posted: 24 Sep 2013 01:18 PM PDT

புதுக்கோட்டை அருகே ரூ.4,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

பட்டாசு ஆலையில் வெடி விபத்து:3 பெண்கள் உள்பட 4 பேர் பலி

Posted: 24 Sep 2013 01:17 PM PDT

மதுரை செக்கானூரணி அருகே செவ்வாய்க்கிழமை மாலை தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கருகி  உயிரிழந்தனர்.

சிறப்பு அரசு வழக்குரைஞர் நீக்கம் ஏன்? உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் விளக்கம்

Posted: 24 Sep 2013 01:17 PM PDT

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வந்த சிறப்பு அரசு வழக்குரைஞர் பவானி சிங்கை நியமித்தது மற்றும் நீக்கியது தொடர்பான சூழ்நிலைகளை உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு விளக்கியது.

குளித்தலை அருகேவேன் மோதி ஊராட்சித் தலைவர் சாவு

Posted: 24 Sep 2013 01:17 PM PDT

குளித்தலை அருகே சுமை ஏற்றிச் சென்ற வேன் மோதி செம்பியநத்தம் ஊராட்சித் தலைவர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.

சேது சமுத்திரத் திட்டம்: மத்திய அரசு வழக்குரைஞருக்கு கருணாநிதி கண்டனம்

Posted: 24 Sep 2013 01:16 PM PDT

சேது சமுத்திரத் திட்ட வழக்கில் இருந்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் விலகியிருப்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு சம்பவம்: 2 பெண்கள் தீக்குளித்து தற்கொலை

Posted: 24 Sep 2013 01:16 PM PDT

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே திங்கள்கிழமை இரவு வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளுக்குப் பதவி உயர்வு

Posted: 24 Sep 2013 01:16 PM PDT

சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் ஆறு கூடுதல் நீதிபதிகள், நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்தார்.

தஞ்சாவூர்

Posted: 24 Sep 2013 01:16 PM PDT

அரியலூர்

Posted: 24 Sep 2013 01:15 PM PDT

திருச்சி பாஜக மாநாடு திருப்புமுனையைத் தருமா?

Posted: 24 Sep 2013 01:15 PM PDT

தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டங்களைத் தவிர்த்து, பிரம்மாண்ட மாநாடுகளாக தமிழ்நாடு பாஜக நடத்தும் இரண்டாவது நிகழ்ச்சியாக, "இளந்தாமரை மாநாடு' திருச்சியில் வியாழக்கிழமை (செப். 26) நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை

Posted: 24 Sep 2013 01:15 PM PDT

பெராரே அதிரடியில் ஹைதராபாத் வெற்றி

Posted: 24 Sep 2013 01:06 PM PDT

திசாரா பெராரேவின் அதிரடியில் டிரினிடாட் அன்ட் டொபாகோவுக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பூதப்பாண்டி அருகே பாஜக டிஜிட்டல் போர்டு சேதம்:போலீஸார் விசாரணை

Posted: 24 Sep 2013 12:59 PM PDT

பூதப்பாண்டி அருகே பாஜக டிஜிட்டல் போர்டு சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மறவன்குடியிருப்பு பள்ளியில் என்எஸ்எஸ் சிறப்பு முகாம் தொடக்கம்

Posted: 24 Sep 2013 12:58 PM PDT

வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, வல்லன்குமாரன்விளை அரசு மேல்நிலைப் பள்ளி, மறவன்குடியிருப்பு பிஷப் ஆரோக்கியசாமி மேல்நிலைப் பள்ளிகளின் என்.எஸ்.எஸ். கூட்டு சிறப்பு முகாம்

கடலில் காணாமல்போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதி

Posted: 24 Sep 2013 12:58 PM PDT

கடலில் காணாமல்போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதி கன்னியாகுமரி, செப். 24:

கண்டன்விளை ஆலயத் திருவிழா: 27-ல் கொடியேற்றம்

Posted: 24 Sep 2013 12:58 PM PDT

திங்கள்சந்தை அருகேயுள்ள கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (செப். 27) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

"ஊரகப் பகுதிகளில் 279 புதிய மின் கம்பங்கள்

Posted: 24 Sep 2013 12:57 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள 430 மின்கம்பங்களில் முதல் கட்டமாக 279 மின் கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டுள்ளதாக, ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஈத்தாமொழியில் மார்க்சிஸ்ட் தெருமுனைக் கூட்டம்

Posted: 24 Sep 2013 12:57 PM PDT

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் சிறப்பு மாநாட்டையொட்டி ஈத்தாமொழியில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

சீரான குடிநீர் விநியோகம் கோரி சாலை மறியல்

Posted: 24 Sep 2013 12:56 PM PDT

சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி, காலிக் குடங்களுடன் பெண்கள் செவ்வாய்க்கிழமை கோவில்பட்டி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

விளாத்திகுளத்தில் ஊராட்சித் தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 24 Sep 2013 12:56 PM PDT

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்,  ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பட்டாசு ஆலை விபத்து: 30-ல் கோட்டாட்சியர் விசாரணை

Posted: 24 Sep 2013 12:55 PM PDT

திருச்செந்தூர் அருகே பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக வரும் 30-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.

வசவப்பபுரம் சிவன் கோவிலில் மூலவர் மீது சூரியஒளி விழும் அபூர்வ காட்சி

Posted: 24 Sep 2013 12:55 PM PDT

வசவப்பபுரம் முறம்பேஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ காட்சியை பொதுமக்கள் பார்த்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆசிய கூடைப்பந்து: ஜோர்டானுடன் இந்தியா மோதல்

Posted: 24 Sep 2013 12:54 PM PDT

பதினாறு வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா அணி தனது முதல் ஆட்டத்தில் ஜோர்டானை எதிர்கொள்கிறது.

கோவில்பட்டி அரசுக் கல்லூரிக்கு பஸ் இயக்கம்

Posted: 24 Sep 2013 12:54 PM PDT

கோவில்பட்டியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை  பஸ் இயக்கிவைக்கப்பட்டது.

சிறப்பு நீச்சல் பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு

Posted: 24 Sep 2013 12:54 PM PDT

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெறும் சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோர் அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

தேசிய ஜூனியர் தடகளம்: தமிழகம் சாம்பியன்

Posted: 24 Sep 2013 12:54 PM PDT

கேரளத்தில் நடைபெற்ற 25ஆவது தேசிய ஜூனியர் தடகள போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழகம் வென்றது.

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞர் கைது

Posted: 24 Sep 2013 12:54 PM PDT

தூத்துக்குடி அருகே தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

மதுபாட்டில்கள் கடத்திய 4 பேர் கைது: 3 ஆட்டோக்கள் பறிமுதல்

Posted: 24 Sep 2013 12:53 PM PDT

விளாத்திகுளம் வேம்பார் பகுதியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 984 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று ஆட்டோக்களையும் பறிமுதல் செய்து டாஸ்மாக் விற்பனையாளர் உள்பட 4 பேரை சூரங்குடி போலீஸார் கைது செய்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (32). இவர் மாரியூர் பகுதியில் உ

ஆசிய ஹாக்கி: அரையிறுதியில் இந்திய அணி

Posted: 24 Sep 2013 12:53 PM PDT

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் 8ஆவது மகளிர் ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டியின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு: தம்பதி கைது

Posted: 24 Sep 2013 12:53 PM PDT

திருச்செந்தூரில் பெண்ணிடம் தாலிச்சங்கிலியைப்  பறித்து சென்ற தம்பதியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் கூட்டம் கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்னா, வெளிநடப்பு

Posted: 24 Sep 2013 12:53 PM PDT

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தில், வாக்குவாதம் ஏற்பட்டதால், கூச்சல் குழப்பம் நிலவியது. அதனைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து கோஷமிட்டனர். பின்னர் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

விநாயகர் கோவிலை அகற்ற எதிர்ப்பு:இந்து முன்னணி நூதனப் போராட்டம்

Posted: 24 Sep 2013 12:53 PM PDT

செட்டிக்குளத்தில் சாலையோரம் இருந்த விநாயகர் கோவிலை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் திங்கள்கிழமை பொங்கலிட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி கிணற்று நீரைதவறாகப் பயன்படுத்திய விவசாயி மீது வழக்கு

Posted: 24 Sep 2013 12:52 PM PDT

கழுகாசலபுரம் ஊராட்சி கிணற்றுத் தண்ணீரை தவறாகப் பயன்படுத்திய விவசாயி மீது போலீஸார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.

சர்வதேச சமாதான தினம்

Posted: 24 Sep 2013 12:52 PM PDT

கோவில்பட்டி தனியார் ஐ.டி.ஐ. நிறுவனத்தில் சர்வதேச சமாதான தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

எம்சிசி-முருகப்பா ஹாக்கி: ஐஓசி சாம்பியன்

Posted: 24 Sep 2013 12:52 PM PDT

எம்சிசி-முருகப்பா தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய எண்ணெய் கார்ப்பரேஷன் (ஐஓசி) அணி வெற்றி பெற்றது.

தூத்துக்குடியில் இறகுப்பந்து உள் விளையாட்டரங்கம் திறப்பு

Posted: 24 Sep 2013 12:52 PM PDT

தூத்துக்குடி இந்தியன் ஆபிஸர்ஸ் கிளப்பில் ரூ.70 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது.

திருச்செந்தூரில் திமுகவினர் துண்டுப்பிரசுரம் விநியோகம்

Posted: 24 Sep 2013 12:51 PM PDT

திருச்செந்தூரில் திமுக சார்பில்  துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

நாசரேத் இரட்டை கொலை: ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் இருவர் சரண்

Posted: 24 Sep 2013 12:51 PM PDT

உடையார்குளத்தில் நடந்த இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக தேடப்படும் இருவர் ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர்.

நலத் திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 24 Sep 2013 12:51 PM PDT

ஆறுமுகனேரி அருகே உள்ள சாகுபுரத்தில் ஆன்மா தொண்டு நிறுவன 14} வது ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விவேகானந்தர் ஜயந்தி விழா

Posted: 24 Sep 2013 12:50 PM PDT

ஆர்.எஸ்.எஸ். சார்பில், சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜயந்தி விழா உடன்குடி தேரியூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் பள்ளியில் நடைபெற்றது.

நியமனம்

Posted: 24 Sep 2013 12:50 PM PDT

மதிமுக மாநில தேர்தல் பணி துணைச் செயலராக நாசரேத் பேரூராட்சி துணைத் தலைவர் கு.மத்தேயு ஜெபசிங்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிஎஸ்பிபி பாட்மிண்டன்: ஓஎன்ஜிசி அணி வெற்றி

Posted: 24 Sep 2013 12:50 PM PDT

பிஎஸ்பிபி பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் பிரிவில் ஓஎன்ஜிசி அணி பட்டம் வென்றது. மகளிர் பிரிவில் பிபிசிஎல் அணி வாகை சூடியது.

உழவர் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம் தொடக்கம்

Posted: 24 Sep 2013 12:50 PM PDT

நாசரேத் கிராம நிர்வாக அலுவலகத்தில், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உறுப்பினராகப் பதிவு செய்யும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

பான் பசிபிக் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸிடம் அசரென்கா தோல்வி

Posted: 24 Sep 2013 12:50 PM PDT

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸிடம், பெலாரஸின் விக்டோரியா அசரென்கா தோல்வியைத் தழுவினார்.

நாகர்கோவில்

Posted: 24 Sep 2013 12:48 PM PDT

இந்தியா ஏ- மேற்கிந்தியத் தீவுகள் ஏ

Posted: 24 Sep 2013 12:46 PM PDT

இந்தியா ஏ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிகளுக்கு இடையே நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் புதன்கிழமை தொடங்குகிறது.

உலக ஜூனியர் செஸ்: 10 ஆவது சுற்றில் சேதுராமன் வெற்றி

Posted: 24 Sep 2013 12:44 PM PDT

உலக ஜூனியர் செஸ் போட்டியின் 10-வது சுற்றில் இந்தியாவின் சேதுராமன் வெற்றி பெற்றார்.

பிசிசிஐயின் சிறப்பு பொதுக் கூட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

Posted: 24 Sep 2013 12:43 PM PDT

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சிறப்பு பொதுக் கூட்டத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இக்கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெறுகிறது.

சாம்பியன்ஸ் லீக் டி20: பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு 2ஆவது தோல்வி

Posted: 24 Sep 2013 12:42 PM PDT

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி தோல்வியைத் தழுவியது.

அர்ஜுனா விருதைப் பெற்றார் சிந்து

Posted: 24 Sep 2013 12:41 PM PDT

பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவுக்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அர்ஜுனா விருதை செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

சினிமா நூற்றாண்டு விழா துளிகள்

Posted: 24 Sep 2013 12:38 PM PDT

விழா நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் நடிகர், நடிகையரைக் காண்பதற்காக பிற்பகல் 2 மணிக்கே பார்வையாளர்கள் அரங்கில் குவியத் தொடங்கினர்.

கேரளத்துக்கு வாருங்கள்: உம்மன் சாண்டி

Posted: 24 Sep 2013 12:28 PM PDT

படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் கேரளத்துக்கு வர வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி கோரிக்கை விடுத்தார்.

கம்பன் கலைக் கல்லூரியில் புத்தகக் கண்காட்சித் தொடக்கம்

Posted: 24 Sep 2013 12:28 PM PDT

திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தக வாரத்தையொட்டி புத்தகக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நலத் திட்ட உதவிக்காக மனுக்கள் பெறும் முகாம்

Posted: 24 Sep 2013 12:27 PM PDT

சேத்துப்பட்டு ஒன்றியம் நரசிங்கபுரம், ஊத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்களிடம் தாலுகா அலுவலகம் சார்பில் 170 மனுக்கள் திங்கள்கிழமை பெறப்பட்டன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™