Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


மெட்ரோ ரெயில் பாதையில் சொத்து மதிப்பு உயர்கிறது

Posted: 13 Sep 2013 02:20 PM PDT

 
 
சென்னை நகரின் புதிய அடையாளமாக வரவிருக்கும் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தின் முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் இடையேயும் (23 கி.மீ), இரண்டாவது வழித்தடம் சென்னை சென்டிரல் முதல் பரங்கிமலை இடையேயும் (22 கி.மீ) அமைக்கப்படுகிறது. 
 

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: ஸ்ரீசாந்த், அங்கீத் சவானுக்கு ஆயுட்கால தடை அமித்சிங், திரிவேதிக்கும் தண்டனை

Posted: 13 Sep 2013 02:04 PM PDT

புதுடெல்லி, 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவானுக்கு ஆயுட் கால தடை விதிக்கப்பட்டது. அமித்சிங்குக்கு 5 ஆண்டும், சித்தார்த் திரிவேதிக்கு ஒரு ஆண்டும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

ஐ.பி.எல். சூதாட்டம்

இந்தியாவில் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பாகிஸ்தானை சேர்ந்த அணிக்கு ‘விசா’

Posted: 13 Sep 2013 01:58 PM PDT

 

புதுடெல்லி, 

இந்தியாவில் விரைவில் தொடங்கும் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி பங்கேற்பதற்கு மத்திய அரசு விசா வழங்கி இருக்கிறது.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்

10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 21–ந்தேதி முதல் அக்டோபர் 6–ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

ஆசிய சீனியர் பெண்கள் கைப்பந்து தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

Posted: 13 Sep 2013 01:20 PM PDT

நகோன் ராட்சசிமா, 

ஆசிய சீனியர் பெண்கள் கைப்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி நேர் செட்டில் பிலிப்பைன்ஸ் அணியை தோற்கடித்தது.

ஆசிய பெண்கள் கைப்பந்து

17–வது ஆசிய சீனியர் பெண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து நாட்டில் உள்ள நகோன் ராட்சசிமா நகரில் நேற்று தொடங்கியது.

அகில இந்திய ஆக்கி ஐ.ஓ.பி. அணிக்கு 2–வது வெற்றி

Posted: 13 Sep 2013 01:18 PM PDT

சென்னை, 

சென்னையில் நடந்து வரும் அகில இந்திய ஆக்கி போட்டியில் நேற்று ஐ.ஓ.பி. அணி 2–வது வெற்றியை பெற்றது.

அகில இந்திய ஆக்கி

பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி நியமனம்

Posted: 13 Sep 2013 01:11 PM PDT

டெல்லியில் நேற்று நடைபெற்ற பா.ஜனதாவின் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில், அக்கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளராக குஜராத் மாநில முதல்-மந்திரி நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். அவர் கட்சி தலைவர் ராஜ்நாத்சிங், மூத்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி, அருண் ஜெட்லி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருடன் கைகோர்த்து நிற்பதை படத்தில் காணலாம்.
 

பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்ப பெறவேண்டும் மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்

Posted: 13 Sep 2013 12:53 PM PDT

சென்னை

பெட்ரோல் விலையை 13 நாட்களில் 4 ரூபாய் உயர்த்திய மத்திய அரசுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

எரிகிற வீட்டில்...

ஆட்சி மன்ற குழு கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? ராஜ்நாத்சிங்குக்கு அத்வானி கடிதம்

Posted: 13 Sep 2013 12:40 PM PDT

புதுடெல்லி

பாரதீய ஜனதா ஆட்சி மன்றகுழு கூட்டத்தை புறக்கணித்தது குறித்து பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு, மூத்த தலைவர் அத்வானி கடிதம் எழுதியுள்ளார்.

அத்வானி புறக்கணிப்பு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 5.3 சதவீதமாக குறைப்பு

Posted: 13 Sep 2013 12:38 PM PDT

புதுடெல்லி

நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தில் 5.3 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என பொருளாதார ஆலோசனைக் குழு முன்னறிவிப்பு செய்து இருந்தது. ஆக, வளர்ச்சி மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளது.

பாரத ரிசர்வ் வங்கி

பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டால் பீ.எஸ்.இ. சென்செக்ஸ் 49 புள்ளிகள் வீழ்ச்சி

Posted: 13 Sep 2013 12:35 PM PDT

மும்பை

பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டால், வெள்ளிக்கிழமை அன்று பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 49 புள்ளிகளை இழந்தது.

சவால்

நடப்பு நிதி ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக் குழு 5.3 சதவீதமாக குறைத்துள்ளது. மேலும், நிதி பற்றாக்குறையை 4.8 சதவீதமாக குறைப்பது மத்திய அரசுக்கு ஒரு சவாலாக இருக்கும் என தெரிவித்துள்ளது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™