Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மஹிந்தவும் விமலுமே தமிழர்கள் சாவுக்கு வழிவகுத்தோர் – கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண

Posted: 29 Sep 2013 11:32 PM PDT

download (4)

download (4)"நாட்டின் நலனுக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ரணில் விக்கிரசிங்க செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தைக் குழப்பியடித்து மீண்டும் போர் ஆரம்பமாக காரணமாக இருந்தவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வும் அமைச்சர் விமல் வீரவன்ஸவுமே.

 இவர்களின் இந்தச் செயற்பாட்டின் காரணமாகத் தான் நாட்டில் ஒன்றரை இலட்சம் தமிழர்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் காவு கொள்ளப்பட்டனர்."
இவ்வாறு பொது எதிரணியினர் நேற்று குற்றம்சுமத்தியது.
 ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற் சங்கப்பணிமனையில் நேற்று இடம்பெற்ற இவ்வமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதன்போது நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தவை வருமாறு:
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்கவை பதவியிலிருந்து விலகக்கோரி பல எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
ரணிலை உடனடியாக பதவியிலிருந்து விலக்க வேண்டும் என வலியுறுத்தி தெற்கிலிருந்து கொழும்பு வரையிலான பாதயாத்திரை ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இவர்களைப் போன்றவர்கள் ரணிலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளன. ரணில் நாட்டின் நலனுக்காகப் பாடுபட்ட ஒரு மனிதர். கட்சியின் மீதும் மக்களின் மீதும் அளவு கடந்த அன்பும், மரியாதையும் வைத்திருக்கும் ஒரு நபர்.
நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ரணில், 2002 ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தைக் குழப்பியடித்ததே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ­வும், அமைச்சர் விமல் வீரவன்ஸவும்தான்.
பிரபாகரன் தனி அரசு கோருகிறார் என குறிப்பிட்டு அவ் வொப்பந்தத்தையே இவர்கள் குழப்பியடித்து துடைத்தெறிந்துள்ளார்கள். பிரபாகரன் உண்மையில் தனி அரசைக் கேட்கவில்லை.
அவர் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்க ஒரு சுய ஆட்சி முறையையே கோரினார்.
அதற்கு பின்னரான சுனாமி கட்டமைப்பை எதிர்த்தும் நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்து அதை இல்லாதொழித்தார்கள். இது போன்ற சமாதான ஒப்பந்தங்களை மஹிந்தவும், விமலும் குழப்பியடித்ததனாலேயே ஒன்றரை இலட்சம் தமிழர்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் அநியாயமாக யுத்தத்திற்குக் காவு கொடுக்கப்பட்டுள்ளனர்.
அன்று பிரபாகரன் சமாதான ஒப்பந்தத்தில் முன்வைத்த 26 கோரிக்கைகளைப் போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த விஞ்ஞாபனமும் காணப்படுகிறது. ஆனால், இதனையும் எதிர்த்து, இனவாதிகள் நாட்டில் மென்மேலும் துவே­சத்தை  அதிகரிக்கிறார்கள்" என்றார்.
இச்சந்திப்பில் கலந்து கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் குமரகுருபரன் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக இன்று இனவாதக் கருத்துகளை முன்வைக்கும் சம்பிக்க ரணவக்க, உதய கம்பன்பில மற்றும் விமல் வீரவன்ஸ போன்றோரை அரசு ஏன் இன்னமும் கண்டு கொள்ளாமல் உள்ளது?
இதேபோன்ற ஒரு இனவாதக் கருத்தை தமிழ் அரசியல் வாதி யாராவது பேசியிருப்பின் இந்நேரம் என்ன வாயிருக்கும். இப்படியான நிலையில் அரசு மெளனம் காப்பதுதான் புரியாமல் உள்ளது.  "ஒருவேளை அரசே இவ்வாறான கருத்துகளைத் தூண்டி விட்டிருக்குமோ?' என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.
இவர்களின் செயற்பாடுகளை அரசு கண்டு கொள்ளாவிடின் சர்வதேச ரீதியிலான பாரிய பிரச்சினைக்கும் முகம்கொடுக்க வேண்டி ஏற்படும். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒரு சிறந்த மனிதர்.
வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டவர். இதை அரசும் உணர்ந்து, அவருடன்  ஒன்றிணைந்து செயற்பட்டால் நிச்சயமாக நாட்டில் நல்லிணக்கம் உருவாகும்" என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி 7 பேர் பலி

Posted: 29 Sep 2013 07:59 AM PDT

lighting

lightingஒடிசா மாநிலத்தின் பல மாவட்டங்களில் பருவ மழை காரணமாக கனத்த மழை பெய்து வருகிறது. இன்று பெய்த மழையின் போது நுவபடா, போலாங்கீர், கலஹந்தி உள்ளிட்ட மாவட்டங்களின் பல இடங்களில் இடியுடம் கூடிய மின்னல் தாக்கியது. இதில் பண்ணையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் குறைந்தது 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மற்ற 5 பேர் படுகாயமடைந்தனர். 75-க்கும்  மேற்பட்ட ஆடு, மாடுகளும் இறந்துபோயின. கடந்த இரண்டு நாட்களில் மின்னல் தாக்கியதில் மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அப்பிளிக்கேஷன் ஸ்டோரை உருவாக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட்

Posted: 29 Sep 2013 06:07 AM PDT

கூகுள் மற்றும் அப்பிள் நிறுவனங்கள் தமது இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்களை பயனர்கள் இலகுவாக பெற்றுக்கொள்ளும் பொருட்டு அப்பிளிக்கேஷன் ஸ்டோரை உருவாக்கியுள்ளன. இவற்றினைத் தொடர்ந்து தற்போது மைக்ரோசொப்ட் நிறுவனமும் விண்டோஸ் மற்றும் விண்டோஸ் போன் ஆகியவற்றிற்கான மென்பொருட்களை வழங்கும் முகமாக புதிய அப்பிளிக்கேஷன் ஸ்டோரை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. எதிர்வரும் வருட ஆரம்பத்தில் வெளியிடப்படவுள்ள விண்டோஸ் போன் 8.1 இயங்குளத்துடன் கூடிய கைப்பேசிகளுடன் இந்த அப்பிளிக்கேஷ் ஸ்டோரும் அறிமுகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நோக்கியாவின் Asha 502 தொடர்பான தகவல்கள் கசிந்தது

Posted: 29 Sep 2013 06:05 AM PDT

நோக்கியா நிறுவனத்தினால் அண்மையில் Asha 500 எனும் தொடரிலக்கத்தைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது Asha 502 எனும் குறைந்த விலையை உடைய மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகப்படுத்த காத்திருக்கின்றது. ஆறு வேறுபட்ட நிறங்களில் உருவாக்கப்பட்ட இக்கைப்பேசிகளின் படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு சிம் பயன்படுத்தக்கூடியதாகவும், Wi-Fi வயர்லெஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ள Asha 502 ஆனது எதிர்வரும் ஒக்டோபர் 22ம் திகதி அபுதாபியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பண்டாரநாயக்கவின் கொள்கையை மறந்த சுதந்திரக் கட்சியினர்: சந்திரிக்கா கவலை

Posted: 29 Sep 2013 05:56 AM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு அதன் ஸ்தாபக தலைவர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்கவினால் பலம் கிடைத்ததாகவும் அதனை சிலர் தற்போது மறந்து விட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். நிட்டம்புவ திஹாரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒரு நோக்கத்தை ஏற்படுத்தியவர் பண்டாரநாயக்க. அவர் அந்த நோக்கங்களை எங்களுக்கும் கற்றுக்கொடுத்தார். சுதந்திரக்கட்சிக்குள் பல தரப்பினரின் கொள்கைகள் புகுத்தப்பட்டுள்ளன. பண்டாரநாயக்கவின் கொள்கைகள் மறக்கப்பட்டுள்ளன என்றார்.

டைட்டன்ஸ் அபார பந்துவீச்சில் சுருண்டது சன் ரைசர்ஸ்

Posted: 29 Sep 2013 03:24 AM PDT

டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ராஞ்சியில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியின் 12வது ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் விளையாடியது. அணித்தலைவர் தவானும், பார்த்தீவ் படேலும் சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.3 ஓவர்களில் 63 ஓட்டங்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய தவான் 21 பந்துகளில் 37 ஓட்டங்களிலும், படேல் 26 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு […]

This posting includes an audio/video/photo media file: Download Now

பிசிசிஐ தலைவராக என்.சீனிவாசன் தெரிவு! ஆனால் பொறுப்பேற்க முடியாது

Posted: 29 Sep 2013 03:22 AM PDT

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக மூன்றாவது முறையாக என்.சீனிவாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் என். சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பன் ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கி கைதானார். இதையடுத்து சீனிவாசன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாகிவிட்டது. அவர் ராஜினாமா செய்ததையடுத்து ஜக்மோகன் டால்மியா இடைக்காலத் தலைவராக்கப்பட்டார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று காலை சென்னையில் […]

டெல்லி அருமையாக உள்ளதாம்! இது மோடியின் ட்வீட்(வீடியோ இணைப்பு)

Posted: 29 Sep 2013 03:14 AM PDT

டெல்லியில் இருப்பது அருமையாக உள்ளது என்று நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் நடைபெறவுள்ள பிரமாண்டக் கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். அதற்கு முன்னதாக அவர் வெளியிட்ட ட்விட் தகவலில், டெல்லியில் இருப்பது அருமையாக இருக்கிறது என்று மோடி தெரிவித்துள்ளார். 5 நாட்களுக்கு முன்புதான் போபாலில் நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் மோடி பேசினார். அதில் அத்வானியும் கலந்து கொண்டார். தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற இளம்தாமரைக் கூட்டத்திலும் மோடி பேசியுள்ளார். இந்நிலையில் இன்று […]

This posting includes an audio/video/photo media file: Download Now

உயிருடன் இருக்கும் அதிமுக அமைச்சருக்கு இறப்பு சான்றிதழ்!

Posted: 29 Sep 2013 03:11 AM PDT

மதுரை மாநகராட்சி சார்பில் தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு இறப்புச்சான்றிதழ் வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கடந்த 2007 ம் ஆண்டு யூலை மாதம் 26ம் திகதி இறந்துவிட்டதாக கடந்த மாதம் 23 ம் திகதி இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (மார்க்சிஸ்ட்) அண்ணாதுரை 2006 ம் ஆண்டு இறந்துவிட்டதாக கடந்த மாதம் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களது […]

This posting includes an audio/video/photo media file: Download Now

பாகிஸ்தானில் கொடூரம் : சகோதரிகள் இருவர் கற்பழித்து கொலை

Posted: 29 Sep 2013 03:05 AM PDT

பாகிஸ்தானில் சகோதரிகள் இருவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவில் குஜ்ரான்வாலா என்ற ஊர் உள்ளது. இங்கு வசித்து வந்த 16 மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் இருவர் கல்லூரியில் படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 26ம் திகதி கல்லூரிக்கு சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து உறவினர்கள் தேடிய போது, 2 சகோதரிகளின் உடலும் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்டு புறநகரிலுள்ள கால்வாயில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் இருவரும் […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™