Tamil Star |
- சரும அழகை கெடுக்கும் செயல்கள்
- பிஸ்டோரியஸ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
- சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் ஜார்விஸ்
- சீனாவை விட இந்தியாவே சிறந்தது: லீ சாங் வீ
- கும்பகோணம் பள்ளி தீ விபத்து: சாட்சியம் அளிக்ககோரி 18 டாக்டர்களுக்கு சம்மன்
- காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்
- சர்வதேச சமூகத்திற்கு நல்ல முகத்தை காட்ட அரசாங்கம் முயற்சி
- இலங்கை பேசுவதனை குறைத்து செயலில் ஈடுபட வேண்டும் – ஐ.நா
- இந்தியாவுக்குள் 1,600 கோடி கள்ள நோட்டுகள் புழக்கம்: திடுக்கிடும் தகவல்
- இந்தோனேசிய சிறையில் கலவரம், கைதிகள் தப்பியோட்டம்
| Posted: 19 Aug 2013 10:43 PM PDT நாம் செய்யும் ஒரு சில செயல்களினால் சரும அழகு கெட்டு விடும். அழகு வேண்டும் என்பதற்காக கண்டகண்ட க்ரீம்களை பயன்படுத்தாமல், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அழகை பெற முடியும். புகைப்பிடித்தல் சருமத்திற்கு செய்யும் கெடுதலான விஷயங்களில் இதுவும் ஒன்று. புகைப்பிடித்தல் சருமத்திற்கான இரத்த ஓட்டத்தை தடுப்பதுடன், நேரடியான கெடுதலை ஏற்படுத்துகின்றது. அதிலும் இது சரும சுருக்கத்தையும், பொலிவற்ற தன்மையையும் ஏற்படுத்துகின்றது. சுடுநீர் உடலுக்கு புத்துணர்ச்சி கூட்டுவதற்காக எடுத்து கொள்ளப்படும் சுடுநீர் குளியல், சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் […] |
| பிஸ்டோரியஸ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் Posted: 19 Aug 2013 10:39 PM PDT கொலை வழக்கில் சிக்கிய பிஸ்டோரியஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தென் ஆப்ரிக்காவின் மாற்றுத்திறனாளி வீரர் பிஸ்டோரியஸ் (வயது 26). பிளேடு ரன்னர் என்றழைக்கப்படும் இவர், இரண்டு கால்களையும் இழந்தவர். செயற்கை கால்களுடன் தடகள போட்டிகளில் பங்கேற்ற இவர், கடந்த பிப்ரவரி 14ல் காதலி ரீவா ஸ்டீன்கெம்ப்பை சுட்டுக்கொன்றதாக கைதானார். தனது வீட்டுக்குள் யாரோ ஒருவர் நுழைந்து விட்டதாக நினைத்து சுட்டதாக தெரிவித்தார் பிஸ்டோரியஸ். பின் பிணையில் வெளிவந்தார். இது குறித்து விசாரித்த பொலிசார், வீட்டில் ஏற்பட்ட […] |
| சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் ஜார்விஸ் Posted: 19 Aug 2013 10:38 PM PDT சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜார்விஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிம்பாப்வே அணிக்காக விளையாடியது மகிழ்ச்சியான அனுபவம். ஆனால் கடந்த சில நாட்களாக ஊதிய உயர்வு கேட்டு போராட நேரிட்டது துரதிஷ்டவசமானது. எனவே சர்வதேச போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன், இதில் எவ்வித மாற்றமும் இல்லை. பிரபல இங்கிலாந்து கவுண்டி கிளப் அணிக்காக மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன். […] |
| சீனாவை விட இந்தியாவே சிறந்தது: லீ சாங் வீ Posted: 19 Aug 2013 10:31 PM PDT இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாட்மிண்டன் லீக் போட்டியே சிறந்தது என்று மலேசியாவின் லீ சாங் வீ தெரிவித்துள்ளார். “சீன பாட்மிண்டன் லீக் போட்டியில் இரு முறை விளையாடியுள்ளேன். இந்திய பாட்மிண்டனில் இப்போதுதான் விளையாட உள்ளேன். எங்கள் அணியில் டின் பென், மார் ஸ்வெய்பர், இவானோவ் மற்றும் இந்திய வீரர்கள் உள்ளனர். சீன பாட்மிண்டன் போட்டி நீண்ட காலத்தை (6 மாதம்) கொண்டது. ஆனால், இந்திய பாட்மிண்டன் 3 வாரங்கள் மட்டுமே நடைபெறுகிறது. சீன பாட்மிண்டன் லீக் போட்டியை […] |
| கும்பகோணம் பள்ளி தீ விபத்து: சாட்சியம் அளிக்ககோரி 18 டாக்டர்களுக்கு சம்மன் Posted: 19 Aug 2013 10:17 PM PDT தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் கடந்த 2004–ம் ஆண்டு ஜூலை மாதம் 16–ந்தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள். 18 குழந்தைகள் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 24 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் இருந்து 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு முதலில் கும்பகோணம் கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் தஞ்சை மாவட்ட முதன்மை […] |
| காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் Posted: 19 Aug 2013 10:13 PM PDT இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும், அதில் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது என்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கச்சத்தீவை இலங்கை வசம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் முறைப்படி அப்போதைய இந்திய பிரதமரும், இலங்கை பிரதமரும் கையெழுத்திட்டுள்ளனர். ஆகவே கச்சத்தீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கையின் வெளியுறவு மந்திரி டெல்லியில் பேட்டி அளித்துள்ளார். 1974-ம் ஆண்டு இந்தியா-இலங்கை போட்ட ஒப்பந்தப்படியும், […] |
| சர்வதேச சமூகத்திற்கு நல்ல முகத்தை காட்ட அரசாங்கம் முயற்சி Posted: 19 Aug 2013 10:06 PM PDT இலங்கையில் நடைபெறவுள்ள இரண்டு முக்கிய நிகழ்வுகளின் நிமித்தம் அரசாங்கம் சர்வதேச நாடுகளுக்கு தமது நல்ல முகத்தை காட்ட முயற்சிப்பதாக சிலோன் டுடே ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் மனிதஉரிமைகள் ஆணையாளர் இலங்கை வருகின்றமை மற்றும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு போன்றவற்றிற்காக அரசாங்கம் தமது முகத்தை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இலங்கை மீது மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு எதிராக பல்வேறு […] |
| இலங்கை பேசுவதனை குறைத்து செயலில் ஈடுபட வேண்டும் – ஐ.நா Posted: 19 Aug 2013 09:59 PM PDT இலங்கை பேசுவதனை குறைத்து செயலில் ஈடுபட வேண்டிய காலம் உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 480000 மக்களை மனிதாபிமான அமைப்புக்களும் அரசாங்கமும் இணைந்து மீள் குடியேற்றியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினாய் நேண்டி தெரிவித்துள்ளார். உலக மனிதாபிமான தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதிகளவில் பேசுவதனை நிறுத்தி செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் […] |
| இந்தியாவுக்குள் 1,600 கோடி கள்ள நோட்டுகள் புழக்கம்: திடுக்கிடும் தகவல் Posted: 19 Aug 2013 09:49 PM PDT பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுடன் ஆண்டுதோறும் இந்தியாவுக்குள் 1,600 கோடி அளவுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்று லஷ்கர் பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். டெல்லி போலீஸாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட அப்துல் கரீம் துன்டாவை மத்திய உளவுத் துறையினரும், டெல்லி பயங்கரவாதத் தடுப்புப் படை அதிகாரிகளும் கடந்த மூன்று நாள்களாக விசாரித்து வருகின்றனர். அவரது போலீஸ் காவல் செவ்வாய்க்கிழமை முடிவடையவுள்ளது. அதையொட்டி, நீதிமன்றத்தில் துன்டா ஆஜர்படுத்தப்படும்போது, […] |
| இந்தோனேசிய சிறையில் கலவரம், கைதிகள் தப்பியோட்டம் Posted: 19 Aug 2013 09:43 PM PDT இந்தோனேசியாவில் வெறும் 300 பேர் இருக்கக்கூடிய சிறைச்சாலையில் 850-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டதால் கலவரம் வெடித்தது. இதில் தப்பியோடிய சுமார் 30 கைதிகளில் பெரும்பாலானவர்கள் மீண்டும் பிடிபட்டனர். இந்தோனேசியாவிலுள்ள லாபுஹான் ருகு சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து காவல்துறைத் தலைவர் ஜாபர்ஸன் சினாகா தெரிவித்ததாவது, ஏற்கெனவே நெரிசல் மிக்க அச்சிறைச்சாலைக்கு மற்ற சிறைகளிலிருந்த கைதிகள் சிலர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கு அக்கைதிகள் எதிர்ப்பு தெரிவித்து சிறை அதிகாரியைத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து சிறையில் கலவரம் வெடித்தது. […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |