மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இந்தூரில் கைதான ஆசாராம்பாபுவிடம் போலீசார் விசாரணை
- அருணாசல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெரும் ஜெகன்மோகனுடன் தங்க மனைவிக்கு அனுமதி: சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு
- திருப்பதி கோவிலில் பக்தர்களின் 'லக்கேஜ்'களை ஒரே இடத்தில் பெற சிறப்பு மையம்
- 5 மாநில சட்டசபை தேர்தலில் தண்டிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட தடை: தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
- பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை: குலாம்நபி ஆசாத் பேட்டி
- காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி செத்து போய்விட்டது: மம்தா
- ரூபாய் மதிப்பு சரிவை சரிக்கட்ட கோவில்களில் குவிந்து கிடக்கும் தங்கத்தை பயன்படுத்த மத்திய அரசு திட்டமா?
- அரியானாவில் மாட்டிறைச்சி ஏற்றிச்சென்ற 16 லாரிகள் எரிப்பு: பதட்டத்தால் 500 ஜவான்கள் குவிப்பு
- கொப்பா அருகே இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற உறவினர் கைது
- இந்தூர் ஆசிரமத்தில் இருந்து சாமியார் ஆசாரம் பாபு கைது: ஜோத்பூர் போலீசார் நடவடிக்கை
- ஆசாராம் பாபுவை கைது செய்ய வலியுறுத்தி சிறுமியின் குடும்பத்தினர் சாகும்வரை உண்ணாவிரதம்
- சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 ரூபாயும், டீசல் விலை 61 காசுகளும் உயர்வு
- கர்நாடகாவில் அலுவலக கம்ப்யூட்டர்களில் ஆபாச படம் பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு ‘செக்’
- ஆசாராம் பாபுவுக்கு உடல்நலக் கோளாறு; தலைமறைவாகவில்லை - மகன் சொல்கிறார்
- மத்திய பிரதேசத்தில் கார் மீது தாக்குதல்: பா.ஜனதா மீது திக்விஜய் சிங் கடும் தாக்கு
- அந்த பாவிக்கு 3 ஆண்டு தண்டனை தருவதைவிட இப்போதே விடுதலை செய்துவிடலாம்: டெல்லி மாணவி தாயார் ஆவேசம்
- கேரளாவில் ஏழைகளுக்கு நிலம் வழங்கும் திட்டம்: சோனியா காந்தி தொடங்கி வைக்கிறார்
- டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் முதல் தீர்ப்பு: குற்றம் சாட்டப்பட்டவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
- நொய்டாவில் தனியாக இருந்த பெண்ணை அடித்து உதைத்து பலாத்காரம் செய்த போலீஸ்காரர்கள்
| இந்தூரில் கைதான ஆசாராம்பாபுவிடம் போலீசார் விசாரணை Posted: 31 Aug 2013 10:55 PM PDT குஜராத்தை சேர்ந்த 72 வயதான சாமியார் ஆசாராம்பாபு. இவருக்கு சொந்தமான ஆசிரமம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ளது. இங்கு தங்கி படித்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 15 வயது மாணவியை சாமியார் ஆசாராம் கற்பழித்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர். இதற்கான கெடு முடிந்த பின்பும் சாமியார் |
| அருணாசல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம் Posted: 31 Aug 2013 10:47 PM PDT அருணாசல பிரதேச மாநிலத்தின் சீன எல்லை அருகே இன்று அதிகாலை 2.37 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குலுங்கின. எனவே, தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் அச்சத்தில் எழுந்து வீடுகளை விட்டு வெளியேறி ரோட்டில் தஞ்சம் புகுந்தனர். இங்கு 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. |
| ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெரும் ஜெகன்மோகனுடன் தங்க மனைவிக்கு அனுமதி: சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு Posted: 31 Aug 2013 10:43 PM PDT சொத்து குவிப்பு வழக்கில் கைதான ஆந்திர மாநில ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத் சஞ்சல்குடா ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆந்திர மாநிலம் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை கடந்த 24–ந் தேதி தொடங்கினார். அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை முன்னிட்டு கடந்த 29–ந் தேதி நள்ளிரவு அவர் பலவந்தமாக ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். |
| திருப்பதி கோவிலில் பக்தர்களின் 'லக்கேஜ்'களை ஒரே இடத்தில் பெற சிறப்பு மையம் Posted: 31 Aug 2013 10:37 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்கள் கொண்டு வரும் 'லக்கேஜ்'களை பாதுகாக்க ஏராளமான மையங்கள் உள்ளன. தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்கள் தங்கள் 'லக்கேஜ்'களை திரும்ப பெற அந்த மையங்கள் தேடிச்செல்ல வேண்டியுள்ளது |
| Posted: 31 Aug 2013 09:02 PM PDT கிரிமினல் வழக்கில் அரசியல்வாதிகள் 2 ஆண்டுகளோ அதற்கு மேலோ தண்டனை பெற்றால், தண்டனை விதிக்கப்பட்ட நாளிலேயே அவர்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக இருந்தால் பதவி இழந்து விடுவார்கள். அவர்கள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இந்த நிலையில் மத்தியபிரதேசம், சத்தீஸ்கார், ராஜஸ்தான், டெல்லி, மிஜோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சத்தீஸ்கார் மாநிலத்தில் தேர்தலுக்கு முந்தைய ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் தலைமையில் பிற இரு தேர்தல் கமிஷனர்கள், உயர் அதிகாரிகள் ராய்ப்பூர் சென்றிருந்தனர். |
| பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை: குலாம்நபி ஆசாத் பேட்டி Posted: 31 Aug 2013 08:18 PM PDT நாட்டில் இப்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் அக்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் எக்காரணம் கொண்டும் பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை என்று மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி குலாம்நபி ஆசாத் ஜம்மு-காஷ்மீர் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- |
| காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி செத்து போய்விட்டது: மம்தா Posted: 31 Aug 2013 04:47 PM PDT நாட்டில் இன்று லிட்டருக்கு பெட்ரோல் விலையில் 2 ரூபாய் 35 காசுகளும், டீசல் விலையில் 50 காசுகளும் மாநில வரிகள் இன்றி உயர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார நிலை குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவியும் மேற்கு வங்க முதல் அமைச்சருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். |
| Posted: 31 Aug 2013 03:56 PM PDT டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 25 சதவீதம் குறைந்து தற்போது ஒரு டாலரின் மதிப்பு ரூ.65.70 ஆக உள்ளது. |
| அரியானாவில் மாட்டிறைச்சி ஏற்றிச்சென்ற 16 லாரிகள் எரிப்பு: பதட்டத்தால் 500 ஜவான்கள் குவிப்பு Posted: 31 Aug 2013 02:43 PM PDT அரியான மாநிலம் குரேகான் மாவட்டத்தில் வெள்ளியன்று 25 லாரிகளில் மாட்டிறைச்சிகள் மற்றும் மாடுகளை ஏற்றிக்கொண்டு உத்தரப்பிரதேசம் சென்றனர். இவைகள் அனைத்தும் சண்டிகார் நகராட்சி அலுவலர்கள் துணையுடன் கடத்தப்படுகிறது என்ற செய்தி அப்பகுதியில் உள்ள கிராமத்தினரிடம் பரவியது. |
| கொப்பா அருகே இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற உறவினர் கைது Posted: 31 Aug 2013 01:53 PM PDT சிக்மகளூர் மாவட்டம் கொப்பா தாலுகா விலாலு கொப்பா கிராமத்தை சேர்ந்த 26 வயது பெண் பல்லவி. (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவரது வீட்டுக்கு உறவினரான சிருங்கேரி தாலுகா கெரேகட்டே கிராமத்தை |
| இந்தூர் ஆசிரமத்தில் இருந்து சாமியார் ஆசாரம் பாபு கைது: ஜோத்பூர் போலீசார் நடவடிக்கை Posted: 31 Aug 2013 01:11 PM PDT ஆன்மிக தலைவர் ஆசாராம் பாபு (72) ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக 11 நாட்களாகியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து அவர் எங்கிருக்கிறார் என்று போலீசார் தேடினர். |
| ஆசாராம் பாபுவை கைது செய்ய வலியுறுத்தி சிறுமியின் குடும்பத்தினர் சாகும்வரை உண்ணாவிரதம் Posted: 31 Aug 2013 08:37 AM PDT ஆன்மிக தலைவர் ஆசாராம் பாபு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து அவரை கைது செய்வதற்காக இந்தூர் ஆசிரமத்தில் போலீசார் முகாமிட்டுள்ளனர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியாததால், அவரை கைது செய்வதில் |
| சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 ரூபாயும், டீசல் விலை 61 காசுகளும் உயர்வு Posted: 31 Aug 2013 06:42 AM PDT சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. |
| கர்நாடகாவில் அலுவலக கம்ப்யூட்டர்களில் ஆபாச படம் பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு ‘செக்’ Posted: 31 Aug 2013 06:32 AM PDT கர்நாடக மாநிலத்தில் தீவிரவாத எதிர்ப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.பி.ஐ. அதிகாரிகள், அரசு அலுவலகங்களில் இன்டர்நெட் செயல்பாடுகளை கண்காணித்தனர். அப்போது அரசு அலுவலக அதிகாரிகள், குறிப்பாக தலைமைச் செயலக ஊழியர்கள், அலுவலக கம்ப்யூட்டர்களில் ஆபாச படம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ., குற்றப் |
| ஆசாராம் பாபுவுக்கு உடல்நலக் கோளாறு; தலைமறைவாகவில்லை - மகன் சொல்கிறார் Posted: 31 Aug 2013 05:56 AM PDT சிறுமி செக்ஸ் புகார் கூறப்பட்ட சாமியார் ஆசாரம் ஆசிரமம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ளது. இந்த ஆசிரமத்தில்தான் கற்பழிப்பு நடந்ததாக சாமியார் மீது புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அவரை கைது செய்வதற்காக ஜோத்பூர் போலீசார் இன்று இந்தூரில் உள்ள ஆசிரமத்திற்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதனால் |
| மத்திய பிரதேசத்தில் கார் மீது தாக்குதல்: பா.ஜனதா மீது திக்விஜய் சிங் கடும் தாக்கு Posted: 31 Aug 2013 05:30 AM PDT மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று மாலை தார் மாவட்டம் குக்சி அருகில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது கார் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கார் சேதம் அடைந்தது. காரில் சென்ற திக்விஜய் சிங், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அஜய் சிங் ஆகியோர் காயமின்றி |
| அந்த பாவிக்கு 3 ஆண்டு தண்டனை தருவதைவிட இப்போதே விடுதலை செய்துவிடலாம்: டெல்லி மாணவி தாயார் ஆவேசம் Posted: 31 Aug 2013 04:29 AM PDT புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் பிடிபட்ட 5 குற்றவாளிகள் ஒருவனுக்கு இன்று சிறார் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்தியாவையும் தாண்டி உலக நாடுகளில் உள்ள பெண்களின் கவனத்தை ஈர்த்த இந்த வழக்கின் பின்னணியை சற்று பின்நோக்கிப் பார்ப்போம். டிசம்பர் 16:- டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்த 23 வயது மருத்துவ மாணவி தன் நண்பரான சாப்ட்வேர் என்ஜினீயருடன் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு தியேட்டருக்கு சினிமா |
| கேரளாவில் ஏழைகளுக்கு நிலம் வழங்கும் திட்டம்: சோனியா காந்தி தொடங்கி வைக்கிறார் Posted: 31 Aug 2013 04:11 AM PDT சொந்தமாக நிலமில்லாதவர்கள் யாரும் இல்லை, அனைவருக்கும் சொந்தமாக ஒரு இடம் உண்டு என்ற நிலையை ஏற்படுத்தும் வகையில், கேரள மாநில அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்படி, சொந்தமாக நிலம் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு மாநில அரசின் சார்பில் தலா 3 சென்ட் நிலம் வழங்கப்படும் |
| டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் முதல் தீர்ப்பு: குற்றம் சாட்டப்பட்டவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை Posted: 31 Aug 2013 03:09 AM PDT டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக அடித்து கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் ராம்சிங் என்ற குற்றவாளி திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டான். இவர்களில் ஒரு குற்றவாளிக்கு 17 வயதே ஆவதால் அவன் மீதான வழக்கு |
| நொய்டாவில் தனியாக இருந்த பெண்ணை அடித்து உதைத்து பலாத்காரம் செய்த போலீஸ்காரர்கள் Posted: 31 Aug 2013 02:46 AM PDT உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பெண்ணை நேற்று இரவு ஒரு கும்பல் அடித்து உதைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பின்னர் அவரிடம் இருந்த பணம் மற்றும் அவரது ஏ.டி.எம். கார்டை திருடிச் சென்றுவிட்டது |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |