மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஆந்திராவை பிரிக்க எதிர்ப்பு: ஜெகன்மோகன் ரெட்டி சிறையில் உண்ணாவிரதம்
- மும்பை பெண் நிருபர் கற்பழிப்பு வழக்கில் 4-வது குற்றவாளி பிடிபட்டான்
- தடையை மீறி யாத்திரை : விசுவ இந்து பரிஷத் தலைவர்கள் கைது
- வெங்காயம் ஏற்றிச்சென்ற சரக்கு லாரியை வழிமறித்து திருடிய திருடர்கள்
- ரோகன் மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் உதவித் தலைவர் ஆகின்றார்
- எனது கருத்துக்கள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்: மார்க்கண்டேய கட்ஜு அறிக்கை
- சோனியா காந்தியை எதிர்த்து ரே பரேலி தொகுதியில் முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் போட்டி ?
- டெல்லியில் 17 வயது வாலிபரை அடித்துக் கொன்ற 4 நண்பர்கள் கைது
- பாழடைந்த கட்டிடத்தில் நடந்தது என்ன ? கற்பழிக்கப்பட்ட மும்பை பெண் ‘போட்டோகிராபர்’ பரபரப்பு வாக்குமூலம்
- இந்திய எல்லையில் இன்று இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அத்துமீறல்: துப்பாக்கிச் சண்டை நீடிக்கிறது
- தீவிரவாதி துண்டாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் இதயத்தில் 'பேஸ்மேக்கர்' பொருத்தப்பட்டது
- பெண் பத்திரிகையாளர் கற்பழிப்பு வழக்கில் 3-வது குற்றவாளி கைது
- இடைத்தேர்தல் வெற்றி: கர்நாடக முதல்வருக்கு சோனியா காந்தி வாழ்த்து
- தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ஜெகன் மோகன் நாளை முதல் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம்
- மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி
- சுங்கச்சாவடியில் பெண் ஊழியரை மிரட்டிய சிவசேனா எம்.எல்.ஏ. ராஜினாமா
- இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்
- கற்பழிப்பு வழக்கில் சிங்கப்பூர் இந்தியருக்கு 12 ஆண்டுகள் சிறை-12 பிரம்படி
- ஆந்திராவில் 5.5 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை
- விசாகப்பட்டினம் பெட்ரோலியக் கிடங்கு தீவிபத்தில் 4 பேர் பலி
| ஆந்திராவை பிரிக்க எதிர்ப்பு: ஜெகன்மோகன் ரெட்டி சிறையில் உண்ணாவிரதம் Posted: 24 Aug 2013 10:34 PM PDT ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயல சீமா பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தாயார் விஜயலட்சுமி குண்டூரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள். 5–வது நாளாக உண்ணாவிரதம் நீடித்த நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது |
| மும்பை பெண் நிருபர் கற்பழிப்பு வழக்கில் 4-வது குற்றவாளி பிடிபட்டான் Posted: 24 Aug 2013 09:35 PM PDT மும்பையில் கடந்த வியாழன் அன்று மாலை 22 வயதான பெண் புகைப்பட பத்திரிகையாளர் தனது ஆண் நண்பருடன் செயல்படாமல் இருந்த சக்தி மில்லை போட்டோ எடுக்க சென்றார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை தூக்கி சென்று ஆண் நண்பரை கட்டிப்போட்டிவிட்டு பெண் போட்டோகிராபரை கற்பழித்தது. கற்பழிப்பதற்கு முன்பு போட்டோகிராபரின் நெற்றியில் அந்த கும்பல் பீர் பாட்டிலை அடித்து உடைத்து இருக்கிறது. இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகின்றது. |
| தடையை மீறி யாத்திரை : விசுவ இந்து பரிஷத் தலைவர்கள் கைது Posted: 24 Aug 2013 09:30 PM PDT அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் 6 மாவட்டங்கள் வழியாக 252 கி.மீ. தூரம் செல்லும் இந்த யாத்திரைக்கு 84–கோசி பரிக்கிரமா யாத்திரை என பெயரிடப்பட்டுள்ளது. இன்று முதல் செப்டம்பர் 13–ந்தேதி வரை யாத்திரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த யாத்திரைக்கு உத்தரபிரதேச அரசும், கோர்ட்டும் தடை விதித்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் தடை விதிக்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்தது. |
| வெங்காயம் ஏற்றிச்சென்ற சரக்கு லாரியை வழிமறித்து திருடிய திருடர்கள் Posted: 24 Aug 2013 05:19 PM PDT உயர்ந்துவரும் வெங்காயத்தின் விலை, தற்போது அதனை நெடுஞ்சாலைத் திருடர்களின் விருப்பப் பொருளாக மாற்றியுள்ளது போலும். கடந்த 20ஆம் தேதியன்று, ஜெய்ப்பூர்-டெல்லி செல்லும் நெடுஞ்சாலையில் ஷாஹ்புரா கிராமத்தின் அருகில் வெங்காயம் ஏற்றிச்சென்ற லாரி ஒன்றினை மூன்று ஆயுதமேந்திய திருடர்கள் கடத்திச் சென்றனர். செய்தியறிந்த காவல்துறை, உடனடியாக விரைந்து செயல்பட்டு அந்த வாகனத்தை மீட்டது. |
| ரோகன் மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் உதவித் தலைவர் ஆகின்றார் Posted: 24 Aug 2013 04:58 PM PDT பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் தொழில்நுட்ப நிறுவனம் இன்போசிஸ் ஆகும். 1981ஆம் ஆண்டில் தோன்றிய இந்த நிறுவனம் நன்கு செயல்பட்டு வந்த நிலையில் உலகளவில் தோன்றிய பொருளாதார சறுக்கல்கள் இந்த நிறுவனத்தையும் பாதித்தன. இந்தப் பிரச்சினையை சரி செய்வதற்காக ஓய்வு பெற்றிருந்த நிறுவனர் நாராயணமூர்த்தி, இந்த வருடம் ஜூன் மாதம் மீண்டும் நிறுவனத்தின் |
| Posted: 24 Aug 2013 04:47 PM PDT கருத்து கூறினால் வில்லங்கம் - வாயை திறந்தால் சர்ச்சை என்று வம்பில் மாட்டிக் கொள்பவர். முன்னாள் சுப்ரிம் கோர்ட் நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு. கடந்த டிசம்பர் மாதம் ஒரு விழாவில் பேசிய இவர். 90 சதவிகிதம் இந்தியர்கள் இன்னும் முட்டாள்களாகவே உள்ளனர் என்று கூறியிருந்தார். |
| சோனியா காந்தியை எதிர்த்து ரே பரேலி தொகுதியில் முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் போட்டி ? Posted: 24 Aug 2013 03:22 PM PDT எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரே பரேலி தொகுதியில் போட்டியிடக்கூடும் என தெரியவந்துள்ளது. |
| டெல்லியில் 17 வயது வாலிபரை அடித்துக் கொன்ற 4 நண்பர்கள் கைது Posted: 24 Aug 2013 02:59 PM PDT புதுடெல்லியில் உள்ள மயூர் விகார் பகுதியைச் சேர்ந்தவன் ரவி (17). கடந்த வியாழக்கிழமை நண்பர்களை சந்திப்பதற்காக வெளியே சென்ற இவன் மறுநாள் காலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் தவித்துப்போன பெற்றோர் தனது மகனை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர். |
| Posted: 24 Aug 2013 11:31 AM PDT மும்பையில் நேற்றுமுன்தினம் இரவு புகைப்பட பெண் பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் குற்றவாளி சந்த் ஷாயிக்கை போலீசார் கைது செய்தனர். |
| இந்திய எல்லையில் இன்று இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அத்துமீறல்: துப்பாக்கிச் சண்டை நீடிக்கிறது Posted: 24 Aug 2013 10:44 AM PDT போர் நிறுத்த உடன்பாட்டை மீறிய பாகிஸ்தான் ராணுவம், கடந்த 6-ம் தேதி பூஞ்ச் எல்லையில் 5 இந்திய வீரர்களை சுட்டுக்கொன்றது. அதன்பின்னர் தினமும் போர்நிறுத்த உடன்பாட்டை மீறும் பாகிஸ்தான் படையினரால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. தினசரி ஏதாவது ஒரு பகுதியில் துப்பாக்கி சண்டை நடக்கிறது. |
| தீவிரவாதி துண்டாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் இதயத்தில் 'பேஸ்மேக்கர்' பொருத்தப்பட்டது Posted: 24 Aug 2013 10:35 AM PDT இந்தியா முழுவதும் நடைபெற்ற சுமார் 40 தீவிரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட லஸ்கர்–இ–தொய்பா இயக்க தீவிரவாதி சையத் அப்துல் கரீம் என்ற துண்டா கடந்த 16–ந்தேதி இந்திய–நேபாள எல்லையில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த 20–ந்தேதி டெல்லி பாட்டியாலா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட துண்டாவுக்கு இன்று வரை போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். |
| பெண் பத்திரிகையாளர் கற்பழிப்பு வழக்கில் 3-வது குற்றவாளி கைது Posted: 24 Aug 2013 09:04 AM PDT மும்பையில் நேற்று முன்தினம் இரவு புகைப்பட பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் குற்றவாளி சந்த் ஷாயிக்கை போலீசார் நேற்று முன்தினம் இரவே கைது செய்தனர். அதன்பின்னர் விஜய் ஜாதவ் என்ற குற்றவாளி இன்று காலையில் பிடிபட்டான். |
| இடைத்தேர்தல் வெற்றி: கர்நாடக முதல்வருக்கு சோனியா காந்தி வாழ்த்து Posted: 24 Aug 2013 08:38 AM PDT கர்நாடக மாநிலத்தில் 2 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியால் மகிழ்ச்சியடைந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்கும், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார் |
| தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ஜெகன் மோகன் நாளை முதல் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் Posted: 24 Aug 2013 07:46 AM PDT சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையல், தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சஞ்சல்குடா மத்திய சிறையில் ஜெகன் மோகன் ரெட்டி நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளார். நாளை காலை உண்ணாவிரதத்தை தொடங்க உள்ளதாக |
| மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி Posted: 24 Aug 2013 07:25 AM PDT உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ், மரத்தில் மோதியதில் கைக்குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் பலியாகினர். பாரபங்கி மாவட்டதைச் சேர்ந்த ஷியாமாதேவி (45), ராஜ்வதி(30) ஆகியோர், உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம், முபாரக்பூர்வா |
| சுங்கச்சாவடியில் பெண் ஊழியரை மிரட்டிய சிவசேனா எம்.எல்.ஏ. ராஜினாமா Posted: 24 Aug 2013 06:31 AM PDT மகாராண்டி மாநிலம் நாசிக்கின் நிபாத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அனில் காடம். சிவசேனா கட்சியின் தலைவரான இவர், கடந்த 22-ம் தேதி தனது தொகுதிக்குட்பட்ட ஒரு சுங்கச்சாவடியை காரில் கடந்து சென்றார். அப்போது அங்குள்ள பெண் ஊழியர் ஒருவர் காரை மறித்து, சுங்கக் கட்டணம் 40 ரூபாய் கொடுக்கும்படி கூறியுள்ளார். இதனால் கடும் |
| இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் Posted: 24 Aug 2013 06:00 AM PDT போர் நிறுத்த உடன்பாட்டை மீறிய பாகிஸ்தான் ராணுவம், கடந்த 6-ம் தேதி பூஞ்ச் எல்லையில் 5 இந்திய வீரர்களை சுட்டுக்கொன்றது. அதன்பின்னர் தினமும் போர்நிறுத்த உடன்பாட்டை மீறும் பாகிஸ்தான் படையினரால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. தினசரி ஏதாவது ஒரு பகுதியில் துப்பாக்கி சண்டை நடக்கிறது. இன்றும் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. காலை 7 மணியளவில் |
| கற்பழிப்பு வழக்கில் சிங்கப்பூர் இந்தியருக்கு 12 ஆண்டுகள் சிறை-12 பிரம்படி Posted: 24 Aug 2013 05:33 AM PDT சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர் சிவக்குமார் செல்வராஜா (41). இவர் விமான தொழில்நுட்ப வல்லுனராக வேலை பார்க்கிறார். கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் புறநகரில் அமைந்துள்ள ஒரு வீட்டு |
| ஆந்திராவில் 5.5 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை Posted: 24 Aug 2013 05:31 AM PDT ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் 20 வயது பெண் ஒருவர், 5.5 கிலோ எடையுள்ள பெண் குழந்தையை பெற்றெடுத்தார். கிழக்கு கோதாவரி மாவட்டம் அனபார்தி அருகே உள்ள பேரா ராமச்சந்திர புரத்தைச் சேர்ந்தவர் கரிமி தேவி (வயது 20). நிறைமாத கர்ப்பிணியாக |
| விசாகப்பட்டினம் பெட்ரோலியக் கிடங்கு தீவிபத்தில் 4 பேர் பலி Posted: 24 Aug 2013 04:51 AM PDT ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் எண்ணெய் கிடங்கில் நேற்று மாலை மின் கசிவு காரணமாக பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியாற்றிய 40-க்கும் மேற்பட்டோர் தீயில் சிக்கிக்கொண்டனர். இதில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |