மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- 5 ஆண்டுகளுக்கு பின் பெங்களூர் குண்டு வெடிப்பில் கேரள தீவிரவாதி கைது
- ராஜினாமா செய்யக் கோரி கிரண்குமார் ரெட்டிக்கு எதிராக காங். எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி
- பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு அகாலி தளம் ஆதரவு
- தெலுங்கானாவை பிரிக்க எதிர்ப்பு: மாரடைப்பு, தற்கொலையால் மேலும் 9 பேர் பலி
- தெலுங்கானா போராட்டம்: ஆந்திராவில், நடுவழியில் 10 ஆயிரம் லாரிகள் நிறுத்தம்
- சந்திரசேகர் ராவுக்கு எதிர்ப்பு: ஆந்திரா ஊழியர்கள் தர்ணா போராட்டம்
- ஆந்திராவில் ‘பந்த்’ நீடிப்பு: 5–வது நாளாக பஸ்கள் ஓடவில்லை
- சோலார் பேனல் மோசடி: ஷாலுமேனனுக்கு 17–ந்தேதி வரை காவல் நீடிப்பு
- அரசின் புதிய விதிமுறைகளால் பாலியல் குற்றவாளிகள் தங்களது வேலை, சலுகைகளை இழக்க வாய்ப்பு
- தலைமை தேர்தல் கமிஷனருடன் அன்னா ஹசாரே சந்திப்பு
- 7 லட்சம் டிக்கெட்டுகளின் விலையைக் குறைத்துள்ள ஜெட் ஏர்வேஸ்
- மங்களூரில் தொழில் அதிபரை சுட்டுக் கொல்ல முயற்சி
- போலீசாரால் தேடப்பட்ட ‘சிமி’ தீவிரவாதி 13 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் கைது
- உள்ளாடைக்குள் மறைத்து ரூ.2½ கோடி வைர நகைகள் கடத்தல்: ஜவுளி நிறுவன அதிபர் மனைவி பிடிபட்டார்
- மந்திரி சிரஞ்சீவியை காணவில்லை: சுவரொட்டியால் பரபரப்பு
- அகங்காரம் கொண்ட அரசியல்வாதிகளாலேயே நாடு முழுவதும் ஊழல் பரவி இருக்கிறது: அத்வானி
- பால் உற்பத்தியை மேம்படுத்த குஜராத் உதவியை நாடும் உகாண்டா
- தனித்தெலுங்கானா மசோதாவை வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது நிறைவேற்ற வேண்டும்: சுஷ்மா
- கொழிஞ்சாம்பாறை அருகே மின்சாரம் தாக்கி 2 வயது சிறுவன் பலி: அதிர்ச்சியில் உறவினர் சாவு
- நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: பிரதமர் வேண்டுகோள்
| 5 ஆண்டுகளுக்கு பின் பெங்களூர் குண்டு வெடிப்பில் கேரள தீவிரவாதி கைது Posted: 03 Aug 2013 11:12 PM PDT கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆலுவா என்ற இடத்தைச் சேர்ந்தவர் அப்துல் சத்தார். இவன் தடை செய்யப்பட்ட 'சிமி' இயக்கத்தைச் சேர்ந்தவன். 2007–ம் ஆண்டு இவன் கேரளாவில் வகாமன் என்ற இடத்தில் முகாம் அமைத்து இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்து வந்தான். போலீஸ் தேடுதல் வேட்டையின் போது அவன் தப்பி ஓடி துபாயில் தலைமறைவாகி இருந்தான். அதற்கு பிறகு அவன் இந்தியா வந்தானா? |
| ராஜினாமா செய்யக் கோரி கிரண்குமார் ரெட்டிக்கு எதிராக காங். எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி Posted: 03 Aug 2013 10:58 PM PDT தெலுங்கானா பிரிவினையை எதிர்த்து ஆந்திராவின் ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரா பகுதிகளில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது. தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரா பகுதியைச் சேர்ந்த 75 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், 5 மந்திரிகளும் ராஜினாமா செய்தனர். 10–க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்துள்ளனர். பதவி விலகல் முடிவை திரும்பபெறுமாறு அவர்களுக்கு கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஐதராபாத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி நேற்று கூட்டினார். கூட்டத்தில் மேலிட |
| பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு அகாலி தளம் ஆதரவு Posted: 03 Aug 2013 10:38 PM PDT பாரதீய ஜனதா தேர்தல் பிரசார குழு தலைவராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவரை பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்க பாரதீய ஜனதா திட்டமிட்டுள்ளது. அந்த கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங், மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் உறுதியாக இருக்கிறார் |
| தெலுங்கானாவை பிரிக்க எதிர்ப்பு: மாரடைப்பு, தற்கொலையால் மேலும் 9 பேர் பலி Posted: 03 Aug 2013 10:31 PM PDT ஆந்திரா பிரிக்கப்பட்டதையடுத்து சிலர் மாரடைப் பாலும் சிலர் தற்கொலை செய்தும் உயிரை விடுகிறார் கள். நேற்று ஒரே நாளில் மட்டும் மேலும் 9 பேர் பலியாகியுள்ளனர். கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏடிதா பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சீனு விஷம் குடித்து பலியானார். கேசபதாகு பாளையம் பகுதியை சேர்ந்த சாமுவேல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நரசாபுரம் பகுதியை சேர்ந்த ஆஞ்சனேயலு என்பவரும் |
| தெலுங்கானா போராட்டம்: ஆந்திராவில், நடுவழியில் 10 ஆயிரம் லாரிகள் நிறுத்தம் Posted: 03 Aug 2013 10:28 PM PDT ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்படுகிறது. இதற்கு தெலுங்கானா பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம் ஆந்திரா பகுதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தெலுங்கானா மாநில பிரிப்பு முடிவு அறிவிப்பு வெளியான கடந்த 30–ந்தேதி முதல் 6 நாட்களாக ஆந்திராவில் பந்த், வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் சீமாந்திரா என அழைக்கப்படும் ஆந்திர மாநில பகுதி ஸ்தம்பித்து போய் உள்ளது. நெல்லூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட முக்கிய தேசிய |
| சந்திரசேகர் ராவுக்கு எதிர்ப்பு: ஆந்திரா ஊழியர்கள் தர்ணா போராட்டம் Posted: 03 Aug 2013 10:22 PM PDT ஐதராபாத்தில் வேலை பார்க்கும் ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதி ஊழியர்கள் ஐதராபாத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராயல சீமா மற்றும் ஆந்திரா பகுதி அரசு ஊழியர்கள் பேரணி மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத் எல் பிளாக் பகுதியில் தொடங்கிய பேரணிக்கு |
| ஆந்திராவில் ‘பந்த்’ நீடிப்பு: 5–வது நாளாக பஸ்கள் ஓடவில்லை Posted: 03 Aug 2013 10:14 PM PDT தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிப்பதை எதிர்த்து ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இன்று 5–வது நாளாக பந்த் நீடிக்கிறது. எந்த அரசியல் கட்சியின் தூண்டுதலும் இன்றி பொதுமக்கள் தாமாகவே முன்வந்து போராடுகிறார்கள். போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் இன்று 5–வது நாளாக பஸ்கள் ஓடவில்லை. வங்கிகள், கடைகள், தொழிற்சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. ஏ.டி.எம்.களில் பணமும் இல்லை. ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. |
| சோலார் பேனல் மோசடி: ஷாலுமேனனுக்கு 17–ந்தேதி வரை காவல் நீடிப்பு Posted: 03 Aug 2013 09:19 PM PDT கேரளாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவி பொருத்தி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி நடந்தது. இதுதொடர்பாக பிஜு ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கேரள டி.வி. நடிகை ஷாலுமேனனும் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். |
| அரசின் புதிய விதிமுறைகளால் பாலியல் குற்றவாளிகள் தங்களது வேலை, சலுகைகளை இழக்க வாய்ப்பு Posted: 03 Aug 2013 08:42 PM PDT ஆண், பெண் இணைந்து பணிபுரியும் அலுவலகங்களில் நடைபெறும் பாலியல் தொந்தரவுகளுக்கு முடிவு காணும் விதமாக இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு வாரியம் புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. அதன்படி, சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட புகார் குழு ஒன்று இத்தகைய பிரச்சினைகளை விசாரிக்கும் அதிகாரம் பெறுகின்றது. பணியிடத்தில் பாலியல் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு ஒரு வருட ஊதியத்தில் மாதந்தோறும் 10 சதவிகித வெட்டு, பதவி உயர்வு உள்ளிட்ட இதர சலுகைகள் பறிக்கப்படுதல், வேலை நீக்கம் போன்ற தண்டனைகள் அளிக்கப்படுவதற்கு இந்த விதிமுறைகள் இடமளிக்கின்றன. |
| தலைமை தேர்தல் கமிஷனருடன் அன்னா ஹசாரே சந்திப்பு Posted: 03 Aug 2013 08:26 PM PDT தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ். சம்பத்தை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நேற்று சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள அவர் வலியுறுத்தினார். பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத்தை, டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது தேர்தல் சீர்திருத்தங்கள் செய்ய வலியுறுத்தினார். அதன் அவசியம் குறித்தும் விளக்கினார். இது தொடர்பாக அன்னா ஹசாரே நிருபர்களிடம் பேசுகையில், "தலைமை |
| 7 லட்சம் டிக்கெட்டுகளின் விலையைக் குறைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் Posted: 03 Aug 2013 05:36 PM PDT பொதுவாக அக்டோபர் முதல் வாரம் வரை விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்பதால் இந்த சமயத்தில் விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையில் தள்ளுபடி செய்வதுண்டு. |
| மங்களூரில் தொழில் அதிபரை சுட்டுக் கொல்ல முயற்சி Posted: 03 Aug 2013 05:19 PM PDT மங்களூர் பர்க்கி போலீஸ் எல்லைக்குட்பட்ட அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயேந்திர பட் (வயது 42). தொழில் அதிபரான இவருக்கு சொந்தமான மில் ஒன்று மங்களூர் பள்ளால்பாக் பகுதியில் இருக்கிறது. |
| போலீசாரால் தேடப்பட்ட ‘சிமி’ தீவிரவாதி 13 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் கைது Posted: 03 Aug 2013 04:58 PM PDT இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி) என்ற தீவிரவாத அமைப்பு ரகசியமாக செயல்பட்டு வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த வாகாமண் என்ற இடத்தில் முகாம் இட்டனர். |
| உள்ளாடைக்குள் மறைத்து ரூ.2½ கோடி வைர நகைகள் கடத்தல்: ஜவுளி நிறுவன அதிபர் மனைவி பிடிபட்டார் Posted: 03 Aug 2013 03:20 PM PDT சிங்கப்பூரில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் வருவாய் புலனாய்வு இயக்குரக |
| மந்திரி சிரஞ்சீவியை காணவில்லை: சுவரொட்டியால் பரபரப்பு Posted: 03 Aug 2013 01:03 PM PDT ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் விவகாரத்தில், ஆந்திராவை சேர்ந்த மத்திய மந்திரி சிரஞ்சீவி வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. |
| அகங்காரம் கொண்ட அரசியல்வாதிகளாலேயே நாடு முழுவதும் ஊழல் பரவி இருக்கிறது: அத்வானி Posted: 03 Aug 2013 07:47 AM PDT அகங்காரம் கொண்ட அரசியல்வாதிகளாலேயே நாடு முழுவதும் ஊழல் பரவி இருக்கிறது என்று பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கண்டனம் வெளியிட்டுள்ளார். புனேயில் நடைபெற்ற விழா ஒன்றில் ஊழல் குறித்து பேசிய அத்வானி, "நாடு சந்தித்திருக்கும் மிகப்பெரிய பிரச்னை ஊழல்" என்றும், "அது சமூகத்தை |
| பால் உற்பத்தியை மேம்படுத்த குஜராத் உதவியை நாடும் உகாண்டா Posted: 03 Aug 2013 07:12 AM PDT குஜராத் மாநிலத்தில் ஆனந்த் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் மற்ற மாநிலங்களின் பால் உற்பத்தித் திட்டத்திற்கு சிறந்த முன்மாதிரியாக விளங்கி வருகின்றது. இதன் விளைவாக சமீபத்தில், உகாண்டா நாட்டிலிருந்து உயர்மட்ட அதிகாரிகள் குழு ஒன்று இந்தப் பண்ணையின் தலைமை அலுவலகம் செயல்பட்டுவரும் ஆனந்த் என்னும் |
| தனித்தெலுங்கானா மசோதாவை வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது நிறைவேற்ற வேண்டும்: சுஷ்மா Posted: 03 Aug 2013 04:22 AM PDT பாராளுமன்ற கூட்டத் தொடரின் போதே தனித்தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 5ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் உணவு பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான புதிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. |
| கொழிஞ்சாம்பாறை அருகே மின்சாரம் தாக்கி 2 வயது சிறுவன் பலி: அதிர்ச்சியில் உறவினர் சாவு Posted: 03 Aug 2013 04:19 AM PDT கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வெம்பலூர் சிட்டிபலம்பு பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவரது மகன் சூர்யா (வயது 2). இவனது அத்தை சாரதா (65). சம்பவத்தன்று சூர்யாவின் தந்தை வினோத் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார் |
| நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: பிரதமர் வேண்டுகோள் Posted: 03 Aug 2013 03:55 AM PDT பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 5ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் உணவு பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான புதிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சென்ற கூட்டத்தொடர் போல் பாராளுமன்ற செயல்பாடுகளை எதிர்கட்சிகள் முடக்கி விடாமல் இந்த கூட்டத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை பாராளுமன்ற சபாநாயகர் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |