Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


நிலக்கரி சுரங்க ஊழல்: முக்கிய பைல்கள் அழிக்கப்பட்டதா?- வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ.முடிவு

Posted: 17 Sep 2013 10:40 PM PDT

மத்திய அரசு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் தவறான முறையை கடைபிடித்ததால் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை குழு அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் சுரங்க ஒதுக்கீட்டில் ஏலமுறையை பின்பற்றாததால் அரசுக்கு

பாராளுமன்ற தேர்தல்: பெங்களூர் தெற்கு தொகுதியில் கிரிக்கெட் வீரர் கும்ப்ளே போட்டி

Posted: 17 Sep 2013 10:31 PM PDT

கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 28 எம்.பி தொகுதிகள் உள்ளன. இதில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற லட்சியத்துடன் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர். கர்நாடக ஜனதா கட்சியை நடத்தி வரும் எடியூரப்பா, மோடிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் கொண்டு வர உள்ளார். இதன் தொடர்ச்சியாக அவர் பா.ஜ.க.வில் விரைவில் சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெகன்மோகன் ரெட்டி பெயிலை தடுக்க சந்திரபாபு நாயுடு முயற்சி: நடிகை ரோஜா தாக்கு

Posted: 17 Sep 2013 10:25 PM PDT

ஐதராபாத்தில் உள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடிகை ரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– ஜெகன்மோகன்ரெட்டி எந்த குற்றமும் செய்ய வில்ல. ஆனால் அவர் 16 மாதம் ஜெயிலில் இருக்கிறார். அவரை பெயிலில் விடுவிடுக்க அனுமதி கொடுத்து 3 மாதம் ஆகி விட்டது. ஆனாலும் அவரை வெளியில் விடவில்லை. பெயில் கிடைக்கும் நேரத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறது.

திருப்பதி பிரம்மோற்சவ விழா 5–ந் தேதி தொடங்குகிறது

Posted: 17 Sep 2013 10:23 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 5–ந் தேதி தொடங்கி 13–ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவிலில் மின்விளக்கு அலங்காரம் செய்யும் பணி மும்முரமாக நடந்து வந்தது. கோவிலில் திருமாட வீதி மற்றும் முக்கிய வீதிகளில் மின் விளக்கு அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது. மின்விளக்கு அலங்காரங்களை சோதனை செய்து பார்க்கும் பணி நேற்று மாலை நடந்தது. மாலை 6 மணியளவில் மின் விளக்குகள் போடப்பட்டு அனைத்தும் சரியாக ஒளிர்கிறதா என்று சோதனை செய்து பார்க்கப்பட்டது. ஏழுமலையான், பத்மாவதி தாயார் உருவங்களும் மின்விளக்குகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி கோபால் பார்வையிட்டார். நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 36 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 22 கவுண்டர்களில் இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் காத்திருந்தனர். இவ்வாறு தரிசனம் செய்வதற்கு 12 மணி நேரம் ஆகிறது. பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள் சாமி தரிசனம் செ

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: 20-ந்தேதி அறிவிப்பு வெளியாகிறது

Posted: 17 Sep 2013 09:42 PM PDT

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் ஜனவரி, ஜுலை மாதங்களில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப் படி உயர்த்தி வழங்கப்படுகிறது. கடந்த ஜுலை மாதம் கொடுக்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு இன்னமும் அறிவிக்கப்படவிலலை. கடந்த சில தினங்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதால் அகவிலைப்படியை நிர்ணயம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய அரசு ஊழியர்களை கவரும் வகையில் இந்த இரட்டை இலக்க அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஜுலை 1-ந்தேதி முன் தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். கடந்த 2010-ம் ஆண்டு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அ

சி.பி.ஐ. புதிய குற்றப்பத்திரிகையில் ஜெகன்மோகன் ரெட்டியுடன் ஆந்திர பெண் மந்திரியின் பெயர் சேர்ப்பு

Posted: 17 Sep 2013 04:50 PM PDT

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, தனது தந்தையும், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியுமான ராஜசேகர ரெட்டியின் பெயரை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில்

தேசிய ஒருமைப்பாட்டுக்குழு கூட்டம்: பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் 23-ந் தேதி நடக்கிறது

Posted: 17 Sep 2013 04:24 PM PDT

மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேருவால் கடந்த 1960-ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் தேசிய ஒருமைப்பட்டுக்குழு. இதன் தலைவராக பிரதமர் செயல்படுகிறார். தேசிய ஒருமைப்பாடு தொடர்பாக நாட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இந்த குழு ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை முன்வைக்கும்

ஏழைகளுக்கான திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Posted: 17 Sep 2013 02:09 PM PDT

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் மாநிலம் பரன் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசும்போது, பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடியை மறைமுகமாக விமர்சித்தார்

ஒடிசாவில் இரு நாட்களாக மின்னல் தாக்கியதில் 24 பேர் உடல் கருகி பலி

Posted: 17 Sep 2013 01:41 PM PDT

ஒடிசாவில் வங்கக்கடலில் உருவான தாழ்வழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. இந்த மழையின் போது 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மின்னல் தாக்கியது. இதில் குழந்தைகள், பெண்கள் என பொதுமக்கள் நேற்று மட்டும் 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஏல முறையை பின்பற்றாதது ஏன்?: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி

Posted: 17 Sep 2013 12:12 PM PDT

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு தொண்டு நிறுவனமும், வக்கீல் எம்.எல்.சர்மா என்பவரும் பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஒளிவுமறைவின்றி, நேர்மையாக நடக்கவில்லை என்றும், ஏல முறையை பின்பற்றாமல் ஒதுக்கீடு செய்ததால்

பைல்கள் மட்டுமல்ல, டெல்லியில் ஒட்டுமொத்த அரசையே காணவில்லை: மோடி

Posted: 17 Sep 2013 11:59 AM PDT

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும், அவரது 64-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாகவும் காந்தி நகரில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு குஜராத் முதல் மந்திரி

இளம் பெண் பாலியல் பலாத்காரம்: ராஜஸ்தான் மந்திரி மீது வழக்கு பதிவு

Posted: 17 Sep 2013 10:43 AM PDT

ராஜஸ்தான் மாநிலம் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில் பாபு லால் நகர் என்பவர் பண்ணை மற்றும் கிராமப்புற தொழில்துறை மந்திரியாக இருந்து வருகிறார். இவர் மீது ஜெய்ப்பூரை சேர்ந்த 27 வயது இளம் பெண் ஒருவர் தன்னை தாக்கி, கெடுத்துவிட்டதாக போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

ஜெயில்கள் மீது தாக்குதல் நடத்த நக்சல்கள் திட்டம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Posted: 17 Sep 2013 10:32 AM PDT

சத்தீஸ்கார், ஜார்கண்ட், பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், மராட்டியம், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் மாவோயிஸ்ட்டு தலைவர்களை மீட்பதற்காக

மாவோயிஸ்டுகள் வெறியாட்டம் நடத்திய பஸ்டர் பகுதியில் 26-ம் தேதி ராகுல் காந்தி பிரச்சாரம்

Posted: 17 Sep 2013 09:12 AM PDT

டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஷ்கர் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமான இந்த தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்க காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் தீவிரமாக உள்ளன. இந்நிலையில், பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடியின் பிரச்சாரத்தை

உத்தரகாண்ட் பேரழிவில் 4120 பேர் மாயம்: தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரை காணவில்லை

Posted: 17 Sep 2013 08:31 AM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் பலத்த மழை காரணமாக, கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். கேதார்நாத் யாத்திரை சென்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மீட்கப்பட்ட உடல்கள் தவிர மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதேசமயம் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களும்

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: 2 பேர் காயம்

Posted: 17 Sep 2013 07:53 AM PDT

போர் நிறுத்த உடன்பாட்டை மீறும் பாகிஸ்தான் ராணுவம், அடிக்கடி எல்லையில் இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுப்பதால் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு 11.30 மணிக்கு கண்மூடித்தனமாக துப்பாக்கியால்

லாலு பிரசாத் மீதான கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் 30-ம் தேதி தீர்ப்பு

Posted: 17 Sep 2013 06:03 AM PDT

பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியும் முன்னாள் ரெயில்வே மந்திரியுமான லாலு பிரசாத் உள்பட 45 பேர் மீது ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் மாட்டுத்தீவன ஊழல் வழக்கு நடந்து வந்தது. 1990–ம் ஆண்டு லாலு பிரசாத் சைபாசா கருவூலத்தில் ரூ.37 கோடியே 70 லட்சம் மோசடியாக பெற்றது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 1996–ம் ஆண்டு இந்த

சேது சமுத்திர வழக்கு: நவம்பருக்கு தள்ளி வைப்பு

Posted: 17 Sep 2013 01:16 AM PDT

சேது சமுத்திர திட்டத்துக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து மத்திய அரசு நேற்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில் திட்டமிட்டபடி சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது என்றும், இதற்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணிய சாமி

தொழிலாளர்கள் மேம்பாட்டுக்கு பிறந்தநாளை அர்ப்பணிக்கிறேன்: நரேந்திர மோடி

Posted: 17 Sep 2013 12:32 AM PDT

குஜராத் முதல்– மந்திரி நரேந்திர மோடிக்கு இன்று 63–வது பிறந்த நாளாகும். இன்று காலை அவர் காந்திநகரில் அரசு வீட்டில் தங்கி இருக்கும் தன் தாய் ஹீரா பாய் (94)விடம் ஆசி பெற்றார். அப்போது ஹீராபாய் உச்சி முகர்ந்து மோடியை வாழ்த்தினார். நரேந்திர மோடிக்கு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் போனில் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்ட மோடி நிருபர்களிடம் கூறியதாவது:– எனது பிறந்தநாளை தொழிலாளர்களுக்கு அர்ப்பணிக்க ஆசைப்படுகிறேன். நாட்டின் தொழிலாளர்கள் அனைவரையும்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™