Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மாட்டுதீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு: லல்லு பிரசாத் யாதவ் உள்பட 45 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

Posted: 29 Sep 2013 11:11 PM PDT

ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் 1990 –ம் ஆண்டு பீகார் முதல்– மந்திரியாக இருந்தபோது அவர் மீது மாட்டுத்தீவன ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அப்போது பீகாரின் ஒரு பகுதியாக இருந்த தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் மாட்டுதீவனம் தொடர்பான போலி ரசீதுகளை அளித்து ரூ.37.7 கோடி ஊழலில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் கூறப்பட்டது. லல்லு பிரசாத் யாதவுடன், பீகார் முன்னாள்

இந்த ஆண்டு இந்தியாவில் 33 சதவீதம் கூடுதல் மழை

Posted: 29 Sep 2013 11:35 PM PDT

தென்மேற்கு பருவ மழை மூலம் கடந்த ஜூன் மாதம் 1–ந்தேதி முதல், இந்த மாதம் 25–ந்தேதி வரை இந்தியா முழுவதும் 905 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய கணக்கெடுப்பின்படி கடந்த வாரம் வரை இந்தியா முழுவதும் சரமாரியாக 33 சதவீதம் மழை கூடுதலாக

சென்னையில் இருந்து கேரளாவுக்கு பஸ்சில் கடத்திய 137 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல்

Posted: 29 Sep 2013 11:02 PM PDT

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி ஒரு ஆம்னி பஸ் சென்றது. நேற்று அந்த பஸ்சை நெய்யாற்றின்கரை அருகே உள்ள அமரவிளை சோதனை சாவடியில் இன்ஸ்பெக்டர் ஷாஜி மற்றும் போலீசார் சோதனை

இந்தியாவில் குண்டு வைக்க பாகிஸ்தான் உளவுத்துறை ரூ.24 கோடி கொடுத்தது: கைதான தீவிரவாதி தலைவன் திடுக்கிடும் தகவல்

Posted: 29 Sep 2013 10:52 PM PDT

இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் இந்திய தலைவர் யாசின்பட்கல், அவனது கூட்டாளி அசதுல்லா அக்தர் ஆகியோர் கடந்த மாதம் இந்திய நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டனர். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குண்டு வைக்கவும், நாட்டின் அமைதியை கெடுக்கவும் பாகிஸ்தான் உளவுத்துறையின் ஆலோசனைப்படி இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். கைதான இந்த தீவிரவாதிகள் 2 பேரும் தற்போது தேசிய புலனாய்வு அமைப்பின் பிடியில் உள்ளனர். அவர்கள் நடத்தி வரும் அதிரடி விசாரணையின்போது யாசின் பட்கல், அசதுல்லா அக்தர் ஆகியோர் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளனர். அதன் விவரம்

6–ந்தேதிக்கு பிறகு கிரண்குமார் ரெட்டி முதல்வர் பதவியில் நீடிக்க மாட்டார்: சந்திரசேகரராவ்

Posted: 29 Sep 2013 09:55 PM PDT

ஆந்திராவில் தனி தெலுங்கானாவுக்கு ஆதரவாக தெலுங்கானா போராட்டக் குழு சார்பில் 'அனைத்து மக்கள் முழக்கம்'' கூட்டம் நடைபெற்றது. ஐதராபாத் நிஜாம் கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன்ரெட்டி ஆகியோரை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது:– இலங்கையில் பிறந்தவர்கள் அனைவரும் ராட்சசர்கள். அதுபோல் ஆந்திராவில் பிறந்தவர்கள் அனைவரும் தெலுங்கானா துரோகிகள். கிரண்குமார் ரெட்டி, சந்திரபாபுநாயுடு, ஜெகன் மோகன்ரெட்டி ஆகியோர் தெலுங்கானா செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள். அவர்கள் கொள்ளைக்காரர்கள். தெலுங்கானா அமைவது முடிவானது. யானை உள்ளே புகுந்து விட்டது. ஆனால் இவர்கள் வாலை பிடித்துக் கொண்டு போராடுகிறார்கள். லட்சம் கிரண்குமார் ரெட்டி, சந்திரபாபுநாயுடு, ஜெகன்மோ

கேரளாவில் 2 நாள் சுற்றுப்பயணம்: காங்கிரஸ் கோஷ்டி பூசல் பற்றி சோனியாவிடம் புகார்

Posted: 29 Sep 2013 09:35 PM PDT

கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி நடக்கிறது. இங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைக்க காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி 2 நாள் பயணமாக நேற்று கேரளா வந்தார். அவருக்கு கூட்டணி கட்சிகள் மற்றும் காங்கிரசார் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சி

இந்திய விமானப் படையின் முதல் கனரக விமானம் ஜெய்சல்மீர் விமானப் படைத்தளத்தில் தரையிறங்கியது

Posted: 29 Sep 2013 08:20 PM PDT

கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் செய்துகொண்ட 20,000 கோடி மதிப்பீடு கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அரசு மூன்று கனரக விமானங்களை இந்திய விமானப் படைக்காக அமெரிக்காவிடமிருந்து பெற்றுள்ளது. 10சி-17 குளோப்மாஸ்டர் என்பது 70 டன் எடை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய கனரக லிப்ட் போக்குவரத்து விமானம் ஆகும்.டெல்லியில் உள்ள ஹிண்டன் ராணுவ தளத்தில் இருந்து இந்த மாதம் 2ஆம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே அந்தோணி இந்த விமான சேவையைத்

சோனியா காந்தி இன்று கர்நாடகம் வருகை

Posted: 29 Sep 2013 07:59 PM PDT

பெங்களூர் புறநகர், மண்டியா ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் அந்த 2 தொகுதி மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதற்காக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இன்று (திங்கட்கிழமை) கர்நாடகம் வருகிறார். மண்டியாவில் உள்ள சர்.எம்.விசுவேஸ்வரய்யா விளையாட்டு மைதானத்தில் பகல் 2 மணிக்கு நடைபெறும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் சோனியா கலந்து கொண்டு பேசுகிறார்.

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் பிடிபட்ட பஸ்சை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்: உரிமையாளரின் உறவினர் பேட்டி

Posted: 29 Sep 2013 05:10 PM PDT

டெல்லியில் கடந்த டிசம்பர் 16–ந்தேதி நள்ளிரவு வேளையில் ஓடும் பஸ்சிற்குள் 23 வயது மருத்துவ மாணவி 6 பேர் கும்பலால் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டார். இச்சம்பவம் இந்தியாவையும் கடந்து உலகளாவிய அளவில் பெண்ணியக்க ஆர்வலர்களிடையே அதிர்ச்சி அலைகளை

லல்லு பிரசாத் யாதவ் 'உள்ளேயா?...வெளியிலா?..' : கால்நடை தீவன ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு

Posted: 29 Sep 2013 02:03 PM PDT

பீகார் மாநில முதல் மந்திரியாக லல்லு பிரசாத் யாதவ் பொறுப்பு வகித்த போது ரூ.37.70 கோடியை முறைகேடாக பயன்படுத்திய கால்நடை தீவன ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது

பா.ஜ.க. தேர்தல் பிரசார குழு தலைவராக ராஜ்நாத் சிங் தேர்வு

Posted: 29 Sep 2013 11:23 AM PDT

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. பாராளுமன்ற குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் இதுவரை குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி வகித்துவந்த தேர்தல் பிரசார குழு தலைவர் பதவிக்கு பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் தேர்வு செய்யப்பட்டார்

நவாஸ் ஷெரீப்பை சந்தித்தார் பிரதமர் மன்மோகன் சிங் - இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு

Posted: 29 Sep 2013 10:49 AM PDT

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்தித்து பேசினார். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை பாகிஸ்தான்

ஒடிசாவில் மின்னல் தாக்கி 7 பேர் பலி

Posted: 29 Sep 2013 07:28 AM PDT

ஒடிசா மாநிலத்தின் பல மாவட்டங்களில் பருவ மழை காரணமாக கனத்த மழை பெய்து வருகிறது. இன்று பெய்த மழையின் போது நுவபடா, போலாங்கீர், கலஹந்தி உள்ளிட்ட மாவட்டங்களின் பல இடங்களில் இடியுடம் கூடிய மின்னல் தாக்கியது.

அவசரச்சட்டம் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு தம்பி வருண் காந்தி கண்டனம்

Posted: 29 Sep 2013 06:47 AM PDT

எம்.பி. எம்.எல்.ஏ-க்களை பாதுகாக்கும் நோக்கில் அவசரச்சட்டம் ஒன்றிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கும் அனுப்பிவைத்தது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி இந்த அவசரச்சட்டம்

2009– ம் ஆண்டில் வெற்றி பெற்ற 30 எம்.பி.க்களுக்கு ஒருவர் கொலை குற்றவாளி: கணக்கெடுப்பில் தகவல்

Posted: 29 Sep 2013 03:09 AM PDT

2009–ம் ஆண்டில் வெற்றி பெற்ற 30 எம்.பி.க்களுக்கு ஒருவர் கொலை குற்றவாளி என கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அரசியலில் குற்றவாளிகள் பெருகி விட்டார்கள். இதனால் லஞ்ச ஊழல் பெருகிவிட்டது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், கடந்த 2009–ம் ஆண்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் எத்தனை பேர் மீது கிரிமினல் வழக்குகள்

மகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி

Posted: 29 Sep 2013 02:29 AM PDT

மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று அவுரங்கபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் 5 பேர் பயணம் செய்தனர். அப்போது ஹெலிகாப்டரில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து தானே அருகேயுள்ள முர்பாத்டேசில் என்ற இடத்தில் அந்த ஹெலிகாப்டர்

மியான்மர் எல்லையில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: ஒரு ராணுவ வீரர் படுகாயம்

Posted: 29 Sep 2013 12:45 AM PDT

மணிப்பூரில் மியான்மர் எல்லையில் உக்ருல் மாவட்டத்தின் கோம்காங் பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. இங்கு 44–வது ஏ.ஆர்.பட்டாலியன் பிரிவு வீரர்கள் தங்கியுள்ளனர். இந்த நிலையில், நேற்று இந்தோ–மியான்மர் சர்வதேச எல்லையை ஊடுருவிய தீவிரவாதிகள் 100 பேர் திடீரென இந்த ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ராணுவ வீரர்களும் தீவிரவாதிகள்

திருவனந்தபுரத்தில் மாணவர் போல் நடித்து இளம்பெண் கற்பழிப்பு

Posted: 29 Sep 2013 12:17 AM PDT

திருவனந்தபுரம் முட்டத் துறையைச் சேர்ந்தவர் நிஷார் (வயது 24). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வலியதுறை பகுதியைச் சேர்ந்த 16 வயது பெண்ணுடன் நிஷாருக்கு பழக்கம் ஏற்பட்டது.

புரட்டாசி 2–வது சனிக்கிழமையையொட்டி திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

Posted: 28 Sep 2013 11:54 PM PDT

புரட்டாசி மாதத்தை யொட்டி திருப்பதி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று புரட்டாசி 2–வது சனிக்கிழமையை யொட்டி திருப்பதி கோவிலில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ரெயிலில் திருப்பதிக்கு

ஒடிசாவில் பெண் மாவோயிஸ்டு தீவிரவாதி கைது

Posted: 28 Sep 2013 11:43 PM PDT

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள நாராயன் பாட்னா வனப்பகுதியில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் வேட்டையை போலீசார் நடத்தினார்கள். அப்போது முஸ்லிமுன்டா கிராமத்தில் ஒரு பெண் மாவோயிஸ்டு தீவிரவாதியை கைது செய்தனர். அவரது பெயர் ஜுர்கா பிரஸ்கா. இவர் கோராபுட் மாவட்டத்தில் பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். ஜோகி பாலூர் என்ற இடத்தில் சிபாமடங்கி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™