Tamil Star |
- பொதுநலவாய மாநாட்டு ஏற்பாட்டிற்கு மேலும் வெளிநாட்டுப்பிரதிநிதிகள்!!
- ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை இன்று
- வட மாகாணசபையில் போர்க் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு! சம்பிக்க ரணவக்க
- இலங்கையிலிருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும் இடமில்லை
- நைஜீரியாவில் 44 கிராமத்தினர் கழுத்தறுத்து படுகொலை: தீவிரவாதிகள் அட்டகாசம்
- பாழடைந்த கட்டிடத்தில் நடந்தது என்ன? கற்பழிக்கப்பட்ட பெண் பரபரப்பு வாக்குமூலம்
- மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது: சோனியா
- கற்பழிப்பு விவகாரம்: சிங்கப்பூர் வாழ் இந்தியருக்கு 12 ஆண்டுகள் சிறை
- ரோகன் மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் உதவித் தலைவர் ஆகின்றார்
- வெங்காயம் ஏற்றிச்சென்ற சரக்கு லாரியை வழிமறித்து திருடிய திருடர்கள்
| பொதுநலவாய மாநாட்டு ஏற்பாட்டிற்கு மேலும் வெளிநாட்டுப்பிரதிநிதிகள்!! Posted: 24 Aug 2013 08:20 PM PDT எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பதறாக மேலும் பல நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைவந்துள்ளனர்.சுமார் 14 நாடுகளைச் சேர்ந்த 80 பிரதிநிதிகள் இலங்கை வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அவர்கள் இலங்கையில் தங்கி இருந்து மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மற்றும் தமது நாட்டு அரச தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வர் என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்திய பிரதமரது வருகை தொடர்பாக இழுபறி நிலை தொடர்வதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. |
| ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை இன்று Posted: 24 Aug 2013 08:17 PM PDT 2013ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை இன்று (25) இடம்பெறவுள்ளது. இன்றைய பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 329 725 மாணவர்கள் தோற்றுகின்றனர். பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் 9 மணிக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். |
| வட மாகாணசபையில் போர்க் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு! சம்பிக்க ரணவக்க Posted: 24 Aug 2013 08:10 PM PDT வட மாகாணசபையில் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வட மாகாணசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியதன் பின்னர் இவ்வாறு, ஆணைக்குழுவொன்று நிறுப்பட உள்ளது. போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக வட மாகாணசபையின் கீழ் இந்த ஆணைக்குழு நிறுவப்படும். இதன் அறிக்கை எதிர்வரும் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையிலிருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும் இடமில்லை Posted: 24 Aug 2013 08:06 PM PDT இலங்கையிலிருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும் இடமில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை. பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு ஒன்று யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தவிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். பயங்கரவாதம் தலைதூக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை படையினர் எடுப்பார்கள். யாழ்ப்பாணத்தில் 99 வீதமானவர்கள் தமிழர்களே வாழ்ந்து வருகின்றனர். படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். எனவே, […] |
| நைஜீரியாவில் 44 கிராமத்தினர் கழுத்தறுத்து படுகொலை: தீவிரவாதிகள் அட்டகாசம் Posted: 24 Aug 2013 08:03 PM PDT வடகிழக்கு நைஜீரியாவின் கிராமத்துக்குள் புகுந்த போகோ ஹரம் தீவிரவாதிகள் கிராமத்தினர் 44 பேரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கூறிவரும் போகோ ஹரம் தீவிரவாதிகள், அவ்வபோது கிராமங்களுக்குள் புகுந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் பல இருப்பதாகவும், 2010ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1,700 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. […] |
| பாழடைந்த கட்டிடத்தில் நடந்தது என்ன? கற்பழிக்கப்பட்ட பெண் பரபரப்பு வாக்குமூலம் Posted: 24 Aug 2013 08:01 PM PDT மும்பையில் கடந்த 22-ம் தேதி இரவு புகைப்பட பெண் பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் குற்றவாளி சந்த் ஷாயிக்கை பொலிஸார் கைது செய்தனர். அதன்பின்னர் விஜய் ஜாதவ் என்ற குற்றவாளி நேற்று காலையில் பிடிபட்டான். அவர்கள் இருவரும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், பொலிஸாரால் தேடப்படும் நபர்களில் 3-வது நபரான சிராஜ் ரஹ்மான் நேற்று […] |
| மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது: சோனியா Posted: 24 Aug 2013 07:58 PM PDT மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி கூறினார். மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் துறையின் தேசிய ஊடக மைய கட்டட திறப்பு விழா டில்லியில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய பிறகு, செய்தியாளர்களுடன் கலந்துரையாடுகையில் சோனியா காந்தி கூறியது: மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதன் முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்யும். மக்களவைக்கு முன்கூட்டியே […] |
| கற்பழிப்பு விவகாரம்: சிங்கப்பூர் வாழ் இந்தியருக்கு 12 ஆண்டுகள் சிறை Posted: 24 Aug 2013 07:56 PM PDT 16 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிங்கப்பூர்வாழ் இந்தியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படி கொடுக்கவும் சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர் சிவகுமார் செல்வராஜா (41). இவர் விமான தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2010 ஆம் ஜூலை மாதத்தில் புறநகர்ப்பகுதியில் குடியிருப்புக்கு அருகில் இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவகுமார், தன்னை பொலிஸ் என […] |
| ரோகன் மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் உதவித் தலைவர் ஆகின்றார் Posted: 24 Aug 2013 07:54 PM PDT பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் தொழில்நுட்ப நிறுவனம் இன்போசிஸ் ஆகும். 1981ஆம் ஆண்டில் தோன்றிய இந்த நிறுவனம் நன்கு செயல்பட்டு வந்த நிலையில் உலகளவில் தோன்றிய பொருளாதார சறுக்கல்கள் இந்த நிறுவனத்தையும் பாதித்தன. இந்தப் பிரச்சினையை சரி செய்வதற்காக ஓய்வு பெற்றிருந்த நிறுவனர் நாராயணமூர்த்தி, இந்த வருடம் ஜூன் மாதம் மீண்டும் நிறுவனத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவரது மகன் ரோகன் மூர்த்தி இந்நிறுவனத்தின் துணை நிர்வாகியாக ஏற்கனவே பணியில் இருந்து வருகின்றார். தற்போது இவரது […] |
| வெங்காயம் ஏற்றிச்சென்ற சரக்கு லாரியை வழிமறித்து திருடிய திருடர்கள் Posted: 24 Aug 2013 07:51 PM PDT உயர்ந்துவரும் வெங்காயத்தின் விலை, தற்போது அதனை நெடுஞ்சாலைத் திருடர்களின் விருப்பப் பொருளாக மாற்றியுள்ளது போலும். கடந்த 20ஆம் தேதியன்று, ஜெய்ப்பூர்-டெல்லி செல்லும் நெடுஞ்சாலையில் ஷாஹ்புரா கிராமத்தின் அருகில் வெங்காயம் ஏற்றிச்சென்ற லாரி ஒன்றினை மூன்று ஆயுதமேந்திய திருடர்கள் கடத்திச் சென்றனர். செய்தியறிந்த காவல்துறை, உடனடியாக விரைந்து செயல்பட்டு அந்த வாகனத்தை மீட்டது. ஐந்து நாட்களுக்குள்ளாக, அதேபோன்ற சம்பவம் மீண்டும் நடந்தேறியுள்ளது. லூதியானாவிற்கு வெங்காயம் அனுப்பப்பட்ட சரக்கு லாரி ஒன்று வெள்ளிக்கிழமை அன்று பிகானிரின் நோகா பகுதியை அடையும் […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |