Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தமிழினத்தின் கனவுகள், அபிலாசைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிப்படுத்துகிறது – மன்னார் ஆயர்

Posted: 17 Sep 2013 10:05 PM PDT

rev-rayappu-joseph_colombotelegraph (1)

rev-rayappu-joseph_colombotelegraph (1)எங்கள் தமிழினத்தின் கனவுகள், அபிலாசைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிப்படுத்தி நிற்கின்றது. இதனை அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பது கவலையளிப்பதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு தெற்கில் எதிர்ப்பலை வீசுவது தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்களின் நீண்ட காலக்கனவுகள், அபிலாசைகள்,  எதிர்பார்ப்புக்களை உள்ளடக்கியதாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தெளிவாக உள்ளக சுயநிர்ணய உரிமை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தேவையற்ற விதத்தில் பயங்கரவாதமாக மாற்றியமைத்துள்ளனர். மக்களின் உரிமையை ஏற்றுக் கொள்ளாதவர்களின் கருத்துக்களாகவே இருக்கின்றன. அரசே இந்தக் கருத்தை கூறியபோது கவலையளிக்கின்றது.
எங்கள் வரலாற்று உண்மையை நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதுடன் சரியான நேரத்தில் அது வெளியிடப்பட்டுள்ளது. சட்டத்தை மீறாத வகையில் இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்டே தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
உரிமையை மதித்து நடக்கும் போதுதான் இலங்கை முன்னேறும். அதனை விடுத்து தென்னிலங்கை மக்களை உணர்ச்சி யூட்டுவதற்காக பிழையான தகவலை வழங்கக்கூடாது என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிலிப்பைன்சில் போராளிகளின் பிடியில் இருந்து பொதுமக்கள் 140 பேர் ராணுவத்தல் மீட்பு

Posted: 17 Sep 2013 09:37 PM PDT

philip

philipபிலிப்பைன்சில் மோரோ தேசிய விடுதலை முன்னணி என்ற முஸ்லிம் போராளிகள் அமைப்பு அந்நாட்டை சுதந்திர இஸ்லாமிய நாடாக அறிவிக்கக் கோரி போராடி வருகிறது. இந்நிலையில் அரசு ஒப்பந்தப்படி நடந்துகொள்ளவில்லை என்று கூறி கடந்த மாதம் பிலிப்பைன்சின் தென்பகுதியினை சுதந்திர முஸ்லிம் நாடாக அறிவித்தனர். அதன்பிறகு கடந்த 9-ம் தேதி தென் பகுதியில் உள்ள ஜாம்போங்கோ பகுதியின் சில கிராமங்களை அவர்கள்  சுற்றிவளைத்து பொதுமக்கள் சிலரை சிறைபிடித்தனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு படையினர் 1000 பேர் குவிக்கப்பட்டனர். அவர்களிடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் இருதரப்பிற்கும் இடையே சண்டை நடந்து வந்தது. இதில் 100 பேர் வரை கொல்லப்பட்டனர். அப்போது 80 ஆயிரம் பேர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். நேற்று நடந்த வான்வழி தாக்குதலில் போராளிகளின் பிடியில் இருந்து பொதுமக்கள் 140 பேரை ராணுவம் மீட்டது. அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த 70 சதவிகித பகுதிகளையும் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். ஆனால் எவ்வளவு பேரை கேடமாயக அவர்கள் படுத்தினர் என்கிற விவரம் தெரியவில்லை. இன்னும் சில பகுதிகளில் சண்டை நடக்கிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரைச் சூட்ட வேண்டும் – கி.வீரமணி

Posted: 17 Sep 2013 09:24 PM PDT

viramani

viramaniதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பெண்ணடிமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை அழிப்பு போன்ற லட்சியங்கள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், பெரியார் பிறந்தநாள், மீண்டும் அவரது கொள்கைகளைப் பரப்புவதற்கு நம்மை அர்ப்பணித்துக்கொள்வதற்கு ஒரு சிறந்த விழாவாகும். மத்திய அரசைப் பொறுத்தவரையில், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அதே வழித்தடத்தில் நிறைவேற்றுகிறோம் என்ற அறிவிப்பு, பெரியார் பிறந்த நாள் விழாவிலே கிடைத்த ஒரு நல்ல பரிசு என்ற மகிழ்ச்சி எங்களுக்கு இருக்கிறது. மத்திய அரசு அதனை நிறைவேற்ற வேண்டும். திருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அத்துணை பேருக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுப்போம். தந்தை பெரியார் திருச்சியைத் தலைநகரமாகக் கொண்டுதான் வாழ்ந்தார். எனவே, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மாகாணசபைத் தீர்வுத் திட்டத்தை தவிர‌ சமஷ்டி ஆட்சி முறைமைக்கு இடமில்லை

Posted: 17 Sep 2013 09:01 PM PDT

vasudeva_n_b

vasudeva_n_bசமஷ்டி ஆட்சி முறைமைக்கு இடமில்லை. மாகாணசபைத் தீர்வுத் திட்டமொன்றுக்கே எம்மால் செல்ல முடியும்.  என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது, மாகாணங்கள் தேசிய அபிலாசைகளை வெளிப்படுத்திய காரணமும் தேசிய இனப்பிரச்சினை ஏற்பட முக்கிய காரணியாக அமைந்தது. காணிகள் கிடைக்கப்பெறாமை மற்றுமொரு காரணியாகும். பொருளாதார சமூகப் பிரச்சினைகளும் தேசிய இனப்பிரச்சினைக்கான காரணியாக அமைந்தது. மாகாணசபை முறைமைக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். மாகாணசபை அதிகாரங்களில் மாற்றம் செய்யக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. மாகாணசபையும் மத்திய அரசாங்கமும் இணைந்து செயற்படக் கூடிய வகையில் அரசியலமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கமே பிரதான நிர்வாகி, மாகாணசபைகள் அதன் கூட்டாளிகள் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஈரான் நாட்டு சிறையில் இருந்து 16 தமிழக மீனவர்கள் விடுதலை

Posted: 17 Sep 2013 08:43 PM PDT

iran prison

iran prisonஈரான் நாட்டு சிறையில் இருந்து 16 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, மும்பை வந்துள்ளனர். அவர்களை தங்களது சொந்த கிராமங்களுக்கு தமிழக அரசின் செலவில் அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சவுதி அரேபிய நாட்டில், தனியார் மீன்பிடி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த ராமநாதபுரம் மாவட்டம், காரங்காடு, முள்ளிமுனை, மோர்ப்பனை, திருப்பாலைக்குடி மற்றும் ரோச்மாநகர் மீனவ கிராமங்களைச் சேர்ந்த பத்து மீனவர்கள், நாகப்பட்டினம் மாவட்டம், பழையார் கிராமத்தினை சேர்ந்த ஒரு மீனவர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மற்றும் ஆரோக்கியபுரம் மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் என மொத்தம் 16 தமிழக மீனவர்கள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சவுதி அரேபியா நாட்டிலிருந்து தனியார் மீன்பிடி கப்பலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, தவறுதலாக ஈரான் நாட்டு கடல் எல்லைப்பகுதிக்குள் சென்றதன் காரணமாக, அந்நாட்டு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை விசாரித்த ஈரான் நாட்டு நீதிமன்றம், கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஒவ்வொருவரும் 5,750 அமெரிக்க டாலரை அபராதமாக செலுத்தவேண்டும் என்றும், அபராதத் தொகையுடன் 6 மாதகால சிறைத்தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இதனை அறிந்த, முதல்- அமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு 27-7-2013 அன்று ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், ஈரான் நீதிமன்றம் விதித்த இரண்டு தண்டனைகளில், ஆறு மாதகால சிறை தண்டனையை தமிழக மீனவர்கள் அனுபவித்துவிட்டார்கள் என்றும், வறுமை நிலை காரணமாக அபராதத் தொகையை கட்ட இயலாததால் ஈரான் நாட்டு அரசாங்கம் அவர்களை சிறையிலிருந்து விடுவிக்கவில்லை என்றும் தெரிவித்து, ஈரான் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் எவ்விதமான சட்ட உதவிகளையும் தமிழக மீனவர்களுக்கு அளிக்கவில்லை என்பதையும், மீனவர்களை விடுவிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி, ஈரான் நாட்டு சிறையிலிருக்கும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரை, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். இதுமட்டுமின்றி, ஈரான் நாட்டு சிறையில் அடைபட்டிருந்த 16 தமிழக மீனவர்களின் குடும்பங்களின் வறிய நிலையினை கருணையுடன் பரிசீலித்து, அவர்களது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் நிவாரணத் தொகை வழங்கிடவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, மீன்வளத்துறை அமைச்சர் சம்பந்தப்பட்ட மாவட்ட அமைச்சர்களுடன் பாதிக்கப்பட்ட 16 மீனவக் குடும்பங்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று நிவாரணத் தொகையை வழங்கி, ஆறுதல் கூறியதோடு, 16 மீனவர்களையும் விடுவிக்க முதல்-அமைச்சர் எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளையும் அவர்களிடம் எடுத்துக்கூறினார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பயனாக, 16 தமிழக மீனவர்களும் ஈரான் நாட்டு சிறையிலிருந்து கடந்த 16-ந்தேதி விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட 16 மீனவர்களும் விமானம் மூலமாக 17-ந்தேதி (நேற்று) நண்பகல் 12 மணிக்கு மும்பை விமான நிலையம் வந்தடைகின்றனர். இந்த 16 தமிழக மீனவர்களையும் மும்பை விமான நிலையம் சென்று வரவேற்குமாறு மீன்வளத்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டதோடு, அவர்களை தங்களது சொந்த கிராமங்களுக்கு தமிழ்நாடு அரசின் செலவில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர் வேண்டுகோள்

Posted: 17 Sep 2013 08:09 PM PDT

Geethanjali-Naguleswaran

Geethanjali-Naguleswaranவட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் ஆதரவாளர்கள் இதுநாள்வரை தமது கட்சிக்கு ஆதரவு வழங்கிய ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

நேறறு கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர் பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதற்காக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டனர். இவர்கள் யாவருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நியமனம் வழங்கப்பட்டது என்பதினால், கட்சிக்கு தேர்தலில் வேலை சேய்ய வேண்டும் என்பது கீதாஞ்சலியின் கண்டிப்பான கட்டளையாகும். எனவே அனைவரும் அறிவியல் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர். இந்நிலையில் கூட்டத்தில் பேசிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளராக கருதப்பட்ட ஒருவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் என்று பேசினார். இவர் திட்டமிட்டுப் பேசினாரா? அல்லது தடுமாறிப் பேசினாரா என்று தெரியாமல் பிரசாரக் கூட்டததில் இருந்த ஆதரவாளர்கள் விழித்தனர். கூட்டம் முடிந்ததும் கிளிநொச்சி கனகபுரத்தில் உள்ள கீதாஞ்சிலியின் நிறுவனத்திற்கு அனைவரும் அழைக்கப்பட்டனர். அத்துடன் குறித்த பிரசாரக் கூட்டத்தில் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என்று உரையாற்றியவரை கீதாஞ்சலியின் ஆதரவாளர்கள் தனியே அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கினர். உள்ளத்தில் உள்ளதுதான் உதட்டில் வரும் என்று தெரிவித்த ஆதரவாளர்கள், தம்மிடம் வேலை வாய்பை வாங்கி விட்டு கூட்டமைப்பை ஆதரிப்பதாகவும், இதை எதேச்சையாக கண்டு கொண்டதாகவும் கூறி குறித்த நபரைத் தாக்கியுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

டெல்லியில் தேசிய ஒருமைப்பாட்டுக்குழு கூட்டம் : பிரதமர் மன்மோகன்சிங் தலைமை

Posted: 17 Sep 2013 07:59 PM PDT

India's Prime Minister Manmohan Singh smiles in New Delhi

India's Prime Minister Manmohan Singh smiles in New Delhiமறைந்த பிரதமர் ஜவகர்லால் நேருவால் கடந்த 1960-ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் தேசிய ஒருமைப்பட்டுக்குழு. இதன் தலைவராக பிரதமர் செயல்படுகிறார். தேசிய ஒருமைப்பாடு தொடர்பாக நாட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இந்த குழு ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை முன்வைக்கும். மதவாதம், பிரிவினைவாதம் மற்றும் சாதிப்பிரச்சினைகள் குறித்து தேசிய ஒருமைப்பட்டுக்குழுவில் விவாதிக்கப்படும். மத்திய மந்திரிகள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள், பாராளுமன்றம் மற்றும் மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர்கள், தேசிய மற்றும் மாநில கட்சி தலைவர்கள், தேசியக்குழு தலைவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் மகளிர் அமைப்பு பிரதிநிதிகள் உள்பட 150 உறுப்பினர்கள் தேசிய ஒருமைப்பாட்டு குழுவில் இடம்பெற்றுள்ளனர். தேசிய ஒருமைப்பாட்டுக்குழு கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் 23-ந் தேதி அன்று டெல்லியில் நடைபெறும் என்று உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 23-ந் தேதி அன்று நடக்கும் கூட்டத்தில், சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் நடந்த கலவரம் குறித்து விரிவான அளவில் விவாதங்களும் ஆலோசனைகளும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழர்கள் சிறி லங்கா அரசின் எந்தவித இடையூமின்றித் தேர்தலில் வாக்களிப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் – கனடியத் தமிழர் பேரவை

Posted: 17 Sep 2013 07:43 PM PDT

ctc_tamil

ctc_tamilசெப்ரெம்பர் 21ஆம் நாள் சிறி லங்காவில் வடமாகாணத்தின் 5 தேர்தல் மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில் மக்கள் தங்கள் விருப்புக்கேற்பவும் நியாயமான வகையிலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டியது மிக முக்கியமாகும்.
வடக்கில் வாழும் தமிழர்கள் தங்கள் வாக்குரிமையைச் சரியாகப் பயன்படுத்தி எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமெனக் கனடியத் தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது. இந்த வாக்குகள் சிறி லங்கா அரசுக்கும் சர்வதேயத்துக்கும் ஒரு காத்திரமானதும் முக்கியமானதுமான செய்தியை தெரிவிக்கும்.
கனடாவிலும் ஏனைய நாடுகளிலும் வாழும் புலம்பெயர் தமிழர் வட மாகாணத்தில் வாழும் தங்கள் உறவினர் நண்பர்களை எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க ஊக்கப்படுத்துமாறு கனடியத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கிறது. அத்தோடு வட மாகாணத்துக்கு வெளியே வாழும் வட மாகாண வாக்காளர்களையும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறது.
வன்முறை, இடையூறுகள் மற்றும் கள்ள வாக்குகளின் காரணமாகத் தமிழர்களின் சனநாயக உரிமை பெரும் ஆபத்துக்குள்ளாகி இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களையும் ஆதரவாளர்களையும் சிறி லங்கா இராணுவமும் காவற்துறையும் இடையூறுசெய்வது தொடர்பாக தேர்தற் கண்காணிப்புக் குழுக்கள் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தற் பரப்புரைகளைத் தடுக்கும் வகையிலேயே இவை அமைந்திருக்கின்றன. மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான இத்தகைய திட்டமிட்ட செயற்பாடுகளைக் கனடியத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
வடக்கில் வாழும் தமிழர்கள் சிறி லங்கா அரசின் எந்தவித இடையூமின்றித் தேர்தலில் வாக்களிப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனக் கனடியத் தமிழர் பேரவையின் தேசியப் பேச்சாளர் திரு டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்தார். தமிழரின் சுய நிர்ணய உரிமைளைத் திட்டமிட்டுப் பறிக்கும் சிறிலங்கா அரசின் செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டியது சர்வதேயத்தின் கடமை எனவும் அவர் தெரிவித்தார்.
கூடிய தகவல்களுக்கும் நேர்காணல்களுக்கும்
கனடியத் தமிழர் பேரவை

This posting includes an audio/video/photo media file: Download Now

லண்டனில் பாடசாலை வகுப்பறையில் குழந்தை பெற்ற இந்தியப்பெண்

Posted: 17 Sep 2013 07:34 PM PDT

london school

london schoolஇங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் இந்தியாவை சேர்ந்த டயானா கிரிஷ் (வயது 30) ஆசிரியை ஆக பணி புரிகிறார். இவரது கணவர் பெயர் விஜய் வீரமணி (31). இவர்களுக்கு ஒன்றரை வயதில் நோவா என்ற ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் டயானா மீண்டும் கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான அவர், பிரசவத்துக்காக கடந்த வெள்ளிக்கிழமை முதல் விடுப்பு எடுப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாள் அன்றே (வியாழக்கிழமை) டயானாவுக்கு பள்ளி வகுப்பறையிலேயே ஆண் குழந்தை பிறந்தது. அன்று பள்ளிக்கு சென்ற டயானா, தலைமை ஆசிரியர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு இடுப்பு வலி ஏற்பட்டது. உடனே இதுகுறித்து சக ஆசிரியைகளிடம் தெரிவித்த டயானா, கணவர் விஜய்க்கும், உடனே வந்து தன்னை வீட்டுக்கு அழைத்துச்செல்லுமாறு டெலிபோனில் கூறினார். அவரும் விரைந்து பள்ளிக்கு சென்றார். இதற்குள் டயானாவுக்கு வலி அதிகரித்தது. சக ஆசிரியைகள் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு போன் செய்தனர். ஆம்புலன்சும், கணவரும் வருவதற்கு முன்னதாக, வகுப்பறையில் படுக்க வைக்கப்பட்டிருந்த டயானாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஜோனா என்று பெயர் சூட்டப்பட்டது. இதனால் பிரசவம் நடந்த வகுப்பறைக்கும், பள்ளி நிர்வாகம் ஜோனா வகுப்பறை என்று பெயர் சூட்டியது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்னொரு பிரபாகரன் விக்னேஸ்வரன் துர்ப்பாக்கியமான முடிவை, அடைவது நிச்சயம் – ஏ.எச்.எம் அஸ்வர்

Posted: 17 Sep 2013 07:25 PM PDT

vikneswaran

vikneswaranவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஏற்பட்ட கதியே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும் ஏற்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமான ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர்.

அண்மையில், ஊடகத்துறை அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அஸ்வர், அனுராதபுரத்தில் ஆளும்கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே இவ்வாறு எச்சரித்துள்ளார்.

"மறைந்த புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பதிலாக, தற்போது இன்னொரு பிரபாகரன் தோற்றம் பெற்றுள்ளார்.

அந்தப் பிரபாகரன் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரான விக்னேஸ்வரன்.

முப்பது ஆண்டுகளாக நடத்திய போரின் மூலம், புலிகளால் அடைய முடியாத ஈழத்தை, வடக்கு, கிழக்கை இணைப்பதன் மூலம் அடைந்து கொள்ளும் கனவுடன், அவர் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காகக் களமிறங்கியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஏற்பட்ட துர்ப்பாக்கியமான முடிவை, விக்னேஸ்வரனும் அடைவது நிச்சயம்.

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன் தமது பகுதிக்கு மட்டும் காவல்துறை, காணி அதிகாரங்களைக் கேட்கிறார்.

தமது கோரிக்கை நிறைவேறாது போனால் இந்தியாவினதும், அனைத்துலகதினதும் ஒத்துழைப்பை அதற்காக கோருவதாகவும் அவர் கூறியுள்ளார். இது சிறிலங்காவின் இறைமைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்." என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™