Tamil Star |
- நெல்சன் மண்டேலா வீடு திரும்பவில்லை: தென்னாப்பிரிக்க அதிபர் அலுவலகம் அறிக்கை
- 21வது மாடியிலிருந்து தப்ப முயன்று குப்பையில் விழுந்த திருடன்
- அமெரிக்க அதிபர் ஒபாமா பேச்சு சிரியா மீதான தாக்குதல் அவசர தேவையாகும்
- விரைவில் அறிமுகமாகவுள்ள Samsung Galaxy Note III ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியீடு
- ஜெர்மனி நாட்டின் ‘விசில்புளோயர்’ விருது எட்வர்ட் ஸ்னோடென்னுக்கு அளிக்கப்பட்டது
- ரூபாய் மதிப்பு சரிவை சரிக்கட்ட கோவில்களில் குவிந்து கிடக்கும் தங்கத்தை பயன்படுத்த மத்திய அரசு திட்டமா?
- மும்பை தாக்குதல்: பாகிஸ்தான் நீதிக் குழு இந்தியா விஜயம்
- நவிபிள்ளையின் கருத்துக்களை இலங்கை நிராகரிப்பு
- காலால் நடக்கும் அபூர்வ சுறா மீன்கள் (வீடியோ இணைப்பு)
- ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்
| நெல்சன் மண்டேலா வீடு திரும்பவில்லை: தென்னாப்பிரிக்க அதிபர் அலுவலகம் அறிக்கை Posted: 31 Aug 2013 10:18 PM PDT சென்ற ஜூன் மாதம் முதல் நுரையீரல் தொற்று நோய்க்காகச் சிகிச்சை பெற்றுவந்த தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா நேற்று வீடு திரும்பியதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அவற்றை தென்னாப்பிரிக்க அதிபர் ஜாகோப் ஜூமாவின் அலுவலகம் மறுத்துள்ளது. அவர் இன்னமும் பிரிட்டோரியா மருத்துவமனையில் இருப்பதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மண்டேலாவிற்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவக் குழுவினருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கும் இடையில் நடந்த தகவல் தொடர்பு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது […] |
| 21வது மாடியிலிருந்து தப்ப முயன்று குப்பையில் விழுந்த திருடன் Posted: 31 Aug 2013 10:16 PM PDT
அமெரிக்காவின் நியூயார்க் புறநகரிலுள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ராபின் என்ற 26 வயது இளைஞர் நுழைந்து வங்கியில் பணத்தை திருடினார். இதையறிந்த பொலிசார் அங்கு விரைந்து சென்றனர். உடனே திருட்டு ஆசாமி தப்பிக்க குப்பை கொட்டும் சாய்வு குழாய் வழியாக இறங்க முயன்றார். ஆனால், அம்முயற்சி தோல்வியில் முடிந்து 21வது மாடியில் இருந்து சறுக்கி கீழ் தரைத்தளத்தில் போய் விழுந்தார். அங்கிருந்தபடி தன்னை காப்பாற்றும்படி அபயகுரல் கொடுத்தார். இது குறித்து அங்கிருந்த துப்புறவு பணியாளர்கள் பொலிசாரிடம் தெரிவிக்க, திருடன் ராபின் சிக்கி கொண்டார். வங்கியில் திருடிய பணத்தையும் பொலிசார் கைப்பற்றினர். இதில் ராபின் படுகாயம் அடைந்து கவலைக்கிடமாக இருந்ததால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்க அதிபர் ஒபாமா பேச்சு சிரியா மீதான தாக்குதல் அவசர தேவையாகும் Posted: 31 Aug 2013 10:11 PM PDT
ஐ.நா. சபையில் சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு தீர்மானம் கொண்டு வந்தால், சிரியாவுக்கு ஆதரவு அளித்து வரும் ரஷ்யா, தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதை முறியடித்துவிடும். இதனால் ஐ.நா. அனுமதியை பெறப்போவதில்லை என்று அமெரிக்க அறிவித்துள்ளது. இதற்கிடையே, தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் உயர் ராணுவ அதிகாரிகளின் உயர்நிலை கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதைத் தொடர்ந்து ஒபாமா அளித்த பேட்டி: சிரியா மீது தாக்குதல் நடத்த வேண்டியது மிக அவசியமானதும், உடனடி தேவையானதும் ஆகும். ஒரு இறுதி முடிவை கொண்டு வரும் வகையிலான நடவடிக்கை குறித்து நாங்கள் ஆலோசிக்கவில்லை. அதேபோல் தரைவழியாகச் சென்று தாக்குதல் நடத்துவது குறித்தும் நாங்கள் ஆலோசிக்கவில்லை. சிரியா மீதான தாக்குதல் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், அமெரிக்காவின் நடவடிக்கை நிச்சயம் இருக்கும். கூட்டணி நாடுகளுடன் பேசி வருகிறோம். அதேபோல் காங்கிரஸ் சபையுடனும் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு ஒபாமா கூறினார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியதாவது: ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிரான எங்களுடைய விதிகள் ஒன்றுதான். சிரியா மீதான தாக்குதலுக்காக ஐ.நா. சபையின் அனுமதியை கேட்கப்போவதில்லை. ஏனெனில், ரஷ்யா நிச்சயம் அதை தடுத்துவிடும். சிரியாவில் ரசாயன குண்டுகள் வீசப்பட்டதால் 1,429 பேர் இறந்துள்ளனர். இதில் 426 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள். கொடூரமாக நடந்து கொண்ட சிரியா அதிபர், வஞ்சகத்தன்மை கொண்டவர். சிரியா மீதான எங்கள் தாக்குதல் தரைவழியாக இருக்காது. அதேபோல் மிக ஆக்ரோஷமானதாகவும் இருக்காது. இவ்வாறு ஜான் கெர்ரி கூறினார். புடின் மறுப்பு: சிரியா ரசாயன குண்டு வீசியதாக கூறுவது சுத்தப் பொய் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். குண்டு வீசியதற்கான ஆதாரங்களை அமெரிக்கா சமர்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியா வேண்டுகோள்: சிரியாவில் வன்முறை அதிகரித்திருப்பதாலும் போர் அபாயம் இருப்பதாலும் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறும்படி இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| விரைவில் அறிமுகமாகவுள்ள Samsung Galaxy Note III ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியீடு Posted: 31 Aug 2013 10:01 PM PDT எதிர்வரும் 4ம் திகதி பேர்லினில் சம்சுங் அறிமுகப்படுத்தவுள்ள Samsung Galaxy Note III ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி 5.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Qualcomm Snapdragon 800/Exynos 5 Octa Processor, பிரதான நினைவகமாக 3GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது. இவை தவிர 32GB சேமிப்பு வசதி, 3,300 mAh மின்கலம் என்பனவற்றுடன் 13 மெகாபிக்சல்களை உடைய கமெரா போன்றனவும் தரப்பட்டுள்ளன. மேலும் இது கூகுளின் Android 4.3 […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜெர்மனி நாட்டின் ‘விசில்புளோயர்’ விருது எட்வர்ட் ஸ்னோடென்னுக்கு அளிக்கப்பட்டது Posted: 31 Aug 2013 09:56 PM PDT அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புப் பிரிவின் ஒப்பந்ததாரராக பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென், அமெரிக்கா பிற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் நிரூபித்தார். இதனால், அந்நாட்டின் உளவு குற்றச்சாட்டுக்கு ஆளான அவர் தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டி, கடந்த மே மாதம் ஹவாய், ஹாங்காங் சென்று பின்னர் ரஷ்யாவில் அடைக்கலம் கோரினார். ஜூன் மாதம் 22ஆம் தேதி முதல் ரஷ்ய விமான நிலையத்தில் காத்திருந்த ஸ்னோடென்னுக்கு அந்நாடு தற்காலிகத் தஞ்சம் வழங்கியுள்ளது. இவருக்கு ஜெர்மனி நாட்டின் இந்த வருடத்திற்கான விசில்புளோயர் விருதும், […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 31 Aug 2013 09:53 PM PDT டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 25 சதவீதம் குறைந்து தற்போது ஒரு டாலரின் மதிப்பு ரூ.65.70 ஆக உள்ளது. நெருக்கடியான இந்த கால கட்டத்தில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சரிக்கட்டுவதற்காக, நமது நாட்டில் உள்ள கோவில்களில் குவிந்து கிடக்கும் ஏராளமான தங்க நகைகளை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்கம் இறக்குமதியை தவிர்ப்பதற்காக, இந்திய கோவில்களில் உள்ள தங்க நகைகளை […] |
| மும்பை தாக்குதல்: பாகிஸ்தான் நீதிக் குழு இந்தியா விஜயம் Posted: 31 Aug 2013 09:50 PM PDT மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக சாட்சிகளிடம் விசாரிக்க 8 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நீதிக் குழு செப்டம்பர் 7-ம் தேதி இந்தியா வரவுள்ளது. இக் குழுவை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்லும் பொறுப்பு, மும்பை கூடுதல் முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் பி.ஒய். லடேகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நீதிக் குழுவுக்கு அனுமதி வழங்கும் கடிதத்தை இந்தியா அனுப்பியதாக, இவ்வழக்கை விசாரித்து வரும் இஸ்லாமாபாதில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் சனிக்கிழமை தெரிவித்தனர். அந்தக் கடிதத்தில் பாகிஸ்தான் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| நவிபிள்ளையின் கருத்துக்களை இலங்கை நிராகரிப்பு Posted: 31 Aug 2013 09:41 PM PDT ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை வெளிப்படுத்தியுள்ள கருத்து ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான், என்றும் இலங்கையில் எதேச்சாதிகாரம் நடைமுறையில் இல்லை என்றும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. ´நவி பிள்ளை இலங்கை எதேச்சாதிகார பாதையில் செல்வதாகக் கருத்துக்கூறியிருக்கிறார். இதனைவிட வேறுவகையான நிலைப்பாட்டை இங்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காற்று எந்தப்பக்கம் வீசுகிறது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் பிடியில் இருந்த வடக்கில் இன்று மக்களுக்கு தேர்தல் என்ற வார்த்தையாவது கேட்பதற்கு உரிமை கிடைத்திருக்கிறது´ என்றார் இலங்கை […] |
| காலால் நடக்கும் அபூர்வ சுறா மீன்கள் (வீடியோ இணைப்பு) Posted: 31 Aug 2013 09:31 PM PDT கடல் வாழ் உயிரினமான மீன்கள் பொதுவாகவே நீந்தும் வல்லமை கொண்டவை. இந்நிலையில் காலால் நடக்கும் அபூர்வ சுறா மீன்கள் இருப்பதை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த அதிசய சுறா மீன்கள் இந்தோனேசியாவின் கிழக்கு கடலில் வாழ்கின்றன. உடலுக்கு அடியில் இருக்கும் சிறிய கால்கள் மூலம் இவை கடலின் தரையில் நடந்து செல்கிறது. இது அதிகபட்சம் 80 சென்டி மீட்டர்(2½ அடி) நீளம் மட்டுமே வளரக்கூடியது, மனிதனுக்கு தீங்கு விளைவிக்காத சாதுவான பிராணி என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான் Posted: 31 Aug 2013 08:05 PM PDT ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 108 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி கண்டது. இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் 67, அஹமது ஷெஸாத் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


