ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்களே, அது நீங்க தானா..
- # பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள்
- தமிழில் 12 கம்ப்யூட்டர் புத்தகம் PDF வடிவில்
- பூச்செடிகள் யில் உருவாக்க
- EEGARAI FLASH NEWS
- வாழ்க இந்திய இறைஆமை!!!
- “எச்ஐவி தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியும்"
- சம(ஸ்)கிருதம்! வட மொழி அல்ல
- ஹைகூ கவிதைகள்
- தொடத் தொடத் தொல்காப்பியம் (124)
- நேற்று லிபியா, இன்று சிரியா!
- நமக்கும் கடமையுண்டு!
- டிஇடி: தமிழ் தவிர பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு
- உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ச் சுவடியியல் பட்டய வகுப்பு
- மீரா ஊசிகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மீரா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
- அறிவின் சிகரம் ! அறிஞர் அண்ணா ! கவிஞர் இரா .இரவி !
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
- அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை
- நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
- நாளை (14.09.13) பிறந்தநாள் கொண்டாடும் ஹர்ஷிதாவை வாழ்த்துவோம் வாருங்கள்
- கற்பழிப்பு வழக்கில் சூப்பர் தீர்ப்பு
- அத்வானி எதிர்ப்பை மீறி பாஜகவின் பிரதமர் வேட்பாளரானார் மோடி
- டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: டிசம்பர் -16 முதல்-ஆகஸ்ட் 31 வரை
- கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.
- ஒரு குட்டி பேய்க்கதை-
- ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா
- சித்தர்களால் பிரபலமடைந்த தலங்கள்!
- தங்க நாணயம் - வைரமுத்து
- காதல் கவிதைகள்
- யாரை கண்டிப்பது?... சிறுகதை
- கோழிப் பண்ணை
- வேலன்:-எளிய முறையில் படங்கள் வரைய - பிடிஎப் புத்தகம்
- வேலன்:-பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க
- தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை
- நல்ல தீர்ப்பு
- பணக்காரனும் ஏழையும்
- எங்கள் நாட்டு மக்களுக்கு...
- உடல் எழுத்து!
- கல்லூரி
- ரமணியின் கவிதைகள்
- பெய்யெனப் பெய்யும் மழை-வைரமுத்து
- முதல் வசந்தம்!
| இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்களே, அது நீங்க தானா.. Posted: 13 Sep 2013 12:27 PM PDT படித்ததில் பிடித்தது : # சென்னையில் பலத்த மழை # சன் டிவி : சென்னையில் கடும் மழை , மக்கள் அவதி, ஸ்டாலின் கண்டனம் ஜெயா டிவி : சென்னையில் நல்ல மழை ..மக்கள் மகிழ்ச்சி கலைஞர் டிவி : ( பொதுமக்களில் ஒருவர் ) " மழை பெயிஞ்சுகிட்டே இருக்கு ...அதுக்கு இந்த அம்மா ஒண்ணுமே செய்ய மாட்டேன்குறாங்க !! " கேப்டன் டிவி : இரு ஆட்சியிலும் முடங்கி கிடந்த சாலை பணிகளால் , சென்னை சாலைகளில் கடும் வெள்ளம் வசந்த் டிவி : தமிழக காங்கரஸ் கட்சியினர் ராகுல் காந்தி யின் உத்தரவின் பேரில் நிவாரண பணிகளில் தீவிரம் பொதிகை ... |
| Posted: 13 Sep 2013 12:16 PM PDT ஒரு ஆண் கடுமையா உழைச்சா... பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க. பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா அவளையே சுத்தி சுத்தி வரான், வேலை வெட்டி இல்லாத பயல்ன்னு மட்டம் தட்டுவாங்க.. அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க. கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..!ன்னு ஒதுக்கி வைப்பாங்க. எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழுறான் பாரும்பாங்க.. திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு சொல்லுவாருவாங்க.. பொண்டாட்டியை ... |
| தமிழில் 12 கம்ப்யூட்டர் புத்தகம் PDF வடிவில் Posted: 13 Sep 2013 12:01 PM PDT தமிழில் 12 கம்ப்யூட்டர் புத்தகம் PDF வடிவில் கணினியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் 12 PDF வடிவிலான மின்னூல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே கொடுத்துள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . கணிப்பொறிகள் , சிக்கலான அறிவியல், வணிக, நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நமக்கு உதவுகிற எந்திரங்கள் ஆகும் கம்ப்யூட்டர் மனிதர்களால் உருவாக்கப்பட்டு, மேலாண்மை செய்யப்படும் எந்திரங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவை தானே சிந்திக்கும் மூளையைப் பெற்றிருக்கவில்லை அவை மனிதரின் ஆணைகளின்ப்படியே ... |
| Posted: 13 Sep 2013 11:24 AM PDT உங்கள் கணினியில் பூஞ்செடிகள் முப்பரிமாணத்தில் வரைய வேண்டுமா < இதைஉருவாக்கி வேறு முப்பரிமாண மென்பொருட்களில் அழக்கான காட்சி அமைக்கவேண்டுமா இதோ இலவச மென்பொருள் பழையது ஆனால் அருமையானது தரவிறக்கம் http://www.gardenwithinsight.com/kfs/kfps210. http://www.kurtz-fernhout.com/download. இங்கே பெயரும் சோட் இலக்கமும் உண்டு இது இலவ்சம் ஆனால் ரிகிஸ்ரர் பதிவு செய்து முழு பொருளாக மாற்ரிக்கொள்ளுங்கள் Registration Name: PlantStudio is now free Registration Code: 574 127 4255 http://www.kurtz-fernhout.com/order.htm |
| Posted: 13 Sep 2013 10:28 AM PDT சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி |
| Posted: 13 Sep 2013 10:25 AM PDT சோகமான உண்மை தான் இதை தனி பதிவாக பதிந்ததற்க்கு மன்னிக்கவும் நன்றி கூடங்குளம்செய்திகள் பக்கம் |
| “எச்ஐவி தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியும்" Posted: 13 Sep 2013 10:18 AM PDT http://img197.imageshack.us/img197/553/t6yb.jpg மனிதர்களிடம் எயிட்ஸ் நோயை தோற்றுவிக்கும் எச்ஐவி வைரஸ் தொற்றை முற்றாக அழிக்கவல்ல சாத்தியக்கூற்றை தாங்கள் கண்டறிந்திருப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். மனிதர்களின் எச்ஐவி தொற்றுக்கு சமமான தொற்று குரங்குகளிலும் காணப்படுகிறது. குரங்குகளிடம் காணப்படும் இந்த தொற்றை எஸ்ஐவி தொற்று என்று மருத்துவ விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். மனிதர்களின் எச்ஐவி தொற்றைவிட நூறுமடங்கு அதிக வீரியம் மிக்க வைரஸ் குரங்குகளிடம் இந்த எஸ்ஐவி தொற்றை ஏற்படுத்துகிறது. இப்படியான ... |
| Posted: 13 Sep 2013 10:10 AM PDT சம(ஸ்)கிருதம்! சம=சமன்=equal / கிருதம்=மொழி=language தமிழுக்குச் சமாந்தரமாக ஒலியலைச் சக்திகளை எழுப்பும் மொழியாக சித்தர்களால் உருவாக்கப்பட்ட மொழியே சம(ஸ்)கிருதம். தமிழே காலத்தால் மூத்த ஞானமொழி ஹிந்தி, உருது போன்ற மொழிகளை வடமொழி எனலாம். சம(ஸ்)கிருதம் வடமொழி அல்ல. அது தமிழ்ச்சித்தர்கள் மொழி. தமிழும் சம(ஸ்)கிருதமும் சித்தர்களின் மொழிகளே. சம=சமமாக, கிருதம்=மொழி. தமிழுக்குச் சமமாக ஞானிகளால் ஒலியலைச் சக்திகளை எழுப்பும் மொழியாக உருவாக்கப்பட்ட மொழிதான் சம(ஸ்)கிருதம். தமிழே ஆதிமொழி. ... |
| Posted: 13 Sep 2013 10:05 AM PDT மனிதர்கள் இருக்கும் மரத்தையெல்லாம் மொத்தமாய் வெட்டிவிட்டு நிழல் தேடும் புத்திசாலிகள் !! பொது நலம் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன அதிகாரியின் வீட்டில் !! காதல் எழுதப் படிக்கத் தெரியாதவனையும் கவிஞனாக்கும் கல்விச்சாலை !! |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (124) Posted: 13 Sep 2013 09:39 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 13 Sep 2013 09:09 AM PDT வியட்நாம், ஆப்கானிஸ்தான், இராக், லிபியா வரிசையில் அடுத்ததாக அமெரிக்க ராணுவத்தின் தலையீட்டால் தவிக்க இருப்பது சிரியா. இராக்கிலும், லிபியாவிலும் முன்வைக்கப்பட்ட அதே காரணங்களைத்தான் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளான சில அரபு நாடுகளும் சிரியாமீது ராணுவத் தாக்குதலில் ஈடுபடுவதற்கும் காரணம் கூறுகிறார்கள். பொறுப்பற்ற ஆட்சி, பொதுமக்களை அழிப்பதற்காக ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துதல், மனிதாபிமானமில்லாத படுகொலைகள் என்று அதிபர் பஷார் அல் அஸாத் அரசின் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்கள். சிரியா ... |
| Posted: 13 Sep 2013 09:07 AM PDT உலகிலுள்ள எல்லா வளர்ச்சி அடைந்த நாடுகளும், தங்களது சரித்திரப் பின்னணியையும், கலாசார அடையாளங்களையும், புராதனச் சின்னங்களையும் பாதுகாத்து, வெளிநாட்டினருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டித் தங்களது வரலாற்றுச் சிறப்புகளை நிலைநிறுத்தத் தயங்குவதில்லை. பல ஐரோப்பிய நாடுகளின் புராதனச் சின்னங்கள் ஏழெட்டு நூற்றாண்டுகள் பழமையானவை, அவ்வளவே. சில கோட்டைகளும், மாதா கோவில்களும்தான் அவர்களால் காட்ட முடிகிற சரித்திரச் சான்றுகள். ஆனால், அந்த சரித்திரச் சான்றுகளை அவர்கள் பாதுகாத்துப் பராமரிக்கும் விதமும், அவைகளைப் பற்றிய ... |
| டிஇடி: தமிழ் தவிர பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு Posted: 13 Sep 2013 09:04 AM PDT முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ் தவிர பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில் தமிழ் பாடத்துக்கான பி வரிசை வினாத்தாளில் மட்டும் 47 கேள்விகளில் அச்சுப் பிழைகள் இருந்தன. இதையடுத்து, ... |
| உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ச் சுவடியியல் பட்டய வகுப்பு Posted: 13 Sep 2013 08:59 AM PDT சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ச் சுவடியியல் பட்டய வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய படிப்பை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் எம்.ராசாராம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்று வந்த தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டய வகுப்பு ஏற்கெனவே தொடங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. இந்த வகுப்பு சில ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழின் தொன்மை, அதன் பாரம்பரியம் சுமார் 11 ... |
| மீரா ஊசிகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மீரா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Posted: 13 Sep 2013 08:57 AM PDT மீரா ஊசிகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மீரா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! அன்னம் வெளியீடு ,மனை எண் 1 நிர்மலா நகர் ,தஞ்சாவூர் .613 007. விலை ரூபாய் 30. நூல் ஆசிரியர் கவிஞர் மீரா அவர்கள் சிவகங்கையின் பெருமைகளில் ஒன்றானவர் . மீரா என்ற பெயரைப் படித்து விட்டு இன்றைய இளைய தலைமுறையினர் பெண் என்று நினைக்கக் கூடும் .எழுத்தாளர் சுஜாதா போல இவரும் ஆண் தான் .மீ . ராஜேந்திரன் என்ற இயற்ப்பெயரை மீரா என்று சுருக்கி புனைப்பெயர் வைத்துக் கொண்டவர் .இவரது கனவுகள் =கற்பனைகள் =காகிதங்கள் அன்றைய ... |
| அறிவின் சிகரம் ! அறிஞர் அண்ணா ! கவிஞர் இரா .இரவி ! Posted: 13 Sep 2013 08:56 AM PDT அறிவின் சிகரம் ! அறிஞர் அண்ணா ! கவிஞர் இரா .இரவி ! பெரியாரோடு கருத்து வேறுபாடு இருந்தபோதும் பெரியாருக்கு ஆட்சியைக் காணிக்கையாக்கியவர் அறிஞர் அண்ணா ! பொடிப் போடும் பழக்கம் இருந்தபோதும் பொடி வைத்துப் பேசும் பழக்கமற்றவர் அறிஞர் அண்ணா ! நடமாடும் சொற்க்களஞ்சியமாக வாழ்ந்தவர் நல்லவர் சிறந்த பண்பாளர் அறிஞர் அண்ணா ! அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்ன அறிவு நேசர் புத்தக தாசர் அறிஞர் அண்ணா ! கன்னிமாரா நூலகத்திற்கு வரும் நூல்களை கண்ணியர் நேருவிற்கு முன் படித்திட்ட ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) Posted: 13 Sep 2013 08:54 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... |
| அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Posted: 13 Sep 2013 08:48 AM PDT ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர். ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்" ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!" அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை ... |
| நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா Posted: 13 Sep 2013 08:37 AM PDT விழிகளைத் தான் வீசியெறிந்தாய் இதயத்தில் ஏன் நீர்க்குமிழி |
| நாளை (14.09.13) பிறந்தநாள் கொண்டாடும் ஹர்ஷிதாவை வாழ்த்துவோம் வாருங்கள் Posted: 13 Sep 2013 08:12 AM PDT நாளை (14.09.13) பிறந்தநாள் கொண்டாடும் ஹர்ஷிதா நிறைவான ஆரோக்கியத்தோடு நூறாண்டு காலம் வாழ நெஞ்சு நிறை வாழ்த்துகள்!! |
| கற்பழிப்பு வழக்கில் சூப்பர் தீர்ப்பு Posted: 13 Sep 2013 07:13 AM PDT புதுடில்லி: நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட டில்லி மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் இன்று மதியம் விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது. இதன்படி குற்றவாளிகள் 4 பேருக்கும் அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 4 பேரும் குற்றம் புரிந்தவர்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இவர்களுக்கு தூக்குத்தண்டனையை வழங்குவதாகவும் நீதிபதி அறிவித்தார். இன்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பையொட்டி குற்றவாளிகள் 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இன்றைய தீர்ப்பையொட்டி கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ... |
| அத்வானி எதிர்ப்பை மீறி பாஜகவின் பிரதமர் வேட்பாளரானார் மோடி Posted: 13 Sep 2013 06:49 AM PDT http://img541.imageshack.us/img541/5504/b7rb.jpg இந்தியாவின் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் நரேந்திர மோடி பிரதமருக்கான வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்திருக்கிறார். இதற்கு பாஜகவின் மூத்த தலைவர் எல் கே அத்வானி உடன்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்திய தலைநகர் புது தில்லியில் இருக்கும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் வீட்டில் வெள்ளியன்று கூடிய பாஜக ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு ... |
| டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: டிசம்பர் -16 முதல்-ஆகஸ்ட் 31 வரை Posted: 13 Sep 2013 06:39 AM PDT புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் பிடிபட்ட 5 குற்றவாளிகள் ஒருவனுக்கு இன்று சிறார் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இந்த வழக்கின் சாராமசம் வருமாறு:- டிசம்பர் 16:- டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்த 23 வயது மருத்துவ மாணவி தன் நண்பரான சாப்ட்வேர் என்ஜினீயருடன் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றார். இரவு 9.30 மணிக்கு வெளியில் வந்த அவர்களுக்கு ... |
| கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம். Posted: 13 Sep 2013 06:21 AM PDT கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களில் கிழ்க்கண்ட நபர்களுக்குப் பரிசுகள் அனுப்பியுள்ளோம். வங்கி மூலமாக அவர்கள் கொடுத்த வங்கி கணக்குக்கு அனுப்பப் பட்டுள்ளது. சரி பார்த்து உடனடியாக வந்து சேர்ந்தமைக்கான அல்லது பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதலை இங்கு பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் அனுப்பப் படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். முதல் பரிசு திருமதி சைலஜா(மைதிலி நாராயணன்) 5 ௦௦௦ இரண்டாம் பரிசு சச்சிதானந்தம் 3 000 ராம் ... |
| Posted: 13 Sep 2013 06:06 AM PDT மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவனின் மனைவி, தன் கணவனின் குடிப்பழக்கத்தை நிறுத்த எண்ணினாள். ஒரு நடு இராத்திரிப் பொழுதில் பேய்போன்று உடைகளை அணிந்து முகமெல்லாம் பயங்கரமான தோற்றத்தை அளிப்பது போன்று தன்னை அலங்கரித்தாள். பேய் போன்று தன்னை உருவகப் படுத்திக் கொண்ட மனைவியானவள் தன் கணவன் வரும் வழியிலுள்ள ஒரு மரத்தின் பின்னே ஒழிந்திருந்தாள். கணவன் வரும் பொழுதில் திடீரென்று அவன் முன்னிலையில் தனது பயங்கரமான தோற்றத்துடன் பாய்ந்து நின்றாள். எந்தவிதப் பயமும் இன்றிக் கணவன், "யார் நீ?" என்று கேட்டான் ... |
| ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா Posted: 13 Sep 2013 06:04 AM PDT 1) கம்பெனி வாசல் இருபுறங்களிலும் கண்டிப்பாக பிரியாணி கடை , சிகரட் விக்கும் பொட்டி கடை இருக்கும் 2) காலையிலும் மாலையிலும் ஒரு ஐந்து பேர் , வாசலில் நின்று வங்கிகளில் கடன் வாங்க அணுகவும் என்று விடாமல் துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டு இருப்பார்கள் . 3) பிரதமர் அலுவலகம் மாதிரி ஒரு 10 , 15 செக்யூரிட்டி சோதனைக்காக வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள். 4) வரும் அனைத்து கார்களின் டிக்கி கள் சோதனை செய்யப்படும். காருக்கு அடியில் ஒரு கண்ணாடி வைத்து எதையோ தேடுவார்கள் . அது என்ன என்று எனக்கு இன்று ... |
| சித்தர்களால் பிரபலமடைந்த தலங்கள்! Posted: 13 Sep 2013 06:04 AM PDT நந்தீசர்- காசி போகர் - பழனி கோரக்கர்- போரூர் பதஞ்சலி-- சேது கரூவூரார்- கரூர் வன்மீகர்- எட்டுகுடி சுந்தரானந்தர் - மதுரை திருமூலர் - சிதம்பரம் மச்ச முனிவர்- திருவனந்தபுரம் ராமதேவர்- அழகர் கோவில் சட்ட முனிவர் - ஸ்ரீரங்கம் கமல முனிவர்- திருவாரூர் குதம்பைச் சித்தர்- மாயூரம் பாம்பாட்டிச் சித்தர்- விருத்தாசலம் இடைக்காட்டுச் சித்தர்- திருவண்ணாமலை தன்வந்தரி- வைத்தீஸ்வரன் கோவில் கொங்கணவர்- திருப்பதி கும்பமுனி- திருவனந்தபுரம் (நன்றி-தினமணி) |
| Posted: 13 Sep 2013 05:51 AM PDT ஆற்று மணற்பரப்பில் - நாம் அன்புற்ற ஞாபகங்கள் நேற்று நிகழ்ந்தவைபோல் - என் நெஞ்சை அழுத்துமடி முதிராத சிறுவயது - நமக்கு முற்றாத இளமனது பதின்மூன்று வயதிருக்கும் - இல்லை பத்துநாள் குறைந்திருக்கும் புதுமொட்டாய் இருந்தாயோ - இல்லை பூப்பெய்திக் கிடந்தாயோ அதுஎந்தன் நினைவிலில்லை - ஆனால் அதுஇன்று விஷயமில்லை இதமான வெள்ளைநிலா - வெள்ளி இழைகளாய் ஒழுகிநிற்க பதறாமல் நதிப்பரப்பை - அது பால்கொண்டு மெழுகிநிற்க கண்ணிலே கவிஊறியே - நாம் காற்றுக்குச் சிறகாகினோம் விண்ணிலே தலைஇடிக்க - நாம் வெறிகொண்டு ... |
| Posted: 13 Sep 2013 05:46 AM PDT ஒரே சுவாரஸ்யமற்றதாக வாழ்க்கை இருக்கிறதே.கொஞ்சல் சிலுசிலுப்பாக மாற்ரினாலென்ன.? காதல் கவிதைகள் இதோ 1.கவிதைக் காதலி எந்தன் கவிதைக் காதலியாள் ஏட்டில் மட்டும் வாழுகிறாள் சந்தம் போட்டுப் பாடுகையில் சற்றே எட்டிப் பார்க்கின்றாள் சொந்தம் என்றோர் முகமறியாள் சொல்லும் பெயரும் யாதுமிலாள் விந்தை அவளுக் குண்மையிலே வாழும் உருவம் இல்லையய்யா அன்றோர் மாலை நானிருந்தேன் ஆற்றங் கரையின் ஓரத்திலே நின்றேன் தென்றல் நீவுசுகம் நிலவின் ஒளியோ போதைதர மென்றே விழுங்குங் கனிசுவையும் மதுவின் ... |
| Posted: 13 Sep 2013 05:38 AM PDT முரளி ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். அவருடைய மனைவி வசந்தா. இவர்களுக்கு சோமு என்ற மகன் இருக்கிறான்.. வழக்கம் போல் மாலை பள்ளி முடிந்ததும் சோமு வீட்டுக்கு வந்தான்.. வந்தவுடன் தன் பையில் இருந்து பேனா, பென்சில், ரப்பர் போன்ற பொருட்களை ஒவ்வொன்றாய் எடுத்து "இது மணியிடம் அடிச்சது, இது ராஜு கிட்ட சுட்டது அப்புறம் இது ராகுலிடம் எடுத்தது" என்று சொல்லி கொண்டே வெளியே வைத்து விட்டு விளையாட சென்று விட்டான்.. இதை பார்த்து கொண்டு இருந்த அவனுடைய அம்மா அன்று இரவு முரளியிடம் நம்ம பையனுக்கு எல்லாம் ... |
| Posted: 13 Sep 2013 05:26 AM PDT கோழிப் பண்ணை நிறைய கோழிகளை வளர்த்தேன் அது என்னை சுற்றியே வந்தது எப்போதும் ! அரிசி போட்டாலும் கம்பு போட்டாலும் அது - பிடிக்கவில்லை என்று என்னிடம் சொன்னதில்லை ! உடம்பு சுகமில்லை ஒருநாள் மகனை அழைத்து சொன்னேன் பண்ணைக்கு போய் தீனி வச்சுட்டு வாப்பா என்று ! உள்ள போனா ஒரே நாத்தம் குடலை பிடுங்கும் நான் போகவில்லை என்றான் ! கோழிகளை விற்று பணத்தை கொண்டு வந்தேன் - அப்பா அரியர் பீஸ் கட்டணும் என்றான் ! அப்போது அவனுக்கு அந்த நாத்தம் தெரியவில்லை போலும் ! |
| வேலன்:-எளிய முறையில் படங்கள் வரைய - பிடிஎப் புத்தகம் Posted: 13 Sep 2013 04:48 AM PDT சித்திரம் கைபழக்கம் செந்தமிழ் நாபழக்கம் என்று சொல்லுவார்கள். வரைவரையதான சித்திரம் அழகுபெறும். இந்த புத்தகத்தில் எளிய முறையில் பச்சைக்கிளி,பூக்கள்,விலங்குகள் என வரைவதை எளியமையாக விளக்கிஉள்ளார்கள்.7 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும். பூக்களை விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள். இதில் சூரியகாந்தி்ப்பூவினை ஒவ்வொரு ஸ்டெப்பாக வரைவதற்கு எளிய முறையில் சொல்லி கொடுத்துள்ளார்கள்.கீழே ... |
| வேலன்:-பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க Posted: 13 Sep 2013 04:41 AM PDT பிடிஎப் பைல்களை சேர்க்க - பிரிக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 12 எம.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில்உள்ள Add கிளிக் செய்து நம்மிடம் உள்ள பிடிஎப் பைல்களை தேர்வு செய்யலாம். மேலும் இதில் Password கொடுத்தும் நாம் பைலினை பாதுகாக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்தபின்னர் இதில் உள்ள Merge கிளிக் செய்திட ... |
| தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை Posted: 13 Sep 2013 04:00 AM PDT தில்லியில் 23 வயது கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தில்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி துணை மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த வழக்கு தில்லி சாகேத் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, 4 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ... |
| Posted: 13 Sep 2013 03:54 AM PDT நல்ல தீர்ப்பு ஓடும் பேருந்தில் காமத்தை மட்டுமே கண்ணெண கொண்ட கள்வர்கள் நடத்திய கொடூரம் - இது நடந்ததோ நமது நாட்டின் தலை நகரில்! பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இப்போது ஆன்மா குளிர்கிறதோ இல்லையோ - அந்த அரும்பை பெற்ற உள்ளங்களுக்கு சமாதானம் கிடைக்கட்டும் ! நால்வருக்கும் மரண தண்டனை அது நிச்சயம் நிறைவேறட்டும் ! மனிதா. . . உன்னை பெற்றவள் மட்டும் பெண்ணில்லை மற்றவளும் பெண்தான் ! உணர்ந்து கொள் !! |
| Posted: 13 Sep 2013 03:37 AM PDT பணக்காரனும் ஏழையும் ************************* மாடி மேல மாடி கட்டி அறை முழுக்க ஏசி போட்டு தேக்கு மர கட்டிலிலே இளவம் பஞ்சு மெத்த போட்டு படுத்துப்பார்த்தான் பணக்கார ரங்கசாமி பாவம் அவனுக்கு தூக்கமில்ல... சில நூறு தென்னங்கீத்தெடுத்து சின்னஞ்சிறு குடிசை போட்டு அதுல கோரப்பாய் விரிச்சு குடும்பத்தோட நிம்மதியா தூங்குராண்டா அந்த ஏழை குப்புச்சாமி... பணக்காரன் காசு போட்டு வாங்கிவெச்ச ஏசிக்காத்து வீசித்தா என்ன செய்ய அது ஏழை அவன் நட்டு வெச்ச வேப்பங்காத்துக்கது ஈடு இல்ல காசிருந்தும் ... |
| Posted: 13 Sep 2013 03:35 AM PDT எங்கள் நாட்டு மக்களுக்கு இலவசப் புத்திதான் அதிகம் இதை இவர்களே உருவாக்கிக் கொண்டார்களா? அல்லது ஆளும் அரசியல்வாதிகள் உருவாக்கி விட்டு விட்டார்களா? இதன் விடை இன்றுவரை தெரியவே இல்லை! அதனால்தான் எங்களின் எல்லா வணிகமும் இலவச இணைப்புகளோட வருகின்றது வந்த சுவடு கூடத் தெரியாமல் வெகு விரைவாய் விற்றும் தீர்கின்றது ----------------------------- >மகா வெற்றிச்சிகரன் நன்றி: வினா – எதிர்வினாதல் (குறுங்கவிதைக் குவியல்) |
| Posted: 13 Sep 2013 03:31 AM PDT அதிகாலை ஏழு ஆகாயம் தொழு இருதயம் துடிக்கவிடு ஈரழுந்தப் பல் தேய் உடல் வேர்வை கழி ஊளைச்சதை ஒழி எருது போல உழை ஏழை போல உண் ஐம்புலன் புதுக்கு ஒழித்துவிடு புகைமதுவை ஓட்டம் போல நட ஔடதம் பசி அஃ தாற்றின் எஃகாவாய் venkkiram |
| Posted: 13 Sep 2013 03:28 AM PDT கல்லூரி ஆரம்ப பாடசாலையில் தமிழை தவிர - வேறு எதுவும் கற்றிடாத நிலையில் ! தடுக்கி விழுந்து தட்டுத் தடுமாறி பன்னிரெண்டு வருடம் முடித்து விட்டு - பின் சென்றேன் கல்லூரி !! ஆங்கிலம் கஷ்டம்தான் கணிதமும் கஷ்டம்தான் ஆனாலும் இஷ்டமாயிருந்தது என்னுடன் படித்த ரேவதியும் சேர்ந்திருந்தால் அதே கல்லூரியில் !! |
| Posted: 13 Sep 2013 02:25 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| பெய்யெனப் பெய்யும் மழை-வைரமுத்து Posted: 13 Sep 2013 02:22 AM PDT ஆடி முடிஞ்சிருச்சு ஆவணியும் கழிஞ்சிருச்சு சொக்கிகொளம் கோடாங்கி சொன்னகெடு கடந்திருச்சு காடு காஞ்சிருச்சு கத்தாழை கருகிருச்சு எலந்த முள்ளெல்லாம் எலையோட உதிந்திருச்சு வெக்க போருக்காம் ரெக்க வெந்த குருவியெல்லாம் வெங்காடு விட்டு வெகுதூரம் போயிருச்சு போட்டு மழை பெய்யலையே புழுதி அடங்கலையே உச்சி நனையலையே உள்காடு உழுகலையே வெதப்புக்கு விதியிருக்கோ வெறகாக விதியிருக்கோ கட்டிவெச்ச வெங்கலப்ப கண்ணீர் வடிச்சிருச்சே காத்துல ஈரமில்லா கள்ளியில பாலுமில்ல எறும்பு குளிச்சேற இருசொட்டுத் ... |
| Posted: 13 Sep 2013 01:42 AM PDT அழகிற்சிறந்த மழலைகள் அகத்தைக்காட்டும் கண்கள் பொழியும் அருவித்தேன்கள் புதையலோ குழந்தைகள்! கொடிபோல் இழையும்கைகள் கொழுகொழுவெனும்கன்னங்கள் பிடித்திட ஓடிடும் வேளையில் நடித்துச்சிரிக்கும் கள்வர்கள்! கருவிழிகளில் என்றும் களிப்பு கட்டியணைத்திடல் என்ன மறுப்பு? புருவவளைவிலும் துறுதுறுப்பு புன்னகையோ ஆண்டவன் படைப்பு! பெண்மைக்குப்பெருமை சேர்க்கும் கண்ணசைவினில் கதைநூறு சொல்லும் உண்மையில் மழலைகள் மட்டுமே உலகின் முதல் வசந்தமே! ஷைலஜா, பெங்களூர் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |