Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இந்திய தொடர் மூலம் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டேன்: முகமது இர்பான்

Posted: 03 Aug 2013 10:57 PM PDT

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது இர்பான்(வயது 31), கடந்த 2010ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். பின், கடந்தாண்டு டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இடம் பிடித்தார். இதுவரையிலும் இவர் 2 டெஸ்ட்(3 விக்கெட்), 19 ஒருநாள் போட்டி(29 விக்கெட்), 4 சர்வதேச டுவென்டி-20(3 விக்கெட்) போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் இர்பான் கூறியதாவது, இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டேன். ரசிகர்கள் நிரம்பி வழிந்த மைதானத்தில், சிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கு [...]

வீராட் கோஹ்லிக்கு ஸ்டீவ் வாக் அறிவுரை

Posted: 03 Aug 2013 10:53 PM PDT

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த தொடரில் கேப்டன் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. வீராட் கோஹ்லி அணித் தலைவராக பணிபுரிந்து வருகிறார். அவர் ஆடுகளத்தில் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார். உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தனது ஆக்ரோஷ தன்மையை வெளிப்படுத்துகிறார். டோனிக்கு நேர் மாற்றமாக உள்ளார். அவர் எப்போதுமே பதட்டமின்றி நிதானத்துடன் இருப்பார். கோஹ்லி தனது ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் அசாருதீன் சமீபத்தில் [...]

இலங்கை வரும் இளவரசர் சாள்ஸ் – கல்லறைகளை அகற்றுவதில் விவாதம்

Posted: 03 Aug 2013 10:49 PM PDT

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகாமையில் அமைந்துள்ள பிரித்தானிய படை வீரரின் கல்லறையை அகற்றுவது தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்று வருவதாக கலாச்சார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். 1815ஆம் ஆண்டு அம்மை நோய் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த பிரித்தானிய படை வீரர்களின் 147 உடல்கள் இந்த மயான பூமியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த மயான பூமி பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டிற்காக இலங்கை வரும் [...]

தயிர், மோர் யாரெல்லாம் அருந்தலாம்?

Posted: 03 Aug 2013 10:37 PM PDT

தமிழர்களின் உணவில் இரண்டறக் கலந்தது பாலில் இருந்து கிடைக்கும் மோர் மற்றும் தயிர். தயிர் உடலுக்குச் சூடு என்பார்கள். அதே தயிரை நீர் மோராக்கினால் உடலுக்குக் குளிர்ச்சி. இப்படிப் புரியாத புதிராக உள்ள தயிர் மோரை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதில் உண்டாகும் சில சந்தேகங்கள். தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா? யாரெல்லாம் சேர்த்துக்கொள்ளக் கூடாது? புரதம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி 12, ரிபோஃப்ளோவின் எனப்படும் வைட்டமின் பி2, கொழுப்புச் சத்து எனப் பல சத்துகள் [...]

“காதுகளின் மூலம் காணலாம்” பார்வையில்லாதவர்களுக்கு ஓர் நற்செய்தி

Posted: 03 Aug 2013 10:35 PM PDT

கண் பார்வையில்லாதவர்கள் காட்சிகளை காணும் வகையில் அதி நவீன கருவியை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். கண் பார்வையற்றவர்கள் காட்சிகளை காணும் வகையில் நவீன கருவிகளை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். இவர்களின் ஆராய்ச்சியின் பலனாக, காதில் பொருத்தப்படும் விசேஷ கருவியின் உதவியுடன் காட்சிகளை காணக்கூடிய வகையில், புதிய கருவியை உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் அமிர் அமேதி கூறுகையில், கண் பார்வையற்றோரின் காதுகளில் பொருத்தப்படும் இந்த கருவி, காட்சிகளின் ஒளி [...]

லூமியா 4ஜி விரைவில் அறிமுகம் (வீடியோ இணைப்பு)

Posted: 03 Aug 2013 10:30 PM PDT

பிரபல நிறுவனமான நோக்கியா, தன் லூமியா வரிசையில் புதிதாக 4ஜி அலைவரிசை கைபேசி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. Lumia 625 என அழைக்கப்படும் இந்த கைபேசியில், 4.7 அங்குல Super Sensitive LCD Screen தரப்பட்டுள்ளது. இதன் மேல் பாகத்தினை ஐந்து வண்ணங்களிலான ஷெல்கள் கொண்டு, விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். 5 MB திறன் கொண்ட கமெரா Auto Focus திறனுடனும், LED Flash கொண்டும் இயங்குகிறது. 1.2 GigaHertz வேகத்தில் இயங்கும் Dual Core Processor இதனை [...]

பிரிவினை வாதத்திற்கு இடமளிக்க வேண்டாம்: வவுனியாவில் ஜனாதிபதி

Posted: 03 Aug 2013 09:55 PM PDT

mahindarajapakshe

mahindarajapaksheஇலங்கையின் வட பகுதியில் போருக்குப் பின் ஆரம்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுத் தொழிற்சாலை ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்திருக்கின்றார்.

வவுனியாவில் 150 மில்லியன் டொலர் செலவில் இந்த ஆடைத்தொழிற்சாலை இத்தாலி நாட்டு நிறுவனம் ஒன்றின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

வவுனியா நகரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் நிறுவப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் ஆரம்பத்தில் 250 யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிட்டியிருக்கின்றது.

நாளடைவில் இங்கு மூவாயிரம் பேர் வரையிலான இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வட பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்திச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

அபிவிருத்தியின் மூலம் நிலையான சமாதானத்தை அடைய முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன, மத, குல பேதங்களைக் கைவிட்டு அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்றதுடன், பிரிவினை வாதத்திற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்கனவே பல மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அபிவிருத்திப் பணிகளுக்கென மேலும் நிதி செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வைபவத்தில் இலங்கைக்கான இத்தாலிய நாட்டு தூதுவர், அமைச்சர்களான டகளஸ் தேவானந்தா, ரிசாட் பதியுதீன் மற்றும் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, திஸ்ஸ கரலியத்த மற்றும் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மேலும் 20 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

Posted: 03 Aug 2013 09:48 PM PDT

சர்வதேச கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 20 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (03) கைது செய்துள்ளனர். அத்துடன், மீனவர்கள் பயணித்த 5 படகுகளையும் கடற்படையினர் தம்வசப்படுத்தியுள்ளனர். இலங்கையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இலங்கை தூதுவரை அழைத்து எச்சரிக்கை விடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோன் சிங்கிற்கு கடிதம் எழுதி ஒரு நாளில் மற்றுமொரு தொகை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய மீனவர்கள் [...]

தாமினியை ஒரு போதும் கைவிட மாட்டேன்: சேரன் மகளின் காதலர்

Posted: 03 Aug 2013 09:29 PM PDT

thamini

thaminiஎன் வீடு தேடி வந்த தாமினியை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன் என்று இயக்குனர் சேரன் மகளின் காதலர் கூறியுள்ளார். இயக்குனர் சேரனின் இரண்டாவது மகள் தாமினி. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மின்னணு ஊடகம் பட்டப்படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருக்கும், சென்னை சூளைமேட்டை சேர்ந்த லட்சுமி நாராயணனின் மகன் சந்துருவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த காதலுக்கு சேரன் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தாமினி வீட்டை விட்டு வெளியேறி காதலர் வீட்டில் அடைக்கலம் ஆனார். பின்பு தாமினியும், அவருடைய காதலர் சந்துருவும் சென்னை ஆயிரம் விளக்கு பொலிஸ் நிலையத்துக்கு பாதுகாப்பு கேட்டு சென்றனர்.

அப்போது சந்துரு ஊடகத்தினருக்கு அளித்த பேட்டியில், நானும், தாமினியும் கடந்த 2 வருடங்களாக உயிருக்கு உயிராக காதலித்து வருகிறோம்.

எங்கள் காதல் விவகாரம் சேரனுக்கு தெரியவந்ததும் என்னை கூப்பிட்டு மிரட்டினார். இனிமேல் என் மகளை நீ பார்க்கக் கூடாது. அவளை பின்தொடரக் கூடாது என்று கூறினார்.

அவருடைய மிரட்டலுக்கு நான் பயப்படவில்லை. என் காதலில் உறுதியாக இருந்தேன். அதேபோல் தாமினியும் உறுதியாக இருந்தாள். இந்த சூழ்நிலையில் சேரன் வீட்டில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

இந்நிலையில் ஒரு நாள் சேரன் அழைத்ததாக ஒருவர் என்னை அழைத்து சென்று தாமினியை மறந்து விடு. இல்லையென்றால் ரோட்டில் நீ போய்க்கொண்டிருக்கும்போதே காரை வைத்து உன்னை தட்டி விடுவோம்.பின்பு நீ ஆசைப்பட்டபடி சினிமாவுக்கும் வர முடியாது என்று மிரட்டினார்.

இந்த சமயத்தில் சேரனும், இன்னும் சிலரும் அங்கு வந்து இவனிடம் என்ன பேச்சு என்று கேட்டு என்னை அடித்து உதைத்தார். உடனே நான் ஓட ஆரம்பித்தேன். என்னை விரட்டி விரட்டி அடிக்க ஆரம்பித்தார்கள்.

இந்த சம்பவத்துக்குப் பின்பு என் அம்மாவும், அக்காவும் பதற்றம் அடைந்தார்கள். நமக்கு இது ஒத்து வராது என்று என்னை கோவையில் உள்ள கட்டிட காண்டிராக்டு தொழில் செய்யும் என் மாமா வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். நான் அங்கு மாமா சொன்ன வேலைகளை செய்து கொண்டிருந்தேன்.

இந்நிலையில் தாமினி அவள் வீட்டை விட்டு என்னுடைய வீட்டுக்கு வந்துவிட்டதாக சென்னையில் இருந்து தகவல் வந்தது. எப்போது என் வீடு தேடி வந்தாளோ அப்போதே அவள் எனக்குரியவளாகி விட்டாள்.

நானும், தாமினியும் எங்கள் காதலில் உறுதியாக இருக்கிறோம் என்றும் தாமினியை ஒருபோதும் நான் கைவிட மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொள்ளையனை கண்டுபிடிப்பவர்களுக்கு சன்மானம் 10,000 கனேடிய டொலர்கள்

Posted: 03 Aug 2013 09:16 PM PDT

richard_002

richard_002வங்கிகளில் தொடர்ச்சியாக கொள்ளையடித்து வரும் கூரே றிச்சார்ட்சன் என்பவரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என கனடா வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கடந்த 24ம் திகதிக்கு பின்பு, ஏறத்தாழ 11 வங்கிகள் நடந்த கொள்ளை சம்பவத்துக்கு இவர் தான் காரணம் என டொறண்டோ பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இவற்றில் 9 டொறண்டோவிலும், 2 வின்னிபெக் நகரிலும் நடந்துள்ளது.

எனவே இவரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 10,000 கனேடிய டொலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என கனடா வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™