மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மே. வங்காளத்தை புறக்கணித்தால் 1 கோடி பேரை திரட்டி டெல்லியில் போராட்டம்: மம்தா எச்சரிக்கை
- சிறையில் தூங்க முடியாமல் கொசுக்கடியில் தவித்த லல்லு
- பதவி பறிப்பு அவசரச் சட்டம்: ஜனாதிபதியிடம் நாளை பிரதமர் விளக்கம் அளிக்கிறார்
- ஐ.நா கருத்தரங்கில் பேச இருக்கும் கர்நாடகா கிராமப்புற பெண்
- மத்திய பிரதேசம் ஜெயிலில் இருந்து சிமி தீவிரவாதிகள் 6 பேர் தப்பி ஓட்டம்
- மருத்துவ கல்வி ஊழல்: காங்கிரஸ் எம்.பி.க்கு இன்று தண்டனை அறிவிப்பு
- கேரளாவில் மின் ஊழியர் குத்திக் கொலை: மர்ம நபருக்கு வலைவீச்சு
- ராஞ்சியில் அடுத்த வாரத்திலிருந்து இயங்கத் தொடங்கும் பெண்கள் பேருந்து
- 17 ஆண்டுகள் கழித்தாவது லல்லுவுக்கு தண்டனை கிடைத்ததில் மகிழ்ச்சி: ஊழலை அம்பலப்படுத்திய முன்னாள் கலெக்டர் பேட்டி
- லல்லு சிறைக்கு சென்றதையடுத்து ராஷ்டரிய ஜனதாதளம் கட்சி நிர்வாக பொறுப்புகளை மனைவி - மகன் ஏற்றனர்
- லல்லுவை அடுத்து ரூ.900 கோடி ஊழலில் நிதீஷ் குமாருக்கும் தண்டனை கிடைக்கும்: பா.ஜ.க. சாபம்
- சாரதா சீட்டு நிறுவனத்தில் ஏமாந்த மக்களுக்கு முதல் தவணை அரசு இழப்பீடு: மம்தா பானர்ஜி வழங்கினார்
- கற்பழிப்பு புகாரையடுத்து ராஜினாமா செய்த ராஜஸ்தான் முன்னாள் மந்திரி காங்கிரசிலிருந்து நீக்கம்
- மோடி ஒரு சிறந்த நிர்வாகி, அவர் மதச்சார்பற்ற தளத்திற்கு வரவேண்டும்: ஜெகன் மோகன் ரெட்டி புகழாரம்
- பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.05 குறைந்தது: டீசல் விலை 50 காசுகள் உயர்வு
- வாடகைத்தாய் வழக்கில் ஷாரூக்கானுக்கு எதிரான புகார் ஆதாரமற்றது: மும்பை ஐகோர்ட்
- மன்மோகன்-நவாஸ் சந்திப்பு குறித்து குழப்பமான தகவல்: மத்திய அரசு மீது மோடி குற்றச்சாட்டு
- பேராசையுடன் அரசின் சொத்தை அபகரித்த லல்லு, தண்டனையை அனுபவித்தாகவேண்டும்: சரத் யாதவ்
- பிரதமருக்கு பின்னால் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் உள்ளது: சோனியா காந்தி பேச்சு
| மே. வங்காளத்தை புறக்கணித்தால் 1 கோடி பேரை திரட்டி டெல்லியில் போராட்டம்: மம்தா எச்சரிக்கை Posted: 30 Sep 2013 10:57 PM PDT மேற்கு வங்காளத்தை தொடர்ந்து புறக்கணித்தால் மத்திய அரசை எதிர்த்து டெல்லிக்கு போய் போராட்டம் நடத்துவேன் என்று மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்காள முதல்– மந்திரி மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு மேற்கு வங்காள மாநில மக்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கடந்த கம்யூனிஸ்டு ஆட்சியில் ஏராளமான கடன்களை |
| சிறையில் தூங்க முடியாமல் கொசுக்கடியில் தவித்த லல்லு Posted: 30 Sep 2013 10:23 PM PDT கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்–மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லல்லுபிரசாத் குற்றவாளி என்று நேற்று அறிவிக்கப்பட்டார். சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் இந்த தீர்ப்பு வெளியிடப்பட்டதும் லல்லுபிரசாத் யாதவை போலீசார் கைது செய்தனர். ராஞ்சியில் உள்ள வீர்சா முண்டா மத்திய சிறைக்கு லல்லுபிரசாத் யாதவ் உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவர் உடலை பரிசோதித்தனர். பிறகு அவரை சிறையில் அடைத்தனர். நேற்று மதியம் மற்றும் இரவில் அவருக்கு சிறை உணவு வழங்கப்பட்டது. |
| பதவி பறிப்பு அவசரச் சட்டம்: ஜனாதிபதியிடம் நாளை பிரதமர் விளக்கம் அளிக்கிறார் Posted: 30 Sep 2013 10:17 PM PDT குற்றவழக்கில் சிக்கி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும் என்று கடந்த ஜூலை மாதம் 10–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை அளித்தது. இது எல்லா அரசியல் கட்சியினருக்கும் கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இதையடுத்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை முடக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8 (4)ல் ஒரு திருத்தம் செய்தது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தண்டனை பெற்றாலும், அவர்கள் உடனே பதவி இழக்க மாட்டார்கள் என்று அவர்களை பாதுகாக்கும் வகையில் அந்த திருத்தம் இருந்தது. இந்த திருத்தத்தை கடந்த வாரம் மத்திய அரசு அவசரச் |
| ஐ.நா கருத்தரங்கில் பேச இருக்கும் கர்நாடகா கிராமப்புற பெண் Posted: 30 Sep 2013 10:05 PM PDT கர்நாடகா மாநிலத்தின் தர்வாத் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் ராமாபூர் ஆகும். அங்கு வாழ்ந்துவரும் மஞ்சுளா முனவல்லி என்ற மாணவி தர்வாதில் உள்ள ஒரு கல்லூரியில் புகுமுக வகுப்பில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றார். இவர் அங்குள்ள குபாச்சி கூடு மக்கள மகாசங்கா என்ற அமைப்பின் துணைத் தலைவராகச் செயல்பட்டு வருகின்றார். இந்த அமைப்பு கிராமப்புறப் பகுதிகளில் உள்ள குழந்தைகளின் நலனுக்காகப் பாடுபட்டுவரும் ஒரு அமைப்பாகும். அதுமட்டுமின்றி கிட்ஸ் என்ற அரசு சாரா அமைப்பு ஒன்றிலும் இவர் பல வருடங்களாக உறுப்பினராக உள்ளார். இந்த அமைப்பும் குழந்தைகள் நலன் குறித்த செயல்களை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பின் மூலம், வரும் 10 ஆம் தேதி ஜெனிவாவில் நடைபெற |
| மத்திய பிரதேசம் ஜெயிலில் இருந்து சிமி தீவிரவாதிகள் 6 பேர் தப்பி ஓட்டம் Posted: 30 Sep 2013 09:28 PM PDT மத்திய பிரதேச மாநிலம் கந்தவா மாவட்டத்தில் உள்ள மத்திய சிறைச் சாலையில் 6 சிமி தீவிரவாதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இன்று (செவ்வாய்க் கிழமை) அதிகாலை 3 மணிக்கு தீவிரவாதிகளில் ஒருவன் கழிவறைக்கு சென்றான். கழிவறை சுவரை இடித்து அவன் வழி ஏற்படுத்தினான். அதன் வழியாக 6 சிமி தீவிரவாதிகளும், மற்றொரு கைதியும் அறைகளில் இருந்து தப்பி வெளியில் வந்தனர். பிறகு அவர்கள் ஜெயில் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். அதை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீஸ்காரர்கள் பார்த்து விட்டனர். கைதிகளை மடக்க அவர்கள் |
| மருத்துவ கல்வி ஊழல்: காங்கிரஸ் எம்.பி.க்கு இன்று தண்டனை அறிவிப்பு Posted: 30 Sep 2013 09:16 PM PDT 1990–ம் ஆண்டு வி.பி.சிங் தலைமையிலான மத்திய மந்திரிசபையில் சுகாதாரத்துறை இணை மந்திரியாக ரஷீத்மசூத் பதவி வகித்தார். அப்போது அவர் மருத்துவ படிப்புக்கான (எம்.பி.பி.எஸ்) அகில இந்திய ஒதுக்கீட்டில் முறைகேடுகள் செய்ததாக புகார்கள் எழுந்தன. சி.பி.ஐ. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தது. அப்போது திரிபுரா மருத்துவக் கல்லூரிக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ரஷீத் மசூத் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120 (பி) (சதி), 420 (ஏமாற்றுதல்), 468 (மோசடி) ஆகிய பிரிவுகளிலும் ரஷீத் மசூத் மீது வழக்குகள் பதிவு |
| கேரளாவில் மின் ஊழியர் குத்திக் கொலை: மர்ம நபருக்கு வலைவீச்சு Posted: 30 Sep 2013 09:02 PM PDT கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அம்பலப்பாறையை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் தீபு (வயது 23). இவர் கேரள மின் துறையில் கம்பம் நடும் காண்டிராக்டராக வேலை செய்து வந்தார். நேற்று மாலை கண்ணமங்களம் என்ற இடத்தில் 2 வீட்டுக்கு மின் இணைப்பு |
| ராஞ்சியில் அடுத்த வாரத்திலிருந்து இயங்கத் தொடங்கும் பெண்கள் பேருந்து Posted: 30 Sep 2013 05:34 PM PDT ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் பெண்களுக்கான சிறப்புப் பேருந்து சேவை இந்த மாதம் 4ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது. பெண்கள் தாங்கள் இரு சக்கர வாகனங்களிலோ, பொதுப் பேருந்துகளிலோ செல்லும்போது துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகத் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர் |
| Posted: 30 Sep 2013 04:54 PM PDT ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் 1990–ம் ஆண்டு பீகார் முதல்–மந்திரியாக இருந்தபோது அவர் மீது மாட்டுத் தீவன ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அப்போது பீகாரின் ஒரு பகுதியாக இருந்த தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் மாட்டுத் தீவனம் தொடர்பான போலி ரசீதுகளை |
| லல்லு சிறைக்கு சென்றதையடுத்து ராஷ்டரிய ஜனதாதளம் கட்சி நிர்வாக பொறுப்புகளை மனைவி - மகன் ஏற்றனர் Posted: 30 Sep 2013 03:14 PM PDT கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் குற்றவாளி என ராஞ்சி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்ததையடுத்து அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார் |
| லல்லுவை அடுத்து ரூ.900 கோடி ஊழலில் நிதீஷ் குமாருக்கும் தண்டனை கிடைக்கும்: பா.ஜ.க. சாபம் Posted: 30 Sep 2013 01:55 PM PDT பா.ஜ.க.வின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நரேந்திர மோடியின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடனான 17 ஆண்டு கால கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் கட்சி துண்டித்துக் கொண்டது |
| சாரதா சீட்டு நிறுவனத்தில் ஏமாந்த மக்களுக்கு முதல் தவணை அரசு இழப்பீடு: மம்தா பானர்ஜி வழங்கினார் Posted: 30 Sep 2013 01:14 PM PDT கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் மேற்குவங்காளம், ஜார்க்கண்ட், அசாம் உள்ளிட்ட வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான கிளைகளை தொடங்கியது. இந்த நிறுவனத்தை பிரபல தொழில் அதிபர் சுதிப்தா சென் நடத்தி வந்தார் |
| கற்பழிப்பு புகாரையடுத்து ராஜினாமா செய்த ராஜஸ்தான் முன்னாள் மந்திரி காங்கிரசிலிருந்து நீக்கம் Posted: 30 Sep 2013 10:20 AM PDT கற்பழிப்பு புகாரில் பதவியை இழந்த ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி பாபுலால் நாகர் இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். ராஜஸ்தானில் முதல்–மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில் மந்திரியாக இருந்த பாபுலால் நாகர் மீது 35 வயது பெண் கற்பழிப்பு புகார் கொடுத்து இருந்தார் |
| மோடி ஒரு சிறந்த நிர்வாகி, அவர் மதச்சார்பற்ற தளத்திற்கு வரவேண்டும்: ஜெகன் மோகன் ரெட்டி புகழாரம் Posted: 30 Sep 2013 09:41 AM PDT ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல் அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 16 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் |
| பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.05 குறைந்தது: டீசல் விலை 50 காசுகள் உயர்வு Posted: 30 Sep 2013 08:16 AM PDT சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்யும் வகையில், மாதம் ஒரு முறை டீசல் விலையை |
| வாடகைத்தாய் வழக்கில் ஷாரூக்கானுக்கு எதிரான புகார் ஆதாரமற்றது: மும்பை ஐகோர்ட் Posted: 30 Sep 2013 07:57 AM PDT பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு கௌரி என்ற மனைவியும், ஆர்யன் என்ற மகனும், சுஹானா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவதாக குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்த இந்த தம்பதி, இதற்காக வாடகைத்தாய் மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். அந்த குழந்தைக்கு அப்ராம் என்று பெயரிட்டனர். |
| மன்மோகன்-நவாஸ் சந்திப்பு குறித்து குழப்பமான தகவல்: மத்திய அரசு மீது மோடி குற்றச்சாட்டு Posted: 30 Sep 2013 07:00 AM PDT மும்பையில் நடந்த தொழிலதிபர்கள் கூட்டத்தில், பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது:- மன்மோகன் சிங்- நவாஸ் ஷெரீப் சந்திப்பு தொடர்பாக குழப்பமான தகவலை தருகிறது மத்திய அரசு. காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வர்த்தக நோக்கத்துடன் செயல்படுகின்றன. நாட்டில் உள்ள பிரச்சினைகள் தீர 9 மாதம் காத்திருங்கள். |
| பேராசையுடன் அரசின் சொத்தை அபகரித்த லல்லு, தண்டனையை அனுபவித்தாகவேண்டும்: சரத் யாதவ் Posted: 30 Sep 2013 06:02 AM PDT பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் முக்கிய எதிரியான லல்லு பிரசாத் யாதாவை மாட்டுத்தீவன ஊழல் வழக்கின் குற்றவாளி என்று கூறி சி.பி.ஐ. நீதிமன்றம் சிறையில் அடைத்துள்ளது. 16 வருடங்களுக்கு பிறகு வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு குறித்து, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் ஷரத் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். |
| பிரதமருக்கு பின்னால் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் உள்ளது: சோனியா காந்தி பேச்சு Posted: 30 Sep 2013 05:25 AM PDT கர்நாடக மாநிலம் மாண்டியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:- கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்காலத்தின் போது மக்கள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள். அவர்கள் (பா.ஜனதா) எங்கள் கட்சியைப் பற்றியும், பிரதமரைப் பற்றியும் கேலி கிண்டல் செய்து பேசுகின்றனர். ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் பிரதமருக்கு பின்னால் உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, அனைத்து சாதனைகளையும் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |