Tamil Star |
- கம்போடியா , மெகாங் நதி திடீர் வெள்ளப் பெருக்கில் 30 பேர் பலி
- இலங்கை வன்முறை அற்ற தேசமாக உருவாகியுள்ளது -சுதர்சன நாச்சியப்பன்
- முதல்வர் விக்னேஸ்வரனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுத்தால் தயார். – மகிந்த ராஜபக்ச
- மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை அரசு அறிக்கை சமர்ப்பிக்கும்
- திருடனை பிடிக்கச் சென்று கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த போலீஸ்காரர்
- தேசிய பிரச்சினைத் தீர்வுத்திட்டம் : கூட்டமைப்புடன் தனித்துப் பேச்சு நடத்த முடியாது – கெஹெலிய ரம்புக்வெல
- “எங்களாலும் முடியும்” முர்ரேயின் சவாலுக்கு பதிலடி கொடுத்த வீனஸ்
- டெண்டுல்கரின் 200-வது டெஸ்டை கொல்கத்தாவில் நடத்த முடிவு?
- அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகமாகும் Dolphin Browser
- அப்பிள் நிறுவனத்தின் புதிய ios7.0.2 இயங்குதளம் வெளியானது
| கம்போடியா , மெகாங் நதி திடீர் வெள்ளப் பெருக்கில் 30 பேர் பலி Posted: 30 Sep 2013 07:56 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை வன்முறை அற்ற தேசமாக உருவாகியுள்ளது -சுதர்சன நாச்சியப்பன் Posted: 30 Sep 2013 07:48 PM PDT
சென்னையில் இந்துஸ்தான் வர்த்தக சபையின் 67-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று திங்கள்கிழமை அவர் பேசியதாவது: இந்தியா தனது பக்கத்து நாடுகள் மீது பெரும் அக்கறை கொண்டுள்ளது. இந்தியாவை விட சிறிய நாடுகளிடம் நட்புறவையும், வர்த்தகத்தையும் மேற்கொள்ள தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. இப்போது இலங்கை வன்முறை இல்லாத தேசமாக உருவாகியுள்ளது. மேலும் அங்கு வடக்கு மாகாண தேர்தல் நடைபெற்று ஜனநாயகரீதியிலான ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை அரசு தனது ஜனநாயக நிலைப்பாட்டை உலகுக்கு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சேது சமுத்திரத் திட்டம், வர்த்தக நோக்கில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அத்திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. அத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் இந்தியாவின் வர்த்தகம் மேம்படும். மேலும் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையின் காரணமாக, தமிழகத்துக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருந்து வந்தது. இப்போது அந்த அச்சம் இல்லாததால் வர்த்தகம் மேலும் மேம்படும். இணைப்பு: இலங்கை நட்பு நாடாக உள்ளதால் அந்நாட்டுடன் போக்குவரத்து திட்டங்களை உருவாக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இனி வரும் காலங்களில் தமிழகத்தின் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கும் இடையே பாலம் அமைக்கப்படும். அதில் தரைவழி மற்றும் ரயில் போக்குவரத்தும் மேற்கொள்ளப்படும் என்றார் சுதர்சன நாச்சியப்பன். இந்நிகழ்ச்சியில், சென்னைக்கான அமெரிக்க துணைத் தூதர் ஜெனிஃபர் மெக்கின்டையர், இந்துஸ்தான் வர்த்தக சபையின் தலைவர் ஆர்.சுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| முதல்வர் விக்னேஸ்வரனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுத்தால் தயார். – மகிந்த ராஜபக்ச Posted: 30 Sep 2013 07:35 PM PDT
தனது பெயரை வெளியிட விரும்பாத சிறிலங்கா அதிபரின் உதவியாளர் ஒருவர், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால், வடக்கு மாகாண முதல்வருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க சிறிலங்கா அதிபர் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். எனினும் அரசியலமைப்புச்சட்டத்தின் படி, உறுப்பினர்கள், ஆளுனரின் முன்னிலையிலேயே பதவிப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், ஆளுனர் சந்திரசிறி முன்பாக பதவியேற்க முடிவு செய்துள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுகுறித்து இன்னமும் எந்த முடிவையும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை அரசு அறிக்கை சமர்ப்பிக்கும் Posted: 30 Sep 2013 07:26 PM PDT
இந்த மீளாய்வு அறிக்கையின் தயாரிப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இலங்கையின் வெளிவிகார அமைச்சின் செயலாளரான கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். நவிபிள்ளை குறிப்பிட்ட சில விடயங்களில் அநேகமானவற்றை நாம் ஏற்கனவே பூரணப்படுத்தி விட்டோம் அவற்றில் சில நடைமுறைப்படுத்த முடியாதவை என்றும் அவர் கூறினார். இலங்கை மனித உரிமைகள் விடயத்தில் பொறுப்புக்கூறுதலில் முன்னேற்றத்தை காட்டத் தவறியுள்ளதென மனித உரிமை ஆணையாளர் நவிபிள்ளை ஐநா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கூறினார். இலங்கை அடுத்த மார்ச் மாதத்துக்கு முன்னர் அதன் முன்னேற்றத்தை காட்டத் தவறினால் அது ஒரு சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்கலாம் என்றும் அவர் கூறினார். அத்துடன், இலங்கை அரசின் மனித உரிமைகள் மீளாய்வு தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லையை நிர்ணயிக்கும் அதிகாரம் மனித உரிமைப் பேரவை ஆணையர் நவநீதம்பிள்ளைக்கு இல்லை என தெரிவித்துள்ள அவர், அவ்வாறானதொரு காலக்கெடுவை அரசு ஏற்கப் போவதும் இல்லை என்றும் கூறியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| திருடனை பிடிக்கச் சென்று கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த போலீஸ்காரர் Posted: 30 Sep 2013 07:09 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 30 Sep 2013 06:58 PM PDT
ஒரு கட்சியுடன் மட்டும் தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயம் குறித்து பேசுவதில் அர்த்தம் இல்லை. அது சாத்தியமற்ற விடயமாகும் என்றார். வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி ஈட்டியுள்ளதால் அரசாங்கம் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது என்பதற்காக தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் கூட்டமைப்புடன் தனித்துப் பேச்சு நடத்த முடியாது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவை விடுத்து ஆளும் கட்சியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தாது. அவ்வாறு ஆளும் கட்சியினதும் தமிழ்க் கூட்டமைப்பினது பிரதிநிதிகள் மட்டும் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை. அவ்வாறு பேச்சு நடத்தப்படமாட்டாது. மாகாண சபை என்ற முறையில் வட மாகாண சபையின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சு நடத்துவார். அது வழமையான விடயமாகும். நாட்டின் ஏனைய மாகாண சபைகளுடனும் ஜனாதிபதி அவ்வாறான பேச்சுக்களை நடத்திவருகின்றார். அதேபோன்று வட மாகாண சபையுடனும் பேச்சு நடத்துவார் என்றார். தேசிய பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமாகும். அந்த வகையில் அவ்வாறான தீர்வுக்கான இணக்கப்பாட்டைக் காண்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த இடமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, வட மாகாண சபையின் முதலமைச்சராக விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுக்க தீர்மானிப்பின் அது சிறந்த முடிவாகும் என்றும் அமைச்சர் கூறினார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| “எங்களாலும் முடியும்” முர்ரேயின் சவாலுக்கு பதிலடி கொடுத்த வீனஸ் Posted: 30 Sep 2013 02:49 AM PDT இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரேயின் சவாலுக்கு பதிலடி கொடுத்துள்ளார் வீனஸ் வில்லியம்ஸ். விம்பிள்டன், யுஎஸ் ஓபன் போன்ற கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு சம அளவிலான ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. இதற்கு முன்னணி வீரர்களிடையே அதிருப்தி நிலவுகிறது. இதுகுறித்து இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் 5 செட் வரை கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. ஆனால், மகளிர் […] |
| டெண்டுல்கரின் 200-வது டெஸ்டை கொல்கத்தாவில் நடத்த முடிவு? Posted: 30 Sep 2013 02:34 AM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகமாகும் Dolphin Browser Posted: 30 Sep 2013 02:24 AM PDT கூகுளினால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக அன்ரோயிட் காணப்படுகின்றது. இந்த இயங்குதளத்திற்கென பல்வேறு மென்பொருட்கள் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதன் அடிப்படையில் இவற்றில் பயன்படுத்தப்பட்டுவரும் குரோம், பயர்பொக்ஸ் உலாவிக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய டொல்பின் எனும் புதிய உலாவி அறிமுகம் செய்யப்ட்டுள்ளது. இதனை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். தரவிறக்க சுட்டி This posting includes an audio/video/photo media file: Download Now |
| அப்பிள் நிறுவனத்தின் புதிய ios7.0.2 இயங்குதளம் வெளியானது Posted: 30 Sep 2013 02:15 AM PDT அப்பிள் நிறுவனம் தனது ios7.0.1 இயங்குதளத்தை மேம்படுத்தி புதிய ios7.0.2 என்ற புதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அப்பிள் நிறுவனம் சமீபத்தில் தான் ஐபோன், ஐபேட் சாதனங்களில் பயன்படுத்த கூடியவாறு ios7.0.1 இயங்குதளத்தை வெளியிட்டது. தற்போது இதன் லாக் ஸ்கிரீன் சிக்கல்களை மேம்படுத்தி, புதிய ios7.0.2 இயங்குதளத்தை வெளியிட்டுள்ளது. மேலும் ஐபோனில் 17MB முதல் 20MB வரை பதிவிறக்கம் செய்யக்கூடியதாக ios7.0.2 மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஐபோன் சாதனத்தில் போன் லாக் ஸ்கிரீனில் இருக்கும் போது, எமர்ஜென்சி கால்(emergency call) […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |










